Home Blog Page 3899

2017 இற்கு பிறகு நாடு முழுதும் மின் துண்டிப்பு! நாசகார செயலா? விசாரணை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் இன்று பகல் 12.45 மணி முதல் மாலை 6 மணிவரை மின் விநியோகம் தடைபட்டது. தற்போது வழமைக்கு திரும்பியிருந்தாலும் சில பகுதிகளில் மின்விநியோகம் தொடர்ந்தும் தடைபட்டுள்ளது.

கெரவலபிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், இது தொடர்பில் விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு துறைசார் அமைச்சர் டளஸ் அழகப்பெரும பணிப்புரை விடுத்துள்ளார். இதன்பிரகாரம் விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் நாசகார செயல் எதுவும் இருக்காது எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இறுதியாக 2017 ஆம் ஆண்டிலேயே நாடு தழுவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டிருந்தது. அதற்கு முன்னர் 2009, 2015 ஆம் ஆண்டுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எஸ்.பி.பிக்காக ரஜினி பிரார்த்தனை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். முக்கியமாக ரஜினியின் படங்களில் ஓபனிங் பாடலை எஸ்.பி.பி பாடினால் தான் ஹிட்டாகும் என்ற செண்டிமெண்டும் தமிழ் சினிமாவில் உண்டு.

ரஜினியின் சமீபத்திய பேட்ட, தர்பார் முதற்கொண்டு ஏராளமான படங்களுக்கு ஓபனிங் சாங் பாடியவர் எஸ்.பி.பி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:

“இந்திய மொழிகள் பலவற்றிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளார். அவர் சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் திரும்ப எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்டது சஜித் அணி

” அரசியல் சமரில் ஈடுபட்டு சிறிகொத்தவை கைப்பற்றுவதற்கு நாம் தயாரில்லை. எனவே, தலைமைப்பதவியை ஏற்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாவுக்கு அழைப்பு விடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அக்கட்சி உறுப்பினர்களுக்கு அரசியல் எதிர்காலம் என்பது இருக்காது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகலை மாவட்ட வெற்றி வேட்பாளர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (17) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களும், வாக்கு வங்கியும் ஐக்கிய மக்கள் சக்தி வசமே இருக்கின்றது. பொதுத்தேர்தலில் இதனை நாம் உறுதிப்படுத்தினோம். எனவே, ரணில் அணியினர் இனியாவது உறுதியானதொரு தீர்மானத்தை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ரணிலுடன் இருக்கும் உறுப்பினர்களுக்கு மாகாணசபைத் தேர்தலில்கூட வெற்றிபெறமுடியாத நிலை ஏற்படும்.
முடியுமானால் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று காட்டுமாறு ரங்கே பண்டார, அகிலவிராஜ், வஜிர உள்ளிட்டோருக்கு சவால் விடுக்கின்றோம். முடியாது. இனி அவர்களுக்கு பிரதேச சபைத் தேர்தலில்கூட வெற்றிபெறமுடியாது.
ஆகவே, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை ஏற்குமாறு சஜித்துக்கு ரணில் அணியினர்தான் வலிந்து அழைப்பு விடுக்கவேண்டும். அவ்வாறு விடுக்கப்படும் அழைப்பில்தான் அவர்களின் அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளது. நாம் வலிந்துசென்று பதவியை கேட்கப்போவதில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியாக முன்நோக்கி பயணிப்போம். ஐ.தே.கவின் தலைமைப்பதவி வழங்கப்படுமானால் அதனை சஜித் ஏற்று கூட்டாக பயணிக்ககூடியதாக இருக்கும்.
2024 முற்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து எமது அரசியல் நகர்வுகள் இடம்பெறும். இன்னும் இரண்டு மாதங்களில் சஜித்தின் நேரடி பங்களிப்புடன் கீழ்மட்ட அரசியல் இயந்திரம் கட்டியெழுப்படும். ” – என்றார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு உதயாவின் பெயரும் பரிந்துரை!

தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவிக்கு முன்னணியின் பிரதித் தலைவர் எம். உதயகுமாரின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது என சங்கத்தின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியை வகித்த எம். திலகராஜ் ஏற்கனவே இராஜினமா கடிதத்தை கையளித்துள்ள நிலையில் அது தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி ஆராய்வதற்காக தொழிலாளர் தேசிய சங்கம் – முன்னணியின் உயர்மட்டக் கூட்டமொன்று எதிர்வரும் 23 ஆம் திகதி ஹட்டனில் நடைபெறவுள்ளது. இதன்போது பொதுச்செயலாளர் பதவி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரியவருகின்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசனுக்கு அப்பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டாலும் உதயகுமாரின் பெயரும் பரீசிலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணியின் பொதுச்செயலாளர் பதவி சிவநேசனுக்கு?

தொழிலாளர் தேசிய முன்னணியின் 18 பேர்கொண்ட உயர்மட்டக் குழு எதிர்வரும் 23 ஆம் திகதி ஹட்டனில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமையகத்தில் கூடவுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவி உட்பட பல உயர் பதவிகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்வதற்காகவே இந்த அவசர கூட்டம் நடைபெறவுள்ளது.

கட்சியின் பல முக்கிய புள்ளிகள் பொதுச் செயலாளர் பதவியை குறிவைத்து காய்நகர்த்தலில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

என்றாலும் கட்சியின் தலைவர் பழனி திகாம்பரத்தின் நம்பிக்கையின் பாத்திரமாக விளங்கும் ஒருவருக்கே பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பெயர் பட்டியலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா.சிவநேசனே பெயரே முன்னிலையில் உள்ளது.

சிவநேசனை பொதுச் செயலாளராக நியமிப்பதற்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், தோட்டத் தலைவர்களும் இணக்கத்தை வெளிப்படுத்தி வருவதாக அறிய முடிகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே’ – நிர்வாகத்துக்கு எதிராக வெடித்தது போராட்டம்!

ஆர்ப்பிக்கோ  கம்பனியின் கீழ் இயங்கும் மஸ்கெலியா சாமிமலை டீசைட் தோட்டத் தொழிலாளர்கள்  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (17) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டீசைட் தோட்ட காரியாலய திடலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார்   300 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் .

இதன்போது கருத்து தெரிவித்த தொழிலாளர்கள்

” குறித்த தோட்ட  நிர்வாகத்தால் தமக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்படுகின்றது.  கடந்த ஒரு வருட காலமாக வேலை நாட்கள் குறைக்கப்பட்டு  வருகின்றது. இதனால்  தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  கூடுதலான தொழிலாளர்கள் வெளியிடங்களுக்கு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.

அத்துடன், தேயிலை தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் நாம் பறிக்கும் கொழுந்தை மாற்றிடங்டளுக்கு அனுப்புகின்றனர். இதனால் தேயிலை தொழிற்ச்சாலையில் வேலை செய்து வந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தொழிலளர்களின் சேமநல விடயங்கள் மறுக்கப்பட்டு தேயிலை மலைகள் காடாக்கப்பட்டுள்ளதால்  தேயிலை மலைகளில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுகின்றது. தமக்கு நீதி வேண்டும்.” எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

 சாமிமலை நிருபர்  ஞானராஜ்

‘அமைச்சரவைப் பேச்சாளர் பதவியை நிராகரித்த பந்துல’

” அமைச்சரவைப் பேச்சாளர் பதவி தனக்கு வேண்டாம்.” – என்று அமைச்சர் பந்துல குணவர்தன பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியை உரிய வகையில் முன்னெடுப்பதே தனது இலக்கு எனவும், எனவே, மேலதிக பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தபோதே இந்த விடயத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர் இடைக்கால அரசாங்கத்தின் இணை அமைச்சரவைப் பேச்சாளர்களாக பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரண ஆகியோர் செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறையும் இருவரையும் நியமிப்பதற்கே திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே பதவியை பந்துல நிராகரித்துள்ளார் என கூறப்படுகின்றது.

நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா – பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு

நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா – பொதுத்தேர்தல் ஒத்திவைப்புநியூசிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதால், அங்கு நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் மேலும் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பினை இன்று  நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் வெளியிட்டார். அத்துடன், நாட்டின் பொதுத் தேர்தல் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

102 நாட்களாக புதிய கொரோனா தொற்று நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படாததை அடுத்து செப்டம்பர் 19ஆம் திகதி சுதந்திரமானதும் நியாயமபனதுமான தேர்தல் நடத்தப்படுமென அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இருப்பினும் கடந்த வாரம் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த காரணத்தினால் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்துவந்தனர்.

குறிப்பாக நியூசிலாந்தில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட பொதுத் தேர்தலை தள்ளிவைக்குமாறு நியூசிலாந்து துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் நேற்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு கடிதம் எழுதினார்.

நேற்று நியூசிலாந்தில் 13 உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தற்போது 69 நோயாளிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதனையடுத்து 1.7 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாட்டின் மிகப்பெரிய நகரமான அக்லாந்தை ஆர்டெர்ன் கடந்த வாரம் இரண்டு வார முடக்க நிலையின் கீழ் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டோனிதான் எனக்கு என்றும் தலைவர் – கோஹ்லி உருக்கம்

கிரிக்கெட்டிலிருந்துஓய்வு பெற்ற டோனிக்கு புகழாரம் சூட்டியுள்ள இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, அவர் டோனிதான் தனக்கு எப்போதும் தலைவர் என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான மகேந்திர சிங் டோனி சுதந்திர தினமான நேற்று முன்தினம் இரவு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

டோனியைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் 33 வயதான சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இவர்கள் இருவரும் தற்போது சென்னையில் நடந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.

39 வயதான டோனி கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். அவற்றில், ஒரு நாள் கிரிக்கெட்டில் 47 ஆட்டங்களில் இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடித்து நாட்-அவுட் வீரராக இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. வேறு எந்த வீரரும் இச்சாதனையை நெருங்க கூட முடிய வில்லை.

‘ஹெலிகாப்டர் ஷாட்’ நாயகனான டோனி 9 ஆட்டங்களில் சிக்சருடன் இலக்கை நிறைவு செய்ததும் தனித்துவமானது. இதில் 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளாசிய பிரமிக்கத்தக்க சிக்சரும் அடங்கும். ‘ஒட்டுமொத்த தலைமுறையினருக்கும் டோனி உத்வேகம் அளிப்பவராக திகழ்ந்தார்’ என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுள்ள டோனிக்கு இந்நாள், முன்னாள் வீரர்களின் பாராட்டு மழை வருமாறு:-

சச்சின் : இந்திய கிரிக்கெட்டுக்கு டோனி அளித்த பங்களிப்பு மகத்தானது. டோனியுடன் இணைந்து 2011ஆம் ஆண்டு உலககோப்பையை வென்றது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். அவரது 2-வது இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

விராட் கோஹ்லி: நம்மிடையே உள்ள நட்புறவு, சிறந்த நினைவுகளை பகிர்ந்துள்ளோம். அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் எப்போதும் செயல்பட்டு வந்துள்ளோம். அதனால் நல்ல புரிந்துணர்வும் உண்டு. உங்களுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சியான அனுபவம். நீங்கள் என் திறமை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்தீர்கள்.

அதற்கு எப்போதும் நன்றி கடன்பட்டு உள்ளேன். நான் ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்வது உண்டு. அதை மீண்டும் சொல்கிறேன். நீங்கள் தான் (டோனி) எப்போதும் எனது கேப்டனாக இருப்பீர்கள். உங்களது அடுத்தகட்ட வாழ்க்கை அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வாழ்த்துகள்.

புதிய பொதுச்செயலாளர் யார்? 23 இல் கூடுகிறது திகா அணி!

தொழிலாளர் தேசிய முன்னணியிக்கு புதிய பொதுச்செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கு முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 23 ஆம் திகதி ஹட்டனில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாக சபை மற்றும் உத்தியோகத்தர் சபை ஆகியன அன்றைய தினம்கூடி முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் கிளையாகவே முன்னணி செயற்பட்டுவருகின்றது.

அத்துடன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிற்சங்க மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் ஆராயப்படவுள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...