Home Blog Page 3892

‘மனசாட்சியின் பிரகாரமே இந்த முடிவு’ – சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று, கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், பிரச்சனைகளில் மூழ்கிவிடாமல், நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம்.

இயக்குனர் ‘சுதா கொங்கரா’ அவர்களின் பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படமாக நிச்சயம் இருக்கும்.

மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று நம்புகிற திரைப்படத்தை, திரையரங்கில் அமர்ந்து என் பேரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன் கண்டுகளிக்கவே மனம் ஆவல் கொள்கிறது. ஆனால், காலம் தற்போது அதை அனுமதிக்கவில்லை. பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும், கடுமையான உழைப்பில் உருவாகும் திரைப்படம் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கிய கடமை.

எனது 2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இதுவரை எட்டு படங்களைத் தயாரித்து வெளியீடு செய்திருக்கிறது. மேலும் பத்து படங்கள் தயாரிப்பில் உள்ளன. என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில், நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்.

‘சூரரைப் போற்று திரைப்படத்தை ‘அமேசான் ப்ரைம் வீடியோ’ மூலம் இணையம் வழி வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்த முடிவை திரையுலகை சார்ந்தவர்களும் என் திரைப்படங்களைத் திரையரங்கில் காண விரும்புகிற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த தம்பி தங்கைகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த திரைப்படம் சூரரைப் போற்று நிச்சயம் அமையும். மக்கள் மகிழ்ச்சியோடு திரையரங்கம் வந்து படம் பார்க்கும் இயல்புநிலை திரும்புவதற்குள், கடினமாக உழைத்து, ஒன்றுக்கு இரண்டு படங்களில் நடித்து திரையரங்கில் ரிலீஸ் செய்துவிட முடியுமென நம்புகிறேன். அதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்.

இருப்பதை அனைவருடன் பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. இந்த எண்ணத்தை இன்றளவும் செயல்படுத்தியும் வருகிறேன். ‘சூரரைப் போற்று திரைப்படம் வெளியிட்டு தொகையில் இருந்து தேவையுள்ளவர்களுக்கு, ‘ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க முடிவு செய்திருக்கிறேன்.

பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் ‘கொரோனா யுத்த களத்தில்” முன்நின்று பணியாற்றியவர்களுக்கும், இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும். வாழ்த்தும் தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடி சூழலை மன உறுதியுடன் எதிர்த்து மீண்டு எழுவோம். நன்றி’ இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சு.கவின் மாநாடு 2ஆம் திகதி – மைத்திரியின் மகளுக்கு முக்கிய பதவி! உப தலைவராகிறார் அங்கஜன்!!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வருடாந்த மாநாடு செப்டம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இதன்போது முக்கிய சில பதவிகளில் மாற்றம் வரக்கூடும் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இளைஞர் ஒருவருக்கு வாய்ப்பளித்து கட்சியை அடுத்தக்கட்டம் நோக்கி கொண்டுசெல்வதற்காகவே அவர் இம்முடிவை எடுப்பார் என சிங்கள இணையத்தளமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது. எனினும், இது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. உப பிரதமர் பதவி கிடைக்கும் பட்சத்தில் மாத்திரமே அவர் தலைமைப்பதவியை விட்டுக்கொடுப்பார் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இளைஞர் அணி தலைவராக செயற்படும் சாந்த பண்டாரவும் பதவி விலகவுள்ளார்.

பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற அங்கஜன் ராமநாதனுக்கு உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது. அதேபோல மைத்திரிபால சிறிசேனவின் மகளும் மத்திய செயற்குழுவுக்குள் உள்வாங்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் வடமத்திய மாகாணத்தில் அவர் போட்டியிடவுள்ளார்.

 

 

View Post

இலங்கையில் ‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 2,798 பேர் தப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 9 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,798 ஆக அதிகரித்துள்ளது.

132 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பாரா மாலிங்க?

