Home Blog Page 3895

9ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மகிந்த யாபா அபேவர்தன தெரிவு

9ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மகிந்த யாபா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டார்.

9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் ஆளும் கட்சியின் உறுப்பினர் தினேஸ் குணவர்தன, மகிந்த யாபா அபேவர்தனவின் பெயரை முன்மொழிந்தார்.

அதன்பின்னர் எதிர்க்கட்சியின் உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை வழிமொழிந்தார்.

இதன்பின்னர் மகிந்த யாபா அபேவர்தன சத்தியப் பிரமாணம் செய்துகொண்டு. கடமைகளைப் பொறுப்பேற்று, சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.

பாராளுமன்றத்தில் மூன்றாவது முக்கிய பதவிக்கு தமிழர்

பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளராக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவுசெய்யப்படவுள்ளார்.

பாராளுமன்றத்தில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் ஆகியோருக்கு அடுத்தப்படியாக குழுக்களின் பிரதி தவிசாளரே அதிகாரம் படைத்தவராக காணப்படுகின்றார். சபாநாயகர், பிரதி சபாநாயகர் ஆகியோர் இல்லாத சந்தர்ப்பங்களில் இவர் தலைமையிலேயே பாராளுமன்றம் கூடும்.

8ஆவது பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதி தவிசாளராக செல்வம் அடைக்காலநாதனும், 7 ஆவது பாராளுமன்றத்தில் முருகேசு சந்திரக்குமாரும் அப்பதவியை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே 9 ஆவது பாராளுமன்றத்திலும் அப்பதவி தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பாவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!

9 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை முன்மொழிவதற்கு ஆளுங்கட்சி தீர்மானித்துள்ளது.

9ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை முற்பகல் 9.30 மணிக்கு கூடவுள்ளது. இதன்போதே சபாநாயகர் பதவிக்கு இவரின் பெயரை பரிந்துரைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதி சபாநாயகர் பதவிக்கு ரஞ்சித் சிலம்பலாப்பிட்டியவின் பெயர் பிரேரிக்கப்படவுள்ளது.

அதேவேளை, ஆளுங்கட்சியின் சபாநாயகரை ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இதனால் சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாப்பா அபேவர்தன ஏகமனதாக தெரிவுசெய்யப்படவுள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை – விவாதம்கோர சஜித் அணி முடிவு!

ஆளுங்கட்சியால் முன்மொழியப்படும் சபாநாயகரை வழிமொழிந்து ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று  (18) மாலை கூடியது. இதன்போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராயப்பட்டன.

அவ்வேளையில் ஆளுங்கட்சிவசம் பெரும்பான்மை பலம் இருப்பதாலும், சபாநாயகர் என்பவர் பொதுவாக செயற்படவேண்டியவர் என்பதால் ஆரம்பத்திலேயே அவருக்கு எதிர்ப்பை வெளியிடமால் ஆளுங்கட்சியால் முன்வைக்கப்படும் பெயரை எதிர்ப்பின்றி வழிமொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் முன்வைக்கப்படும் கொள்கை விளக்கஉரைமீது விவாதம் கோருவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

9ஆவது பாராளுமன்றத்தில் ஜீவன் நிலைநாட்டவுள்ள சாதனை!

பாராளுமன்றத்துக்கு இம்முறை தெரிவாகியுள்ள உறுப்பினர்களில் 25 – 40 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆக இருக்கின்றது. இதில் நால்வர் 30 வயதுக்கும் குறைந்தவர்களென நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 41 -50 வயதுக்கிடைப்பட்ட 68 உறுப்பினர்கள் வாக்களிப்புமூலம் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

9 ஆவது நாடாளுமன்றத்துக்கு இளம் வயதுடைய உறுப்பினராக 1994 நவம்பர் 9 ஆம் திகதி பிறந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவாகியுள்ளார்.

நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் துமிந்த திஸாநாயக்கவே 25 வயதில் பிரதி அமைச்சர் பதவியை வகித்துள்ளார். 25 -30 வயதுக்குட்பட்ட 4 உறுப்பினர்களுமே பட்டதாரிகளாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை 51 – 60 வயதுக்கிடைப்பட்ட 54 பேரும், 61 -70 வயதக்கிடைப்பட்ட 37 பேரும் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவானவர்களில் உள்ளடங்குகின்றனர்.

71 -80 வயதுக்குட்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக இருக்கும் அதேவேளை 81 வயதை தாண்டிய இரு உறுப்பினர்களில் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன். மேலும் சில உறுப்பினர்களின் தகவல்கள் இன்னும் பதியப்படவில்லை.

இரும்புத்திரை -2 வெளிவருமா?

மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், நடிகை சமந்தா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் இரும்புதிரை.

இப்படம் நடிகர் விஷாலுக்கு, அறிமுக இயக்குனரான மித்ரணுகும் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

மேலும் இப்படத்தில் அர்ஜுன் நடித்திருந்த மாறுபட்ட வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்குகு பிறந்தநாள். அப்போது நடிகர் விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் அதில் குறிப்பாக மீண்டும் இணைந்து 2ஆம் முறை நடிப்போம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் இரும்புதிறை 2 தான் விரைவில் நடிக்க இருக்கிறது என்று இணையத்தில் செய்தி பரவ தொடங்கியுள்ளது.

மேலும் கூடிய விரைவில் படக்குழு விடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஷ்பு வெளியிட்ட படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை குஷ்பு வலைத்தளத்தில் அரசியல், சமூக விஷயங்கள் சம்பந்தமான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகவும் இருக்கிறார்.

அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும், சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் குஷ்பு. தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, இன்று வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் என் கணவரை அதிகம் சைட் அடித்தேனா அல்லது வேறு யாராவது என்னை சைட் அடித்தார்களா என தெரியவில்லை இப்படி ஆயிருச்சு என நகைச்சுவையாக பதிவிட்டு, கண்ணில் லேசான அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், சில நாட்களில் சரியாகிவிடும் எனவும் கூறியுள்ளார்.

டோனிக்காக மோடியிடம் அக்தர் விடுத்துள்ள கோரிக்கை

2021 ரி-20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்தால் டோனியால் அதை மறுக்க முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அக்தர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டோனியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டதால் டோனி ஓய்வு முடிவை விரைவில் அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டோனியின் ஒய்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “டோனிக்கு ரசிகர்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது. அவர் 2021 ரி-20 உலகக் கோப்பை தொடர் வரை விளையாடி இருக்கலாம். இருந்தாலும் ஓய்வு என்பது அவரது தனிப்பட்ட முடிவு.

இந்திய பிரதமர் மோடி தோனியிடம், 2021 டி-20 உலகக் கோப்பை வரை விளையாடலாம் என்று கோரிக்கை வைக்கலாம். அப்படி மோடி கோரிக்கை வைத்தால் அதை டோனியால் மறுக்க முடியாது.

இதுபோன்று நிகழ்வுகள் பாகிஸ்தானிலும் நடைபெற்றுள்ளது. டோனி விரும்பினால் அவருக்கு விடைகொடுக்கும் போட்டி ஒன்றை நடத்தலாம்“ என்றும் சோயப் அக்தர் கூறியுள்ளார்.

அனைத்து வகுப்புகளையும் மீள திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!

கொவிட்- 19 வைரஸ் தாக்கத்தால் விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதிபெற்றதனியார் பாடசாலைகளை மீள திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி 200 மாணவர்களுக்கும் மேல் கல்வி பயிலும் பாடசாலைகளில் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட நடைமுறைகளைப்பின்பற்றி சமூக இடைவெளி உள்ளிட்ட விடங்களை கடைப்பிடித்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான வகுப்பறை வசதிகள், ஆசிரியர்கள் இருப்பின், அனைத்து வகுப்புகளையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், மாகாண கல்விச்செயலாளர்கள், மாகாண கல்விப்பணிப்பாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

பந்துலவின் இடத்தை பிடித்தார் கம்மன்பில

அமைச்சரவை பேச்சாளராக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அமைச்சரவை இணைப்பேச்சாளராக அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, உதயகம்மன்பில ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (19) நடைபெற்றது. இதன்போதே மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இடைக்கால அரசாங்கத்தின் இணை அமைச்சரவைப் பேச்சாளராக இருந்த பந்துல குணவர்தன இம்முறை அமைச்சரவை இணைப்பேச்சாளர் பதவி வேண்டாம் என கூறிவிட்டார். அவரின் இடத்துக்கே கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

போடைஸ் பகுதியில் வெள்ளம்: 56 மேற்பட்ட வீடுகள் பாதிப்பு!

0
டிக்கோயா , போடைஸ் பகுதியில் நேற்று பெய்த கடும் மழையினால் போடைஸ் ஆறு பெருக்கெடுத்து அப்பகுதி வெள்ளக்காடானது. இதனால் கொணகல பிரிவில் உள்ள சுமார் 56 மேற்பட்ட குடியிருப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக போடைஸ்...

போர் நிறுத்தம் நீடிப்பு!

0
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தத்தை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் இன்று முடிவடைய இருந்த நிலையிலேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்தியஸ்த முயற்சியில் ஈடுபடும்...

நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை!

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (22) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும்...