Home Blog Page 3900

புதிய கட்சி ஆரம்பிக்கிறாரா திலகர்? வெளியானது அறிவிப்பு!

தொழிலாளர் தேசிய முன்னணியிடம் ஏற்கனவே இராஜினாமா கடிதத்தை கையளித்துவிட்டதாகவும், புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை எனவும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.பியுமான எம். திலகராஜ் தெரிவித்தார்.

அத்துடன் கட்சி தாவபோவதில்லை எனவும் அவர் உறுதியளித்துள்ளார். இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,

‘ஆறுமுகனின் திட்டங்களை அமைச்சின் ஊடாக நிறைவேற்றுவோம்’

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை இந்த அமைச்சின் ஊடாக நிறைவேற்றுவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மறைந்த எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மீது நம்பிக்கை வைத்து மக்கள் எமக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கைக்கேற்பவும் அதே நேரம் எம் மீது நம்பிக்கை வைத்து ஜனாதிபதி பிரதமருக்கு மறைந்த எமது தலைவரின் அமைச்சியினையே வழங்கியுள்ளார்.

எனவே மறைந்த தலைவர் மலையகப்பகுதியில் என்னென்ன அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுத்தாரோ அந்த வேலைத்திட்டங்களையும் அவர் எதிர்ப்பார்த்திருந்த திட்டங்களையும் இந்த அமைச்சினூடாக நிறைவேற்றுவோம் என்றார்.

19ஐ இல்லாதொழிக்க ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு ஆதரவு வழங்கமாட்டோம். தடைகளை நீக்கி, முன்நோக்கி பயணிப்பதற்கு தடங்களாக உள்ள விடயங்களை திருத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் மாநாடு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்றது.

இதன்போது அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றன. ஆனாலும், அதில் சிற்சில குறைப்பாடுகள் இருப்பதாக பரவலாக கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. எனவே, இவை தொடர்பில் கலந்துரையாடி சாதகமான முறையில் 19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமைப்பதற்கு நாம் தயார்.

ஆனால் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் பிரதான நோக்கங்களை மாற்றியமைப்பதற்கு முயற்சித்தால் அதற்கு ஆதரவு வழங்கமாட்டோம்.

நிறைவேற்று, சட்டவாக்க துறைகளுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்களில் மாற்றம், வெளிநாட்டு பிரஜையொருவருக்கு இந்நாட்டு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கல் போன்ற திருத்தங்கள் இடம்பெற்றால் அவற்றுடன் உடன்படிமுடியாது.

அதேபோல் ஜனாதிபதியின் பதவி காலம், நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் என்பன 5 வருடங்களாக இருக்கவேண்டும். ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்கலாம் என்ற தற்போதைய நிலையும் மாறக்கூடாது. அரசியலமைப்பு பேரவை, சுயாதீன ஆணைக்குழு, தகவல் அறியும் உரிமை ஆகியன 19 இன் பிரகாரமே தொடரவேண்டும்.

எனவே, இவற்றை இல்லாதொழிப்பதற்கு இடமளிக்கமுடியாது. எதிர்மறையான திருத்தங்களுக்கு நாம் எதிர்ப்பு. ஆனால், நாட்டை முன்நோக்கு அழைத்துச்செல்வதற்கு நடைமுறை சிக்கலாக உள்ள காரணிகளை திருத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

ஈராண்டுகளில் புதிய அரசியலமைப்பு!

புதிய அரசியலமைப்பை இயற்றும் பணியை ஈராண்டு காலப்பகுதிக்குள் நிறைவுசெய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் உத்தேசித்துள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக தற்போது அமுலில் இருக்கும் 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என அரச உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கான 20ஆவது திருத்தச்சட்டமூலத்தின் உத்தேச வரைவு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாது செய்யப்படமாட்டாது எனவும் அவற்றில் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், காணாமல்ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பிலும் சில சட்ட திருத்தங்கள் இதன் 20 ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரியவருகின்றது.
19 ஆவது திருத்தச்சட்டம் வருவதற்கு முன்னர் ஜனாதிபதியின் பதவி காலம் 6 வருடங்களாக இருந்தது.

