Home Blog Page 3908

டோனியே சிறந்த தலைவர் – மனம் திறந்தார் முரளி

டோனியின் தலைமைத்துவ அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முரளி, இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

2007ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இளம் வயது தலைவராக டோனி இந்திய அணிக்கு தலைமை தாங்கி கிண்ணத்தை வென்று கொடுத்தார்.

டோனியின் தலைமைத்துவ அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஏனெனில் அவர் பந்துவீச்சாளரிடம் பந்தை கொடுத்து பந்துவீச்சாளரையே தனது பந்து வீச்சுக்கு தகுந்த மாதிரி பீல்டிங்கை அமைத்து விட்டு பந்து வீசும்படி கூறுவார். அது சரியாக அமையாவிட்டால், பந்துவீச்சாளரிடம் அனுமதி பெற்று தானே பீல்டிங்கை உருவாக்குவார்.

பந்துவீச்சாளர் நன்றாக வீசிய பந்தை பேட்ஸ்மேன் சிக்சர் அடித்தால் பவுலரை கைதட்டி பாராட்டுவார். சிக்ஸ் அடித்ததற்காக கவலைப்பட வேண்டாம், நல்ல பந்தை தான் பேட்ஸ்மேன் தனது திறமையால் சிக்சராக அடித்து இருக்கிறார் என்று தேற்றுவார்.

இதுபோன்ற பாராட்டுதல்கள் எல்லோரிடம் இருந்தும் வராது. சக வீரர் தனது தவறை திருத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும். என்பதை எல்லோருக்கு தெரியும்படியாக வெளிப்படையாக சொல்லாமல், தனியாக அழைத்து தெரிவிப்பார். அது அவருடைய வெற்றிகரமான தலைமைத்துவ செயல்பாட்டுக்கு ஒரு காரணமாகும்.

அமைதியாக சிந்திக்கும் திறன் கொண்ட அவர் சிரேஷ்ட வீரர்கள் கூறும் கருத்துகளை கேட்டு ஆலோசித்து முடிவு எடுப்பார். அணியை வெற்றிகரமாக நடத்தி செல்தவற்கு எந்த வீரர்கள் தனக்கு தேவை என்பதில் அவர் மிகவும் கவனமாக இருப்பார்.” – என்றார்.

ராஜபக்ச குடும்ப உறுப்பினருக்கு பிரதி சபாநாயகர் பதவி!

9ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக சசீந்திர ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
 
பொதுத்தேர்தலில் மொனறாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட சசீந்திர ராஜபக்ச அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்றார்.
 
8ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக செயற்பட்ட சமல் ராஜபக்சவின் மகனே இவர்.
 
அதேவேளை, புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.

சுதந்திரக்கட்சிக்கு மூன்று அமைச்சுகள்! பிள்ளையானுக்கும் பதவி!!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவுள்ளனர்.

கட்சி தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர ஆகிய மூவருக்கே அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், தயாசிறி ஜயசேகரவுக்கு இராஜாங்க அமைச்சு பதவியொன்று வழங்கப்படலாம் என தெரியவருகின்றது.

அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நாளை கண்டியில் பதவியேற்கவுள்ளனர்.

அதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கும் அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சு பதவியே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

இதேவேளை பிள்ளையானுக்கு சட்டரீதியாக அனுமதி வழங்கி அவரை கண்டியில் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்க செய்வது தொடர்பில் நேற்று கொழும்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பம்பரகலையில் தீ – 24 லயன் குடியிருப்புகள் தீக்கிரை!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை நடுக்கணக்கு லயன் குடியிருப்பில் நேற்று (11) இரவு 10 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தால் 24 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

இதனால் நிர்க்கதியாகியுள்ள 24 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் அயலவர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இத்தீயினை பிரதேசவாசிகள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் தொழிலாளர்களின் அத்தியாவசிய ஆவணங்கள்,தங்க நகைகள் ஆடைகள, தளபாடங்கள் உட்பட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீவிபத்து ஏற்படும் போது தீயணைக்கும் பிரினரோ அல்லது கருவிகளோ உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக தீ கட்டுப்படுத்த முடியாது போவதாக பாதிக்கப்பட்டோர்  தெரிவிக்கின்றனர்.

இந்த தீவிபத்தில் எவருக்கும் காயங்களோ உயிராபத்தோ ஏற்படவில்லை.
குறித்த தீப்பரவல் மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Viral Video : வான் உயர்ந்த கட்டத்தின் வெளிப்புறச் சுவரில் அசாத்தியமாக நடந்த சிறுமி!

பெற்றோர் கவனக்குறைவு, அடுக்குமாடி கட்டிடத்தின் வெளிப்புற சுவரில் அசால்டாக நடந்து சென்ற சிறுமி.

