Home Blog Page 3903

எதிர்காலத்தில் சந்தா நிச்சயம் நிறுத்தப்படும் – ஜீவன் அறிவிப்பு

“தொழிலாளர்களிடமிருந்து சந்தாபெறும் நடைமுறை எதிர்காலத்தில் நிச்சயம் நிறுத்தப்படும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சூரியன் வானொலியில் இன்று (15) ஒலிபரப்பாகிய விழுதுகள் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜீவன் தொண்டமானிடம் சந்தா தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

” சந்தா நிறுத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். ஆனால் காங்கிரஸின் 48 அலுவலகங்கள் இருக்கின்றன. எனவே, அவற்றை கொண்டு நடத்துவதற்கான மாற்றுவழிகள் பற்றி ஆராயவேண்டும். வருமான வழிமுறைகள் கண்டறிந்த பின்னர் எதிர்காலத்தில் நிச்சயம் சந்தா நிறுத்தப்படும்.” என்றும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் யார் என்பதை கட்சியின் தேசிய சபையே தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகம் பேர் பார்த்தது பிகிலா? விஸ்வாசமா? விபரம் இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரவுள்ளது, பல லட்சம் ரசிகர்கள் இதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் பிகில் படம் சன் டிவியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

இந்த படம் எப்படியும் விஸ்வாசம் சாதனையை முறியடிக்கும் என எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால், 16.9 இம்பரஸன் பெற்றுள்ளது, இதன் மூலம் இந்த லாக் டவுனில் அதிகம் பேர் பார்த்த படமாக பிகில் உள்ளது.

ஆனாலும், விஸ்வாசம் டி ஆர் பி 18.1 இம்ப்ரஸனை பிகில் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாணசபைத் தேர்தல் பெப்ரவரியில்!

பிற்போடப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தல் அடுத்தவருடம் முற்பகுதியில் நடைபெறவுள்ளது என சிங்கள வாரஇதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி 2021 பெப்ரவரி அல்லது மார்ச்சில் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கே அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும், நவம்பரில் வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்படவுள்ளதால் அடுத்தவருடம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திலகரின் தலை குறி வைப்பு – அரிவாளை கையில் எடுத்தார் திகா

தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் மயில்வாகனம் திலகராஜை நீக்குமாறு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைவர் பழனி திகாம்பரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவருகின்றது.

பொதுத்தேர்தலின்போது சங்கத்துக்கு எதிராக செயற்பட்ட அவர் தற்போது ஊடகங்கள் வாயிலாக தலைமையை விமர்சித்துவரும் நிலையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியை திலகராஜ் வகிப்பதால் அவரை உடனடியாக பதவி நீக்கசெய்யமுடியாதநிலை காணப்படுவதாகவும் இது தொடர்பில் சட்டஆலோசனை பெறப்பட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து அமரர் செல்லசாமி வெளியேறியபோது அவர் சேவல் சின்னத்தையும் எடுத்துச்சென்றுவிட்டார். இதனால் அதனை மீளப்பெறுவதற்கு அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு கடும் பிரதயத்தனங்களில் ஈடுபடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தொழிலாளர் தேசிய சங்கம் தொழிற்சங்கமாகவும், தொழிலாளர் தேசிய முன்னணி அரசியல் கிளையாகவும் செயற்பட்டுவருகின்றது. இதில் முன்னணியின் பொதுச்செயலாளராகவே திலகர் செயற்பட்டுவருகின்றார். முன்னணியின் சின்னம் அரிவாள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சீட் வழங்க திகா 2 கோடி ரூபா கேட்டார்’ – திலகர் பரபரப்பு தகவல்

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமானால் 2 கோடி ரூபா அவசியம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் குறிப்பிட்டதாக அச்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

அத்துடன், முற்போக்கு கூட்டணி சார்பில் தெரிவான மூவரில் இருவர் ‘கலாநிதிகள்’ எனவும் அவர் எள்ளி நகையாடினார்.

” பொதுத்தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்தலில் செலவளிப்பதற்கு என்னிடம் பணம் இல்லை என கூறப்பட்டது. என்னால் 10 லட்சம் ரூபாவரை செலவளிக்ககூடியதாக இருந்திருக்கும்.ஆனால் மேசையில் 2 கோடி ரூபா வைத்தால் வாய்ப்பு வழங்கப்படும் என திகாம்பரம் கூறினார். எதற்காக அந்த பணம் என தெரியவில்லை.” எனவும் திலகர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கே தான் வாக்களித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கள மொழிமூல காணொளி இணைப்பு

https://www.facebook.com/Liveat8.lk/videos/2899669376806232/?t=124

முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள பத்திரம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் வரைவு நகல் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே முன்வைக்கப்படும் – என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
 
