Home Blog Page 3907

தேசியப்பட்டியல் பங்கீடு – திணறுகிறது சஜித் அணி! ஏமாற்றத்துடன் திரும்பிய முற்போக்கு கூட்டணி

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், பங்காளிக்கட்சி தலைவர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (11) கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் ஆசனங்களை பங்கிடுவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. எனினும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து தேசியப்பட்டியல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியல் தொடர்பில் முடிவெடுப்பதற்காக சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி இன்றுவரை காலக்கெடு விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

’19’ நீக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் பதவிகாலம் நீடிக்கப்படாது!

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் பதவிகாலம் நீடிக்கப்படமாட்டாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு நாட்டு மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. மக்களின் ஒத்துழைப்புடன் அதற்கான பணிகள் சுயாதீனமாக இடம்பெறும். அதற்கு முன்னர் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும். ஏனெனில் அதில் பல குறைப்பாடுகள் உள்ளன.
19ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதியின் பதவிகாலம் 6 வருடங்களாக இருந்தது. 19மூலம் அது ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது. 19 ஐ நீக்கினால் பழைய நிலைமை திரும்பும். ஆனாலும் 5 வருடங்கள் பதவியில் இருப்பதற்குதான் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதில் மாற்றம் செய்யக்கூடாது என ஜனாதிபதி அறிவித்துவிட்டார். எனவே, ஜனாதிபதியின் பதவிகாலம் நீடிக்கப்படாது.
அத்துடன், அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தின்பிரகாரம் ஜனாதிபதி பதவியை நபரொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே வகிக்கலாம் என்ற வரையறை மாற்றியமைக்கப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். எனவே, இரண்டு தடவைகள் என்ற நிலைமை உருவாக்கப்படும்.” – என்றார்.

‘கொரோனா’ – தடுப்பூசியை கண்டுபிடித்தது ரஷ்யா!

உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்குகிற அளவுக்கு, இன்றைக்கு அந்த வைரஸ் உலகை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொலைகார கொரோனா வைரஸ் கடந்த 8 மாதங்களாக உலக நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது.

உலகம் முழுவதும் இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தினம் தினம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் ரஷியாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி பரிசோதனை தொடங்கி உள்ளது. தனது சொந்த மகளுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனையை ஜனாதிபதி புதின் தொடங்கி வைத்துள்ளார்.

கொரோனாவுக்கான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக ஜனாதிபதி புதின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடு ரஷ்யா என்று பெருமிதம் தெரிவித்துள்ளது.

உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா கண்டு பிடித்தது. அதிபர் புதின் மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாகாண தேர்தலை குறிவைத்து மலையகத்தில் மலர்கிறது புதிய கூட்டணி!

மலையகத்தில் விரைவில் இளைஞர்களின் பங்களிப்புடன் புதியதொரு அரசியல் கூட்டணி உதயமாகவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது திரைமறைவில் இடம்பெற்றுவருகின்றன எனவும், முக்கிய மூன்று அரசியல் புள்ளிகள் பச்சைக்கொடி காட்டும்பட்சத்தில் ஒக்டோபர் ஆரம்பத்தில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரியவருகின்றது.

நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தியே புதிய கூட்டணியின் அரசியல் பயணம் அமையுமெனவும், பேச்சுவார்த்தை வெற்றியளித்து கூட்டணி உதயமானால் மாகாணசபைத் தேர்தலில் புதிய கூட்டணி போட்டியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

புதிய கூட்டணி பதிவுசெய்யப்படும்வரை, தேர்தல் விவகாரங்களுக்காக பதிவுசெய்யப்பட்ட கட்சியொன்றை கூட்டணிக்கு வழங்குவதற்கு அரசியல் பிரமுகரொருவர் தயார் நிலையிலேயே இருப்பதாகவும், அடுத்தவாரமளவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

18 மான் கொம்புகள், 2 காட்டெருமை கொம்புகளுடன் நுவரெலியாவில் முகாமையாளர் கைது

'கொரோனா' - இலங்கையில் மேலும் 29 பேர் குணமடைவு!

