Home Blog Page 3901

1600 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை முன்வைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை நவம்பரில் முன்வைக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஆயிரத்து 600 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்படவுள்ள இந்த இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்படவுள்ளது.

இடைக்கால கணக்கறிக்கைக்கு சபை அங்கீகாரம் வழங்கிய பின்னர் கடந்த ஒரு வருட காலமாக தாமதிக்கப்பட்டு வந்த 200 பில்லியன் ரூபா நிர்மாணங்களுக்கான கொடுப்பனவுகளுக்கு செலுத்தப்படும் என்றும், 15 பில்லியன் ரூபா பாடசாலை நிர்மாண நிலுவைக் கொடுப்பனவுகளுக்காக செலுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இடைக்கால கணக்கறிக்கையின் மூலம் முழு கொடுப்பனவுகளையும் செலுத்த முடியாது என்ற போதிலும் மக்கள் மத்தியிலான பணப்புழக்கத்துக்கு இது உதவும் என்று சமுர்த்தி மற்றும் நுண்நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த பெப்ரவரியில் அரசாங்கம்இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்த போதும் அதற்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் மூலம் – சண்டே டைம்ஸ்

டோனியின் அசைக்க முடியாத ஐந்து சாதனைகள்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வு அறிவிப்பை நேற்று அறிவித்தார்.

கிரிக்கெட் ரசிகர்களை ஏறத்தாழ 16 ஆண்டுகள் தன் அசாத்திய திறமைகளால் கட்டிப்போட்டவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டோனி.

கிரிக்கெட்டை ரசிக்கும், விளையாடும் பல இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்த அவர், திடீரென நேற்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் தோனி பங்கேற்கவில்லை. அப்போதில் இருந்தே தோனியின் ஓய்வு குறித்த யூகங்கள் கொடி கட்டி பறந்தன. ஆனாலும், இந்திய அணிக்காக இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

எதற்குமே அலட்டிக்கொள்ளாமல் மிகவும் கூலாக (Cool) வலம் வரும் தோனி, ஓய்வு அறிவிப்பையும் எந்த முன் அறிவிப்பும்,எந்த படோபடமும் இன்றி மிக சாதாரணமாக அறிவித்துவிட்டார். தோனியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து அவரது சாதனைகள் குறித்த பதிவுகள், உங்களை கிரிக்கெட் களத்தில் மிஸ் செய்கிறோம் என பல அடுக்கடுக்கான பதிவுகளை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், சமூக வலைத்தளங்களில் தோனியின் ஆக்கிரமிப்பு நேற்று இரவு தற்போது வரை உள்ளது.

எளிதில் அசைக்க முடியாத தோனியின் 5 சாதனைகள்

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் திகழ்ந்த தோனி, கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் ஏராளம். சாதனைகள் எப்போதும் முறியடிக்கக் கூடியவை என்றாலும் சில சாதனைகளை எளிதில் நெருங்க முடியாத அளவுக்கு நீண்ட காலம் சில சாதனைகள் அமைந்து விடும். அந்த வகையில் தோனியின் சாதனைகள் சிலவற்றை கீழ் காண்போம்.

ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன்

இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே, அதாவது 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவுக்கு தோனி பெற்று தந்தார். அதன்பிறகு 4 ஆண்டுகள் கழித்து 2011 ஆம் ஆண்டில் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலக கோப்பையை உச்சி முகர்ந்ததற்கு தோனியின் சிறப்பான கேப்டன்ஷிப் திறமையும் ஒரு காரணமாகும். 2013- ஆம் ஆண்டு நடைபெற்ற மினி உலக கோப்பை தொடரிலும் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

கேப்டனாக அதிக போட்டிகள்

200 ஒருநாள் கிரிக்கெட், 60 டெஸ்ட் போட்டிகள் , 72 டி 20 போட்டிகள் என மொத்தம் 332 சர்வதேசகிரிக்கெட் போட்டிக:ளில் தோனி கேப்டனாக இருந்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரிக்கி பாண்டிங் 324 சர்வதேச போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

இறுதிப்போட்டிகளில் அதிக வெற்றியை ருசித்த கேப்டன் (ஒருநாள் கிரிக்கெட்)

பல நாட்டு அணிகள் பங்கேற்ற 6 தொடர்களின் இறுதி போட்டியில் தோனி இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். அவற்றில் இந்தியா 4 தொடர்களில் வெற்றியை ருசித்தது. தோனி கேப்டனாக 110 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார். ரிக்கி பாண்டிங் கேப்டனாக 165 ஒருநாள் போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளார்.

அதிக நாட் அவுட்

தோனி 84 ஒருநாள் போட்டிகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நாட் அவுட் ஆக திகழ்ந்துள்ளார். தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் ஷான் பொல்லாக்கிற்கு (72 நாட் அவுட்) அடுத்த இடத்தில் உள்ளார். தோனி நாட் அவுட் ஆக இருந்த 84 ஒருநாள் போட்டிகளில் 51 ஆட்டங்கள் இரண்டாவது பேட்டிங் செய்த போது அதாவது சேஷிங் செய்த போது இருந்த இன்னிங்ஸ்கள் ஆகும். தோனி இவற்றில் 47 ஆட்டங்களில் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். வெறும் 2 போட்டிகள் மட்டுமே அணிதோல்வியை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

சர்வதேச போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்

தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வதில் வல்லவர். விக்கெட் கீப்பிங்கில் தனி பாதையை உருவாக்கியவர் என்றே சொல்லலாம். பல போட்டிகளில் தோனி மின்னல் வேகத்தில் செய்த ஸ்டம்பிங்குகள் ரன் அவுட்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்தியாவுக்கு சாதகமாக மாறியிருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்குகள் செய்த சாதனைக்கும் சொந்தக்காரர் தோனியே. 350 போட்டிகளில் 123 ஸ்டம்பிங்குகளை தோனி செய்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டம்பிங்குகளை செய்த ஒரே விக்கெட் கீப்பர் தோனி மட்டுமே. விக்கெட் கீப்பிங்கில் அதிக விக்கெட்டுகளை ( கேட்ச், ஸ்டம்பிங்) எடுத்த வீரர்கள் பட்டியலில் பவுச்சர், கில்கிரிஸ்ட் அடுத்தபடியாக 3 ஆம் இடத்தில் உள்ளார்.

தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த ரணில்

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (15) நடைபெற்றது.

சிநேகப்பூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு புரியாணியும் வழங்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

அத்துடன், கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், மாகாணசபைத் தேர்தல் முடிவடையும்வரை தானே தலைமைப்பதவியில் நீடிப்பார் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார் எனவும் சிறிகொத்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

” கட்சி தலைமைப்பதவியில் நீடிப்பதற்கே ரணில் விக்கிரமசிங்க விரும்புகிறார். எமக்கு பிரியாணியும் வழங்கினார். ஆனால், நான் வாங்கவில்லை. அவர் தலைமைப்பதவியில் இருந்தால் மாகாண தேர்தலில் நாம் போட்டியிடமாட்டோம்.” – என்று கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

‘உங்கள் அன்புக்கு நன்றி’ – விடைபெற்றார் டோனி!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னையில் பயிற்சிப் பெற்று வரும் டோனி, இன்று மாலை தனது இன்ஸ்டா பக்கத்தில்,

“உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி இன்று 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்.” என பகிர்ந்துள்ளார்.

சபாநாயகர் பதவியை ஏற்க தயார் – மஹிந்த யாப்பா அறிவிப்பு

” பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவி தனக்கு வழங்கப்படுமானால் அதனை ஏற்று செயற்படுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (15) தெரிவித்தார்.

மாத்தறை பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அடுத்த சபாநாயகர் நீங்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், அது பற்றி எனக்கு தெரியாது. ஆனால், பதவி வழங்கப்படுமானால் அதனை ஏற்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டுக்கு புதியதொரு அரசியலமைப்பு அவசியாமாக உள்ளது. அதனை இயற்றுவதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அது நிறைவேற்றப்படவேண்டும். அதற்கு எனது முழுமையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் மஹிந்த யாப்பா குறிப்பிட்டார்.

மாகாண தேர்தல் முடியும்வரை நானே தலைவர் – அறிவிப்பு விடுத்தார் ரணில்

மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சி தலைமைப் பதவியில் இருந்து விலகுவேன் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்களுக்கும், கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (15) சிறிகொத்தவில் நடைபெற்றது.
இதன்போதே ரணில் விக்கிரமசிங்க மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார் என கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவர் ‘மலையக குருவி’யிடம் தெரிவித்தார்.

எதிரணி பிரதம அமைப்பாளர் பதவி யாருக்கு? சஜித் அணிக்குள் மீண்டும் மோதல்!

பாராளுமன்றத்தில் எதிரணி பிரதம கொறடா ( பிரதான அமைப்பாளர்) பதவிக்காக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதன்படி குறித்த பதவியை இலக்கு வைத்து ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க, லக்‌ஷ்மன் கிரியல்ல, ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசீம் ஆகியோர் காய்நகர்த்ல்களை மேற்கொண்டுவருகின்றனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

எனினும், சம்பிக்க ரணவக்க, லக்‌ஷ்மன் ஆகிய இருவரில் ஒருவருக்கே இப்பதவி வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரங்கள் தெரிவித்தன.

9ஆவது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச செயற்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஆளுங்கட்சியின் சார்பில் சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவும் நியமிக்கப்படவுள்ளனர்.

‘ஜீவன் தொண்டமான் ஊடாக மலையகத்துக்கான அரச சேவைகள் தொடரும்’

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் பதவியேற்றுள்ளமை மலையகத்துக்கு பெரும் சக்தியாக அமைந்துள்ளது என்று பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

“அமரர் ஆறுமுகன் தொண்டமான் எம்மைவிட்டு பிரிவதற்கு முன்னர், எட்டு மாதகாலம் அமைச்சராக இருந்த தருணத்தில் அவருடன் ஜீவன் தொண்டமானும் இணைந்து பயணித்திருந்தார்.தற்போது இராஜாங்க அமைச்சராக செயற்படும் ஒரு வலுவான அரசியல்வாதியாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளார்.

ஜீவன் தொண்டமான் ஊடாக அரசாங்கத்தின் சேவைகளை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மலையகத்தில் முன்னெடுக்கப்படும். அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு ஜீவன் தொண்டமான் மக்களுக்கு சேவை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.” – எனவும் செந்தல் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளது – வைத்தியசாலை நிர்வாகம்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது.உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவக்குழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் தலைமைப்பதவியில் மாற்றம் வருமா?

ஜே.வி.பியின் தலைமைப்பதவியில் தற்போது மாற்றம் எவுதும் இடம்பெறாது என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

நடைபெற்று முடிவடைந்த பொதுத்தேர்தலில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கும் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த முறை அக்கட்சியின் சார்பில் அறுவர் பாராளுமன்றத்தில் இருந்தனர். இம்முறை இருவர் வாக்களிப்பு மூலமும், ஒருவர் தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

எனவே, ஜே.வி.பியின் தலைமைப்பதவியில் விரைவில் மாற்றம் இடம்பெறவுள்ளது எனவும், புதிய தலைவராக லால்காந்தா நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே ஜே.வி.பிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை எனவும், தலைமைப்பதவியில் தற்போது மாற்றம் இடம்பெறாது எனவும் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...