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில் விளையாடுவதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் செய்ய மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

மும்பை அணியின் நட்சத்திர வீரராக திகழும் மாலிங்க, இதனால், ஐ.பி.எல். தொடரின் ஆரம்ப போட்டிகளை தவறவிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலிங்கவின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்பதால், அவர் ஒரிரு வாரங்களுக்கு பிறகு இத்தொடரில் பங்கேற்பார் என கூறப்படுகின்றது.

இருப்பினும், மாலிங்க கொழும்பில் தனது பந்து வீச்சு பயிற்சிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் மிக முக்கிய வீரரான மாலிங்க, மும்பை அணி கடந்த முறை, நான்காவது சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில், முதல் மூன்று ஓவர்களில் 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த மாலிங்க, கடைசி பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஷர்துல் தாக்கூரை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13ஆவது அத்தியாத்தம், செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில், அபுதாபி, ஷார்ஜா மற்றும் டுபாய் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது.

 

‘திலகரின் பேஸ்புக் பதிவுகளை பார்ப்பதற்கு எனக்கு நேரமில்லை’ – மனோ

” தமிழ் முற்போக்கு கூட்டணியாகவே நாம் சாதித்தோம். தனிநபர்களைவிடவும் எமக்கு சமூகத்துக்கான அரசியல் பயணமே முக்கியம். திலகருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அவர் நேரடியாக அங்கம் வகிக்கும் கட்சியே தீர்மானிக்கவேண்டும். திலகரின் முகநூல் பதிவுகளை பார்ப்பதற்கு எனக்கு நேரமில்லை.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

சூரியன் வானொலிக்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு

‘கொரோனா’ – உலகளவில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி!

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 31 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 31 லட்சத்து 20 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 57  லட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஆறுபேருக்கும் நாளை ஹட்டனில் வரவேற்பு! திலகருக்கு அழைப்பு இல்லை!!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நாளை (23) ஹட்டனில் நடைபெறவுள்ளது.

கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், எம்.பிக்களான வேலுகுமார், அரவிந்தகுமார் மற்றும் உதயகுமார் ஆகியோருக்கே இவ்வாறு வரவேற்பளிக்கப்படவுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து தொலைபேசி சின்னத்தின்கீழ் போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா, கண்டி, பதுளை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் வெற்றிபெற்றது.

இரத்தினபுரி, கேகாலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போட்டியிட்ட கூட்டணியின் வேட்பாளர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.பியுமான திலகருக்கு இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

முன்னாள் எம்.பி. என்ற அடிப்படையிலும் சங்கம் மற்றும் கூட்டணியில் முக்கிய பதவியை வகிப்பதாலும் திலகருக்கு அழைப்பு விடுக்கப்படவேண்டும் என சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தாலும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த ஏற்பாடு!

கொவிட்-19 சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்தலுக்காக ரஷ்யா கண்டு பிடித்துள்ள தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் உரிய பரிந்துரைகளையும் அனுமதியையும் வழங்கிய பின்னர் அதனை இலங்கையிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி இலங்கைக்கான ரஷ்ய தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி பி.மதேரி மற்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி ஆகியோருக்கிடையில் நேற்று விஷேட சந்திப்பொன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

கொவிட்-19 க்கான சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்தலுக்காக ரஷ்யா கண்டு பிடித்துள்ள தடுப்பூசி குறித்து இதன் போது தூதுவர் அமைச்சரிடம் தெளிவுபடுத்தினார். இந்த தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரை மற்றும் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் இலங்கையில் கொவிட்-19 கட்டுப்பாடு மற்றும் சிகிச்சைக்காக இதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் மருத்துவர்களை உருவாக்குவதற்கு ரஷ்யா வழங்கியுள்ள உதவிகளுக்கு அமைச்சர் இதன் போது தூதுவரிடம் நன்றி தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரஷ்ய தூதுவர்,

இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக தொடர்கின்ற நட்புறவின் பிரதிபலனாக இலங்கையின் வைத்தியர்கள் மற்றும் ஏனைய துறை நிபுணர்களின் கல்விக்காக ரஷ்யாவின் உதவித் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி சுமந்திரனிடமிருந்து பறிபோனது! செல்வத்துக்கு வாய்ப்பு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி எம்.ஏ.சுமந்திரன் எம்.பியிடமிருந்து பறிபோனது. அந்தஇடத்துக்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.நியமிக்கப்படுகின்றார்.

