Home Blog Page 3905

2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா – 7 லட்சத்து 53 ஆயிரம் பேர் பலி!

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் ஒரே நாளில் சராசரியாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரத்து 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 39 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 7 லட்சத்து 53ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

’19’ இற்கு சமாதிகட்டும் ’20’ – செப்டம்பரில் சபையில் முன்வைப்பு!

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான 20 ஆவது திருத்தச்சட்டமூலம் செப்டம்பர் நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு நாட்டு மக்கள் பொதுத்தேர்தல்மூலம் அனுமதி வழங்கியுள்ளனர் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் பதவிகாலம் என்பது ஐந்தாண்டுகலாகவே இருக்கும் என்றும், ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே தேர்தலில் போட்டியிடலாம் என்ற வரையறையும் மாறாது எனவும் புதிய நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிய பின்னரே புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி இடம்பெறும் என பஸில் ராஜபக்ச சில நாட்களுக்கு முன்னார் கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஆம் இன்னிங்ஸ் விரைவில் – சிவநேசன் களத்தில்!

மாகாணசபைத் தேர்தலில் தான் களமிறங்க தயார் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இதற்கு கட்சி தலைவரின் அனுமதி கிடைத்துவிட்டதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அடுத்து மாகாணசபைத் தேர்தலே நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.கவின் தலைமைப்பதவியை ஏற்க கரு பச்சைக்கொடி!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை ஏற்பதற்கு தான் தயார் என கருஜயசூரிய அறிவித்துள்ளார் என்று நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பொதுத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியின் பின்னர் கட்சி தலைமைப்பதவியை துறப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தார். இதனையடுத்து தலைமைப்பதவிக்காக அக்கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகின்றது.

இந்நிலையில் ஐ.தே.கவின் தலைமைப்பதவியை ஏற்குமாறு கருஜயசூரியவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவ்வழைப்பையே அவர் ஏற்றுள்ளார் என தெரியவருகின்றது.

அமைச்சரவையில் 4 ராஜபக்சக்கள்! சசீந்திரவுக்கும் இராஜாங்க அமைச்சு!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அமைந்துள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் நான்கு ராஜபக்சக்கள் இடம்பெற்றுள்ளனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகிக்கும் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்படுவார்.

பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ச நிதி, புத்தசாசனம், கலாசார விவகாரங்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ச நீர்பாசனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் நாமல் ராஜபக்ச முதன்முறை அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டுள்ளார். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ராஜபக்சக்களின் மருகனான மாத்தறை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்ற நிபுண ரனவக்க மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக பதவியேற்றுள்ளார்.

அமைச்சரான கையோடு ஜீவன் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற கையோடு கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு திரும்பிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பம்பரகலை நடுப்பிரிவு தோட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.

அங்கு தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ள 24 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல்கூறிய ஜீவன் தொண்டமான், தற்காலிக கூடாரங்களை அமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இ.தொ.காவின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரன், உப தலைவர் சக்திவேல் ஆகியோரும் ஜீவனுடன் சென்றிருந்தனர்.

மலையக தமிழர்களை புறக்கணித்துள்ள அரசு – ராதா கவலை!

மலையக மக்கள் இந்த அரசாங்கத்தால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனை நாங்கள் தேர்தல் காலங்களில் தெளிவாக கூறியபோது மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இன்று அது உறுதியாகியுள்ளது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை நியமனம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இராதாகிருஷ்ணன் மேலும் கூறியதாவது,

” கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மலையக தமிழர்களுக்கு இரண்டு கபினட் அமைச்சுகளும் இரண்டு இராஜாங்க அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டிருந்தன.மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் கபினட் அமைச்சர்களாகவும் நானும் வடிவேல் சுரேஸ் ஆகிய இருவரும் இராஜாங்க அமைச்சர்களாகவும் செயற்பட்டு வந்தோம். ஆனால் இம்முறை மலையகத்திற்கு ஒரே ஒரு இராஜாங்க அமைச்சு பதவி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம்கள் சார்பாக பலர் அமைச்சரைவில் அங்கம் வகித்தார்கள் ஆனால் இம்முறை ஒருவர் மாத்திரமே அங்கம் வகிக்கின்றார்.இதன் மூலம் சிறுபான்மை சமூகத்தை அதாவது முஸ்லிம் மக்களையும் மலையக மக்களையும் தொடர்ந்தும் இந்த அரசாங்கம் புறக்கனித்து வருவதை காண முடிகின்றது.

எனவே எதிர்காலத்தில் அனைத்து தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.இல்லாவிட்டால் எமது இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.

மேலும் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற சீ.பி.ரட்ணாயக்கவுக்கும் வன ஜீவராசிகள் அமைச்சராகவே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மலையக மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது. எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘வாழ்க்கையே போராட்டமாக மாறிவிட்டது’

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நித்யாமேனன், கொரோனாவால் வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ளது என கூறியுள்ளார்.

அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன். இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர் தமிழில் வெப்பம், மெர்சல், ஓ கே கண்மணி, சைக்கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்ததாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “நிஜ வாழ்க்கையையும் சினிமாவையும் நான் ஒன்றாக கலக்க மாட்டேன். படப்பிடிப்புக்கு போனால் அந்த வேலையை வீட்டுக்கு சுமந்து கொண்டு வரமாட்டேன். அதே மாதிரி படப்பிடிப்பு அரங்கில் அடியெடுத்து வைத்து விட்டால் எனது சொந்த வாழ்க்கை அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் எதையும் தொழில் மேல் விழ விடமாட்டேன்.

சிலநேரம் நாம் செய்யும் கதாபாத்திரங்கள் சொல்ல முடியாத தாக்கம் ஏற்படுத்தும். சில வேடங்கள் நமக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கும். இப்போதைய கொரோனா ஊரடங்கில் எல்லோரும் வீட்டில்தான் முடங்கி இருக்க வேண்டி உள்ளது. இந்த ஓய்வு நேரத்தை நம்ம பற்றி நாமே தெரிந்து கொள்ளவும் நம்மை விமர்சனம் செய்யவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனக்குள் இருக்கும் குறைகள் எது என்று கண்டுபிடித்து விட்டேன். கொரோனா வாழ்க்கையை போராட்டமாக மாற்றிவிட்டது. நிறைய பேர் சாப்பாட்டுக்கு வழியின்றி போராடுகிறார்கள். எங்களை போன்றவர்கள் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து போராடுகிறோம். எல்லோருமே ஒருவிதத்தில் போராடிக்கொண்டு இருக்கிறோம்”. இவ்வாறு நித்யாமேனன் கூறினார்.

FIFA உலகக்கிண்ணம் – தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு

ஒக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்த கட்டார் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிபா  உலக கோப்பை கால்பந்து 2022இல் நடைபெறவுள்ளது. அதேபோல் ஆசிய கோப்பை கால்பந்து 2020இல் நடைபெற இருக்கிறது. இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் அடுத்த மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை நடைபெற இருந்தது.

கொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிகள் 2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது போட்டி எங்கெல்லாம் நடைபெற இருந்ததோ, அதே இடத்தில் அடுத்த வருடம் நடைபெறும்.

பிபா மற்றும் ஆசிய கால்பந்து சங்கம் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு

உலகில் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே உலகமே அஞ்சி நடுங்குகிறது. இந்த வைரசின் பிடியில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கி தவிக்கின்றன. கொரோனாவுக்கு முடிவு கட்ட தடுப்பூசி ஒன்றுதான் ஆயுதமாக இருக்கும் என கருதப்படுகிறது.

அதனால்தான் இதுவரை வேறு எந்த தொற்று நோய்க்கும் இல்லாத அளவில், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவற்றில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ உள்ளிட்ட 6 தடுப்பூசிகள் மட்டும் பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் ரஷியாவில் அந்த நாட்டின் ராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசி பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ள நிலையில், விரைவில் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, அந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயாராகி நேற்று பதிவு செய்யப்பட்டுவிட்டது.

இந்தத் தகவலை வெளியிட்ட ரஷிய அதிபர் புதின், கொரோனா தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-வி’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் திறம்பட செயல்படுகிறது. இது ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இந்த தடுப்பூசியானது, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இந்த தடுப்பூசி ஆற்றல்மிக்கது என்பது சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது எனவும் தெரிய வந்துள்ளது” என்றார்.

இந்த நிலையில், ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு பாதுகாப்பு ஆய்வுகளை மிகக்கடுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ரஷியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். தடுப்பூசிக்கு முன் தகுதி அளிப்பது குறித்த நடைமுறைகள் பற்றிய ஆலோசனை நடைபெறுகிறது. எந்த ஒரு தடுப்பூசிக்கும் முன் தகுதி அளிப்பது என்பது தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே இருக்கும்” என்றார்.

இதற்கிடையில் 3-வது கட்ட சோதனையை இன்று தொடங்க இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பம்

0
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதி வான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு...

“கிளீன் ஸ்ரீலங்கா”: மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்!

0
"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய திட்டம் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்காக வடிவமைக்கப்பட்ட "தாழ்தள" (Low Floor) பஸ் சேவை இன்று...

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வேண்டிப் பிரார்த்தனை

0
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றன. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணத்தின் ஒழுங்குபடுத்தலில், யாழ்ப்பாணம்...