Home Blog Page 3927

தேர்தல் பாதுகாப்பில் 75 ஆயிரம் பொலிஸார்!

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் என 84 ஆயிரம் பேரை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 75 ஆயிரம் பொலிஸாரையும் 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனாஅச்சுறுத்தல் சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் தேர்தல் காலத்தில் பின்பற்றப்படுகிறதா என்பதுதொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 5000ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் எந்தவொரு வன்முறை சம்பவமும் இதுவரை பதிவாகவில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 24 மணித்தியாலங்களில் 164 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மலையகத்தில் உச்சகட்ட பிரச்சாரம் – 2ஆம் திகதி நள்ளிரவுடன் மௌனகாலம் ஆரம்பம்!

பொதுத்தேர்தலுக்கான  பிரச்சார நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுபெறவுள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

மலையகத்தை பிரதான தளமாக கொண்டியங்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியனவும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

பிரச்சாரங்கள் முடிவடைவதற்கு மூன்று நாட்களே எஞ்சியுள்ளதால் நள்ளிரவு தாண்டியும் பிரச்சாரங்கள் தொடர்கின்றன.

அதேவேளை, தேர்தல் விதிமுறைகளைமீறும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.

மௌன காலத்தில் பிரச்சாரங்கள், பேரணிகளை முன்னெடுத்தல் சட்டவிரோத நடவடிக்கையாகவே கருதப்படும். தேர்தல் முடிவடைந்த பிறகுகூட ஓரிரு நாட்களுக்கு இந்த நடைமுறை தொடரும்.

இம்முறை பொதுத் தேர்தலுக்கான 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.அத்துடன் நாடு முழுவதும் 71 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

196 உறுப்பினர்களை வாக்களிப்புமூலம் தெரிவுசெய்வதற்காக இம்முறை  ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் வாக்களிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர்.

ஜாதியை குறிப்பிட்டு த்ரிஷா மற்றும் கமல்ஹாசன் பற்றி மீரா மிதுன் சர்ச்சை பேச்சு!

மீரா மிதுன் தொடர்ந்து த்ரிஷா பற்றி சர்ச்சையாக பேசி வருகிறார்.

பிக் பாஸ் புகழ் மீரா மிதுன் தொடர்ந்து பல பிரபலங்கள் பற்றி சர்ச்சையாக பேசி ட்வீட்டுகள் பதிவிட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷாவை தாக்கி அவர் பதிவிட்டு இருந்த ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. த்ரிஷா தன்னுடைய தோற்றத்தை காப்பி அடிக்கிறார் என்றும் தன்னைப் போலவே புகைப்படங்களை எடுத்து வெளியிடுகிறார் என்றும் மீரா மிதுன் கூறியிருந்தார். அந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் மீரா மிதுனை கடுமையாக ட்ரோல் செய்தனர்.

“த்ரிஷா இது தான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கையாக இருக்கப் போகிறது. அடுத்த முறை நீங்கள் உங்களுடைய புகைப்படத்தை போட்டோஷாப் செய்து என்னை போலவே இருப்பதற்காக முடி உள்ளிட்டவற்றை மார்பிங் செய்து புகைப்படங்களை வெளியிட்டால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் மனசாட்சிக்கு தெரியும் என நினைக்கிறேன். வளருங்கள். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை தேடி கொள்ளுங்கள்” என மீரா மிதுன் பதிவிட்டு இருந்தார்.

மீரா மிதுன் தன்னை த்ரிஷாவுடன் ஒப்பிட்டதற்கு நெட்டிசன்கள் ட்ரோல் செய்த நிலையில் தற்போது த்ரிஷாவின் ஜாதியை குறிப்பிட்டு ட்விட்டரில் சர்ச்சையாக பேசி இருக்கிறார் மீரா மிதுன். இது பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கும் மீரா மிதுன், “ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது த்ரிஷா peta அமைப்பின் மெம்பர் என்ற காரணத்தினால் அவரை தூற்றினீர்கள். இன்று நான் அவரை பற்றி ஒரு உண்மை சொல்லி குற்றம்சாட்டும் போது நான் உங்களுக்கு கெட்டவளாக தெரிகிறேன். த்ரிஷாவை நல்லவராக காட்டுறீங்க. அந்த சமயத்தில் அவர் மன்னிப்பு கூட கேட்கவில்லை, அவரது அம்மா தான் கேட்டார். நேப்போட்டிசம் என்பது காஸ்டிஸம் என்கிற விஷயத்தில் இருந்து தான் வருகிறது. நான் ஓப்பனாக சொல்கிறேன் த்ரிஷா இந்தஇண்டஸ்ட்ரி உள்ளே வந்தது, இன்னும் இருப்பது, இன்னும் ஏதேதோ படங்கள் நடித்து கொண்டிருப்பது அவரது ஜாதி தான்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

 

 

மேலும் சில மாதங்களுக்கு முன்பு தான் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் சில சீன்களில் நடித்து இருக்கிறேன் என புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் மீரா மிதுன். அந்த படத்தில் தன்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டதற்கு த்ரிஷா தான் காரணம் என மீரா மிதுன் மற்றொரு ட்விட்டில் கூறி இருக்கிறார்.

