Home Blog Page 3891

“தேயிலை சாயம்” – புகைப்பட கண்காட்சி

மலையக மண்வாசனை சொல்லும் மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கண்காட்சி இன்று 23 ஆம் திகதி தலவாக்கலை ஶ்ரீ கதிரேசன் கோயில் மண்டபத்தில் நடைபெறுகின்றது.

தேயிலை சாயம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இக்கண்காட்சியை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பார்வையிடமுடியும் என நிகழ்வு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

மலையகத் தமிழர்களின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் வலி சுமந்த வாழ்க்கையை எடுத்தியம்பும் காட்சிகளும் உள்ளன.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் என பல முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் இன்று காலை கண்காட்சியை பார்வையிட்டனர்.

நுவரெலியாவில் கரப்பந்தாட்ட பயிற்சி! விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!!

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஊடாக கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்றுவிப்பு நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.

தேசிய மட்டத்தில் இடம்பெறும் இப்பயிற்றுவிப்புக்கு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களும் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலை மட்டத்திலுள்ள ஆசிரியர்ளையும் உள்வாங்கப்படவுள்ளதால் அதற்கான விண்ணப்பங்களை,

யு.தங்கவேல்,
நுவரெலியா மாவட்டகரப்பந்தாட்ட இணைப்பாளர்,
164, பிரதான வீதி,
மஸ்கெலியா.

என்ற விலாசத்திற்கு விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், 077-0678536 – 071-6069093 என்ற கையடக்கதொலைபேசியின் ஊடாக விளக்கங்கள் பெற்றுகொள்ளுமாறும், பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

‘இருண்டது இலங்கை’ – டலஸின் தலைவிதி நாளை நிர்ணயம்!

நாட்டில் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறுக்கு மின்சக்தி அமைச்சே பொறுப்புக் கூற வேண்டும் என சுட்டிக்காட்டப்படுமானால் அமைச்சுப் பதவியை நிச்சயம் துறப்பேன் – என்று மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த திங்கட்கிழமை திடீர் மின்துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் 8 மணிநேரத்துக்கு மேலாக முழு நாடும் ஸ்தம்பித்தது.

இதனையடுத்து இது தொர்பில் ஆராய்வதற்கு மின் சக்தி அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் அறிக்கை நாளை மாலை மின் சக்தி அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது, இந்த அறிக்கையில் திடீர் மின்வெட்டுக்கு மின்சக்தி அமைச்சுதான் பொறுப்பு என்று மேற்கொள் காட்டினால் தான் உடன் பதவி விலகத் தயராகவுள்ளதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

சூடானில் சரக்கு விமானம் விபத்து – 17 பேர் பலி!

சூடான் நாட்டில் சரக்கு விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

சூடான் நாட்டின் தலைநகர் ஜுபா அருகே அமைந்த விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம் ஒன்று திடீரென கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் 2 விமானிகள், விமான பயணிகள் 15 பேர் என 17 பேர் கொல்லப்பட்டனர். மற்றொரு நபர் தீவிர காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனை விமான நிலைய இயக்குனர் குர் குவோல் உறுதிப்படுத்தி உள்ளார். எனினும் பலியானோர் பற்றி எதுவும் கூறவில்லை.

அரசு சாரா அமைப்பு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பணம், உணவு, வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றை சுமந்து கொண்டு விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்த நிலையிலும், சுற்றியிருந்தவர்களில் சிலர் விமானத்தில் இருந்து பணம் எடுப்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டி!

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசன் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள குறுகிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கைக்கு மேலதிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுமாறு பல அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன.

அந்த அழைப்புக்களை பரிசீலனை செய்து வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் தேசிய நேசக் கட் சிகளு டன் இணைந்து போட்டியிடவுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் திகதி குறித்து இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தேர் தல் நெருங்கும் போது கூட்டணி சம்பந்த மான முடிவுகளை உரிய நேரத்தில் எடுப்போம்.

நாம் வடக்கு, கிழக்கில் போட்டியிடும் போது தமிழ் முற்போக்கு கூட்டணியாக மாத்திரமே போட்டியிடுவோம். ஐக்கிய மக்கள் சக்தியாக ஒருபோதும் வடக்கு, கிழக் கில் போட்டியிட மாட்டோம். வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் எங்களைப் பிரதி
நிதித்துவப்படுத்தி ரெலிபோன் சின்னம்
வராது. – என்றார்.

மேலும் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரோடு இணைந்து போட்டியிடுவீர்களா என மனோகணேசனிடம் வினவியபோது – தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எங்களுடைய நேசக் கட்சிதான். அது போல் பலநேசக் கட்சிகள் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன. அவர்களோடு கலந்தாலோ
சித்து பயணிப்போம். – என்றார் அவர்.

விக்கியின் பாராளுமன்ற உரையால் தெற்கில் அரசியல் பூகம்பம்!

பாராளுமன்றத்தில் கடந்த 20 ஆம் திகதி உரையாற்றும்போது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தேசம் என்ற அடிப்படையில்  சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும், இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ் என்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தானது தெற்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மனுஷ நாணயக்காரக்கூட கடும் எதிர்ப்பை வெளியிட்டு, விக்னேஸ்வரனின் உரையில் இருந்து அப்பகுதியை நீக்குமாறு வலியுறுத்தினார். ராஜபக்ச அணி உறுப்பினர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்துவருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த சபாநாயகர்,

” விக்னேஸ்வரனின் உரை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபைக்கு உறுதியளித்துள்ளேன். அது தொடர்பில் தற்போது ஆராயப்படுகின்றது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

9ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பதவியேற்றுள்ள மஹிந்த யாப்பா அபேவர்தன கண்டிக்கு நேற்று (22) பயணம் மேற்கொண்டு அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கொரோனா’ – இலங்கையில் 12ஆவது மரணம் பதிவானது!

