Home Blog Page 3906

இந்திய தூதுவருடன் முற்போக்கு கூட்டணி அவசர சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (12) கொழும்பு 7இல் அமைந்துள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்றது.

முற்போக்கு கூட்டணியின் சார்பில் தலைவர் மனோ கணேசன்,  பிரதித் தலைவர்களான பழனிதிகாம்பரம், வே. இராதாகிருஸ்ணன், உப தலைவர்களான வேலுகுமார், அரவிந்தகுமார், உதயகுமார் ஆகியொர் கலந்துகொண்டனர். செயலாளர் சந்திராசாப்டரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் ஜெகப், அரசியல் துறை பொறுப்பாளர் கவுன்சிலர் திருமதி பானுபிரகாஸ் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மலையகத்துக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உட்பட சமகால விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 2,880 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 16 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,880 ஆக அதிகரித்துள்ளது.

231 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய புள்ளிகளுக்கு அமைச்சுப்பதவிகள் இல்லை! நடக்கபோவது என்ன?

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சு பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

அத்துடன் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, விஜயதாச ராஜபக்ச ஆகியோரும் அமைச்சரவையில் இடம் வழங்க்கப்படவில்லை.

மஹிந்த ஆட்சியிலும் தேசிய அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகளை வகித்த சுசில் பிரேமஜயந்த, லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை. இராஜாங்க அமைச்சு பதவிகள்கூட அவர்களுக்கு கையளிக்கப்படவில்லை.

மொட்டு கட்சியில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற் றரஞ்சித் சியம்பலாபிட்டியவும் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

சந்திம வீரக்கொடிக்கு அமைச்சு பதவி கிடைக்காதபோதிலும் அவர் பிரதி சபாநாயகராக நியமிக்கப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அமைச்சராக பதவியேற்றார் ஜீவன் தொண்டமான்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தோட்ட வீடமைப்பு, சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு கண்டியில் தற்போது நடைபெற்றுவருகின்றது. இதன்போதே ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார் ஜீவன் தொண்டமான்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதி அமைச்சராக அலிசப்ரி பதவியேற்பு (live updates)

நீதி அமைச்சர் – அலிசப்ரி 

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  -நாமல்

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை  அமைச்சர் – ரோஹித அபேகுணவர்தன

சுற்றுலாத்துறை அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க

பெருந்தோட்டத்துறை அமைச்சர் – ரமேஷ் பத்திரண

வலுசக்தி அமைச்சர் – உதயபிரபாத் கம்மன்பில

விவசாய வேளாண்மை  – மஹிந்தானந்த

காணி அமைச்சர் – எஸ்.எம். சந்திரசேன

சுற்றாடல்துறை அமைச்சர் – மஹிந்த அமரவீர

கைத்தொழில் அமைச்சர் – விமல்வீரவன்ஸ்

நெடுஞ்சாலைகள் அமைச்சர் – ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

மின்சக்தி அமைச்சர் – டளஸ் அழகப்பெரும

நீர்ப்பாசனம் அமைச்சர் – சமல் ராஜபக்ச

ஊடகத்துறை அமைச்சர் – கெஹலிய ரம்புக்வெல்ல

பொது சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் – ஜனக பண்டார தென்னகோன்

வனஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சர் – சிபி ரத்னாயக்க

வர்த்தகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன

போக்குவரத்து அமைச்சர் – காமினி லொக்குகே

கடற்றொழில்துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்பு

வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு

சுகாதார அமைச்சராக பவித்ராதேவி வன்னியாராச்சி நியமனம்

கல்வி அமைச்சராக பேராசிரியர் ஜீ.எஸ். பீரிஸ் பதவியேற்பு

தொழில்துறை அமைச்சர் – நிமல் சிறிபாலடி சில்வா


நிதி, புத்தசாசன ,கலாசார விவகாரங்கள் மற்றும் நகர அபிவிருத்தி , வீட்டுவசதி அமைச்சராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்பு!

பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதி.


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தோட்ட வீடமைப்பு, சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தபால் சேவைகள் இராஜாங்க அமைச்சராக எஸ். வியாழேந்திரன் பதவியேற்பு


பிராந்திய உறவு இராஜாங்க அமைச்சராக தாரக பாலசூரிய பதவியேற்பு

காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் சொத்துகள் அபிவிருத்தி அமைச்சராக ரொஷான் ரணசிங்க பதவியேற்பு.
சூரியசக்தி, காற்று, நீர்மின் உற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சராக துமிந்த திஸாநாயக்க நியமனம்.

பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ச பதவியேற்பு. 

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் கூட்டு பதவிப்பிரமாணம்.

பதுளை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக சுதஷ்சன தெனிபிட்டிய நியமனம்.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக எஸ்.பி. திஸாநாயக்க நியமனம்.

பிரதான மேடையில் அமைக்கப்பட்ட கதிரையில் அமர்ந்தார் ஜனாதிபதி. மாவட்ட இணைப்புக்குழு தலைவர்களுக்கான நியமனம் வழங்கப்படுகின்றது.

மகாநாயக்க தேரர்களின் ஆசியுரை நிறைவு.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் புதிதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு ஆசிவேண்டிய மகாநாயக்க தேரர்கள் பிரார்த்தனை.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஆரம்பம்.

அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஆரம்பம் (live updates)

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது முற்போக்கு கூட்டணி!

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற குழு இன்று கொழும்பில் கூடவுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் அறுவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் திகாம்பரம், இராதாகிருஷ்ணன், உதயகுமாரும், பதுளை மாவட்டத்தில் அரவிந்தகுமாரும், கண்டியில் வேலுகுமாரும், கொழும்பில் மனோகணேசனும் வெற்றிபெற்றனர்.

எனினும், இரத்தினபுரி, கேகாலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசியப்பட்டியல் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாராளுமன்றக்குழு கூடுகின்றது.

ஐ.தே.க. தலைவராக கரு! செயலாளராக மங்கள?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்குமாறு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான சபாநாயகர் கருஜயசூரியவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஐக்கிய தேசியக்கட்சியில் பதவிகளை ஏற்பது தொடர்பில் இவ்விருவரும் இன்னும் தமது நிலைப்பாடுகளை தெரியப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேடக் கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது. இதன்போதும் இது பற்றி கலந்துரையாடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மலையக வீட்டுத்திட்டம் – கைவிடப்பட்ட சோகம தோட்ட மக்கள்!

கண்டி மாவட்டத்தின் உடப்பலாத்த பிதேசத்திக்கு உட்பட்ட புசல்லாவை வகுகப்பிட்டிய சோகம கீழ்ப்பிரிவு காட்டு லயம் அமைந்துள்ள பகுதி மண்சரிவுக்கு உள்ளாகக் கூடிய பகுதியென அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு சுமார் இருபது தொழிலாளர் குடும்பங்கள் வாழ்கின்றன .

கடந்த ஏழு வருடங்களாக இம்மக்கள் பல தடவை அச்சத்தினால் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்துள்ளனர் .

கடந்த 2017 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை அறிக்கை காரணமாக இம்மக்கள் பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்தது.

இதனால் இவர்கள் புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியில் ஆறு மாத காலமும், அதன் பிறகு விளையாட்டு மைதானம் ஒன்றில் தற்காலிக குடிசைகள் அமைத்தும் வாழ்கின்றனர்.

இந்த இரண்டு வருடங்கள் இவர்களின் அவல வாழ்கை தொடர்கின்றது. சிறிய கொட்டில்களில் இவர்கள் வாழ்கின்றனர். மழைநீர் கூரையாலும் தரைவழியாகவும் குடிசைக்குள் செல்கின்றது.

இரவு பகலாக பாம்புகள், தேள்கள், அட்டைகள் குடிசைக்குள் நுழைந்து விடுகின்றன.

இவர்கள் இந்த குடிசைகளில் வாழும் போது இவர்களுக்கான வீடுகளை அரசு தலா பத்து இலட்சம் ரூபா செலவில் ஏழு பேர்ச் காணியில் கட்டப்பட்டன.

கட்டுமானப் பணிகள் முடிவடைய முன்பே வீடுகளுக்கு செல்லும்படி இவர்கள் கேட்கப்பட்டனர்.

புதிதாக கட்டப்பட்ட இந்த வீடுகளுக்கு மின்சாரம், நீர் வசதிகள் இல்லை. இதனால் மக்கள் இந்த வீடுகளுக்குச் செல்வதற்கு தயங்குகின்றனர். 20 வீடுகளில் நான்கு குடும்பங்கள் மட்டுமே குடிவந்துள்ளன.

நீர்வசதி இன்மையால் இங்கு குடிவர முடியாது உளளதாகவும் மின்சாரமின்மையால் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை முன்னெடுக்க முடியாது உள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரனமாக தாம் பாதிக்கப்பட்ட வீடுகளிலேயே வாழ்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

புதிய வீடுகளில் குடியேறியவர்கள் தமது பிள்ளைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக மின்சாரம், நீர் வசதியுள்ள உறவினர் வீடுகளில் தங்க வைத்துள்ளதாகவும் கூறுகின்றனர். பிரதான பாதையோரமாக சிறப்பாக அமைக்கப்பட்ட இந்த வீடுகளுக்கு அருகிலேயே மின்கம்பங்கள் உள்ளன.

நீர் கட்டமைப்பு அமைக்கப்பட்டு நீர்த் தாங்கியும் வீட்டுக்கு வீடு பொருத்தப்பட்டுள்ளது .

தங்களுக்கு மின்சாரத்தை பெற்றுத் தர வேண்டும் எனவும் இவர்கள் கோருகின்றனர். கட்டி முடித்த வீடுகளில் மக்கள் குடியேறாது காடாகிக் கிடப்பதால் காட்டு விலங்குகள் வீட்டின் முற்றத்திற்கே இரவு பகல் வேளைகளில் வருகின்றன.

மிகஅச்சத்துடன் தாங்கள் வாழ்வதாக புதிய வீடுகளில் வந்து குடியேறிய நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். தாங்கள் அகதிகளாக இருந்தபோது தமக்கு உலர் உணவு, உடைகள் கொடுத்துதவிய அனைத்து அன்பர்களுக்கும் இம்மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆர். நவராஜா, தெல்தோட்டை

28 அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் ‘மகுல் மடுவ’ என்றழைக்கப்படும் விழா மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளது.

அரசாங்கமொன்றின் அமைச்சரவை அமைச்சர்கள் கண்டி தலதா மாளிகையின் ‘மகுல் மடுவ’ விழா மண்டபத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் முதல்தடவை இதுவாகும். இது இலங்கை அரசியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் மேற்படி சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெறுவதுடன் புதிய அமைச்சரவையில் 28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்களும் இடம்பெறுகின்றனர்.

அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். நிகழ்வில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்செய்துகொண்ட பின்னர் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக சுகாதாரத்துறையினரின் வழிகாட்டல்களைப் பின்பற்றி மிக எளிமையாக குறைந்தளவானோரின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள், தேர்ந்தெடுக்கப்பட்டவரின் அனுபவம், சிரேஷ்டத் தன்மை, தொழில்சார் பின்னணி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் ஆட்சி மாற்றம்! மொட்டு வசமாகிறது மாநகரசபை!!

ஜக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் கீழ் இயங்கும் நுவரெலியா மாநகர சபை வெகு விரைவில் மொட்டு வசமாகலாம் என தெரியவருகின்றது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் நகர முதல்வருக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் இடையிலான இது தொடர்பான பேச்சுவார்த்தை நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது முன்னாள் நகர முதல்வரை நியமனத்தின் மூலமாக உள்வாங்குவது எனவும் அதற்கு தற்பொழுது மாநகர சபை உறுப்பினராக பதவி வகிக்கின்ற ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரியவருகின்றது.
கடந்த காலங்களில் நுவரெலியா மாநகர சபையின் செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றது.அதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது ஜக்கிய தேசிய கட்சியின் மாநகர சபையாக இருப்பதே.இந்த நிலைமை தொடருமானால் நுவரெலியா அபிவிருத்தி என்பது கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும்.
எனவே நுவரெலியா மாநகர சபை ஆட்சியானது மொட்டுகட்சி வசமானால் அபிவிருத்தி மிக விரைவாக முன்னெடுக்க முடியும் என மாநகர சபை உறுப்பினர்களும் பொது மக்களும் கருதுகின்றனர்.
தற்பொழுது நுவரெலியா மாநகர சபையில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பாக 13 உறுப்பினர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக 2 உறுப்பினர்களும் பொதுஜன பெரமுன சார்பாக 6 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பாக 2 உறுப்பினர்களுமாக மொத்தமாக 23 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
ஆளும் ஜக்கிய தேசிய கட்சி சார்பாக 13 உறுப்பினர்களும் எதிர்கட்சிகள் சார்பாக 10 உறுப்பினர்களும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.நடைபெற்று முடிவடைந்த பாராளுமன்ற தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பாக பிரதிநிதித்துவம் செய்த மூன்று உறுப்பினர்கள் மாற்று கட்சிகளுக்கு தமது ஆதரவை தெரிவித்ததுடன் தேர்தல் பிராசாரங்களிலும் நேரடியாக ஈடுபட்டனர்.
இந்த மூவரில் ஒருவர் சுயேச்சை குழுவில் போட்டியிட்டனர்.எனவே இந்த மூவருக்கும் எதிராக ஜக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுக்குமானால் அவர்கள் அரசாங்கத்திற்கு தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க முன்வரலாம்.அவ்வாறான ஒரு நிலையில் எதிர்கட்சிக்கு 13 அங்கத்தவர்கள் அமர்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
இவ்வாறான ஒரு நிலையில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை எதிர்கட்சிகள் பெற்றுக் கொள்ளும்.இதன்போது ஜக்கிய தேசிய கட்சியை அங்கத்துவம் செய்கின்ற இன்னும் ஒரு சில உறுப்பினர்களும் மொட்டு கட்சிக்கு தங்களுடைய ஆதரவை வழங்கலாம்.அவ்வாறான ஒரு நிலையில் மொட்டு கட்சி ஆட்சி அமைப்பதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கின்றது.மிகவிரைவில் இந்த மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

“கிளீன் ஸ்ரீலங்கா”: மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்!

0
"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய திட்டம் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்காக வடிவமைக்கப்பட்ட "தாழ்தள" (Low Floor) பஸ் சேவை இன்று...

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வேண்டிப் பிரார்த்தனை

0
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணத்தின் ஒழுங்குபடுத்தலில், யாழ்ப்பாணம்...

சுயநல நோக்கில் கோரிக்கைகளை முன்வைக்கும் அமெரிக்கா: ஈரான் குற்றச்சாட்டு

0
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமற்றது என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ரெசா மொஹ்செனி சானி Mohammad Reza Mohseni Sani தெரிவித்துள்ளார். அமெரிக்கா தனது சுயநல நோக்கங்களுக்காகவும் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாலுமே குழப்பம்...