Home Blog Page 3897

இரத்தினபுரியில் உதயமாகியது ‘புதிய தலைமுறை’ அமைப்பு!

இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் இளையோர்கள் ஒன்றிணைந்து புதிய தலைமுறை எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் தேசிய கட்சிகள் தமிழர் பிரதிநிதித்துவத்தை திட்டமிட்டு இல்லாமல் செய்யும் நோக்கில் செயற்பட்டு வருகின்றன.

தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தபோதிலும் அதற்கான பேரம் பேசும் சக்தி இல்லாம் இருந்து வருகிறது.

கடந்த காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன இணைந்து மாகாண சபை பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்ட போதிலும் அந்தப் பிரதிநிதிகள் மக்கள் சார்பாக இயங்கவில்லை என்பது கண்கூடு.

அதேவேளை இந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு இருந்தபோதிலும் பெரும்பான்மை கட்சிகளின் சூழ்ச்சி மற்றும் தமிழ் கட்சிகளின் இயலாமை காரணமாக தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோயுள்ளது.

தமிழ் கட்சிகள் இதுவரை காலமும் தோல்வியுற்ற உறுப்பினர்களுக்கே மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் அளித்து வருகின்றன. இளையோருக்கான வாய்ப்பு தொடர்ச்சியாக மறுக்கப்பட்டே வருகிறது.

இதனைக் கருத்திற்கொண்டு ஒட்டுமொத்த இரத்தினபுரி தமிழர்களின் குரலாக புதிய தலைமுறை அமைப்பு இன்று முதல் அங்குரார்ப்பணம் கொள்கிறது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கல்விச் சமூகமாக, இளையோராக ஒன்றிணைந்து போட்டியிட்டு இரத்தினபுரி தமிழர்களுக்காக குரல்கொடுக்க பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதே புதிய தலைமுறை அமைப்பின் குறிக்கோள் ஆகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் கட்சிகள், வேறு மாவட்டங்களை தளமாகக் கொண்டு, வாக்குக்காகவும் சந்தாவுக்காகவும் மாத்திரமே வெளி வேசத்துடன் இரத்தினபுரி தமிழர்களை அணுகுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில், நீண்டகால நோக்கத்துடன் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்கும் அதேவேளை, இரத்தினபுரி மாவட்ட தமிழர்களுக்கு அவர்களே தலைமைத்துவம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அமைப்பு செயற்படவுள்ளது.

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் இந்த அமைப்பு எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது

மீறியபெத்தவில் 132 குடும்பங்களுக்கு தனி வீடுகள் அமைக்க நடவடிக்கை

மீறியபெத்தை மண்சரிவுப் பிரதேசத்திற்கு அண்மையில் வசித்துவரும் 132 குடும்பங்களுக்கு புதியவீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வகையிலான வேலைத் திட்டத்தினை ஹல்துமுள்ளை இடர் முகாமைத்துவப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இப் புதியவீடுகளை நிர்மாணிப்பதற்கான காணித் துண்டுகளும், அருகாமையிலுள்ள பெருந்தோட்டமொன்றிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய இடர் முகாமைத்துவப் பிரிவினரால் வீடொன்று பன்னிரு இலட்சம் ரூபா செலவில், 132 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகமையின் உத்தரவிற்கமைய ஹல்துமுள்ளை பிரதேச செயலாளர் சுனேத் ஜினேந்திரசேனவின் வழிநடாத்தலில் மேற்படி வீடமைப்புக்கள் இடம்பெறவுள்ளன.

மீறியபெத்த மண்சரிவு அனர்த்தம் 2014 நவம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்றது. இச்சம்பவத்திர் 37 பேர் பலியாகியிருந்ததுடன் 75 குடியிறுப்புக்கள் சேதமாகியுள்ளன. இவர்களுக்கானவீடமைப்புக்கள் நிறைவுபெற்று, அவ்வீடுகள் பாதிக்கப்பட்டமக்களுக்கு ஏற்கனவேவழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அப் பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள மண் சரிவு அபாயப் பிரதேசத்தில் மேலும் 132 குடும்பத்தினர் இருந்துவருகின்றனர். இவர்கள் தமக்கானவீடுகளை அமைத்துத் தருமாறுகோரிபல்வேறுபோராட்டங்களையும்,ஆர்ப்பாட்டங்களையும் கடந்தகாலங்களில் மேற்கொண்டிருந்தமையும் இங்குகுறிப்பிடத்தக்கது.

மொட்டு கட்சியின் 5 பிரபலங்கள் இராஜினாமா செய்ய முடிவு?

