Home Blog Page 3902

ஆளுங்கட்சியிலிருந்து விலகினார் ஹப்புத்தளை பிரதேச சபை உப தலைவர்

ஹப்புத்தளை பிரதேச சபையின் உப தலைவர் ஆளும் கட்சியிலிருந்து விலகி, சபை சுயாதீனமாக முடிவெடுத்துள்ளார்.

சபைத் தலைவர் கே.பி. கண்ணா கந்தசாமி தலைமையில் சபை அமர்வு நேற்று (15) ஹப்புத்தளை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் அமர்வில் கலந்து கொண்ட சபையின் உப தலைவர் நிமால் அமரசிரி சபை அமர்வில் நீண்ட உரையொன்றை ஆற்றிவிட்டு, சபை அமர்வில் சுயாதீனமாக இயங்குவதாகக் கூறி, தனியாக அமர்ந்து செயற்பட்டார்.

அவர் அங்கு உரையாற்றும் போது,“ஹப்புத்தளை பிரதேச சபையினால், எமது மக்களுக்கு பூரணமாக சேவையாற்ற முடியவில்லை. அதற்கான வாய்ப்புக்கள் எனக்குக் கிடைப்பதில்லை.

எனக்கு வாக்களித்து, இப்பிரதேச சபைக்கு என்னை அனுப்பிய மக்களுக்கு எப்பணியையும் செய்ய முடியவில்லை. அதனாலேயே, சபையில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்தேன்” என்று கூறி, ஆளும் கட்சியிலிருந்து விலகி, சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்தார். ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியிலிருந்தே, சபையின் உப தலைவர் விலகியமை குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

கிறேட்வெஸ்டன் தோட்ட உத்தியோகத்தர் அணி வெற்றி

தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட உத்தியோகத்தர்களுக்கிடையிலான அணிக்கு ஏழு பேர் கொண்ட 5 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இறுதி போட்டிக்கு கிறேட்வெஸ்டன் மற்றும் லோகி அணி தெரிவாகின. இதில் கிறேட்வெஸ்டன் தோட்ட உத்தியோகத்தர் அணி வெற்றி பெற்றது.

ரதெல்ல டிஏசிசி விளையாட்டு மைதானத்தில் கிறேட்வெஸ்டன் தோட்ட முகாமையாளர் சரத் ரணவீர மற்றும் தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட தோட்ட முகாமையாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில் கிறேட்வெஸ்டன் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லோகி அணியினர் 4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 63 ஓட்டங்களை குவித்தனர். லோகி அணி சார்பாக சிவராஜ் 14 ஓட்டங்களையும் கனராஜ் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

64 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிறேட்வெஸ்டன் அணியினர் 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றனர்.

இப்போட்டியில் சிறந்த துடுப்பாட்டக்காரராக கிறேட்வெஸ்டன்  அணியின் 41 ஓட்டங்களை பெற்ற ஜெகநாத் தெரிவு செய்யப்பட்டார். கிறேட்வெஸ்டன் தோட்ட முகாமையாளர் சரத் ரணவீர மற்றும் தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட தோட்ட முகாமையாளர்கள் அதிதிகளாக கலந்துக்கொண்டு பரிசில்களை வழங்கினர்.

14 வயது சிறுமிமீது பாலியல் வன்கொடுமை – கண்டியில் எழுவர் கைது!

கண்டியில் 14 வயது பள்ளி சிறுமியை பாலியன் வன்கொடுமைக்கு உட்படுத்தினர் எனக் கூறப்படும் ஏழுபேரை  கண்டி பூஜாப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் கடந்த 6 மாதங்களில் குறித்த சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் 29 வயதான இளைஞர் ஒருவர் ஆரம்பத்தில் சிறுமிக்கு கையடக்க தொலைபேசியொன்றை பரிசளித்து தொடர்பை மேற்கொண்டுள்ளார் எனவும், அதன்பின்னர்   தனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தே இவ்வாறு கொடூரச் செயலில் இறங்கியுள்ளனர்.

அத்துடன் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் தேடப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் ‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 2,066 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 08 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,666 ஆக அதிகரித்துள்ளது.

209 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது’ – திலகருக்கு பதிலடி கொடுத்தார் ஶ்ரீதரன்

” திலகராஜ் என்ற நபருக்கு அரசியல் அறிமுகம் கொடுத்த திகாம்பரத்தை விமர்சனம் செய்வதற்கு எவ்வித அருகதையும் கிடையாது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சோ. ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு,

“தொழிலாளர் தேசிய சங்கத்தின் மீளுருவாக்கம் தலைவர் திகாம்பரத்தின் மீது நம்பிக்கை வைத்தே உருவாக்கப்பட்டது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின்  பழனி திகாம்பரம்,தனது அர்ப்பணிப்பின் காரணமாக கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தின் போது மலையகத்தில் என்றுமில்லாத பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன.

மலையகத்தின் சிறந்த தலைவராக திகாம்பரத்தை மலையகத் தமிழ் மக்கள் கடந்த ஒரு தசாப்த காலமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் திலகராஜ் என்ற நபருக்கு அரசியல் அறிமுகம் கொடுத்த திகாம்பரம் அவர்களை விமர்சனம் செய்வதற்கு எவ்வித அருகதையும் கிடையாது.

வளர்த்த கடா மார்பில் பாய்வது போல நன்றி கெட்ட தனமாக திகாம்பரம் மீது வீண் பழி சுமத்த முற்படுகின்ற திலகராஜ் மிகவும் கீழ்த்தரமான அரசியலை முன்னெடுப்பதற்கு தயாராகியுள்ளார்.

