Home Blog Page 3910

பேஸ்புக் களியாட்ட ஒன்றுகூடல் : களுத்துறையில் 20 பேர் கைது

பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டு மில்லனிய பிரதேசத்தில் விடுதியொன்றில் போதைப் பொருட்களுடன் களியாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகள் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மில்லனிய குறுந்துவத்தை பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவுதெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிராம் போதைப் பொருள், கேளர கஞ்சா 15 கிராம், டான்சிங் மாத்திரை 10, வெளிநாட்டு மதுபான போத்தல்கள் 2 ஆகியவற்றையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மஹிந்த யாப்பாவுக்கு சபாநாயகர் பதவி?

9ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை முன்மொழிவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

சபாநாயகர் பதவியை ஏற்குமாறு சமல் ராஜபக்சவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்துள்ள நிலையிலேயே , அந்த வாய்ப்பு மஹிந்த யாப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன்போது மஹிந்த யாப்பா பதவியேற்பார்.

எகிறிச் செல்லும் தங்கத்தின் விலை : என்ன காரணம்?

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தங்கம் வாங்கப்படுவது குறைந்திருந்தாலும் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கான காரணம் என்ன? இதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?

தங்கத்தின் விலை

ஜூலை பத்தாம் தேதியன்று மல்டி கமாடிட்டி எக்ஸேஞ்சில் பத்து கிராம் தங்கம் ரூ. 49,143ஆக இருந்தது. ஆனால், ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று ரூ. 55,922ஆக உயர்ந்தது. வெறும் பத்து கிராம் தங்கத்தின் விலையில் 6,800 ரூபாய் அளவுக்கு விலை உயர்வு இருந்தது.

தற்போதைய பின்னணியில் பார்க்கும்போது, தொடர்ந்தும்கூட தங்கத்தின் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் தென்படுகின்றன. இந்த விலை உயர்வானது தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் லாபத்தை அள்ளித்தந்திருக்கும் நிலையில், அணிகலன்களாக அணிந்துகொள்ள தங்கத்தை வாங்க விரும்புபவர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார்கள்.

உலகில் ஆசிய நாடுகளில்தான் குறிப்பாக, இந்தியாவிலும் சீனாவிலும்தான் தங்க நகைகளில் பெரிய அளவில் முதலீடு செய்யும் பழக்கம் இருக்கிறது. ஆனால், சமீப காலமாக இந்த இரு நாடுகளிலுமே தங்கத்தின் இறக்குமதி குறைந்திருக்கிறது. நுகர்வு குறைந்தபோதும்கூட தங்கத்தின் விலை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்தபடியேதான் இருக்கிறது.

2019-20ன் முதல் காலாண்டில் 86,250 கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவலால் ஏற்பட்ட வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, விமானங்கள் நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளால் 2020-21ன் முதல் காலாண்டில் தங்க இறக்குமதி 96 சதவீதத்திற்கு மேல் குறைந்திருக்கிறது. ஏப்ரல் – மே மாதங்களில் சுத்தமாக இறக்குமதியே இல்லை. சென்னை, தில்லி, மும்பை நகரங்களில் நுகர்வோரிடமும் தங்கம் வாங்குவதற்கான ஆர்வமும் இல்லை.

வாங்குவது குறைவு, விலை அதிகரிப்பு

இந்தப் பின்னணியில்தான் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறி வருவதைக் கவனிக்க வேண்டும். அதாவது, ஒரு பக்கம் தங்க நகைகளை வாங்குவது குறைந்திருக்கிறது. மற்றொரு பக்கம், விலை அதிகரித்து வருகிறது.

“இதற்கு முக்கியமான காரணம், கொரோனா பரவல். இதன் காரணமாக உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த காலாண்டில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 38 சதவீதம் சுருங்கியிருக்கிறது. ஜெர்மனியில் பொருளாதாரம் 10 சதவீதம் சுருங்கியிருக்கிறது. இந்திய, சீனப் பொருளாதாரமும் சுருங்கிவருகிறது.

இந்த நேரத்தில் முதலீட்டுச் சந்தையில் முதலீடு செய்வதற்கு எல்லோருமே அஞ்சுகிறார்கள். பங்குச் சந்தை சற்று உயர்ந்துவந்தாலும் அதன் மீதும் முதலீட்டாளர்களுக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. அதனால்தான் மேலை நாடுகள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவேதான் உலகம் முழுவதும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது” என்கிறார் சென்னை பொருளியல் துறையின் தலைவர் ஜோதி சிவஞானம்.