தற்போது இந்த வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் ஒரு பெண் கட்டிடத்தில் லெட்ஜ் எனப்படும் குறுகிய பகுதியின் வழியே நடந்து செல்கிறார். இந்த வீடியோ உண்மைதானா? என சரிப்பார்க்கப்படாத நிலையில் இது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்வு எங்கு நடந்தது என சரியாக தெரியவில்லை. ஆனால் சிலர் இது தானேவில் உள்ள ஹிராந்தனி மீடோஸ் என்னும் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ என கூறுகின்றனர்.

ஆனால் மற்றொரு பிரிவினர் இது சென்னையில் எடுக்கப்பட்ட வீடியோ என கூறுகின்றனர். சிலர் இது குர்கானில் எடுக்கப்பட்ட வீடியோ என கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தன்மய் ஷிண்டே என்பவர்தான் இந்த வீடியோவை பகிர்ந்தவர். இது குறித்து அவர் தானே போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுக்குறித்து கூறும்போது “இந்த வீடியோவில் ஒரு பெண் கட்டிடத்தின் வெளியே உள்ள பேட்சில் நடந்து செல்வதை நீங்கள் காணலாம். இது தானேவில் உள்ள ஹிரானந்தனி மீடோஸாக இருக்க வேண்டும்.

அந்த வீடியோவில் பேசிய நபர் அந்த பெண் மூன்றாவது முறையாக அவ்வாறு செல்வதாக கூறியுள்ளார். இதை நீங்கள் தெளிவாக கேட்கலாம்” என்றார். இது குறித்து வேறு சிலர் கூறும்போது குழந்தைகள் குறித்து பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்கு வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். என கூறுகின்றனர்.

இந்த வீடியோவின் நம்பகத்தன்மையும் உண்மைத்தன்மையும் இன்னும் அறியப்படவில்லை என்றாலும் இது போன்ற பொறுப்பற்ற உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மேலும் மற்றவர்களும் இது போன்ற காரியங்களில் ஈடுபடாமல் நாம் தடுக்க வேண்டும்.

நீங்கள் ஒரு பெற்றோராக இருக்கும் பட்சத்தில் உங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களது செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ உதாரணமாக உள்ளது.

 

தயாரிப்பாளரை பலியெடுத்த கொரோனா : மூவி மேக்கர்ஸ் சுவாமிநாதன் மரணம்

அஜித், விஜய், கமல் என பல டாப் ஹீரோக்களின் படங்களை தயாரித்து இருக்கும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சுவாமிநாதன் இன்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

வைரஸ் தொற்று இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வருகிறது. தினம் தோறும் இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 2.2 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் உலக அளவில் இந்தியாவில் தான் வைரஸ் இப்போது அதிகம் பரவி கொண்டிருக்கிறது.

இன்னிலையில் சினிமா நட்சத்திரங்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாவதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், கமல் ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்திருக்கிறார்.

அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியாகி இருக்கிறார். இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் மூலமாக பல்வேறு வெற்றி படங்களை தயாரித்திருக்கிறார். வி சுவாமிநாதன் இறந்த செய்தி சினிமா துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

வி சுவாமிநாதனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அஸ்வின் ராஜா கும்கி படத்தில் காமெடியனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முன்பே அவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ராஜேந்திரனின் மகனாக நடித்து இருந்தார். ஆர்யா, சந்தானம் உடன் அவர் செய்த காமெடி நல்ல வரவேற்பை பெற்றது. கும்கி அஸ்வினுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாமிநாதன் தொண்ணூறுகளில் இருந்து பல முன்னணி ஹீரோக்களுடன் படங்கள் தயாரித்து வந்திருக்கிறார். சரத்குமார் நடித்த அரண்மனை காவலன் என்ற படம் தான் இவரது முதல் படம். அதற்கு பிறகு கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் படத்தையும் அவர் தயாரித்திருந்தார். சுந்தர் சி தான் அந்த படத்தை இயக்கியிருந்தார்.

சுந்தர் சி உடன் அவர் தொடர்ந்து 5 படங்களில் பணியாற்றி இருக்கிறார். உனக்காக எல்லாம் உனக்காக, உன்னை தேடி, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே என தொடர்ந்து சுந்தர் சி படங்களை அவர் தயாரித்து இருக்கிறார்.

மேலும் தளபதி விஜய் நடித்த பிரியமுடன் மற்றும் பகவதி ஆகிய படங்களையும் தயாரித்தது சுவாமிநாதன் தான். பகவதி படத்தில் ஒரு காட்சியிலும் சுவாமிநாதன் நடித்து இருந்தார்.

அஜித்துடன் இரண்டு படங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் மற்றும் உன்னை தேடி ஆகிய படங்களை அவர் தயாரித்து இருக்கிறார்.

மேலும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய படம் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படம், அதையும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கடைசியாக சுவாமிநாதன் தயாரித்திருந்த படம் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடித்த சகலகலா வல்லவன் படம். அதனை சுராஜ் இயக்கி இருந்தார்.