அது மட்டுமின்றி பேட்ட படத்தில் இருந்தும் தான் நீக்கப்பட்டதற்கு த்ரிஷா தான் காரணம் என சொல்கிறார் மீரா மிதுன்.

பேட்ட படத்தில் பூங்கோடி என்கிற கதாபாத்திரத்தில் நான் தான் ஒப்பந்தம் ஆகி இருந்தேன் என கூறும் மீரா மிதுன், அதற்கு பிறகு த்ரிஷா தான் மாஃபியா கேங்கிடம் சொல்லி நீக்கிவிட்டதாக கூறுகிறார் மீரா மிதுன்.

 

மேலும் கமல்ஹாசனையும் விட்டு வைக்கவில்லை மீரா மிதுன். த்ரிஷா தன்னுடைய ஜாதி என்பதால் தான் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது த்ரிஷாவுக்கு பலரும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய போது அவருக்கு ஆதரவாக பேசினார். நான் அவர் ஜாதி இல்லை என்பதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என் பெண்மைக்கு பிரச்சனை வந்த போது குரல் கொடுக்கவில்லை என கூறுகிறார்.

 

 

மீரா மதுனின் இந்த பதிவுகளைப் பார்த்து வழக்கம்போல நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து தான் வருகின்றனர்.

 

  • நன்றி சமயம்.கொம்

பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு

இயக்குனர் ராஜமௌலி தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சினிமாத் துறை நட்சத்திரங்களும் பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட் சினிமா துறையில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் மகன் அபிஷேக், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யா ஆகியோர் மட்டும் கொரோனா நெகட்டிவ் என வந்திருக்கிறது. அவர்கள் வீடு திரும்பி விட்ட நிலையில் தற்போது அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி மற்றும் அவர் குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த தகவலை அவரே ட்விட்டரில் அறிவித்து இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது..

எனக்கும் என் குடும்ப உறுப்பினர்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதுவே பின்னர் குறைந்துவிட்டது. ஆனாலும் நாங்கள் டெஸ்ட் எடுத்துக் கொண்டோம். ரிசல்ட் தற்போது வந்திருக்கிறது. அது எங்களுக்கு லேசான கொரோனா பாசிட்டிவ் என காட்டி இருக்கிறது. மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம்.

எங்கள் யாருக்கும் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. அனைவரும் நலமாக இருக்கிறோம். ஆனாலும் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருகிறோம். எங்களுக்குள் ஆன்டிபாடி உருவாகும் வரை காத்திருக்கிறோம். அதன் பிறகு நாங்கள் பிளாஸ்மா தானம் செய்ய இருக்கிறோம் என ராஜமௌலி கூறி இருக்கிறார்.

கடந்த இரண்டு வாரங்களாகவே இயக்குனர் ராஜமவுலி பிளாஸ்மா டொனேஷன் பற்றி சமூக வலை தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவில் இருந்து மீண்ட அனைவரும் பிளாஸ்மா நன்கொடை அளிக்க வேண்டுமென அவர் கூறிவருகிறார். அதே வழிமுறையை தான் அவரும் பின் பற்றி பிளாஸ்மாவை தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

பாகுபலி படங்கள் மூலம் இந்திய அளவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ராஜமௌலி அடுத்து ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படம் மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷுட்டிங் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு நேரத்தில் எந்த பணிகளும் செய்ய முடியாத நிலை இருந்ததால் ஷூட்டிங்கிற்கு தயாராகும் பணியை மட்டுமே படக்குழு செய்து வந்தது. இது வரலாற்று படம் என்பதால் ஷூட்டிங் நடத்த அதிக அளவில் துணை நடிகர்கள் தேவை படுவார்கள் என்பதால் ஆர் ஆர் ஆர் ஷூட்டிங் துவங்க இன்னும் நீண்ட தாமதம் ஆகும் என தெரிகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று வாரங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று முழுமையாக குணம் அடைந்து விட்டார். தான் உட்கொண்ட மருந்துகள் பற்றியும் அவர் சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

– நன்றி சமயம்.கொம்

‘கொரோனா தொற்றாளர் எவரும் நேற்று அடையாளம் காணப்படவில்லை’

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 810 ஆக உள்ளது. இவர்களில் 2ஆயிரத்து 317 பேர் குணமடைந்துள்ளனர். 482 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெண்களிடம் நகை கொள்ளை – கிளங்கன் வைத்தியசாலையில் போலி வைத்தியர் கைவரிசை!