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காத பிரபல உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜிநாமாச் செய்யவுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டுமாகாண முதலமைச்சராகப் பதவி பெறுவதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகிய பிரபல அரசியல்வாதிகளான சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனவிரத்ன, சான் விஜேலால், சந்திம வீரக்கொடி ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

மேலும் பதுளை மாவட்ட எம்.பியொருவரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என தேசிய நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தொண்டமான் பங்களாவில் தீ – 150 வருடங்கள் பழமையான தளபாடங்களும், சின்னங்களும் தீக்கிரை!

தொண்டமான் பரம்பரையின் பூர்வீக இல்லமான இறம்பொடை, வேவண்டன் பங்களாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சுமார் 150 வருடகால பழமையான தளபாடங்களும், முக்கியமான சில நினைவுச்சின்னங்களும் தீக்கிரையாகியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

1904 ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டுவரும் குறித்த பங்களாவிலேயே முக்கியமான சில அரசியல் சந்திப்புகளும், வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்மானங்களும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம்தொட்டு எடுக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் காங்கிரஸின் அரசியல் செங்கோட்டையில் தீ விபத்து ஏற்பட்டமையும், பழமையான தளபாடங்களும் சேதமடைந்துள்ளமை காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதும் முதலில் அது தொடர்பில் ஜீவன் தொண்டமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் செந்தில் தொண்டமானுக்கும், மருதபாண்டி ராமேஷ்வரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்த செந்தில் தொண்டமான் அதிகாலை 4.30 மணியளவிலும், மடக்கும்பரையிலிருந்து அதிகாலை 3.30 மணியளவில் ரமேசும், கொழும்பிலிருந்து ஜீவன் தொண்டமான் அதிகாலை 5.30 மணிக்கும் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர்.

பிரதேச மக்களும், தீயணைப்பு படையினரும், பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

நன்றிகடன் செலுத்துங்கள் – இங்கிலாந்திடம் வசீம் அக்ரம் கோரிக்கை

கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இரண்டரை மாதம் இங்கிலாந்தில் தங்கி விளையாடிய பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி நன்றிக்கடன் செலுத்த வேண்டும் வசீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் 2-வது வாரத்தில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதன்பின் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் முயற்சியால் ஜூலை 8ஆம் திகதி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் தொடங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பயோ-செக்யூர் பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் கொண்டு வரப்பட்டு போட்டி வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது.

அதன்பின் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட சென்றுள்ளது. தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இரண்டு அணிகளும் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இங்கிலாந்து சென்றது. அங்கு 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டன. அதன்பின் கொரோனா பரிசோதனைக்குப்பின் பயிற்சி மேற்கொண்டன.

கொரோனா காலத்தில் வீரர்களின் உயிர்களை பணயம் வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விளையாட சம்மதம் தெரிவித்தது.இதற்கு நன்றிக்கடனாக 2022-ல் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘கொரோனா காலத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் இங்கிலாந்து வந்ததற்காக இங்கிலாந்து அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது. பயோ-செக்யூர் சூழ்நிலையில் சுமார் இரண்டரை மாதங்கள் இருந்துள்ளனர்.

ஆகவே, எல்லாமே சரியாக சென்றால் இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாட வேண்டும். இங்கிலாந்து வீரர்கள் அவர்ளுடைய சொந்த மைதானத்தில் விளையாடிய போன்று உணர்வார்கள் என்பதை என்னால் உறுதிப்பட கூற இயலும்.

அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான் போன்ற இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்று விளையாடினார்கள். அவர்கள் விரும்பி, மகிழ்ச்சியாக விளையாடினர். அவர்கள் சிறப்பானதாக உணர்ந்ததால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, அரசு, பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகள், அவர்களுடைய ஸ்டாஃப்களுக்கு நான் பாராட்டு தெரிவித்தாக வேண்டும்’’ என்றார்.

காஜலுக்கு இரகசியமாக டும்…டும்…டும்…

காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, மெர்சல், கோமாளி என்று பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்திலும் இணைந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். காஜல் அகர்வாலின் தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வாலுக்கு 2013இல் திருமணம் நடந்தது. இதையடுத்து காஜல் அகர்வாலுக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வந்தார்.

தற்போது காஜல் அகர்வாலுக்கு 35 வயது ஆகிறது. தொழில் அதிபர் ஒருவரை அவர் காதலித்து வருதாக ஏற்னவே கிசுகிசுக்கள் வந்தன. இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

மணமகன் பெயர் கவுதம் என்றும் நிச்சயதார்த்தத்தில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லங்கொண்டா சீனிவாஸ் கலந்து கொண்டார் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது. இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவலை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தவில்லை.

தனியார் துறையின் பங்களிப்புடன் மத்திய மாகாணத்தில் 10 பாரிய பால் பண்ணைகள்!