இந்த விலை உயர்வு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. திருமணத்திற்காக நகை வாங்குபவர்கள் திக்குமுக்காடிப் போயிருந்தாலும் நகைக்கடைக்காரர்களுக்கு இந்த விலை உயர்வு சாதகமான ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது. அவர்களிடமிருந்த தங்கம், ஒரு மாத காலத்தில் பெரும் லாபத்தை அளித்திருக்கிறது.

“நகை விற்பனை குறைந்திருக்கிறதே என யாராவது கேட்டால், விற்றால் நல்லது; விற்காவிட்டால் ரொம்ப நல்லது என்றுதான் பதில் சொல்கிறேன். ஒரு கிலோ தங்கத்தின் விலை மார்ச் மாதம் 41 லட்ச ரூபாய். இப்போது 58 லட்ச ரூபாய். தங்கத்தை நான் விற்றிருந்தால்தான் இழப்பு” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரர்.

இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டு இறுதிவரை நீடிக்கக்கூடும் என்கிறார் மெட்ராஸ் ஜ்வல்லர்ஸ் அசோசியேஷனின் தலைவர் ஜெயந்தி லால் சலானி.

“ஆசிய நாடுகளில்தான் நகைகளாக அணிவது வழக்கம். மேலை நாடுகளில் தங்கம் என்பது ஒரு முதலீடுதான். வெளிநாடுகளில் வைப்பு நிதிக்கு வட்டியே கிடையாது. அதனால் அவர்கள் பங்குச் சந்தையிலோ, கம்மாடிட்டி சந்தையிலோதான் முதலீடு செய்வார்கள். ஆனால், கொரோனாவின் காரணமாக பாதுகாப்பான முதலீடு என்று எண்ணி எல்லோரும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். உலகம் முழுவதும் இது நடக்கிறது. அதனால்தான் இந்த விலை உயர்வு. இந்த நிலை இப்போதைக்கு மாறுமெனத் தோன்றவில்லை” என்கிறார் ஜெயந்தி லால்.

2021ல் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 3,000 டாலர்கள் அளவுக்கு உயரக்கூடுமெனத் தங்க விற்பனையில் ஈடுபட்டிருப்பவர்கள் கருதுகிறார்கள்.

உலகில் மிகப் பெரிய அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் 800-900 டன் தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஏற்றுமதி – இறக்குமதியில் உள்ள வித்தியாசத்திற்குத் தங்கம் இவ்வளவு பெரிய அளவில் வாங்கப்படுவதும் முக்கியமான காரணம்.

ஆனால், தற்போது தங்கத்தின் இறக்குமதி வெகுவாகக் குறைந்திருப்பதால் இந்த வர்த்தகப் பற்றாக்குறை நீங்கியிருக்கிறது.
இந்தப் போக்கு எப்போது மாறக்கூடும்? “பொருளாதார நெருக்கடியால் உலகம் முழுவதுமே நோட்டுகளை அடித்துத்தள்ளுகிறார்கள். அதுதான் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். இப்போதைய சூழலில் இரண்டு விஷயங்கள் நடக்கலாம். கொரோனா தொற்று குறைய ஆரம்பிக்கும்போது தங்கத்தின் விலை குறைந்து ரூ. 4,750ல் நிற்கலாம். அல்லது நாடுகள் தொடர்ந்து நோட்டுகளை அச்சடித்தால் விலை கிராமுக்கு 7,000 ரூபாய் வரை உயர்ந்து, பிறகு 6,500 ரூபாய் வரை குறையலாம்” என்கிறார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

– நன்றி பி.பி.சி. தமிழ்

6 வயது சிறியவரை காதலிக்கும் அந்த பிக் பாஸ் பிரபலம் இவர் தான்

பிக் பாஸ் 7 டைட்டிலை வென்ற கவுஹர் கான் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் கவுஹர் கான். இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார் கவுஹர் கான். அந்த சீசனில் தன்னுடன் போட்டியாளராக பங்கேற்ற நடிகர் குஷால் டாண்டனுடன் கவுஹர் கானுக்கு காதல் ஏற்பட்டது.