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற பெண்கள் இருவரிடம், இரண்டு லட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகை கொள்ளையிடப்பட்டுள்ளது என்று நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் நேற்று மாலை (29) இடம்பெற்றுள்ளது.
பிசியோதெரப்பி வைத்தியரைப் போன்று நடித்த நபரொருவர், குறித்த பெண்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், நகைகளைக் கழற்றி கைப்பையில் வைத்துவிட்டுவருமாறும் கூறியுள்ளார்.
அதன்பின்னர் பெண்கள் இருவரையும் அழைத்துச்சென்ற அவர், திடீரென காணாமல்போயுள்ளார்.  கைப்பைகளும் மாயமாகியுள்ளது. இதனால் கதறி அழுத பெண்கள் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
இக்கொள்ளை சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

பச்சோந்தி வடிவேல் சுரேசிற்கு வாக்களிப்பதில் பயனில்லை – அலி சப்ரி

அரசியலில் பச்சோந்தியாக இருக்கும் வடிவேல் சுரேஸிற்கு மலையக முஸ்லிம் மக்கள் வாக்களிப்பதில் எவ்விதப் பயனும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் வேட்பாளரும், சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எனவே, வடிவேல் சுரேஸ் போன்ற பச்சோந்திகள் குறித்து முஸ்லிம் மக்கள் அவதானமாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலையக மக்களின் வாக்குகளைப் பெற்று பின்னர் எங்களிடம் வருவதற்கு முயற்சிப்பார்கள். அவர்களின் சமூகத்திற்கே உண்மையாக இல்லாதவர்கள், முஸ்லிம் சமூகத்திற்கு உண்மையாக இருப்பார்கள் என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதுளையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக முஸ்லிம் மக்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தூர நோக்குடைய இளம் தலைவர்களை மக்கள் தேர்ந்ததெடுக்க வேண்டும் எனவும், அதற்கு செந்தில் தொண்டமான் மிகப் பொருத்தமானவர் என்றும் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு இனவாதம், மதவாதம், குலவாதம் ஆகியவற்றில் சிக்கியிருந்து இதனை செய்ய முடியாது என்றும், அனைத்து இலங்கையரையும் ஒரே மாதிரி மதிக்க வேண்டும் என்றும், இலங்கையர் என்ற அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இன, மத வேறுபாடுகளைக் கடந்து நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டும் என்றும் இதற்கு பதுளையில் செந்தில் தொண்டமான் போன்றவர்கள் பொருத்தமானவர்கள் என்றும் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

‘உரிமைக்கான தமிழர் குரலை எவராலும் அடக்கவே முடியாது’

தமிழர் உரிமைகளுக்கான எங்கள் குரலை எவராலும் அடக்கவே முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

‘சமஷ்டியைக் கேட்கும் உரித்து எமக்கு உண்டு. தமிழ் மக்கள் அநாதைகளாக்கப்படவில்லை. அவர்களின் பின்னால் சர்வதேசம் நிற்கின்றது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்திருந்த அறிவிப்பு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இந்த விமர்சனங்கள் தொடர்பில் சம்பந்தன் பதிலளிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள். தமிழர் உரிமைகளுக்கான எங்கள் குரலை எவராலும் அடக்கவே முடியாது. எங்களை எவரும் அடிபணிய வைக்கவும் முடியாது. இதை ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பிளவுபடாத – ஒருமித்த நாட்டுக்குள் சமஷ்டி முறைமையிலான அர்த்தபுஷ்டியான தீர்வையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இதை அரசு வழங்கியே தீரவேண்டும்.

நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் விஷமத்தனமான கருத்துக்களை அரசு வெளியிட்டால் அதற்கான உரிய பதிலடிகளை எங்களால் வழங்க முடியும்.