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்நாட்டின் பால் உற்பத்தியை நாட்டின் பால் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மேம்படுத்துவதாகவும், அதை நுகர்வுக்கு அப்பால் ஏற்றுமதி மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்தின் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

பால் உற்பத்தித்துறையுடன் தொடர்புடைய அமைச்சர்கள் உள்ளிட்ட அத்துறை சார்ந்த அரச நிறுவன தலைவர்களுடன் அலரி மாளிகையில் நேற்று (2020.08.17) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி செயலணி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதுடன், அதன்படி உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பாரியளவிலான பால் பண்ணைகள் மற்றும் சிறிய அளவிலான பால் பண்ணைகளை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பால் தேவை 1200 மில்லியன் லீட்டராகும். தற்போது உற்பத்தி செய்யப்படும் பாலின் அளவு 420 மில்லியன் லீட்டராகும். எஞ்சிய தேவையான பாலின் அளவு 780 மில்லியன் லீட்டர் என்ற போதிலும், திரவப் பால் பயன்பாட்டிற்கு மக்களை பழக்கப்படுத்தினால், மேலும் 400 மில்லியன் லீட்டர் பாலை கொண்டு உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

1 கிலோகிராம் பால் மாவை உற்பத்தி செய்வதற்கு சுமார் 8 லீட்டர் திரவ பால் தேவைப்படுகிறது. அதன்படி, 1 கிலோகிராம் பால் மாவிலிருந்து தயாரிக்கக்கூடிய பால் கோப்பைகளின் அளவை விட 8 லீட்டர் திரவ பாலில் இருந்து தயாரிக்கக்கூடிய பால் கோப்பைகளின் அளவு மிக அதிகம்.

பால் விலை, பால் பசுக்களை இறக்குமதி செய்தல், புல்வெளிகளைப் பாதுகாத்தல், மக்காச்சோளம் சாகுபடி செய்தல் மற்றும் அதற்கான நிலம் ஒதுக்கீடு செய்தல், மக்காச்சோளம் சாகுபடியின் வெற்றிக்கு பயனுள்ள விதைகளை இறக்குமதி செய்து உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மக்காச்சோளத்தின் உற்பத்தித்திறனை ஒரு ஹெக்டேயருக்கு 3.8 மெட்ரிக் டொன்னிலிருந்து 7 மெட்ரிக் டொன் வரை உயர்த்த வேண்டும்.

அதன்படி, எதிர்வரும் பருவத்தில் பால் பண்ணையாளர்களுக்கு அவசியமான மக்காச்சோளம் பயிரிடத் தேவையான நிலங்களை விடுவிப்பது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ச சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

கொழும்பு, கம்பஹா போன்ற நகர்ப்புறங்களில் தூய்மையான பால் நுகர்வை அதிகரிக்கவும், அதற்கேற்ப பால் சார்ந்த உற்பத்தி துறைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குறித்த நிகழ்வில் கமத்தொழில் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புர மற்றும் கனக ஹேரத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

தொழிலாளர்களின் போராட்டத்துக்கு கிடைத்தது தீர்வு!

ஆர்ப்பிக்கோ கம்பனியின் கீழ் இயங்கும் மஸ்கெலிய சாமிமலை டீசைட் தோட்டத்தில் தொழில்புரியும் தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து அவற்றுக்கு தீர்வு வேண்டும் என வலியுறுத்தி நேற்று  (17)  போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தொழிற்சங்க போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியன தொழிலாளர்களின் சார்பில் தோட்ட நிர்வாகங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாகவே தீர்வை வழங்குவதற்கு கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

இதன்படி தோட்ட   நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 60  தொழிலாளர்களின் இரண்டு நாட்கள் சம்பளம் உடன் கையளிக்கப்படவேண்டும்.

2.  மாதாந்ததம்  24  நாட்கள்  வேலை  வழங்கப்படவேண்டும் .

3   தேயிலை  தொழிற்ச்சாலை  இன்று முதல்    (18)      திறக்கப்பட வேண்டும்

போன்ற விடயங்களை செய்து தருவதாக உறுதி வழங்கியுள்ளதுடன்   ஏனைய விடயங்கள் சம்பந்தமாக எதிர்வரும் (24)   திகதி தோட்ட கம்பனி முக்கியஸ்தர்களுடன் நேரடியாக  கலகலந்துறையாடலின் பின்   தீர்வு ஒன்றை பெற்று தருவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

(சாமிமலை   ஞானராஜ்)

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 79 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 79 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,755 ஆக அதிகரித்துள்ளது.

134 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலையக மண்வாசனை சொல்லும் புகைப்பட கண்காட்சி

மலையக மண்வாசனை சொல்லும் மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கண்காட்சி எதிர்வரும் 23 ஆம் திகதி தலவாக்கலை ஶ்ரீ கதிரேசன் கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை கண்காட்சியை பார்வையிடமுடியும் என நிகழ்வு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...