Home Blog Page 3898

அமலாபாலின் செயலுக்கு வலுக்கிறது எதிர்ப்பு

புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட அமலாபாலை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சிந்து சமவெளி சர்ச்சை படத்தில் அறிமுகமாகி பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வளர்ந்த அமலாபால் திருமணம், விவாகரத்து என்றெல்லாம் பரபரப்பாகி மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர வைத்தார். தற்போது கதாநாயகியை மையப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கிறார். சமீப காலமாக அமலாபால் சமூக வலைத்தளத்தில் சர்ச்சை புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

ஆண் நண்பர்களுடன் மதுகோப்பையுடன் இருக்கும் படங்களை வெளியிட்டார். இன்னொரு ஆண் நண்பர் அருகில் நிற்க கடற்கரையில் படுத்திருப்பதுபோன்ற புகைப்படம் வந்தது.

தற்போது புகைப்பிடித்து வாயில் இருந்து வரும் புகையை வட்டமாக வெளியிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். அதில் “எல்லா நற்பண்புகளும் சலவை செய்த துணிபோல் இல்லை. எல்லா புனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை. எல்லா பாவிகள் கையிலும் ரத்தம் இல்லை.” என்றெல்லாம் தத்துவ பதிவையும் வெளியிட்டுள்ளார்.

புகைப்புடிக்கும் அமலாபாலுக்கு எதிராக ரசிகர்கள் பலரும் வலைத்தளத்தில் கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

2 கோடியே 20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று – 7 லட்சத்து 77 ஆயிரம் பேர் பலி!

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 20 லட்சத்து 49 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 20 லட்சத்து 49 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் ஒரே நாளில் சராசரியாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 49  லட்சத்து 91 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 7 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவைக் கூட்டம் நாளை!

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை தேர்தலின் ஊடாக அமைச்சரவைக்காக 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்கள் கடந்த 12 ஆம் திகதி சத்தியபிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட 39 இராஜாங்க அமைச்சர்களும் சத்தியபிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.

நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் 20ஆவது திருத்தச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முற்போக்கு கூட்டணியினருக்கு 23 ஆம் திகதி ஹட்டனில் கோலாகல வரவேற்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி ஹட்டனில் நடைபெறவுள்ளது.

கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், எம்.பிக்களான வேலுகுமார், அரவிந்தகுமார் மற்றும் உதயகுமார் ஆகியோருக்கே இவ்வாறு வரவேற்பளிக்கப்படவுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து தொலைபேசி சின்னத்தின்கீழ் போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா, கண்டி, பதுளை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் வெற்றிபெற்றது.

இரத்தினபுரி, கேகாலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போட்டியிட்ட கூட்டணியின் வேட்பாளர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் கூட்டணி, முற்போக்கு கூட்டணி 20 இல் முக்கிய கூட்டம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நாளை மறுதினம் 20 ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது

அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்றகுழுவும் அன்றைய தினம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பற்றி எரிந்தது தொண்டமான் பங்களா! பலகோணங்களில் விசாரணை!!

கொத்மலை – வேவன்டனில் உள்ள மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் 18.08.2020 அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 2.30 அளவில் ஏற்பட்ட இந்த தீ அனர்த்தத்தில் வீட்டின் கூரை முழுமையாக சேதமடைந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா தீயணைப்பு படைப்பிரிவுக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்தி, தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வனான, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொத்மலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த தீ அனர்த்தம் காரணமாக, வேவன்டண் இல்லத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பல உடமைகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

க.கிசாந்தன், பொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ்

மாகாணசபைத் தேர்தலுக்கான சட்ட ஏற்பாடுகள் தீவிரம்!

மாகாணசபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
 
இதன்படி கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இல்லாது செய்வதற்காக மாகாணசபை சட்டத்தில் திருத்தமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
 
அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.
 
இது தொடர்பில் இருவருக்குமிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
 
 
 

‘இந்தியாவின் அனுமதியின்றி 13 ஐ நீக்கவே முடியாது’

இந்தியாவின் அனுமதி இல்லாமல் இலங்கை அரசாங்கத்தால் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றமுடியாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணி நேற்று (16) அறிவித்தது.

ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டணியின் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்கள் இந்த நாட்டுக்கு அவசியம். அவற்றை முழுமையாக நீக்குவதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.

13ஆவது திருத்தச்சட்டம் இந்த நாட்டுக்கு அவசியம் என்பதை இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளில் 1987 இல் ஏற்றுக்கொண்டன. ஜே.ஆர். ஜயவர்தன, ராஜீவ் காந்தி இணைந்தே அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

எனவே, இந்த சட்டத்தை மாற்றுவதாக இருந்தால் இந்தியாவின் அனுமதி இல்லாமல் அதனை செய்யமுடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆகவே, 13 விடயத்தை இந்தியா கவனத்துக்கொள்ளும். நாமும் அதற்கு ஆதரவாக நிற்போம்.

19 ஆவது திருத்தச்சட்டத்தை இந்த அரசாங்கத்தால் மாற்றமுடியும். நல்லவிதத்தில் மாற்றியமைத்தால் ஆதரவு வழங்கப்படும். முழுமையாக இல்லாதொழிக்க ஆதரவு வழங்கப்படாது.” – என்றார்.

திண்டாடிய அரச அதிகாரிகளுக்கு வழிகாட்டிய செந்தில் தொண்டமான்

பதுளை, வெலிமடை வோர்விக் தோட்ட மார்ட்டின் பிரிவு லயன் குடியிருப்பொன்றில் இன்று (17) ஏற்பட்ட தீ விபத்தால் 14 வீடுகள் தீக்கிரையாகின.

இவ்வனர்த்தம் குறித்து அறிவிக்கப்பட்ட கையோடு, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தார்.

அத்துடன், அவர்கள் தங்குவதற்காக தற்காலிக இருப்பிடமொன்றை அமைக்குமாறு தோட்ட நிர்வாகத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்துடன், மாவட்ட அரசாங்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடாத்தி, வெலிமடை கிராம சேவகர் ஊடாக அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்துகொடுக்குமாறும் உலர் உணவுப் பொருட்களும் வழங்குமாறும் செந்தில் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்பை மீள கட்டமைப்பு செய்வதற்கு மாகாண சபை ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலின் பின்னர் செந்தில் தொண்டமான் இன்னும் தனது பணிகளை ஆரம்பிக்கவில்லை. அப்படி இருந்தும் மக்களுக்கு அனர்த்தம் ஏற்பட்டுவிட்டது என தெரிந்தவந்தவுடன் களத்துக்கு சென்று தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

குறிப்பாக என்ன தெய்வதென தெரியாமல் திண்டாடிய அரச அதிகாரிகளுக்கு இது விடயத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் வழிகாட்டினார்.

கடமையேற்க முன் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் வழங்கிய நாமல்!

விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ச நாளை (2020.08.18) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னதாக அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி, அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.

இதுவரை எந்தவொரு அமைச்சரதும் பார்வைக்கு கிட்டாத இந்த தமிழ் பிழையானது, இளைஞர்களை வலுப்படுத்த புதிதாக பதவியேற்ற இளம் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் கண்களுக்கு புலப்பட்டுள்ளது.

மும்மொழி கொள்கை இலங்கையில் அமுலில் உள்ளது என்பதனை உறுதிபடுத்தும் வகையில் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் இந்த செயற்பாடு அமைந்துள்ளது.

இந்நிலையில், இவ்வாறான பிழைகள் குறித்து எதிர்வரும் காலத்தில் அமைச்சரினால் கூடுதல் கவனம் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...