அரசுடன் முரண்பாட்டை வளர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. தமிழர் உரிமைசார் விடயங்களில் – அரசியல் தீர்வு விடயங்களில் அரசுடன் சேர்ந்து பயணிக்கவே விரும்புகின்றோம். ஆனால், அரசுதான் உரிமை விடயத்திலும், தீர்வு விடயத்திலும் வரையறை போடுகின்றது.

இன நல்லிணக்கத்துக்கு – மத நல்லிணக்கத்துக்கு – ஒட்டுமொத்த நாட்டின் நலனுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நியாயமான தீர்வையே தமிழர்கள் கேட்கின்றார்கள். அந்தத் தீர்வை வழங்குவது அரசின் கடமையாகும்.

அரச தரப்பினர் கூறுவது போன்று தமிழர்களை முட்டாள்களாக்குவதோ அல்லது சிங்களவர்களை முட்டாள்களாக்குவதோ எங்கள் நோக்கம் இல்லை.

சர்வதேசம் தமிழர்களின் பக்கம் நிற்கின்றது என்பதை நாங்கள் சொல்லித்தான் அரசு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. 44 நாடுகளின் இணை அனுசரணையுடன் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான ஐ.நாவின் தீர்மானங்களே இதற்குச் சிறந்த உதாரணம்.

தமிழர்களின் உரிமைகளையும் அரசியல் தீர்வையும் வென்றெடுப்பதற்காக நாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று ஜனநாயக வழியில் போராடி வருகின்றோம். உரிமைகளும் தீர்வும் கிடைக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும்” – என்றார்

‘அரச சேவையில் ஊழல், மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி’

ஊழல், மோசடிகளை ஒழித்து வினைத்திறனான அரச சேவையை தாபிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

15 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அரச சேவையில் உள்ளனர். எனினும் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து நாளாந்தம் தகவல்கள் வருகின்றன.

இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடியை ஒழித்து மக்களுக்காக அர்ப்பணித்த அரச சேவை ஒன்றை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி  மேலும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச களுத்துறை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையில் இதனை தெரிவித்தார்.

அபேட்சகர் மஹிந்த சமரசிங்க பாணந்துறை, கெசல்வத்த பிரதேச சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, ஜனாதிபதி அவர்கள் களுத்துறை மாவட்ட சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார்.

இறக்குமதி வர்த்தக முறைமைக்கு பதிலாக உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவமளிக்கும் பொருளாதார செயற்பாடுகளுக்கு அரசாங்கம் வழி செய்துள்ளது.

விவசாயம் மற்றும் உற்பத்திகளில் ஈடுபட்டு அதன்மூலம் அதிகபட்ச பிரயோசனத்தை பெற்றுக்கொள்ளுமாறு வருகை தந்திருந்த மக்களிடம் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். நவீன தொழிநுட்பத்தின் மூலம் விவசாய பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும். அதற்காக விவசாயப் பயிர்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி, உள்நாட்டு அறுவடைகளுக்கு அதிக விலையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஒரு இலட்சத்து ஐம்பத்தாறாயிரம் தொழில்களை வழங்குதல் தேர்தலின் பின்னர் இடம்பெறும். இந்த அனைத்து சந்தர்ப்பங்களும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் என ஜனாதிபதி  மக்களிடம் தெரிவித்தார்.

அபேட்சகர் ஜகத் அங்ககே பாணந்துறை நகர சபை மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்கள், வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடி மாவட்டத்தின் குறைபாடுகளை கேட்டறிந்தார்.

களுத்துறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுத் தருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர பாணந்துறை கொரஸ்துவ விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய வேளையில் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் தடைகள் ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் கவனம் செலுத்துமாறு இச்சந்திப்பில் கலந்துகொண்ட சில மாணவர்கள் ஜனாதிபதி  கேட்டுக்கொண்டனர்.

களுத்துறை தாதியர் கல்லூரியை புனர்நிர்மாணம் செய்வது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், பாணந்துறை மத்திய மகா வித்தியாலயத்தின் கட்டிடங்களை புனர்நிர்மாணம் செய்வது தொடர்பாகவும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஜயந்த சமரவீர அவர்களிடம் பொறுப்பளித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபே குணவர்தனவும் இச்சந்திப்புகளில் பங்குபற்றினார்.