சுவாமிநாதன் மறைவுக்கு முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர் மஹிந்த நாளை கடமையேற்பு

புதிய அரசாங்கத்தின் பிரதம அமைச்சராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ச நாளை (11) காலை 9 மணிக்கு தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

பிரதம அமைச்சர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள கடமையேற்பு நிகழ்வில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும், பிரதமரின் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

அதேவேளை, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை மறுதினம் நியமிக்கப்படவுள்ளது.

ஹட்டன் – டிக்கோயா நகரசபை வதை முகாமா? பாதிக்கப்பட்டவர்கள் குமுறல்!

ஹட்டன் – டிக்கோயா நகர சபையில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்கள் குறித்த நகரசபையின் உயர் பதவிகளில் உள்ள பெண்களால் மிகவும் மோசமாக நடத்தப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த நகரசபையின் பிரதம எழுது வினைஞராக இருக்கும் பெண் அதிகாரியும், முகாமைத்துவ உதவியாளரான மற்றொரு பெண் அதிகாரியுமே இவ்வாறு தங்களுக்கு கீழ் பணிப்புரியும் பெண்களிடமும், கர்ப்பிணப் பெண்களிடமும் கடுமையாக நடந்துக்கொள்வதாக குறித்த நகரசபையின் ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த வௌ்ளிக்கிழமை முகாமைத்துவ உதவியாளராக இருக்கும் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, குறித்த நகரசபையின் பிரதம எழுதுவினைஞராக (Chief Clerk) இருக்கும் பெண் ஒருவர் கடுமையாக திட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியுற்ற குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு அந்த இடத்திலேயே இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது எனவும், இதனைத் தொடர்ந்து அங்கு பணிப்புரியும் மற்றொரு கர்ப்பிணிப் பெண், அவரின் குடும்பத்தாருக்கு தகவலைத் தெரிவித்துவிட்டு அவரை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்க உதவி செய்துள்ளார்.

சம்பவம் அறிந்து பதறிப்போய் ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு வந்த குறித்த கர்ப்பிணிப் பெண்ணின் கணவரும், மாமனாரும், பிரதம எழுதுவினைஞரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு, அந்தப் பெண்ணின் மாமனார், மருமகளின் கரு கலைந்துவிட்டதாக கூறி ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்குள் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை இரத்தக்கசிவு ஏற்பட்ட முகாமைத்துவ உதவியாளராகப் பணிப்புரியும் கர்ப்பிணிப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க உதவி செய்த மற்றொரு கர்ப்பிணிப் பெண்ணும் இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவரும் பின்னர் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவத்தை வெளியில் கொண்டுவந்த ஊடகவியலாளருக்கு அழுத்தங்கள் வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய வீடமைப்புத் திட்டம் வீடமைப்பு அமைச்சின் கீழ்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டம், வாழ்வாதார மேம்பாடு மற்றும் இதர விவகாரங்களுக்காக உருவாக்கப்பட்டிருந்த அமைச்சரவை அந்தஸ்த்துள்ள தனி அமைச்சு இம்முறை இல்லாது செய்யப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா ஆட்சியின்போதே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி சேவையாற்றுவதற்காக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது. அவ்வமைச்சு மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு வழங்கப்பட்டது.

எனினும், காலப்போக்கில் அவ்வமைச்சு இல்லாமல் செய்யப்பட்டது. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டே மீண்டும் மலையக பெருந்தோட்ட மக்களுக்கான அமைச்சு உருவாக்கப்பட்டு, தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூகஅபிவிருத்தி அமைச்சராக திகாம்பரம் நியமிக்கப்பட்டார்.

எனினும், இம்முறை புதிய கிராமங்கள் அமைச்சு   தனி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக மாற்றப்படவில்லை.

இன்று வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியின் பிரகாரம் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு என்பன நகரத் திட்டமிடல் மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்திய வீடமைப்புத் திட்டம் உப்பட பெருந்தோட்டப் பகுதிகளுக்கான வீடமைப்புத் திட்டங்கள் நகரத் திட்டமிடல் மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.

இலங்கையில் மேலும் 23 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளமை பரிசோதனைமூலம் இன்று கண்டறியப்பட்டது.

சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் மருத்துவ கண்காணிப்பின் வைக்கப்பட்டிருந்தவர்களில் 23 பேருக்கே இவ்வாறு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 867 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2 ஆயிரத்து 593 பேர் குணமடைந்துள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 263 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

சுயநல நோக்கில் கோரிக்கைகளை முன்வைக்கும் அமெரிக்கா: ஈரான் குற்றச்சாட்டு

0
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமற்றது என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ரெசா மொஹ்செனி சானி Mohammad Reza Mohseni Sani தெரிவித்துள்ளார். அமெரிக்கா தனது சுயநல நோக்கங்களுக்காகவும் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாலுமே குழப்பம்...

அமைதிக்கான நடை பயணம்…..!

0
‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைப்பயணத்திற்காக அமெரிக்காவில் அமைதிக்கான நடைபயணத்திற்குத் தலைமை தாங்கிய வண. பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்கள், இன்று (21) முற்பகல் இந்நாட்டை...