Home Blog Page 3893

இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே வாழ்வது?

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் லயன் குடியிருப்பொன்று பகுதியளவு இடிந்தும், ஏனைய பகுதி இடிந்துவிழும் அபாயத்தில் காணப்படுகின்றபோதிலும் அவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மஸ்கெலியா பிரதேச சபைகக்குட்பட்ட ஆர்.பி.கே. பிளான்டேசனுக்கு உரித்தான அப்புகஸ்தனை தோட்டத்திலேயே திபட்டன் பிரிவு அமைந்துள்ளது. அங்கு 14 லயன் அறைகள் காணப்படுகின்றன. எனினும், தற்போது 8 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்துவருகின்றன.

கடந்த வருடம் பெய்த அடைமழையால் குறித்த லயன் குடியிருப்பில் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. எனினும், எவருக்கும் காயம் எவுதும் ஏற்படவில்லை. இப்பகுதி இன்னும் புனரமைக்கப்படாததால் காடாகியுள்ளது.

இம்மக்களுக்கு தனி வீடுகள் வழங்கப்படும் எனக்கூறி கடந்த ஆட்சியின்போது அடிக்கல்லும் நடப்பட்டது. எனினும், நிர்மாணப்பணிகள் இடம்பெறவில்லை. மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

எனவே, புதிய அரசாங்கமாவது தம்மை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு – தொழில் அமைச்சர் உறுதி!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும். தொழில் அமைச்சர் என்ற வகையில் இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவேன் – என்று அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கைவிளக்கஉரைமீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” பொதுத்தேர்தலின்போது பெருந்தோட்ட மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினர். இதன்காரணமாகவே ஐ.தே.கவின் வாக்கு வங்கியை சரிக்ககூடியதாக இருந்தது. எனவே, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். பெருந்தோட்ட தொழிலாளர்களை நாம் மறக்கமாட்டோம்.” – என்றார்.

டிக்கோயா ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேகத்திற்கு நீர் வழங்கும் கிளை ஆறானா டிக்கோயா ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவத்தனர்.

மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.

சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு 40 – 35 இடைப்பட்ட வயது மதிக்கதக்கவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

‘ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக தபால்தலை வெளியிடப்படும்’ – செந்தில்

” இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான்  இல்லாமை பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், அமைச்சர் ஜீவன் தொண்டமானும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருப்பதானது மலையக மக்களுக்கு பெரும் சக்தியாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் விட்டுச் சென்ற சேவைகள் அனைத்தும் அவர்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செந்தில் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது மலையக மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் அதேவேளை, அதன் தலைவராக இருந்து மறைந்த ஆறுமுகன் தொண்டமான் மீதும் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தனர்.

அவர் இல்லாத பாரராளுமன்றம் என்பது எமக்கும் மலையக மக்களுக்கும் பெரும் மனவருத்தமான விடயமாகும். ஆனபோதிலும் அவரது பணிகள் அனைத்தும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் ஊடாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்படும்.

அதேவேளை, தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள எஸ். வியாழேந்திரனுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன்.

அதன்போது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக தபால்தலை வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் முன்வைத்துள்ளேன். அந்தக் கோரிக்கையை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் எஸ். வியாழேந்திரனுக்கு எனது நன்றிகளை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

1000 ரூபா எங்கே? வடிவேல் சுரேஷ் கேள்வி

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தனி நாடு கோரவில்லை. ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறுதான் கோருகின்றனர். எனவே, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்று பதுளை மாவட்ட எம்.பி. வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கைவிளக்கஉரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. ஆயிரம் ரூபா எங்கே? எனவே, இனியும் இழுத்தடிக்காமல் ஆயிரம் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கவும்.” – என்றார்.

பாராளுமன்றத்தில் ஜீவனுக்கு பதிலடி கொடுத்த திகாம்பரம்

” மலையக தனி வீட்டுத் திட்டத்தில் உண்மை எது, பொய் எது என்பது மக்களுக்கு தெரியும். எனவே, தந்தைபோன்றே இன்று மகனும் பொய்யுரைக்கின்றார்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” எனது அரசியல் வாழ்வில் மூன்றாவது முறையாகவும் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளேன். வாக்களித்து அங்கீகாரம் வழங்கும் நுவரெலியா மாவட்ட மக்களுக்கு முதலில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாம் 400 வீடுகளைக்கூட கட்டவில்லை என இராஜாங்க அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். டன்ஷன் தோட்டத்தில் 350 வீடுகளும், பொகவந்தலாவயில் 350 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டன. இவை இரண்டைக்கூட்டினால்கூட 500 ஐ தாண்டிவிடுகின்றது. எனவே, இராஜாங்க அமைச்சர் கணக்கில் ‘வீக்’ போல தெரிகிறது.

குறிப்பாக தந்தைபோன்றேபொய் பேசுகிறார். உண்மை எதுவென மக்களுக்கு தெரியும் என்பதால் எமக்கு பிரச்சினை இல்லை. அதேவேளை, நாட்டுக்கு நன்மைபயக்ககூடிய அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம். தீங்கு விளைவிக்ககூடிய யோசனைகளை எதிர்ப்போம்.” -என்றார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு மலையக வீரர்கள் மூவருக்கு பதக்கங்கள்!

மத்திய மாகாண ஆண் ஆழகர் போட்டிகளில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின் நுவரேலியா மாவட்டத்தை சேர்ந்த மூன்றுதமிழ் இளைஞர்கள் பதக்கங்களை பெற்றுள்ளனர் .