நுவரெலியா பொலிஸாரும், நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின்போது மிருகங்களின் உடற்பாகங்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் இன்று (11.08.2020) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா அன்ட பேங்க் பகுதியில் அமைந்துள்ள தனியார் உல்லாச விடுதி ஒன்றில் மான் கொம்பு 18, பாம்பு தோள் ஒன்று, 15 பதப்படுத்தப்பட்ட வண்ணாத்து பூச்சிகள் அடங்கிய பெட்டிகள், இரண்டு காட்டெருமை கொம்புகள் ஆகியவை இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.இந்த உல்லாச விடுதியின் முகாமையாளரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் சட்டங்களுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விஜேசேகரவின் உத்தரவின் பேரில் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி வீரசிரி பொலிஸ் உத்தியோகஸ்தர்களான பிரியங்கர (66427) திமன்த (81604) தேசப்பிரிய (56545) ஆகியோரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்தே இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக நுவரெலியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 29 பேர் குணமடைவு!

ராஜபக்ச குடும்ப உறுப்பினருக்கு பிரதி சபாநாயகர் பதவி!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 29 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,622 ஆக அதிகரித்துள்ளது.

238 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

19 ஐ நீக்கிய பிறகே புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி ஆரம்பம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நாட்டு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதனை இயற்றுவதற்கு முன்னர் நிச்சயம் 19 ஐ நீக்குவோம். அதன்பின்னர் மக்களின் ஒத்துழைப்புடன் நாட்டுக்கு தேவையான அரசியலமைப்பு உருவாக்கப்படும்.

எமது அரசாங்கம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீணடிக்கப்படமாட்டாது. வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு முன்நோக்கி பயணிப்போம். நாட்டை கட்டியழுப்புவதே எமது பிரதான நோக்கம். இதில் அனைவரும் இலங்கையராக இணையவேண்டும்.” – என்றார்.

அக்கா – தங்கை : சமந்தா – ரஷ்மிகா! பரவி வரும் புதிய தகவல்

சமந்தா மற்றும் ரஷ்மிகா இருவரும் சகோதரிகளாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளனர் என தகவல் பரவி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக இருப்பவர்கள் நடிகை ரஷ்மிகா மந்தனா மற்றும் சமந்தா. அவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்கள் என தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது. Multi-starrer படங்கள் பொதுவாகவே தெலுங்கில் அதிகம் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல படங்களில் ஹீரோக்கள் தான் இணைந்து நடிப்பார்கள்.

இந்நிலையில் அதே போல சமந்தா மற்றும் ராஷ்மிகா இருவரும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்கள் என கூறப்படுகிறது.

அந்த படத்தில் சமந்தாவின் தங்கையாக ராஷ்மிகா நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பெண்களை மையப்படுத்தி தான் இந்த படத்தின் கதை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

சமந்தா மற்றும் ராஷ்மிகா இருவருக்கும் தெலுங்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த படம் தெலுங்கில் உருவானாலும் தமிழில் டப் ஆகி வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

சமந்தா அடுத்து தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங்கும் கடந்த பல மாதங்களுக்கு முன்பே துவங்கியிருக்க வேண்டும், ஆனால் கொரோனா காரணமாக இன்னும் துவங்காமல் இருக்கிறது. அரசு அனுமதி கிடைத்தவுடன் அது துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரஷ்மிகாவும் கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். தமிழில் அவர் கார்த்தி ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடிக்க உள்ளார். மேலும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளார். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் வெளிவர உள்ளது. ஆந்திரா காட்டு பகுதிகளில் நடக்கும் செம்மர கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தி தான் இதன் கதை இருக்கும்.

இப்படி கைவசம் பல்வேறு படங்கள் வைத்திருக்கும் சமந்தா மற்றும் ரஷ்மிகா இருவரும் இணைந்து நடிப்பதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் மிக குறுகிய காலத்தில் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் ரஷ்மிகா. அவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலமாக தான் நடிகையாக அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு தெலுங்கில் அவர் நடித்த கீதா கோவிந்தம் படம் அவரை மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது. தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் அவருக்கு அதிகம் ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள்.

ரஷ்மிகா சமீபத்தில் தனது அழகை எப்படி பராமரிக்கிறேன் என்பது பற்றி பேசி இருந்தார். “நான் வளரும்போது தோல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். எனக்கு இருப்பது காம்பினேஷன் ஸ்கின், அதனால் நான் கூறுவது அனைத்தும் என்னுடைய சொந்த அனுபவத்தில் மட்டுமே சொல்கிறேன். சிறப்பான விஷயம் என்ன என்பதை மருத்துவர் தான் கூற முடியும்.” இவ்வாறு குறிப்பிட்டு ராஷ்மிகா மொத்தம் ஒரு 7 அறிவுரைகளை அனைவருக்கும் வழங்கி இருந்தார்.

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் தொடங்கியதால் காற்றில் 5 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் பரவியுள்ளது.

உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியாவில் சுமார் 267 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பூகம்பங்கள், சுனாமிகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதன் இருபுறமும் பசிபிக் நெருப்பு வளையம் உள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை இன்று வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து வானில் சுமார் 5,000 அடி உயரத்தில் புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 5 கிலோ மீட்டர் தொலைவுவரை உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களில் எரிமலை வெடிப்பு காரணமாக சுமார் 30,000க்கும் அதிகமான மக்கள் இப்பகுதியிலிருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு நிலைமை முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எரிமலை வெடிப்பு காரணமாக இதுவரை எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றாலும் எரிமலையின் சீற்றம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனித்துவத்தை நிரூபித்துவிட்டேன் – அனுசா சூளுரை!

” நான் 2000 வாக்குகள் கூட பெறமாட்டேன் என்று கூறியவர்களுக்கு எனது வாக்காளர்கள் பதில் கூறி விட்டார்கள். நுவரெலியா மாவட்டத்தில் என் தனித்துவமான அடையாளத்தை நிரூபித்துள்ளேன் என மலையக மக்கள் முன்னணியின் பிரதிச் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

பொது தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

” தந்தை வழியில் என்னை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நான் முன் வைத்த அரசியல் கருத்துக்களுக்கு மக்கள் உரிய அங்கீகாரத்தினை வழங்கியுள்ளார்கள் என்பதனை எனக்கு கிடைத்துள்ள வாக்குகள் நிரூபிக்கின்றன.

எனது தொடர்ச்சியான அரசியல் பயணத்திற்கு இதனை அத்திவாரமாக ஏற்றுக்கொள்கிறேன். எனது சமூக செயற்பாடுகளை தொய்வின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு மக்கள் வழங்கியுள்ள ஆதரவினை உற்சாகமாக்கிக் கொள்வேன்.

எனது அரசியல் பயணத்திற்கு ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியான தடைகளும் எதிர்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. எதிர் காலத்திலும் எனது செயற்பாடுகள் அனைத்துமே தனித்துவமானதும் மக்கள் நலன் சார்ந்ததாகவுமே அமையும்.

என் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப மக்களோடும் அவர்களின் நலன் சார்ந்த செயற்பாடுகளோடும் என்னை இணைத்துக் கொள்வேன்.

பிரதான தேசிய கட்சிகளை பின்தள்ளி என்னை 3ஆம் சக்தியாக அடையாளப்படுத்தி விட்டார்கள். இந்த 17,701 வாக்குகள் ஒவ்வொன்றும் நாளை விருட்சமாக வளரும் விதைகள். என்னுடைய அரசியல் ஒருபோதும் முற்றுப் பெறாது என்பதற்கான சாட்சிகள் என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

சுயநல நோக்கில் கோரிக்கைகளை முன்வைக்கும் அமெரிக்கா: ஈரான் குற்றச்சாட்டு

0
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமற்றது என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ரெசா மொஹ்செனி சானி Mohammad Reza Mohseni Sani தெரிவித்துள்ளார். அமெரிக்கா தனது சுயநல நோக்கங்களுக்காகவும் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாலுமே குழப்பம்...

அமைதிக்கான நடை பயணம்…..!

0
‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைப்பயணத்திற்காக அமெரிக்காவில் அமைதிக்கான நடைபயணத்திற்குத் தலைமை தாங்கிய வண. பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்கள், இன்று (21) முற்பகல் இந்நாட்டை...