‘கொரோனா’ வைரஸ் தொற்றால் இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயதுடைய பெண் ஒருவரே சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை விடுத்தார் அனுசா!

நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.

‘நம்ம அண்ணாச்சி’யுடன் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடலின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

அத்துடன் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் அப்போதைய அரசியல் களநிலைவரத்தை அடிப்படையாகக்கொண்டே முடிவெடுக்கப்படும் எனவும் அனுசா சந்திரசேகரன் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தனித்துவத்தை நிரூபித்துவிட்டோம் எனவும், இனிதான் வெற்றி பயணம் ஆரம்பமாகும் எனவும் அனுசா சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

டயலொக்கின் அனுசரணையில் Dream Music Fest

இலங்கையின் இசையின் மறக்கமுடியாத அனுபவத்தை பார்வையாளர்களுக்குக்கொண்டுவரும் Dream Music Fest இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசி ஆட்டாபி எல்சி இன் அனுசரணையில் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நெலும் பொகுன மஹிந்த ராஜபக்ச திரையறங்கு வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வானது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் – 19 முடக்கமானது தளர்த்தப்பட்ட பின்னர் அனைவரையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாகும்.

இந்நிகழ்வின்மூலம் மிகவும் பிரபலமான இசைக்கலைஞர்கள் மற்றும் இசைக்குழுக்களினால் வழங்கப்படும் கிழக்கு மற்றும் மேற்கத்திய இசையினை பார்வையாளர்கள் அனுபவித்திடமுடியும்.

நிகழ்வானது மேலும் பலதரப்பட்ட வயது வித்தியாசங்களை சார்ந்த உள்ளுர் கலைஞர்கள் மற்றும் பிரபலமான DJS வாத்திய கலைஞர்கள் மற்றும் பாடகர்களை உள்ளடக்கியுள்ளதுடன் பல்வேறுபட்ட இரசனைகளை கொண்ட பார்வையாளர்களைக் கவரும் வகையில் இடம்பெறவுள்ளது.

பங்கேற்கவுள்ள களைஞர்களில் சிறப்பு கலைஞர்களாக சுனில் பெரேரா, பாத்திய மற்றும் சந்தேஷ், ரந்தீர்விடான உமாராசின்ஹவன்ச,கெவின்டி அல்மெய்தா, கசுன்கல்ஹார, ஆத்மாலியானகே, சமிதாமுடுங்கொட்டுவ, சங்கதினேத், சனுகவிக்ரமசிங்க, லஹிருபெரேரா, ரித்மாவீரவர்தன் மற்றும் தனித் ஸ்ரீ ஆகியோரும் பங்கேற்கவுள்ளார்கள்.

இந்நிகழ்வின்போது அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளும் கடுமையாக கடைபிடிக்கப்படும்.

நபர்களுக்கிடையிலானநேரடி தொடர்பை முற்றாக குறைப்பதன் நோக்கமாக, டிக்கெட்டுகளை www.myticket.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மட்டுமே கொள்வனவு செய்யமுடியும்.

மேலும் பங்கேற்பாளர்களின் நெரிசல்களை குறைக்கும் வகையில் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே நுழைவு வாயில்கள் திறக்கப்படும்.

நிகழ்வு இடம்பெறும் வளாகமானது சானிடையிசர் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதோடு அனைத்து நுழைவாயில்களிலும் உடல் வெப்பநிலை சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் கைகளை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வினை Event management association, ஊடகபங்காளரான தெரணடிவி உடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதுடன், சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 தொற்று நோயைத் தொடர்ந்து,பொழுது போக்குத்துறை குறிப்பிடத்தக்க நிதிசார்ந்த இழப்புகளை சந்திக்க நேரிட்டுள்ளது. Dream Music Fest இன்முக்கிய நோக்கம்,பொழுதுபோக்குத்துறைக்கு தொழில்துறைக்கு புதிய உயிர் ஊட்டலையும் ஆற்றலையும் கொண்டுவருவதோடு, இலங்கையின் பொழுது போக்குத்துறையின் வருகையை கொண்டாடுவதற்காகவும் அதன் பார்வையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத இசை அனுபவத்தை அளிக்கும் புதிய தொடக்கத்தினை வழங்குவதுமே ஆகும்.

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்பீடம்

தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்பீடம் நாளை (23) ஹட்டனிலுள்ள அதன் தலைமையகத்தில் கூடவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரும் சங்கம் மற்றும் முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரத்தின் தலைமையிலேயே உயர்பீடக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் பல அதிரடி மாற்றங்கள் எடுக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

திகாம்பரத்துக்கும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தற்போதைய பொதுச் செயலாளர் திலகராஜுக்கும் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமை காரணமாக தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவருகின்றது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

எல்ல நகரில் கஜமுத்துடன் இளைஞன் கைது!

0
எல்ல நகரில், 2 கோடி ரூபா மதிப்பில் விற்கத் தயாராக இருந்த “கஜமுத்து” (யானை முத்து) ஒன்றுடன் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார் ஹப்புத்தலை விசேட அதிடிப்படைனருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் எல்ல...

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரணதண்டனை!

0
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டுக்கு ( இரகசியத் தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் சிவில் பாதுகாப்புத் துறையில் உயர் பதவியில் இருந்த மெஹ்தி பரித்...