அவருடைய எண்ணம் மலையக மக்கள் மத்தியில் எப்போதும் ஈடேறாது.
தனக்கு தேசிய பட்டியல் உறுப்புரிமை கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் கதிகலங்கி போயுள்ள திலகராஜ் சில தனியார் ஊடாக மாபிப்பியாக்களுடனும் வெளிநாட்டு அடிப்படைவாத அமைப்புகளின் நிதி ஆதரவுடன் மலையகத் தமிழ் இளைஞர்களை பிழையாக வழி நடத்துவதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.” – என்றார்.

இறுதி அஸ்திரத்தை கையிலெடுத்தார் ரணில்! தலைமைப்பதவியில் நீடிக்க புது வியூகம்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் உடனடி மாற்றம் ஏற்படாது எனவும், விரிவான கலந்துரையாடல்களின் பின்னரே புதிய தலைவர் நியமிக்கப்படுவார் எனவும் அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதன்படி இவ்வருடம் டிசம்பர்வரை தலைமைப்பதவியில் ரணில் விக்கிரமசிங்க நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  2021 ஆம் ஆண்டிலேயே கட்சி சம்மேளனம் கூட்டப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரியவருகின்றது. அதாவது 6 மாதங்களுக்கு பின்னரே தலைமைப்பதவியில் மாற்றம் வரக்கூடும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் நேற்று (14) முற்பகல் நடைபெற்றது.

இதன்போது கட்சியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக பொதுத்தேர்தலில் கட்சிக்கு படுதோல்வி ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டது.

இதனையடுத்து கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. அவ்வேளையில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு இளம் தலைவரொருவர் அவசியம் என்பதே மக்களின் நிலைப்பாடு என்ற கருத்து சிரேஷ்ட உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி தலைமைப்பதவியை எதிர்ப்பார்க்கும் அனைவருக்கும் அது தொடர்பில் கோரிக்கையை முன்வைப்பதற்கும், அவர்கள் தொடர்பில் மக்களின் அபிப்ராயங்களை அறிந்து, அவர்களில் சிலரை தெரிவுசெய்து, முதற்கட்டமாக கட்சியில் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.

அதனை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுக்கின்றனர் என்பது உட்பட மேலும் சில காரணிகளைக்கருத்திற்கொண்டு தேசிய மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் தலைவர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுவார் என செயற்குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் தொடர் மழை – விவசாயிகள் பெரிதும் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நாட்களில் பெய்த கன மழையினால் காய்கறி பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக காய்கறி பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வருமான இழப்பை சந்திக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுதொடர்பில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த காய்கறி செய்கை தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தையின் தேவைக்கு குறைவான அளவில் காய்கறிகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையால் காய்கறிகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இதன்போது சுட்டிகாட்டினர்.

அதுமட்டுமின்றி உற்பத்தி செலவுகளை சரிசெய்ய வழி இல்லாமல் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், விவசாயிகளின் இழப்பீட்டை மதிப்பீடு செய்து அவர்களுக்கு இழப்பீட்டை வழங்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி!

நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் என்று பிரதமர் மோடி கூறினார்.

74ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

பிரதமர் மோடி கூறியதாவது:

“அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். நம்நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வ நன்றி.

நாட்டின் பல்வேறு இடங்களில் மழை, நிலச்சரிவு ஆகிய காரணங்களால் போர்க்களமாக உள்ளது.கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி.

மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். நம் தேசத்தின் ஆத்மாவை ஒருபோதும் அழிக்க முடியாது.

போராட்டத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறந்து விடக்கூடாது. பன்முகத்தன்மையே நமது பலம்.

இந்திய சுதந்திர போராட்டம் உலகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது.பன்முகத்தன்மை கொண்ட நமது ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டனர்.

சுதந்திரத்திற்கான போரில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யவில்லை.இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகம் முழுவதும் பிரதிபலித்தது. இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். சுய சார்பு இந்தியாவை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருகிறது. ஒவ்வொரு இந்தியனும் சொந்தக்காலில் நிற்க கற்றுக்கொள்ள வேண்டும் நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம்.” – என்றார்.

ஓடும் ரயிலில் அநாகரீகமாக செயற்பட்ட இளைஞன் எல்லயில் கைது!

ரயிலில் பயணித்த கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு யுவதிகளுக்கும், பானந்துறையைச் சேர்ந்த உள்நாட்டு யுவதிக்கும் தனது அந்தரங்க உறுப்பைக்காட்டி ஆபாசமாக நடந்துக்கொண்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலிலேயே எல்ல புகையிரத நிலையத்துக்கருகில் இன்று (15) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரின் நடத்தையால் அச்சமுற்ற யுவதிகள், ரயில் பாதுகாப்பு அதிகாரியிடம் அது தொடர்பில் முறையிட்டனர். இதனையடுத்து எல்ல பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

 இதன் பின்னர்,எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். அழகியவன்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து, ரயிலில் ஆபாசமாக நடத்துக்கொண்ட இளைஞரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்,விசாரணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று,பொலிசார் தெரிவித்தனர்.

ஆபாசமாகநடந்து கொண்ட நபரும், அதே ரயிலில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

எஸ்.பி.பி. குறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பு!

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அச்சப்படும் நிலை இல்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, எஸ்.பி.பி உடல்நிலை பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மருத்துவ உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் செய்தியில், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் எம்.டி.யிடம் விசாரித்தேன். அவர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...