அத்துடன், ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே அப்பதவியை வகிக்கலாம் என்ற வரையறையும் 18 ஊடாக இல்லாமல் செய்யப்பட்டது.
எனவே, 19 நீக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் பதவிகாலம் 5 ஆகவே இருக்கும் எனவும், ஜனாதிபதி பதவியை நபரொருவர் இரண்டு தடவைகள் மட்டுமே வகிக்கலாம் எனவும் வலியுறுத்தும் சரத்துகளும் இணைக்கப்படவுள்ளன.

அதேவேளை, 19 ஐ இல்லாதொழித்த பின்னர் ஜனாதிபதியால் அமைச்சு பதவிகளை வகிக்கமுடியும் என்பதுடன், இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடிய சூழ்நிலையும் உருவாகும்.

‘மலையகத்துக்கு மாடிவீடு வேண்டாம்’ – திகா வலியுறுத்து

மலையகத்தில் மாடி வீட்டுத் திட்டம் கொண்டு வருவதற்கு இணங்கிவிடக் கூடாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

லிந்துலை – பம்பரகலை பகுதியில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து நிவாரம் வழங்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு  கூறினார்.

நான் அமைச்சராக இருந்து 7 பேர் காணியில் வீடு கட்ட ஆரம்பித்த போது 7 பேர் போதாது என்று விமர்சித்தனர். ஆனால் தற்போது மாடி வீடு கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

மலையக மக்களுக்கு 20 பேர் காணி கொடுத்தாவது தனி வீடுகள் கட்டப்பட வேண்டும். நான் அமைச்சராக இருந்த போது  தொடங்கப்பட்ட பல வீடுகள் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. அவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து கட்டி முடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இதில் கவனம் செலுதத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

’19’ குறித்து முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாட்டை அறிவித்தார் ராதா

அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை முழுமையாக நீக்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிடும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 28 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் மலையக தமிழருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 1977 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை அமைச்சரவையில் மலையக தமிழருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இம்முறை அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.

அதேபோல் புத்தசாசனத்துக்கு தனி அமைச்சொன்று இருக்கும் நிலையில், ஏனைய மதங்களுக்கான அமைச்சுகள் நீக்கப்பட்டு சமய விவகார அமைச்சென உருவாக்கப்பட்டு அவை சார்ந்த திணைக்களங்கள் பிரதமரின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலைமை எதிர்காலத்தில் மாற்றப்படவேண்டும். அத்துடன் சில அமைச்சுகள் பொருத்தமற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளன.

19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் என அரச தரப்பில் கூறப்படுகின்றது. அதனை முழுமையாக நீக்குவதற்கு இடமளிக்கமாட்டோம். வேண்டுமானால் திருத்தங்களை மேற்கொள்ளலாம். 13 ஆவது திருத்தச்சட்டமானது சிறுபான்மையின மக்களுக்காக உருவானது. அதில் கைவைத்தால் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம்.

தமிழ் முற்போக்கு கூட்டணியாக சில விட்டுக்கொடுப்புகளை செய்து பயணித்ததாலேயே 100 வீத வெற்றி கிடைத்தது.வருகின்ற தேர்தல்களிலும் முற்போக்கு கூட்டணியாகவே முடிவுகளை எடுப்போம். எதிரணியில் இருந்தாலும் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதற்கு எதிராகவும் நீதிக்காகவும் உரத்து குரல் எழுப்புவோம்.” – என்றார்.

 

‘முந்தானை முடிச்சு’க்கு ‘நோ’ சொன்ன அனுஷ்கா!

‘முந்தானை முடிச்சு-2’ படத்தில் அனுஷ்கா நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றன. அதில், ‘முந்தானை முடிச்சு’ படமும் ஒன்று. இது, 1983-ம் ஆண்டில் திரைக்கு வந்தது. அந்த படத்தில் பாக்யராஜ் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருந்தார்.

படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், ‘ரீமேக்’ செய்யப்பட்டது.

‘முந்தானை முடிச்சு-2’ படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவை அணுகியதாகவும், அதற்கு அனுஷ்கா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதனால் புதிய படங்களை ஏற்கவில்லை என்று அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

பொகவந்தலாவையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எழுவர் கைது!

பொகவந்தலாவையில் இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எழுவரை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்படி பொகவந்தலாவை , கொட்டயாகல தோட்டத்திலுள்ள தேயிலை மலையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் நேற்று மாலையும், லொய்னோன் தோட்டத்தில் இவ்வாறான செயலில் ஈடுபட்ட மூவர் இன்று அதிகாலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் மீடக்கப்பட்டுள்ளன. கைதானவர்கள் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ நிருபர் – எஸ். சதீஸ்

கடலில் சுறாவுடன் போராடி மனைவியை மீட்ட கணவன்

தனது மனைவியை சுறாமீன் ஒன்று தாக்கிக் கொண்டிருப்பதை பார்த்த அலைச்சறுக்கு வீரர் ஒருவர் சுறா மீது பாய்ந்து அதை அங்கிருந்து விரட்டும் வரை கைகளால் குத்தி தனது மனைவியை காப்பாற்றியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

35 வயதான சாண்டெல்லே டாய்ல் என்ற பெண், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள ஷெல்லி கடற்கரையில் தனது கணவருடன் அலைச்சறுக்கில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது, சுறாமீன் ஒன்று அவரைத் தாக்கத் தொடங்கியது. அதைக் கண்ட அவரது கணவர், அலைச்சறுக்கு பலகையிலிருந்து சுறா மீது தாவி குதித்து அது சாண்டெல்லாவை விடுவிக்கும் வரை தொடர்ந்து கடுமையாக தாக்கிக்கொண்டே இருந்தார்.

சுறாமீன் அங்கிருந்து விலகிச் சென்றதும் தனது மனைவியை கடற்கரைக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வந்துள்ளார்.

சுறா மீன் தாக்கியதில் வலது காலில் கடுமையான காயம் ஏற்பட்ட அவர் உடனடியாக வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், சாண்டெல்லேவை சுமார் 10 அடி நீளம் கொண்ட இளம் வெள்ளை சுறா ஒன்று தாக்கியிருக்கக் கூடும் என்று வல்லுநர்கள் கூறுவதாக போர்ட் மேக்வாரி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், அதிவேகமாக செயல்பட்டு தன் மனைவியை காப்பாற்றிய கணவருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவரது பெயர் மார்க் ரேப்லே என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இவர் அலைச்சறுக்கு பலகையிலிருந்து சுறா மீது தாவி குதித்து, அதை அடித்தே விரட்டியதுடன் தன் மனைவியை அங்கிருந்து கடற்கரைக்கு திரும்ப அழைத்து வந்துள்ளார். இது உண்மையிலேயே ஒரு வீரதீர செயல்தான்” என்று சர்ப் லைஃப் சேவிங் என்.எஸ்.டபிள்யூ என்ற அலைச்சறுக்கு வீரர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகியான ஸ்டீவன் பியர்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளதாக சிட்னி மார்னிங் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பகுதியில் கடந்த சில மாதங்களில் நடக்கும் மூன்றாவது பயங்கரமான சுறா மீன் தாக்குதல் சம்பவம் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, சுறாவிடமிருந்து தனது கணவரால் காப்பாற்றப்பட்ட சாண்டெல்லே டாய்ல்ஸுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின், கேரளா கஞ்சாவுடன் நாவலப்பிட்டியவில் மூவர் கைது

நாவலப்பிட்டியவில் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் மூவர் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம – கல்குவாரி பிரதேசத்தின் வைத்தே நாவலப்பிட்டிய குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 530 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 430 மில்லிகிராம் கேரளா கஞ்சா ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்கள் 25 -30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ நிருபர் -எஸ்.சதீஸ்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...