கவுஹர் கான், குஷால் காதல் நிலைத்து நிற்கவில்லை. இந்நிலையில் கவுஹர் கான் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது. சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் ஜெயித் தர்பார் என்பவரை தான் கவுஹர் கான் காதலிப்பதாக பேசப்படுகிறது.

தான் கவுஹர் கானுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை ஜெயித் தர்பார் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இது குறித்து கவுஹர் கானுக்கு தெரிந்த ஒருவர் கூறியதாவது,

கவுஹர் மற்றும் ஜெயித் சேர்ந்து அதிக நேரம் செலவிடுகிறார்கள். இருவரின் குடும்பத்தாரும் கூட பழகிவிட்டனர். கவுஹரை விட ஜெயித் 6 வயது சிறியவர் என்றார்.

என்ன கவுஹர் ஜெயிதை காதலிக்கிறீர்களா என்று யாராவது கேட்டால், ஒரு ஆணும், பெண்ணும் நட்பாக இருக் க முடியாதா என்று பதிலுக்கு கேட்கிறார். தற்போது காதல் பற்றி பேச அவர் விரும்பவில்லையாம்.

பிக் பாஸ் 7 வீட்டில் ஏற்பட்ட காதல் தான் நிலைக்கவில்லை இந்த காதலாவது திருமணம் வரை செல்லட்டும் என்று கவுஹர் கானின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். குஷால் டாண்டனை பிரிந்துவிட்டாலும் கவுஹர் அவருடன் இன்னும் நட்புடன் பழகி வருகிறார்.

முன்னதாக கவுஹர் கானுக்கும், பிரபல பாலிவுட் இயக்குநரான சஜித் கானுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னி ஜெயந்த் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி : வாழ்த்திய ரஜினி

யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தை பெற்ற சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். அப்பா நடிகராக இருந்தாலும் ஸ்ருதன் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார். மகனுக்கு நடிப்பை விட படிப்பில் தான் ஆர்வம் அதிகம் இருப்பதை புரிந்து கொண்ட சின்னி ஜெயந்த் அவரை ஊக்குவித்தார்.

– நன்றி சமயம்.கொம்

12 ஆம் திகதி அமைச்சராக பதவியேற்கிறார் ஜீவன்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு வலுவானதொருஅமைச்சுப்பதவியொன்று வழங்கப்படவுள்ளது என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

குறித்த அமைச்சானது பிரதமரின்கீழ் இருக்கும் என்பதால் இராஜாங்க அமைச்சுப்பதவியை வகிப்பவருக்கு நிதி உட்பட முழு அதிகாரத்தையும் சுயாதீனமாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்பதுடன் பிரதமர் ஊடாக அமைச்சரவைக்கு பத்திரங்களை முன்வைக்ககூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்கு 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு இம்முறையே அமோக வெற்றி கிடைத்துள்ளது. ஜீவன் தொண்டமான் தலைமையிலேயே மொட்டு அணி தேர்தலை எதிர்கொண்டது. இந்நிலையில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று ஜீவன் தொண்டமான் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார்.

அவருக்கு பிரதி அமைச்சு பதவியொன்றை வழங்குவது பற்றியே முன்னதாக பரீசிலிக்கப்பட்டது. ஆனால், மாவட்டத்தில் முதலிடம், அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்படும் கௌரவம் , இளம் தலைமைத்துவம் என்பது உட்பட மேலும் சில காரணங்களைக்கருத்திற்கொண்டு முழு அதிகாரம் கொண்ட வலுவான அமைச்சுப் பதவியை 26 வயதிலேயே வழங்குவதற்கு அரசாங்க உயர்மட்டம் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 12 ஆம் திகதி ஜீவன் தொண்டமான் இராஜாங்க அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, பிரதமரின்கீழ்தான் தற்போது இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அமையவுள்ள புதிய அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் கைவசமுள்ளது. எனவே, அமைச்சு பதவிகள் தொடர்பில் எவரும் நிபந்தனைகளை முன்வைக்கமுடியாத சூழ்நிலையும் காணப்படுகின்றது. அப்படி இருந்தும் ஜீவனுக்கு வலுமானதொரு  அமைச்சு பதவியை வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானமானது மலையக மக்களுக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரமாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

‘திலகர் வேண்டும்’ – இளைஞர்கள் மத்தியில் வலுக்கிறது பேராதரவு!

வாக்குறுதி வழங்கியமைக்கு அமைய தேசியப் பட்டியல் ஆசனங்களை வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு தேசியப் பட்டியலை வழங்க தயக்கம் காட்டுவது ஏற்றுக்கொள்வதை ஏற்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் உள்ள சிறுபான்மையினத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேசியப் பட்டியல் வாக்குறுதி அளித்தபடி வழங்காவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் தனிக்குழுவாக செயற்பட வேண்டிவரும் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆறு ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், தேசியப் பட்டியல் மயில்வாகனம் திலகராஜிற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக திலகராஜ் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் தற்போது அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த நாடாளுமன்றத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளை அதிகமாக பேசிய திலகராஜ் உள்வாங்கப்படாவிட்டால் அவருக்கான ஆதரவைத் தனியாக திரட்ட இளைஞர்கள் சிலர் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 போனஸ் ஆசனங்கள் கிடைத்துள்ளன. இவற்றில், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, ஹரீன் பெர்னாண்டோ, திஸ்ஸ அத்தநாயக்க, இம்தீயாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோருக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியப் பட்டியல் விபரங்களை வழங்க எதிர்வரும் 14ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘திலகருக்கு தேசியப்பட்டியல் இல்லையேல் மாற்று நடவடிக்கை’ ராதா எச்சரிக்கை

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாவிட்டால் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம். இதுதான் எனது கடைசி தேர்தல். இனிமேல் போட்டியிடமாட்டேன். மலையக மக்கள் முன்னணியும் முழுமையாக மறுசீரமைக்கப்படும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டனில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் கட்சி காரியாலயத்தில் 09.08.2020 அன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின் போது, கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேர்தலில் எமது  வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக களப்பணியாற்றிய அதேபோல் வாக்களித்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகள். 1991 ஆம் ஆண்டு பிரதேச சபையில் ஆரம்பமான எனது செயற்பாட்டு அரசியல் பயணம் மாகாண அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என வளர்ச்சி பெற்றுள்ளது. அதன் ஊடாக மக்களுக்கு பல சேவைகளை செய்துள்ளேன். சேவல், மயில், வெற்றிலை, தொலைபேசி என பல சின்னங்களின் கீழ் சவால்களுக்கு மத்தியில் போட்டியிட்டுள்ளேன். ஆனால், அவை அனைத்திலும் வெற்றிபெற்றுள்ளேன். மக்களும் என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

2010, 2015 ஆம் ஆண்டுகளில் ஆளுங்கட்சில் இருந்து தான் தேர்தலில் போட்டியிட்டோம். இம்முறை எதிரணியில் இருந்து களமிறங்கினோம். கணிசமானளவு வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதுதான் எமக்கு கிடைத்த பெறும் வெற்றியாகும். இந்த வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். ஆளுங்கட்சி என்பதாலேயே மொட்டு கட்சிக்கு நுவரெலியாவில் வாக்குகள் எழுந்துள்ளன.  நாம் ஐவரை நிறுத்தி இருவர் வெற்றிபெறவில்லை. மூவர் போட்டியிட்டோம், மூவரும் வெற்றிபெற்றோம். இதுதான் நூறுவீத வெற்றியாகும்.

அதிக விருப்பு வாக்குகளை பெற்று செல்வதை விடவும் அதிக ஆசனங்களை பெற்று பாராளுமன்றம் செல்வதே சிறப்பு. அந்தவகையில் எமது அணியில் ஆறு எம்.பிக்கள் இருக்கின்றனர். தேசியப்படடியல் ஒன்றும் அவசியம். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவேண்டும். இல்லையேல் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம். திலகர், லோரன்ஸ், குருசாமி ஆகிய மூவரில் ஒருவருக்கு நிச்சயம் வழங்கப்படவேண்டும்.

பொதுத்தேர்தலில் நாமும், தொழிலாளர் தேசிய சங்கமும் இணைந்தே செயற்பட்டோம். எனது வெற்றியில் அவர்களின் பங்களிப்பும் இருக்கின்றது. எனவே, எனது நன்றிகளை தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேவேளை, மலையக மக்கள் முன்னணியை பிளவுபடுத்துவதற்கு சிலர் முயற்சித்தனர். எமக்கு என அழுத்தத்தை கொடுத்ததுடன், மனசாட்சியின்றி செயற்பட்டனர். எம்மை எதிர்த்து போட்டியிட்டவருக்கு 17 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. அந்த வாக்கும் எமக்கு கிடைத்திருந்தால் ஒரு இலட்சத்தை தாண்டியிருப்போம். எது எப்படியோ ஒப்பந்தக்காரர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. இருந்தும் கபடநோக்கம் கொண்டவர்களை அடையாளம் கண்டுகொண்டோம்.

தேர்தல் காலங்களில் கட்சியை குழப்பினால் எப்படி முன்நோக்கி பயணிக்கமுடியும். இதுதான் எனது கடைசி தேர்தல். இனி தேர்தல்களில் போட்டியிடமாட்டேன். அதற்கான அவசியமும் இல்லை. எனவே, இந்த கட்சியை மறுசீரமைத்து கட்டியழுப்பவேண்டிய தேவை இருக்கின்றது. நான் உங்களை விட்டுசெல்லமாட்டேன், ஆனால், நீங்கள் என்னைவிட்டுசென்றால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

எம்முடன் நன்றாக பழகுகின்றனர். மறுநாள் அந்த பக்கம் சென்று முதுகில் குத்துகின்றனர். இப்படி கட்சி நடத்த முடியாது. எனவே, நிச்சயம் மறுசீரமைப்புகளை செய்வோம். சந்திரசேகரனின் பெயர் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் இந்த கட்சி பாதுகாக்கப்படவேண்டும். மலையக மக்கள் முன்னணி என்பது மலையக மக்களுக்கான கட்சி. தியாகங்களுக்கு மத்தியில் உருவான கட்சியாகும்.

மலையக மக்கள் முன்னணியின் மாநாடு கூட்டப்படும். எல்லா கட்டமைப்புகளும் கலைக்கப்படும். புதிதாக உருவாக்கப்படும். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.” – என்றார்.

புதிய அமைச்சரவை 14 இல் பதவியேற்பு! ஜீவனும் அமைச்சராகிறார்?

பிரதமராக மகிந்த ராஜபக்ச இன்று பதவியேற்றுள்ள நிலையில், புதிய அமைச்சரவை 14ஆம் திகதி பதவியேற்கவுள்ளது.

இதில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற புதுமுக எம்.பிக்களுக்கு விசேட திட்ட அமைச்சுக்கள் வழங்க ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகத் தரப்பு  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு இராஜாங்க அல்லது திட்ட அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படலாம் என்றும் ஜீவன் தொண்டமான் இதில் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜீவன் தொண்டமான் தலைமையில் அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில், புதுமுக உறுப்பினராக அதிக கூடிய விருப்புக்களை மாவட்டத்தில் பெற்றுள்ளதால் இந்த அமைச்சுப் பதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

26 அமைச்சரவை அமைச்சர்களும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுக்கள் 40 பேர் மற்றும் பிரதியமைச்சுக்கள் உள்ளிட்ட 65 பேர் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனைவி வீட்டுக்குசென்ற பொகவந்தலாவ இளைஞர் மர்ம மரணம்!

டிக்கோயா மனிக்கவத்த இரண்டாம் பிரிவைச்சேர்ந்த இளைஞரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

36 வயதுடைய செல்வராஜ் கிருஸ்ணமூர்த்தி என்பவரே பொகவந்தலாவை கிவ் மேற்பிரிவு தோட்டத்திலுள்ள மனைவியின் வீட்டுக்குசென்றிருந்தவேளை மரணித்துள்ளார். திருமணமாகி ஆறு மாதங்களே ஆகின்றன.

முகம்கழுவசென்றவேளை வழுக்கி விழுந்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற பின்னரே இவர் உயிரிழந்துள்ளார் எனக் கூறப்பட்டாலும், அவரின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரேதபரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது.

அத்துடன், இது கொலையா அல்லது ஏதேச்சையாக நடந்த மரணமா என்பது தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் – எஸ்.சதீஸ்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

போர் நிறுத்தம் நாளையுடன் நிறைவு: பாகிஸ்தான் பறக்கிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி!

0
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இன்று (21) பாகிஸ்தான் செல்லவுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 2ஆம் கட்ட அமைதி பேச்சு இஸ்லாமாபாத்தில் நாளை (22) நடைபெறவுள்ளது...

ஹைதராபாத், டெல்லி அணிகள் இன்று மோதல்!

0
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 31 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி...

மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!

0
ஐ.பி.எல்.2026 தொடரில் தொடர் தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி . ஐபிஎல் 2026 தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய...