Home Blog Page 3909

புதிய அரசாங்கத்தின் பட்ஜட் நவம்பரில் முன்வைப்பு!

10 ஆண்டுகளுக்கு பிறகு நுவரெலியாவைக் கைப்பற்றியது இ.தொ.கா. தலைமையிலான அணி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத்திட்டம் 2020 நவம்பரில் முன்வைக்கப்படும் என அரசாங்க உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

2021 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்டமே டிசம்பரில் இவ்வாறு முன்வைக்கப்படவுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நாளை மறுதினம் அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்.

”  புதிய ஆட்சி அமையப்பெற்ற பின்னர் இடைக்கால கணக்கறிக்கையே முன்வைக்கப்படும். 2020 ஆம் ஆண்டுக்காக பட்ஜட் சமர்ப்பிக்கப்படாது. ஏனெனில் அவ்வாண்டு முடிவடைவதற்கு குறுகிய காலப்பகுதியே உள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 2020 நவம்பரில் முன்வைக்கப்படும்.” – என்று ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

நவம்பர் பட்ஜட் முன்வைக்கப்பட்ட பின்னர் விவாதம் ஆரம்பமாகி, டிசம்பர் இறுதியில் அது நிறைவேற்றப்படும்.

திருப்பதி தேவஸ்தான பணியாளர்கள் 743 பேருக்கு கொரோனா!

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அர்ச்சகர்கள் உட்பட 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த சூழலில் கடந்த மார்ச் 19 ஆம் திகதி திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அலிபிரியில் இருந்து திருமலை செல்லும் இரு மலைப்பாதைகளும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையும் மூடப்பட்டு பக்தர்கள் வருகை நிறுத்தப்பட்டது. பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

எனினும், கோவிலில் சுவாமிக்கு தினமும் நடைபெறும் அனைத்து ஆராதனைகள், பூஜைகள், வழக்கம் போல் நடைபெற்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 120 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் வருகை நிறுத்தப்பட்டது.

இதன்பின்னர், நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் 8ஆம் திகதி  முதல் கோவில்களை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்தது. ஏறக்குறைய இரண்டரை மாதங்களாக மூடியிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த ஜூன் 11 ஆம் திகதி மீண்டும் சாமி தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. இதன்படி, 83 நாட்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், கோவிலில் அர்ச்சகர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சை பெற்ற நிலையில், தொற்று பலருக்கும் பரவ தொடங்கியது. இதுபற்றி திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அர்ச்சகர்கள் சிலர் உள்பட திருமலை திருப்பதி தேவஸ்தான பணியாளர்கள் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 402 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். 338 பேர் பல்வேறு நல மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று கோவிலின் உண்டியலை நிரப்புவதற்காக கோவில் திறக்கப்பட்டு உள்ளது என சில ஊடகங்களில் வந்துள்ள செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள சிங்கால், பக்தர்கள் கேட்டு கொண்டதற்காகவே கோவில் திறக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றியே தரிசன அனுமதி வழங்கப்பட்டது என கூறியுள்ளார்

ஐ.தே.கவின் அடுத்த தலைவர் யார்? நால்வரின் பெயர்கள் முன்மொழிவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி தலைமைப்பதவிக்கு நால்வரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன, அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் செயற்குழு மற்றும் சம்மேளனம்கூடி புதிய தலைவரை தெரிவுசெய்யும். பெரும்பாலும் இரகசிய வாக்கெடுப்புமூலமே தேர்வு நடக்கும்.

நாளை மறுதினமும் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் 14 பேர் தப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 14 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,593 ஆக அதிகரித்துள்ளது.

240 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐ.தே.கவுக்கு தலைமையேற்குமாறு கருவுக்கு அழைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை பொறுப்பேற்குமாறு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அழைப்பு விடுத்துள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு தயார் என கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.

இதனையடுத்து தலைமைப்பதவியை பெறுவதற்கு ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன, நவீன் திஸாநாயக்க ஆகியோர் முயற்சித்துவருகின்றனர். இந்நிலையிலேயே சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கருவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் என கூறப்படுகின்றது.

எனினும், இது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அவர் ஐ.தே.கவின் தலைமைப்பதவியை ஏற்பாரா என்பது கேள்விக்குறியே.

தொடர் மழை – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை பெய்துவருவதால் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மேற்படி நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று அதிகாலை  திறந்துவிடப்பட்டன.
நுவரெலியா மாவட்டத்தில் தொடந்து  மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவுவதால் நீரேந்தும்  பகுதிகளில் நீர்ட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. டெவன் மற்றும் சென்கிளேயர்  நீர்வீழ்ச்சிகள் பெருக்கெடுத்துள்ளன.
எனவே  கரையோர பகுதியில் உள்ளவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்,
அதேவேளை, சீரற்ற காலநிலையால் நுவரெலியா – ஹட்டன்,  ஹட்டன் – கொழும்பு உள்ளிட்ட பிரதான வீதிகளில் பணி மூட்டம் அதிகரித்து கணப்படுகின்றது . சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா

எரிக்கப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்பு! பூனாகலை தோட்டத்தில் கொடூரம்!!

பிரசவமாகி இரு நாட்கள் மதிக்கத்தக்க பெண் சிசுவொன்றின் சடலத்தை, கொஸ்லந்தைப் பொலிஸார் இன்று (10)  மீட்டுள்ளனர்.

பூனாகலைப் பகுதியைச் சேர்ந்த ஆர்னோல்ட் பிரிவு பெருந்தோட்ட குடியிறுப்பொன்றின் பின்புறபற்றைக்குள் எரியூட்டப்பட்டிருந்த பெண் சிசுவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து, குறிப்பிட்ட தோட்டத்திற்கு விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட குடியிறுப்புப் பகுதியினைச் சூழ மேற்கொண்ட தேடுதலின் போதே,சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மஜிஸ்ரேட் விசாரணையை, பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிபதி கீர்த்தி கும்புறுஹேன மேற்கொண்டார். சிசுவின் சடலத்தை சட்டவைத்திய பரிசோதனைக்கென்று,பதுளை அரசினர் மருத்துவமனை சட்டவைத்திய பிரிவிடம் ஒப்படைத்து, அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் சிசுவின் தாயென கருதப்படும் 28 வயது நிரம்பிய இளம் பெண்ணையும் கைதுசெய்யும்படிவிடுக்கப்பட்ட உத்தரவினையடுத்து, பொலிசார் அப்பெண்ணைகைது செய்து விசாரணைக்குற்படுத்தியுள்ளனர். அப்பெண்ணின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதினால்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிசு இறந்தநிலையில் பிரசவமானதா அல்லதுகொலைசெய்யப்பட்டதாஎன் றுஅறியும் வகையில் தீவிரபுலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

எம். செல்வராஜா, பதுளை

வெளிவிவகார அமைச்சராக தினேஷ் – கல்வி அமைச்சு பீரிஸிடம் கையளிப்பு!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சு பதவி தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்படவுள்ளது என ‘அருண’ என்ற சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்சவும், கல்வி அமைச்சராக ஜீ.எல். பீரிசும், சுகாதார அமைச்சராக பவித்தாரா தேவி வன்னியாராச்சியும் பதவியேற்கவுள்ளார்.

விவசாயத்துறை அமைச்சராக மஹிந்தானந்த அளுத்கமகேயும், சுற்றுலாத்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும், ஊடகத்துறை அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், நீதி அமைச்சராக அலி சப்ரியும் நியமிக்கப்படவுள்ளனர்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்ற சரத் வீரசேகரவுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் முதலிடம் பிடித்த ஜீவன் தொண்டமானுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது எனவும் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை எதிர்வரும் 12 ஆம் திகதி கண்டியில் பதவியேற்கவுள்ளது.

26 வருடங்களுக்கு பிறகு தலைமை பதவியிலிருந்து விலகுகிறார் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான வஜீர அபேவர்தன  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எதெல்லாம் நடக்ககூடாது என எதிர்ப்பார்க்கப்பட்டதோ அவையெல்லாம் நடந்தமுடிந்துவிட்டன. இனியும் எமது கட்சிக்கு எதிராக நடப்பதற்கு ஒன்றும் இல்லை.

ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். ஆனால், சிங்கள, பௌத்த மக்கள் உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை. கட்சி பிளவுபட்ட அதிருப்தியாலேயே ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. அதற்கேற்றவகையிலேயே எமக்கு எதிராண அணியும் பிரச்சாரம் முன்னெடுத்தது.

நாம் அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு தவறான பக்கம் நிற்கவில்லை. நீதியின் பக்கம் நின்றோம். அதனால் தோல்வி குறித்து கவலை இல்லை.
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், தோல்வியடைந்தவருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படக்கூடாது என்பதே எனது கருத்து.

அதேவேளை, கட்சி தலைமைத்துவத்தில் மாற்றம் செய்வது தொடர்பில் தற்போதைய தலைவர் பரீசிலித்துவருகின்றார். விடைபெறுவதற்கு தயார் என்ற அறிவிப்பை கடந்த வெள்ளிக்கிழமை அவர் விடுத்திருந்தார். எனவே, மாற்றம் தொடர்பில் அனைவரும் ஒன்றுகூடி முடிவொன்றை எடுக்கவேண்டும்.

கட்சியை வழிநடத்தும் தகைமை எனக்கு இருக்கின்றது. எனவே, தலைமைப்பதவியை வழங்கினால் முன்நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.” – என்றார்.

டயலொக் ஆசிஆட்டா Huawei, மற்றும் Simsyn ஆகியன 1000 பாடசாலைகளுக்கு இலவச தொலைதூர கற்றல் தீர்வு

டயலொக் ஆசிஆட்டா Huawei, மற்றும் Simsyn ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 1000 பாடசாலைகளுக்கு இலவச தொலைதூர கற்றல் தீர்வுகளை வழங்க கல்வி அமைச்சினை வலுவூட்டுகின்றது.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Huawei மற்றும் Simsyn ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, கல்வி அமைச்சகத்தால் (MOE) தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு தொலைத்தொடர்பு தீர்வுகளை வழங்குவதன் மூலம் கல்வித்துறைக்கு தனது ஆதரவை தொடர்ந்து வழங்குகின்றது. இது 2020 மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட நெனச 1377 தொலைதூர கல்வி முயற்சியின் விரிவாக்கமாகும். கோவிட் -19 நெருக்கடியான காலத்தில், ஏனைய கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் கற்றல் செயற்பாடுகளுக்கு மாறாக இவ் நெனச கற்கை நெறியானது அனைத்து வலையமைப்பிலும் இலவசமாக அணுகக்கூடியதாக காணப்படுவதுடன் இன்டர்நெட் தீர்வுகள் இன்றி பிள்ளைகள் தங்களுடைய பாடங்களை தொடர முடியாத சூழ்நிலையிலிருந்து விடுபட்டு அனைவரும் தங்களுடைய பாடங்களை தொடர்வதற்கான வாய்ப்பினை அளிக்கின்றது.

இந்த விசேட தீர்வானது, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் இருந்தும், classroom conference sessions மூலம் மாணவர்கள் தங்களுடைய ஆசிரியர்களுடன் எந்தவொரு சாதனம் மற்றும் வலையமைப்பின் ஊடாகவும் எவ்விதமான கட்டணங்களும் இன்றி இணைந்துக்கொள்வதற்கான தொலைதூரக் கற்றல் வசதியினை வழங்குகின்றது. ஸ்மார்ட்போன் அல்லது Laptop ஊடாக மாணவர்கள் இவ் இணையத்தை அணுகி பாட நெறிகளை கற்றுக்கொள்ளக்கூடியதோடு ஏனையவர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்களால் நடத்தப்படும் பாடங்களை ஒரு feature phone அல்லது நிலையான தொலைபேசி ஊடாக எந்தவொரு வலையமைப்பிலிருந்தும் 1377 துரித இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி கட்டணம் இன்றி இணைந்துக்கொள்ள முடியும். இந்த தீர்வின் மூலம் 1377 துரித இலக்கத்தின் ஊடாக 48 மாணவர்கள் வரை இணைந்துக்கொள்ள முடிவதுடன், அதே சமயம் web portal ஊடாக 100 மாணவர்கள் வரை ஒரே நேரத்தில் இணைந்துக்கொள்ள முடியும். மொத்தத்தில், பாடசாலைகள் தனது பாட நெறிகளை எவ்வித தடைகளும் இன்றி 1377 துரித இலக்கம் மூலமும் இணையத்தின் மூலமம் இணைந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வழங்க முடியும். 100 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொலைதூரக் கல்வி தீர்வு, நாடு முழுவதும் உள்ள 1000 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது. இது தொடர்ந்து நடைபெறும் கோவிட்-19 தாக்கத்தைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாகும். பாடசாலைகளுக்கு தொலைதூரக் கல்விக்கான வசதிகளை வழங்குவதற்கான நீண்டகால நோக்குடன், இந்த முயற்சியானது மாணவர்களுக்கு சமமான கல்வி அணுகலை பெற்றுத்தருவதோடு அவர்களின் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கல்வியினை தொடர்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டல்லஸ் அலகப்பெரும கூறுகையில், “இன்று இலங்கை கல்வி முறையின் ஒரு புதிய திருப்பு முனையை நாங்கள் காண்கிறோம். இந்த உலகளாவிய தொற்றுநோயின் விளைவாக, கல்வி துறை வெகுவாக பாதிக்கப்பட்டு உலகின் அனைத்து நாடுகளும் சிறந்த தீர்வுகளை விரைவாக மேற்கொள்வதற்கான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. கல்வித்துறையினை மேம்படுத்தவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டு தொலைதூரக் கல்வியைத் வலுவூட்டும் நோக்குடன் இலங்கை அரசாங்கத்திற்கு டயலொக் ஆசிஆட்டா தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பல்வேறு ஊடகங்கள் மூலம் தொலைதூரக் கற்றல் ஊடாக மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். இருப்பினும், இலங்கை குடும்பங்களில் 30% க்கும் குறைவானவர்கள் இணைய அணுகலைக் கொண்டுள்ளனர். டயலொக்குடன் இணைவதன் மூலம் ஏனைய மாணவர்களும் சாதாரண கையடக்க தொலைபேசியின் ஊடாக கற்றல் செயற்பாடுகளை அணுகிட முடியும். சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக இந்த வாய்ப்பினை பயன்படுத்தி டயலொக் நிறுவனத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த நெருக்கடியான காலத்தில் கல்வியானது அனைவராலும் அணுகக்கூடியது என்பதை உறுதி செய்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில், “நாடு முழுவதிலும் உள்ள கல்வி அமைச்சின் 1000 பாடசாலைகளுக்கு அவர்களின் கல்வி முயற்சிகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த தேவையான கருவிகளைக் கொண்டு, உயர்தர கல்வியைப் பேணுதல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் கல்வி ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுடன் நாடு முழுவதும் உள்ள கல்வி அமைச்சின் பாடசாலைகளை ஆதரிப்பதற்காக தொலைத் தொடர்பு தீர்வுகளை நாங்கள் நெனச 1377 தொலைதூரக் கல்வி துரித இலக்கத்துடன் விரிவுபடுத்தினோம். இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) மற்றும் அனைத்து வலையமைப்பின் ஊடாக எமது இந்த இலவச தொலைதூர கல்வி தீர்வினை அனைவருக்கும் வழங்க உதவியமைக்காக இந்த சந்தர்ப்பத்தின் ஊடாக எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்”;” என குறிப்பிட்டார்.

டயலொக் ஆசிஆட்டாவின்; இந்த முயற்சியானது ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு (SDGs), இலக்கு எண் 4 – அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்விக்கு ஏற்ப அமைந்துள்ளது. மேலதிகமாக, நிறுவனமானது நெனச முன் முயற்சியின் கீழ் நெனச TV, நெனச Smart School, நெனச App மற்றும் நெனச 1377 O/L துரித இலக்கம் ஆகிய பல கல்வி தளங்களையும் இயக்குகிறது.

ஒரு சவால் மிக்க நேரத்திற்கு மத்தியில் கல்வித் துறையை ஆதரித்தல், நாட்டின் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் முயற்சிகளில் ஒன்றிணைதல் டயலொக் ஆசிஆட்டாவின் மற்றொரு முயற்சியாகும். மேலும் இலங்கையில் உள்ள 15 மில்லியன் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருந்த படியே எப்போதும் இணைந்திருப்பதனை உறுதிசெய்யும் முயற்சிகளில் ஒன்றாக அணுகக்கூடிய பலவிதமான e-Connect, e-Learn, e-Health, e-Tainment, e-Care மற்றும் e-Work solutions போன்றவற்றை (https://www.dialog.lk/home வழியாக அணுகலாம்) வழங்குகின்றது.

மேல் படம் : தொலைதூரக் கற்றல் தீர்வைப் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்

கீழ் உள்ள படம்: இடமிருந்து வலம்: டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் நிலைபேண்தகு பிரிவு தலைவர் ~ரித ரத்வத்த, கல்வி அமைச்சின் (கல்வி தர மேம்பாடு) மேலதிக செயலாளர் H.U. பிரேமதிலக, கல்வி அமைச்சின் அமைச்சர் டல்லஸ் அலகப்பெரும, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, கல்வி அமைச்சின் ஆலோசகர் வைத்தியர் உபாலி செதார மற்றும் கல்வி அமைச்சின் (திட்டமிடல் மற்றும் செயல்திறன் ஆய்வு) மேலதிக செயலாளர் வைத்தியர் மதுரா வெஹல்ல.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர துப்பாக்கியுடன் நுவரெலியாவில் கைது!

0
“ சொக்கா மல்லி” என்றழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதிப்பத்திரமற்ற கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள்...

தோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!

0
திம்புள்ள, பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் இன்று (21) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோரை உடனடியாக இடமாற்றுமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களை...