Home Blog Page 3894

2 கோடியே 28 லட்சம் பேருக்கு கொரோனா – 7 லட்சத்து 97 ஆயிரம் பேர் பலி!

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 28 லட்சத்து 58 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 28 லட்சத்து 58 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 55  லட்சத்து 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 7 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இங்கிலாந்து, பாகிஸ்தான் – கடைசி டெஸ்ட் போட்டி இன்று

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட்போட்டி இன்று ஆரம்பமாகின்றது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று ஆரம்பமாகின்றது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மழையால் பாதிக்கப்பட்ட 2ஆவது டெஸ்ட் சமநிலையில் முடிந்தது. 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இந்த டெஸ்டும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மோசமான வானிலையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மறுநாள் ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு  போட்டி ஆரம்பமாகும்.

சல்மான்கானை கொலைசெய்ய சதித்திட்டம் – கசிந்தது தகவல்

சல்மான்கானை சுட்டுகொல்ல சதி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர் சல்மான்கான். வாரிசு நடிகர்களால் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பேசப்படும் சர்ச்சையில் இவரது பெயரும் அடிபடுகிறது.

ஏற்கனவே படப்பிடிப்பில் அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

மானை தெய்வமாக வணங்கும் பிஷ்னோய் இன மக்கள் சல்மான்கான் மீது ஆத்திரத்தில் உள்ளனர். அந்த இனத்தை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி ஜெயிலில் இருக்கிறார். அவர் சல்மான்கானை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளியான ராகுல் என்பவரை கொலை வழக்கு ஒன்றில் பரிதாபாத் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது சல்மான்கானை சுட்டுகொல்ல சதி நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது.

சல்மான்கானை சுட்டுக் கொல்ல பாந்தராவில் உள்ள அவரது வீட்டை உளவுபார்த்து எப்போது வீட்டுக்கு வெளியே வருகிறார் என்பதை கண்காணித்ததாகவும். கொலை திட்டத்தை அரங்கேற்ற பிஷ்னோய் உத்தரவுக்காக காத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது இந்தி பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘கெட்டது நடந்தாலும் அதுவும் நன்மைக்கே’

வெற்றி, தோல்வியை சமமாக பார்ப்பதாக நடிகை சாய்பல்லவி கூறியுள்ளார்.

“நல்லது கெட்டது எது நடந்தாலும் நமது நன்மைக்குத்தான் என்று நினைத்துக்கொள்ளும் மனோபாவத்தை வளர்க்க வேண்டும். தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து விட்டேன். எல்லாமே வெற்றி படங்களாகவே அமைந்தன.

தொடர்ந்து வெற்றியை பார்க்கும் நான் படம் தோல்வி அடைந்தால் அதை எப்படி எடுத்துக்கொள்வேன் என்று கேட்கிறார்கள். எது வந்தாலும் நமது நல்லதுக்கு என்றே நினைத்துக்கொள்வேன்.

வெற்றிக்காக ரொம்பவும் சந்தோஷப்பட மாட்டேன். தோல்வி என்றால் அதையே நினைத்து அழுதுகொண்டும் இருக்க மாட்டேன். வெற்றி தோல்வியை சமமாகவே எடுத்துக்கொள்வேன். அதுதான் நல்லது. எது வந்தாலும் நம் நல்லதுக்கு என்ற பார்வையோடு பார்த்தால் அந்த கஷ்டம் நம்மை சோர்வடைய வைக்காது.

நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது 3 இயக்குனர்கள் நடிக்க அழைத்தனர். சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு ஐந்து வருடங்கள் கழித்து பிரேமம் படத்தில் அறிமுகமானேன். அந்த படம் பெயர் வாங்கி கொடுத்தது. யார் என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுள் முன்பே எழுதி வைத்து இருப்பார். நம் வேலையை செய்வோம். பலனை எதிர்பார்க்க வேண்டாம்.”

இவ்வாறு சாய்பல்லவி கூறினார்.

தமிழ்க் கூட்டணியின் தலைமைப்பதவியில் மாற்றம் வருமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பதவியில் இரா.சம்பந்தன் நீடிப்பாரென்றும், ஊடகப்பேச்சாளர் பதவியில் மாற்றம் வரவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

இதன்படி தமிழ்க் கூட்டமைப்பின் புதிய ஊடகப்பேச்சாளராக புளொட் தலைவர் சித்தார்த்தன் அல்லது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நேற்று கூடியது. இதன்போது சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் கூட்டமைப்பின் பதவி நிலை மாற்றங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டுள்ளது.

எனினும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இன்று (21) முற்பகல் மீண்டும் கூடவுள்ளது. இதன்போது இறுதி இணக்கப்பாடு எட்டப்படலாம் என கூட்டமைப்பு எம்.பியொருவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் சம்பந்தன் நீடிக்கவேண்டும் என விரும்பும் பங்காளிக்கட்சிகள், ஊடகப்பேச்சாளர் பதவி வேண்டும் என வலியுறுத்திவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தேயிலை பயிர்ச் செய்கையை முன்னேற்ற நடவடிக்கை – ஜனாதிபதி உறுதி

“தேயிலை பயிர்ச் செய்கையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேநேரம் சிறிய மற்றும் நடுத்தர தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் அரசாங்கம் உதவிகளைச் செய்யும்.” – என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்தில் இன்று கொள்கை விளக்க உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

“உண்மையான பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்துவதற்காக மக்கள் மைய பொருளாதாரம் ஒன்றின் தேவையை நாம் கண்டறிந்துள்ளோம். அமைச்சுக்களை ஒதுக்கும்போதும் அவற்றுக்கான விடயதானங்களை தீர்மானிக்கும் போதும் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மீது தாக்கம் செலுத்தும் விவசாயம், பெருந்தோட்டத்துறை, மீன்பிடிக் கைத்தொழில் அதேபோன்று பாரம்பரிய கைத்தொழில்கள், சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவது சம்பந்தமாக கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதைப் போன்று ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதும் எமது அடிப்படை இலக்குகளாகும். தற்போது எமது ஏற்றுமதி பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை, தென்னை, இறப்பர் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் திருப்திகரமான நிலையில் இல்லை.

தேயிலை பயிர்ச் செய்கையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேநேரம் சிறிய மற்றும் நடுத்தர தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் அரசாங்கம் உதவிகளைச் செய்யும். மூடப்பட்டுள்ள தேயிலைச் தொழிற்சாலைகளின் காரணமாக அவர்கள் அதிக அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவற்றை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதுடன். முறைகேடுகளை ஒழித்து உயர் தரங்களுடன் கூடிய தேயிலை ஏற்றுமதியை ஊக்குவிப்போம். ‘சிலோன் டீ’ வர்த்தக சின்னத்திற்கு உள்ள அங்கீகாரத்தை பலப்படுத்துவோம்.

தென்னையை புதிதாக பயிரிடுவதற்கு ஊக்குவிப்புகளை வழங்குவோம். இறப்பருக்கு உரிய விலையை பெற்றுக்கொடுப்பதற்காக இந்நாட்டில் தயாரிக்கப்படும் இறப்பர் பாவனை, இறப்பர் சார்ந்த கைத்தொழில்களை ஊக்குவிப்போம். செம்பனை பயிர்ச் செய்கையை நாம் முற்றாக நிறுத்துவோம்.

மிளகு, கறுவா போன்ற ஏற்றுமதி பயிர் உற்பத்தியை நாம் ஊக்குவிப்போம். விவசாய உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்த்து ஏற்றுமதி செய்வதன் ஊடாக விவசாயிகளுக்கு ஸ்திரமான விலையை பெற்றுக்கொடுப்பதுடன், பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

அமைச்சுகளுக்கு பொறுப்புக்களை வழங்கும்போது நகர மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிக்கக்கூடிய பல்வேறு துறைகளை இனங்கண்டு அவற்றுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கவும் அவர்களுக்கான விடயதானங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனித வள அபிவிருத்தியை நாம் முன்னுரிமைக்குரியதாக இனங்கண்டு இருப்பதால் அமைச்சுக்களை ஒதுக்கும்போது கல்வித்துறையை ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வந்து, அதில் வேறுபட்ட பொறுப்புகளுக்காக நான்கு இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளோம். முன்பள்ளிப் பாடசலைகள், கல்வி மறுசீரமைப்பு, திறன் விருத்தி, அறநெறிப் பாடசாலைகள், பிக்குகளுக்கான கல்வி ஆகிய துறைகளுக்கு தனியான இராஜாங்க அமைச்சுக்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது அவற்றில் உள்ள முக்கியத்துவத்தின் காரணமாகவே ஆகும்.” – என்றார்.

புதிய அரசியலமைப்பு

ஒரு ஜனநாயக நாட்டின் வெற்றிக்கு அதன் அரசியலமைப்பே அடிப்படையாகும். 1978 முதல் 19 முறை திருத்தப்பட்டுள்ள எமது அரசியலமைப்பில் உள்ள உறுதியற்ற தன்மை, சிக்கல்கள் காரணமாக தற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் உறுவாகியுள்ளன.

அரசியலமைப்பில் மாற்றத்தை செய்வதற்காக நாம் கோரிய மக்கள் ஆணை எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள காரணத்தினால் எமது முதலாவது பணியாக நாம் மக்களுக்கு உறுதியளித்தவாறு, 19வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம்.

அதன் பின்னர் அனைவருடனும் இணைந்து நாட்டுக்கு தேவையானதும் பொருத்தமானதுமான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்போம். இதன் போது இந்நாட்டின் அனைத்து மக்கள்சம்பந்தமாகவும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவுக்கு முதலிடம் வழங்குவோம்.

புதிய அரசாங்கத்திடம் ரிஷாட் முன்வைத்துள்ள கோரிக்கை

புதிய அரசியலமைப்பு மாற்றம் அனைத்து இனங்களையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையிலும், நாட்டின் நலனுக்கு ஏற்புடையதாகவும் அமைய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

09 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, இன்று காலை (20) இடம்பெற்றபோது உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது,

“அமைச்சரவையின் கன்னி அமர்வில், தற்போதைய அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர முடிவெடுத்து, அதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. காலத்துக்குக் காலம் அதிகாரத்துக்கு வருகின்ற அரசாங்கங்கள், அரசியலமைப்பில் மாற்றங்களை செய்துள்ளன.

அதேபோன்று, இனிவரும் காலங்களிலும் பதவிக்கு வரும் அரசாங்கங்களும் இன்னொரு மாற்றத்தை மேற்கொள்ளாத வகையில், இந்த அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

உத்தேச அரசியலமைப்பு வெறுமனே, ஒரு சாராரையோ, ஒரு கட்சியையோ, ஒருசில இனவாதிகளையோ திருப்திப்படுத்துவதற்கு என்றில்லாமல், நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களையும் குறிப்பாக, பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமின்றி, எல்லோருக்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில் அமைய வேண்டும்.

அத்துடன், அவர்களது உரிமைகளை மதிக்கக் கூடிய வகையிலும் அது இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, இந்நாட்டில் ஒரு நிலையான சமாதானத்தை எதிர்பார்க்க முடியும்.

சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட போது, பொருளாதாரத்தில் பலமடைந்திருந்த நமது நாடு பின்னர், காலப்போக்கில் இங்கு வாழ்ந்த ஓர் இனம் “தமக்கு தனி நாடு வேண்டும்” என்று போராடிய வரலாறு இருந்தது. அதன்மூலம், நாட்டின் பொருளாதாரம் அழிந்ததுடன் இலட்சக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன என்பதையும் மனதில்கொள்ள வேண்டும்.