நானுஒயாவை சேர்ந்த சங்கர்கனேஸ் 75 கிலோ எடை பிரிவில் முதலாம் இடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார் அதேபோன்று கொட்டகலையை சேர்ந்த சசிதரன் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்

மேலும் நானுஒயாவை சேர்ந்த ச.சசிதரன் முதல் முறையாக இந்த போட்டிகளில் பங்குபற்றி 70 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடத்தைபெற்று வெள்ளி பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார்.

மலையகத்திற்கு பெருமை சேர்த்த இந்த மூன்று இளைஞர்களுக்கும் , இவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து இவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்த மாதவன் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி சந்ரு

தனி வீட்டுத் திட்டத்தில் மோசடி – சபையில் தகவல் வெளியிட்டார் ஜீவன்!

மலையக தனி வீட்டுத்திட்டத்தில் மோசடி செய்தவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவார்கள் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கைவிளக்கஉரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையகம் என்றாலே தோட்டத்தொழில் மட்டும்தான் என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் விவசாயம் உட்பட பல தொழிலகள் அங்கு உள்ளன. வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் என பலர் உருவாகியுள்ளனர். எனினும், மலையகம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இதற்கு என்ன காரணம்? தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவில்லை.

ஆனால் மக்களின் உண்மையான பிரச்சினைகள் எவை என்பதை ஜனாதிபதி கண்டறிந்துள்ளார். மலையகத்திலுள்ள ஆறு பிரதான வைத்தியசாலைகளிலும் போதுமான வசதிகள் இல்லை. பாடசாலைகளிலும் வளங்கள் முழுமையாக இல்லை. இவை தொடர்பில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிலோன் டீ என்ற நாமம் சரிவை சந்தித்துள்ளது. அதனை கட்டியெழுப்பவேண்டும். இந்த விடயமும் ஜனாதிபதியின் உரையில் இடம்பெற்றது. சிறுதோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளையும் எடுத்துரைத்துள்ளார். மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று நிறையபேர் வெளிநாடுசென்று கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.

மலையகத்தில் 4000 வீடுகள் கட்டப்பட்டன என்று கூறப்பட்டது. ஆனால் கண்காணிப்பு குழுமூலம் ஆராய்ந்தோம். 500 வீடுகளே கட்டப்பட்டுள்ளன. ஏனையவை அரைகுறையில் உள்ளது.அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என பழமொழியொன்று உள்ளது. எனவே, வீட்டுத் திட்டத்தில் ஊழல் செய்தவர்களை கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்துவோம்.

எனது தந்தை ஆறுமுகன் தொண்டமான், தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வழிகளில் எனது பயணம் தொடரும். வாக்களித்த மக்களுக்கு நன்றி.” -என்றார்.

 

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு என்ன நடக்கும்?

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். அப்படியானால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு என்ன நடக்கும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெறும் ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்வாறு வினா தொடுத்தார்.

” இந்நாட்டில் கண்டிய சட்டம், தேசவழமைச்சட்டம் என சில சட்டங்கள் உள்ளன. ஆனால் ஒரே நாடு ஒரு சட்டம் என ஜனாதிபதி கூறுகின்றார். இது எப்படி சாத்தியம்?

19 இன் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. அவற்றுக்கு என்ன நடக்கும் என்பதையும் அரசாங்கம் அறிவிக்கவேண்டும்.” – எனவும் கிரியல்ல வலியுறுத்தினார்.

ஐ.தே.கவையும் அரவணைத்துக்கொண்டு ‘மெகா’ கூட்டணி – சஜித் அணி அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைத்துக்கொண்டு பரந்தபட்ட கூட்டணியின்கீழ் மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது என்று அக்கட்சியின் உறுப்பினர் ஜே.சி. அலவதுவல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கி குறுகிய காலப்பகுதிக்குள் 54 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முதல் சுற்றில் நாம் வெற்றிபெற்றுவிட்டோம். எனவே, அடுத்தடுத்த சுற்றுகளில் பலமான அணியாக களமிறங்கி வெற்றிபெற திட்டமிட்டுள்ளோம்.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஓர் கூட்டமைப்பு. அதில் கட்சிகள் இணையலாம். ஐக்கிய தேசியக்கட்சி இணைந்தால்கூட அக்கட்சியையும் இணைத்துக்கொண்டு பரந்தப்பட்ட கூட்டணியின்கீழ் தேர்தலை சந்திக்கலாம். அது மேலும் வலுவாக இருக்கும். எனவே, ஐ.தே.க. எம்முடன் இணைவதை நாம் வரவேற்போமேதவிர ஒருபோதும் எதிர்க்கமாட்டோம்.

அதேவேளை, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தில் சில குறைப்பாடுகள் உள்ளன. அவை சீர்செய்யப்படவேண்டும். ஆனால் ஜனாதிபதியின் பதவிகாலம் உட்பட மேலும் சில விடயங்கள் மாற்றியமைக்கப்படக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம்.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

டொரிங்டன் ஆறு பெருக்கெடுப்பு: ஆட்லோ தோட்டத்தில் 75 பேர் இடம்பெயர்வு

0
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (21) மாலை பெய்த இடியுடன் கூடிய கடும் மழையினால் ஆறுகள் பெருக்கெடுத்து, பல பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். அக்கரப்பத்தனை...

லக்னோ, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

0
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 32 ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள Ekana கிரிக்கெட் மைதானத்தில்...

ஹைதராபாத் அணி 47 ஓட்டங்களால் வெற்றி!

0
ஐ.பி.எல். 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 31 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி...