Home Blog Page 3926

‘நானும் அரவிந்தகுமாரும் ஈயிருடல் ஓர் உயிர்’ – வடிவேல் சுரேஷ் பெருமிதம்

தமிழ் வாக்குகளை சிதறடித்து பதுளை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பதுளை லுணுகலை பிரதேசத்தில் இன்று (30) மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றன. பதுளை மாவட்டத்தில் அண்ணன் அரவிந்தகுமாரும், நானும் ஈருடல் ஓர் உயிர் இணைந்து களமிறங்கியுள்ளோம். எமக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தென்படுகின்றது.

இன்று இந்த நாட்டிலே இனவாதம் தலைதூக்கியுள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, எமது அரசியல் இருப்பை நாம் கட்டாயம் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். ஆனால், பதுளை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு பாரிய சதித்திட்டம் நடந்துக்கொண்டிருக்கின்றது. திட்டமிட்ட அடிப்படையில் சமூகவலைத்தளங்களில் சேறுபூசப்பட்டுவருகின்றது.

தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல சுயேட்சைக்குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பான்மையினத்தவர்கள் சரியான முறையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். தமிழ் இளைஞர், யுவதிகளை தவறாக வழிநடத்தி ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு பதுளை மாவட்ட தமிழர்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கான சதிகள் நடக்கின்றன.

எனினும், எமது மக்கள் தெளிவாகவே இருக்கின்றனர். எமக்கே வாக்களிப்பார்கள். பொதுத்தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம்.” – என்றார்.

க.கிசாந்தன்

பதுளையில் இரு துப்பாக்கிகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

பதுளையில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இளைஞர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றில் துப்பாக்கிகள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பதுளை பொலிஸார், வீற்றை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.

அருனுகொல்லை கிராமத்திலுள்ள வீடொன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டது. இத்தேடுதலின் போது கட்டிலொன்றிற்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டனர். அத்துடன், அத் துப்பாக்கிகளுக்கு உரிமையாளரென்று கருருதப்பட்ட இளைஞரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர், விசாரணையின் பின்னர், பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்த்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று, பொலிசார் தெரிவித்தனர்.

எம். செல்வராஜா, பதுளை

தேர்தல் விதிமுறையைமீறிய நால்வர் பதுளையில் கைது

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி, பள்ளக்கட்டுவை நகரில் வேட்பாளரொருவரது காட்சிப் பதாதைகளை காட்சிப்படுத்திக் கொண்டிருந்த நான்கு இளைஞர்களை எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவர்கள் பயணித்த “கெப்” வாகனம் மற்றும் பெருமளவிலான போஸ்டர்கள் ஆகியனவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரொருவரது காட்சிப் பதாதைகளை, காட்சிப்படுத்திக் கொண்டிருந்த நான்கு இளைஞர்களே, கைது செய்யப்பட்டிருப்பவர்களாவர்.

கைது செய்யப்பட்ட இவ் இளைஞர்களை, பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்றும், எல்ல பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு செய்யப்பட்ட புகாரையடுத்தே, மேற்படி கைதுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு – 20 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்பு

மஸ்கெலியாவில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற குளவிக்கொட்டு சம்பவங்களில் 20 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறே தோட்ட வலதல பிரிவில் இன்று (30) முற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்கான 12 தோட்டத் தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிலர் தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சாமிமலை பெரிய சூரியகந்தை பிரிவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மூவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் 16 பேர் தப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 16 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,333 ஆக அதிகரித்துள்ளது.

467 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 811 ஆக இருக்கின்றது.

‘வரலாற்று சாதனைக்காக கண்டி மாவட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் ஓரணியில்’

கண்டி மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையைவென்ற  ரவூப் ஹக்கீம், அப்துல் அலீம் ஆகியோருடன் இணைந்து நானும் முன்னிலை வகிக்கின்றேன். எமக்கு பேராதரவை வழங்குவதற்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். கருத்து கணிப்புகளும் இதனையே சொல்கின்றன – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

வேலுகுமாரின் பிரச்சார நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எட்டுத்திக்கிலும் அவருக்கான பேராதரவு பெருகிவருகின்றது.

இந்நிலையில் கண்டியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார் மேலும் கூறியவை வருமாறு,

“பொதுத்தேர்தலில் வெற்றிவாகைசூடவுள்ள நாம் அதற்கான பிரச்சாரங்களையும் வெற்றிகரமாக முன்னெடுத்து தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளோம். எம்மால் நடத்தப்படும் பிரச்சாரக்கூட்டங்களில் அணிதிரண்டு பங்கேற்று அமோக ஆதரவை வழங்கிவரும் என் மக்கள் சொந்தங்கள், எதிர்வரும் 5 ஆம் திகதி வாக்களிப்புமூலம் வரலாற்று சாதனை படைக்கவுள்ளனர்.

15 ஆண்டுகளுக்கு பிறகு வென்றெடுக்கப்பட்ட கண்டி மாவட்டத்துக்கான தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்வதில் உறுதியாக இருக்கும் தமிழ் மக்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளுடன் தமது பிரதிநிதி அதிஉயர் சபைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் அணிதிரண்டுள்ளனர். எமது முஸ்லிம் சகோதரர்களும் அன்றுபோல் இன்றும் எனது வெற்றியில் பங்காளர்களாகியுள்ளனர்.

தமிழ் பேசும் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள நிலையில், அவர்களை திசைதிருப்பும் முயற்சியில் சில அரசியல் கைக்கூலிகள் ஈடுபட்டுள்ளனர். தமது தோல்வி உறுதி என தெரிந்தும்கூட, அற்பசொற்ப சலுகைகளுக்காக வேட்பாளர்கள் என்ற போர்வையில் பேரினவாதிகளின் கைக்கூலிகளாக அவர்கள் களத்தில் நிற்கின்றனர். எனவே, தேர்தல் முடிந்ததும் இவர்களுக்கு கண்டியில் இருந்து புறமுதுகுகாட்டி ஓடவேண்டிவரும்.

எமது வெற்றி உறுதியாகிவிட்டது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்,  முன்னாள் அமைச்சர் அப்துல் அலீம் ஆகியோருடன் நானும் முன்னிலை வகிக்கின்றேன். நாம் மூவரும்  அமோக வெற்றிபெறுவோம். கருத்து கணிப்புகளும் அதனையே சொல்கின்றன. அரசாங்கத்தின் உளவு பிரிவுகளால் நடத்தப்பட்ட ஆய்வில்கூட நாமே முன்னிலை வகிக்கின்றோம்.

எனவே, எமக்கு பேராதரவை வழங்கும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள். ஆகஸ்ட் 5 ஆம் திகதி கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் வழங்கும் ஆணையானது வரலாற்று திருப்புமுனையாக இருக்கும்.” – என்றார்.

செந்தில் போன்ற தலைமைத்துவமே மலையக மக்களுக்கு அவசியம் – கமியூனிஸ்ட் கட்சித் லைவர் முத்துலிங்கம்

மலையகத்திற்கு செந்தில் தொண்டமான் போன்ற இளம் தலைமைத்துவமே அவசியம் என கமியூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளருமான செந்தில் தொண்டமானை ஆதரித்து, முத்துலிங்கம் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் உரையாற்றும்போதே முத்துலிங்கம் இதனைத் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் இளம் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

மலையக மக்களை அடிமைகளாகவே கம்பனிகள் நடத்தி வந்தன. அடிமையாக இருந்தால் மட்டுமே கம்பனிகள் சலுகைகள் வழங்கப்பட்டன என்றும் இதனை முதன்முறையாக தட்டிக்கேட்டவர் செந்தில் தொண்டமான் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வீடுகளை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை கம்பனிகளே இதுவரை முடிவெடுத்ததாகவும், இனிமேல் இதனை அரசாங்கமே முடிவெடுக்கும் என்றும் இதற்கு அடித்தாளமிட்டவர் செந்தில் தொண்டமான் என்றும் முத்துலிங்க்ம குறிப்பிட்டார்.

மலைய மக்களை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி நகர்த்துவதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க பொருத்தமானவர் செந்தில் தொண்டமான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை மாற்றுக் கொள்கைகளில் செயற்பட்டிருந்தாலும், செந்தில் தொண்டமான் போன்ற தலைமைகளை ஆதரிப்பதற்காக தற்போது அவரது வெற்றியை உறுதிசெய்ய தீர்மானித்ததாகவும் கமியூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்துலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

‘கொரோனா’ – 6 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே  71 லட்சத்து 94 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 71 லட்சத்து 94  ஆயிரத்து 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒருகோடிக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 70 ஆயிரத்து  294  பேர் உயிரிழந்துள்ளனர்.

‘ஓரணியில் திரள்வோம் – அடிமைதனத்தை ஒழிப்போம்! முஸ்லிம் மக்களுக்கு ஆனந்தகுமார் அழைப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை சமூகத்தினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் உதயமாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

பலாங்கொடை பகுதியிலுள்ள புத்திஜீவிகளை நேற்றைய தினம் (29) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ்ந்து வருகின்ற நிலையில், இந்த இரண்டு தரப்பினரும் ஒன்றிணைந்து வாக்களிக்கும் பட்சத்தில் நிச்சயம் ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதித்துவத்தை பெற்றுகொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழர்களுடன் முஸ்லிம்கள் கைக்கோர்த்தால், இரத்தினபுரியில் சிறுபான்மையினர் அடிமைகளாக வாழ வேண்டிய தேவையில்லை என எஸ்.ஆனந்தகுமார் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இரத்தினபுரியில் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் இதன்போது உறுதியளித்திருந்தார்.

இதேவேளை, இறக்குவானை மற்றும் பலாங்கொடை ஆகிய நகரங்களுக்கு எஸ்.ஆனந்தகுமார் நேற்று விஜயம் செய்து தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

எஸ்.ஆனந்தகுமாருக்கு ஆதரவாக பெருந்திரளானோர் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததுடன், பெருந்திரளான வாகனங்களும் பேரணியாக சென்றிருந்தன.

‘பகல் கனவு பலிக்காது – மலையக மக்கள் ஏமாளிகள் அல்லர்’ – சதாசிவம்

தேர்தல் காலங்களில் பலரும் வந்து பலதைக் கூறி வாக்குக் கேட்கலாம். ஆனால் மக்களே சிறந்தவரைத் தெரிவு செய்து வாக்களிக்க வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே  அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில்  பகற் கனவு காண்கின்றனர். இவர்களுக்கு வாக்களிக்க மலையக மக்கள் ஏமாளிகள் இல்லை.

மலையக மக்கள் நன்கு சிந்தித்துச் செயற்படக் கூடியவர்கள். எமது மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. “வெளிமாவட்டங்களிலிருந்து இங்கு வந்து வாக்குக் கேட்பவர்களுக்குமலையக மக்களைப் பற்றி என்ன தெரியும்? அவர்கள் மலையகத்துக்குச் செய்த சேவைகள் எவை? இவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் பல பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்”
என்றார்.

தலவாக்கலை நிருபர் – கேதீஸ்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

0
ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் இன்று (20) 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மாவட்டங்களுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. சுமார் மூன்று மீட்டர் உயரத்திற்கு...

இந்திய துணை ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்த இ.தொ.கா!

0
இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனிடத்தில் மகஜரொன்றைக் கைளித்துள்ளார். கொழும்பு தாஜ்...

மலையக குடியிருப்பாளர்களை வெளியேற்றும் அதிகாரம் கம்பனிகளின் கையில்!

0
பெ.முத்துலிங்கம் படம் - செல்வராஜா ராஜசேகர் நன்றி - மாற்றம் டித்வா அனர்த்தம் நடந்தேறி நான்கு மாதங்கள் கடக்கும் வேளையில் புயலினால் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்களுக்கும் ஏனையோருக்கு வழங்கும் ஐந்து மில்லியன் ரூபா நிதியும் வீடு...