அரசியலுக்காக, தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை உசுப்பேற்றும் அரசியல் கலாசாரத்தைக் கொண்ட கட்சிகளாக நாம் இருக்கின்றோம். எனவே, அரசியலமைப்பு மாற்றம் நிரந்தரமான ஒன்றாக இருக்க வேண்டும்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில், புதிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு, எமது கட்சியின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

பாராளுமன்ற வரலாற்றில் தங்களுக்கு நீண்ட அனுபவம் உண்டு. நீங்கள் பல உயர் பதவிகளை வகித்துள்ளீர்கள். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நீங்கள், பல சர்வதேச கருத்தரங்குகளில் பங்குபற்றிய அனுபவம் கொண்டிருக்கின்றீர்கள். முதலமைச்சராகவும், அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி, அரசியல் அனுபவத்தைப் பெற்றிருக்கின்றீர்கள்.

எனவே, நீங்கள் பதவி வகிக்கும் உங்கள் காலத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி, ஒரு காவலனாகவும், உறுப்பினர்களது வரப்பிரசாதங்களை பாதுகாக்கின்ற ஒருவராகவும் செயற்படுவீர்கள் என்ற பூரண நம்பிக்கை எமக்குண்டு” என்று கூறினார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை குறித்து நாளை விவாதம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைவிளக்க உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் நாளை விவாதம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், எதிரணி உறுப்பினர்களுக்கு விவாதத்தில் உரையாற்றுவதற்கு 40 வீத நேர ஒதுக்கீடே வழங்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று மாலை 3 மணிக்கு பாராளுமன்றத்தில் கொள்ளை விளக்க உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொட்டகலையில் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை வூட்டன் நகரில் அமைந்துள்ள சில்லறை கடை மற்றும் சமையல் எரிவாயு நிரப்பும் நிலையம் ஆகியவற்றில் இன்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திருட்டு சம்பவத்தின்போது சில்லறை கடையில் சிகரட், உட்பட காசு என மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும், சமையல் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் 70000 ரூபாய் பணமும் திருடனால் திருடப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

திருடன் கடைகளில் முன்புறத்தில் உள்ள இரும்பு கதவு போன்றன உடைத்து முன் வழியாக கடைக்கு நுழைந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவு, நுவரெலியா மோப்ப நாய் பிரிவு உட்பட விசேட பொலிஸ் குழுக்கள் இத்திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அதிஉயர் சபையில் வேலுகுமார் நிகழ்த்திய சாதனை!

9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றதன்மூலம் கண்டி மாவட்டத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளார் வேலுகுமார்.

இலங்கையில் 1947 இல் தொகுதிவாரியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் கண்டி மண்ணிலிருந்து இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகள் பாராளுமன்றம் சென்றிருந்தனர்.

எனினும், 1948 இல் மலையகத் தமிழர்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டதால் 4 தசாப்தங்களுக்கு மேலாக கண்டி மாவட்ட தமிழர்கள் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டனர்.

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிட்ட இராஜரட்னம் வெற்றிபெற்றார். அதன்பின்னர் 2000, 2001, 2004, 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழ் வேட்பாளர் எவரும் வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் 2015 இல் நடைபெற்ற தேர்தலில் ஐ.தே.கவின் பட்டியலில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் வெற்றிபெற்றார்.இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு கண்டி மாவட்டத்துக்கு மீண்டும் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தது.

இதன்படி கண்டி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றம் தெரிவான தமிழ் அரசியல்வாதி என்ற சாதனையை புரிந்துள்ளார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹைதராபாத் அணி 47 ஓட்டங்களால் வெற்றி!

0
ஐ.பி.எல். 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 31 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி...

மரக்கறி விலைப்பட்டியல் (22.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

போடைஸ் பகுதியில் வெள்ளம்: 56 மேற்பட்ட வீடுகள் பாதிப்பு!

0
டிக்கோயா , போடைஸ் பகுதியில் நேற்று பெய்த கடும் மழையினால் போடைஸ் ஆறு பெருக்கெடுத்து அப்பகுதி வெள்ளக்காடானது. இதனால் கொணகல பிரிவில் உள்ள சுமார் 56 மேற்பட்ட குடியிருப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக போடைஸ்...