Home Blog Page 3896

மஸ்கெலியாவில் போலி மாணிக்கக்கல் – ஒருவர் கைது

போலி மாணிக்கக்கல்லை விற்பனை செய்த நபரொருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொடை பெட்டிகல நவநிவசபுர பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கோபால கிருஸ்ணன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி மஸ்கெலியா ராணி தோட்டத்தை சேர்ந்த ஒருவருக்கே ஒரு லட்சத்து 98 ஆயிரம் ரூபாவை வாங்கிக்கொண்டு குறித்த போலி மாணிக்கக்கல் வழங்கப்பட்டுள்ளது என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மோசடியில் ஈடுபட்டவர் 17 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போதும் அவர் போலி மாணிக்கக்கல்லொன்றை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

மஸ்கெலியா நிருபர் பெருமாள்

கேரளா கஞ்சாவுடன் நாவலப்பிட்டியவில் நால்வர் கைது

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டி நகர பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன்  நான்கு பேர் நேற்று (18) மாலை நாவலப்பிட்டி குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே சோதனை மேற்கொண்ட பொலிஸார்  இவர்களை கைது செய்துள்ளனர். அத்தோடு, இவர்களிடமிருந்து 34,500 ரூபாய் பணத்தொகையும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் நீண்ட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சந்தேக நபர்களை மேலதிக விசாரணையின் பின்னர் நாவலப்பிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜப்படுத்தப்படவுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

க.கிசாந்தன்

‘வரலாற்றில் இருந்து பாடம் படிப்போம்’ – மனோ

வரலாற்றில் இருந்து பாடம் படிப்போம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு,

“முதலாவது நிரந்தரமானது. இரண்டாவது வந்து போவது. சிலருக்கு இந்த அரசியல் விஞ்ஞானம் விளங்குவதில்லை.

வந்து போகும் அரசாங்க வரம் கிடைத்தவுடன் நாட்டுக்கு தாம் மாத்திரமே “நிரந்தர சொந்தக்காரர்” என நினைத்து விடுகிறார்கள்.

அதிலும் இனவாத சாயமும் சேர்ந்து விட்டால் நாடு நாசம்தான்.

இதற்குள் இத்தகைய அரசுக்குள் இடம்பிடித்து, குறுக்கு நெடுக்காக ஓடித்திரியும் சில (எல்லோரும் அல்ல.!) சிறுபான்மை குழந்தைகளின் இரைச்சல் தாங்க முடியாது.

பாராளுமன்ற தலைகளின் பெரும்பான்மை என்பதை மாத்திரம் கொண்டு எதையும் செய்து விடலாம் என்ற எண்ணம் பிழை.

1956ம் ஆண்டில் இப்படித்தான் “தாம் மட்டும்” என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். அப்போதே ஒரு இடதுசாரி “இரண்டு என்றால் நாடு ஒன்று, அல்லது இரண்டு” என்றார். கேட்கவில்லை.

பின் ஏறக்குறைய நாடு இரண்டாகி, சொல்லொணா துன்பங்களை கண்டு, 75 வருடங்களாக இன்னமும் எழும்பி நிற்க முடியவில்லை.

ஆகவே அரசியல் விஞ்ஞானமும் படிப்போம். வரலாற்றில் இருந்து பாடமும் படிப்போம்.” – என்றுள்ளது.

மஞ்சள் தூளை பதுக்கினால் கடும் தண்டனை!

மஞ்சள் அல்லது மஞ்சள் தூளினை பதுக்கி அதிக விலைக்கு மேல் விற்பனை செய்தால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும் என சிறு போக ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர நேற்று தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் தனக்கு வாக்களித்து ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடந்து தகவல் தருகையில்,

தற்போதைய சூழ்நிலையில் மஞ்சளுக்கு நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால் மக்கள் மஞ்சளை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.

கடந்தகால நல்லாட்சி அரசாங்கம் முழுமையாக இறக்குமதி செய்தது. இதனால் உள்நாட்டு மஞ்சள் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை கைவிட்டனர். இதனால் நாட்டில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது.

மஞ்சள் தேவையினைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமைகள் ஏற்படாதவாறு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நாட்டில் மஞ்சள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வோம்.

இதன் மூலம் உள்நாட்டு விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதுடன், மஞ்சளின் விலையும் குறைந்துவிடும் என அவர் தெரிவித்தார்.

32 ஆவது இளைஞர் விளையாட்டு விழா!