கதிர்காம எசல பெரஹரவுக்கு 16ஆவது முறையாகவும் டயலொக் அனுசரணை

கதிர்காம எசல பெரஹரவுக்கு 16 வது முறையாகவும் டயலொக் அனுசரணை வழங்குகின்றது.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு, இந்த ஆண்டும் உருகுணை கதிர்காம எசல பெரஹர சுகாதார அமைச்சகம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கிய சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை ஜூலை 21 ஆம் திகதி தொடங்கிய கதிர்காம ஆலயத்தின் வருடாந்த பெரஹ ரதிருவிழா ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை பொதுமக்களின் பங்களிப்பு இன்றி நடைபெறும்.

நீண்டகாலமாக வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹரவிற்கு இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசி ஆட்டா 16 வதுமுறையாகவும் தொடர்ந்து தனது பங்களிப்பு வழங்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க உருகுணை கதிர்காம ஆலயத்தின் எசல பெரஹர மூன்று முக்கிய பெரஹராக்களைக் உள்ளடக்கும்.

பக்மஹா பெரஹர,எசல பெரஹர,மற்றும் இல்மஹா பெரஹரா ஆகியவை இதில் அடங்கும். கதிர்காம புனிதப்பூமியில் நடைபெறும் பூஜைகள் மற்றும் வருடாந்த மத நிகழ்வுகளில் எசல பெரஹர முக்கிய இடத்தினை வகிக்கின்றது.

பெரஹர தொடங்குவதற்கு முன்னைய நாள்,புனித பூமியில் உள்ள சங்கவாச வளாகத்தின் பிரித் மண்டபத்தில் இரவு முழுவதும் பிரித் சொற்பொழிவு பாரம்பரியமாக நடைபெறும்.

பெரஹர திருவிழாவிற்கு ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும் முகமாக இந்த பிரித் பிரசங்கம் பஸ்நாயக்க நிலமேயின் தலைமையில் நடாத்தப்படும். பெரஹரவின் அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் அனைத்து மக்களுக்கான ஆசிர்வாதங்களை பெறுவதுமே இதன் முக்கிய நோக்கம்.

இந்த பெரஹர கதிர்காம பெருமான் மற்றும் வள்ளி அம்மை ஆகியோரின் திருமணத்தை நினைவு கூறும் முகமாக நடாத்தப்படுகின்றது என முன்னோர்களால் நம்பப்படுகிறது. அதன்படி எசல 2020 ஆம் ஆண்டின் ஜுலை 21 ஆம் திகதி இரவு சுப முகூர்த்தத்தில் ஆரம்பிக்கும் இப்பெரஹர நிகழ்வானது ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க மாணிக்க கங்கையின் ஜீவமாலி நதிக்கறையில் நீர்வெட்டும் விழாவுடன் நிறைவடையும்.

டயலொக் ஆசி ஆட்டாநீண்டகாலமாக இலங்கையின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் நாட்டின் முக்கிய கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளில் பெரும் பங்களிப்பாளராகவும் இருந்துவருகிறது.

அவற்றுள் கண்டி ஸ்ரீதலதா பெரஹர, களனி துருது மஹாபெரஹர, கங்கராம நவம்மஹாபெரஹர, கட்டபருஎசலமஹாபெரஹர, மற்றும் கோட்டேரா ஜமஹா விகார பெரஹர ஆகியவை அவற்றில் சில.

அத்தோடு பௌத்தாலோக வெசாக்வலையம் மற்றும் கங்காரம விகாரையின் ஸ்ரீபுத்தரஷ்மி வெசாக் வலையம் ஆகியவற்றிற்கும் டயலொக் ஆசி ஆட்டா நிறுவனம் தனது பங்களிப்பினை வழங்கிவருகின்றது. திம்புலாகல ஆச்சிரமத்தின் நுழை வாயிலினை (வாஹல்கட) அமைப்பதற்கும் டயலொக் தனதுபங்களிப்பினை வழங்கியுள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

மலையக குடியிருப்பாளர்களை வெளியேற்றும் அதிகாரம் கம்பனிகளின் கையில்!

0
பெ.முத்துலிங்கம் படம் - செல்வராஜா ராஜசேகர் நன்றி - மாற்றம் டித்வா அனர்த்தம் நடந்தேறி நான்கு மாதங்கள் கடக்கும் வேளையில் புயலினால் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்களுக்கும் ஏனையோருக்கு வழங்கும் ஐந்து மில்லியன் ரூபா நிதியும் வீடு...

கல்போக் தமிழ் வித்தியாலய அதிபராக சகாயமேரி நியமனம்!

0
பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்போக் தமிழ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக திருமதி. டி. சகாயமேரி அவர்கள் இன்று தனது கடமைகளைப் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை அதிபர் சேவைப் பரீட்சையில் சித்தி பெற்று, கடந்த மூன்று...