அத்துடன், ஜனாதிபதியின் பதவிகாலம் என்பது ஐந்தாண்டுகளாகவே இருக்கும். அதில் மாற்றம் வராது. அதேபோல் நபரொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதி பதவியை வகிக்கமுடியும் என்ற விடயத்திலும் திருத்தம் எதுவும் செய்யப்படாது எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்ட பின்னரே, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி ஆரம்பமாகும் எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 

பிரதமரின்கீழ் 85 அரச நிறுவனங்கள்! சஜித் அணி சாடல்

70 வயதைக்கடந்துள்ள மஹிந்த ராஜபக்சவின்கீழ் 85 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முதியவர் ஒருவரால் எவ்வாறு அவற்றை வினைத்திறன்மிக்கதாக இயக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, ராஜபக்சக்களுக்கு தேவையான வகையிலேயே புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின்பிரகாரம் ஜனாதிபதியால் அமைச்சுபதவி வகிக்கமுடியாது. அப்படியிருந்தும் அரசியலமைப்பைமீறும் வகையில் பாதுகாப்பு அமைச்சை அவர் தம்வசம் வைத்துள்ளார்.

அடுத்ததாக மஹிந்த ராஜபக்சவுக்கு 74 வயதாகின்றது. அவரின்கீழ் 85 இற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கலாச்சாரம் உட்பட சில அமைச்சுகளும் அவரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன. எனவே, அவரால் எவ்வாறு சுறுசுறுப்பாக இயங்கமுடியும் என்ற வினாவும் எழுகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துகள் வெளியிடப்பட்டுவருகின்றன. அதில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்படும் என்பது தெரியாது. சிலவேளை தமது ஆட்சிஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் விதத்தில் தமக்கு தேவையான வகையில் ராஜபக்சக்கள் அரசியலமைப்பை உருவாக்கக்கூடும் என்ற அச்சநிலையும் காணப்படுகின்றது.

எனவே, இவற்றுக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்காகவும் போராடுவதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து தரப்புகளுக்கும் அழைப்பு விருக்கின்றோம்.” – என்றார்.

20 ஆம் திகதி ஜனாதிபதி அக்கிராசன உரை! வாக்கெடுப்பு கோர முடியாது!!

புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் தேர்வு உட்பட ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், பாராளுமன்றம் 3 மணிவரை சபாநாயகரால் ஒத்திவைக்கப்படும்.

இதன்பிரகாரம் மாலை 3 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும். இதன்போதே ஜனாதிபதியால் புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் முன்வைக்கப்படும்.

ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் கொள்கை விளக்கம் தொடர்பில் பிரிதொரு நாளில் விவாதம் நடத்தலாம். ஆனால், அதுமீது வாக்கெடுப்பை கோரமுடியாது என்பதுடன் வாக்கெடுப்பை நடத்தவும் முடியாது.

‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடம்

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர்எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அச்சம் வேண்டாம் – உணவுமூலம் கொரோனா பரவ வாய்ப்பில்லை!

உணவு மூலம் கொரோனா பரவாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் இரு மாகாணங்களில் பிரேசிலில் இருந்து இறக்குமதியான கோழி இறைச்சி மூலம் கொரோனா பரவியிருப்பதாக தகவல் பரவியது. அங்குள்ள இரண்டு மாகாணங்களில் நோய்த் தொற்று ஏற்பட்டதற்கு அதுவே காரணம் எனக் கூறப்பட்டது.

தற்போது அதற்கான விளக்கத்தை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, உணவு மற்றும் புட் பேக்கேஜ் மூலம் கொரோனா நோய் பரவும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும், அதன் வழியாக நோய் பரவும் என்று மக்கள் பயப்படவேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசரகாலப் பணிகளுக்கான தலைவர் மைக் ரையான், உணவு அல்லது உணவுச் சங்கிலி மூலம் நோய் பரவும் என்பதில் எந்த ஆதாரமும் கிடையாது. எனவே மக்கள் பயமில்லாமல் நம்பிக்கையோடு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், சீனாவின் குற்றச்சாட்டு தொடர்பாக பிரேசில் விவசாய அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஈக்வடாரைச் சேர்ந்த உற்பத்தித்துறை அமைச்சர், உணவு ஏற்றுமதியில் மிகக் கடுமையான நோய்த் தடுப்புக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் செம்மணிக்கான வருகை ஒத்திவைப்பு

0
செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிடவிருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தமது விஜயத்தை அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் திகதி வரை ஒத்திவைத்துள்ளனர். செம்மணி புதைகுழிப் பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியக்...

போர் நிறுத்தம் நீடிக்கப்படாது: தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்!

0
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...