32 ஆவது இளைஞர் விளையாட்டு விழா ( நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதி) எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்கள் மாத்திரமே இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தன. எனினும், கொரோனா பிரச்சினை காரணமாக இம்முறை பதிவு நடைமுறை தாமதமானது. எனவே, களத்துக்கு வந்து கழகங்கள் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மட்டத்தில் சாதிக்கும் கழகங்கள் மாவட்ட மட்டத்திலான போட்டிகளில் பங்கேற்கமுடியும்.

போட்டி அட்டவணை வருமாறு,

3 வருடங்களாக மூடப்படாத 48 மாணிக்கக்கல் அகழ்வு குழிகள்!

அரசாங்கத்தால் மாணிக்கக்கல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மாணிக்கக்கல் சுரங்க குழிகள் இன்னும் மூடப்படாததால் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் சிரமப்பட்டுள்ளனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபையால் பொகவந்தலாவ சீனாகலை பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வினை மேற்கொள்ள இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் அனுமதி
வழங்கப்பட்டிருந்தது.

பொகவந்தலாவை சீனாகலை தோட்டத்தில் கால்நடைகளுக்கு புல் ஆறுக்கும் காணியிலேயே மாணிக்ககல் அகழ்வினை மேற்கொள்ள கடந்த 2015
ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், ஒப்பந்தகாலம் நிறைவடைந்து சுமார் மூன்று வருடங்கள் கடந்துள்ளபோதிலும் குழிகளை மூடுவதற்கு தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபை
நடவடிக்கை எடுக்கபடவில்லை என கால்நடை வளர்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த பகுதியில் மாத்திரம் 48 மாணிக்கக்கல் சுரங்க குழிகள் தோண்டப்பட்டுள்ளன. எனவே, அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் சதீஸ்

அரசியல் கட்சிகள் பதிவு – இதுவரை 40 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

புதிதாகப் பதிவு செய்வதற்காக 160 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அவை தொடர்பான பரிசீலனைகள் நேற்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியல் கட்சிப் பதிவுக்காக 160 தரப்புகள் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானது.இதனால் புதிய கட்சிகளின் அங்கீகார நடவடிக்கை தடைப்பட்டது.தற்போது தேர்தல் முடிவுற்றமையால் புதிய கட்சிகளின் பதிவைஅங்கீகரிக்கும் பணியை முடிவுறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவற்றின் அடிப்படையில் இதுவரை விண்ணப்பித்த 160 கட்சிகளின் படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு 40 கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 120 விண்ணப்பங்களும் மேலும் பரிசீலிக்கப்படுகின்றன.

இவ்வாறு பரிசீலிக்கப்படும் 120 விண்ணப்பங்களினதும் பணியை நிறைவுசெய்ய ஒரு வார காலம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்போது மேலும் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் எனக் கருதப்படுகின்றது. இலங்கையில் தற்போது 79 கட்சிகள்பதிவில் உள்ள நிலையில் மேலும் அதிககட்சிகள் ஒரே தடவையில் பதிவுக்கு உட்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆளுங்கட்சி எம்.பிக்கள் கூட்டம் இன்று – முக்கிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் தேர்வு

ஆளுங்கட்சி எம்.பிக்கள் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையில் இன்று (19) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

பாராளுமன்றக்குழு கூட்டத்துக்கு முன்னர் அமைச்சர்களுடனும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கலந்துரையாடவுள்ளனர்.

பாராளுமன்றக்குழு கூட்டத்தின்போது சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகிய பதவிகள் தொடர்பில் முடிவெடுக்கப்படவுள்ளன.

இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை!!

இந்தோனேஷியாவில் தெற்கு சுமாத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று வளிமண்டளவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் தெற்கு சுமாத்ரா தீவில் பாரிய நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசரிதவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.59 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.  கடற்பரப்பில் இருந்து 163 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

எனினும், இந்த நில அதிர்வால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

மாலியில் இராணுவ புரட்சி! முக்கிய புள்ளிகள் துப்பாக்கி முனையில் கைது!!

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதிஇப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக இரண்டு மாதங்களாக போரட்டம் நடந்து வந்தநிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பில் பேசிய அதிபர் இப்ராஹிம் பவுபக்கர், “தமது பதவியை ராஜினாமா செய்வதாகவும், தமது அதிகாரத்திற்காக மக்கள் ரத்தம் சிந்துவதை தாம் விரும்பவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனேியோ குட்டரஸ் தெரிவிக்கையில்,

“மாலியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஐ.நா. உன்னிப்பாக கவனித்து வருகிறது. முதலில் அதிபர், இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். அங்கு மீண்டும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...