சுமந்திரன் பங்குபற்றாத தமிழ்த் கூட்டமைப்புத் தலைவர்களின் நேற்றிரவுக் கூட்டத்தில் வைத்து கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தாமே தமது வாயால் இதனை முன்மொழிந்து அறிவித்தார் என நம்பகரமாக அறியவந்தது.

கட்சியின் நாடாளுமன்றக் கொறடாவாக இதுவரை இருந்த ஸ்ரீதரன் எம்.பியின் இடத்துக்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் எம்.பி. நியமிக்கப் படுகின்றார் என்றும் சம்பந்தன் அறிவித்தார் என்று தெரிகின்றது.

எனினும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பத்து எம்.பிக்களைப் கொண்ட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த விடயங்கள் பிரேரிக்கப்பட்டு, அங்கீகரிக் கப்பட்டு, உத்தியோகபூர்வமாக அறிவிக் கப்படும் வரையில், இவற்றைப் பகிரங் கப்படுத்துவதில்லை என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

நேற்று மாலை இந்தியத் தூதுவருடனான சந்திப்பின் பின்னர் நேற்றிரவு இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்தக்கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ தலைவர்செல்வம் அடைக்கலநாதன், புளொட்தலைவர் சித்தார்த்தன் ஆகியோரோடுமட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) ஆகியோர் பங்கு பற்றினர்.

இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு சுமந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட தாயினும், அவர் அதில் கலந்து கொள்ளவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் அறியவந்தது.

எனினும், சுமந்திரன் இல்லாத அந்தக்கூட்டத்தில் வைத்து, கூட்டமைப்பின் புதிய பேச்சாளராக செல்வத்தை நியமிக்கவும், கட்சியின் கொறடாவாக சிறீதரனுக்குப் பதி
லாக சித்தார்த்தனை நியமிக்கவும் சம்பந்தன் ஒப்புக் கொண்டார் என அறிய வந்தது.

இருவேறு இடங்களில் விபத்துகள் – ஏழுபேர் பலி!

நாட்டில் இன்று அதிகாலை இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் எழுவர் பலியாகியுள்ளனர்.

இதன்படி கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் சிலாபம் – வலக்கும்புர பகுதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

டிப்பர் ரக வாகனம் ஒன்றும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வலக்கும்புர பகுதியில் மரண வீடொன்று சென்று மீள குருநாகல் நோக்கி பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் பயணித்தவர்களே பலியாகியுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த 05 பேரும் கட்டுமான நிறுவனமொன்றில் தொழில் புரிபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவண எல்லை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

மினி பஸ்ஸொன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மூவர் காயமடைந்துள்ளனர்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நிரந்தர தீர்வுக்கான பாகிஸ்தானின் மத்தியஸ்தம் தொடரும்!

0
ஈரான் உடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்ததற்காக அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு , பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார். தற்போதைய ராஜதந்திர முயற்சிகள் தொடர இந்த முடிவு உதவும் என்று அவர் அறிக்கையில்...

டொரிங்டன் ஆறு பெருக்கெடுப்பு: ஆட்லோ தோட்டத்தில் 75 பேர் இடம்பெயர்வு

0
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (21) மாலை பெய்த இடியுடன் கூடிய கடும் மழையினால் ஆறுகள் பெருக்கெடுத்து, பல பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். அக்கரப்பத்தனை...

லக்னோ, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

0
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 32 ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள Ekana கிரிக்கெட் மைதானத்தில்...