Home Blog Page 3928

இதனால் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன்! ஸ்ருதி ஹாசன் சொன்ன காரணம்

மூக்கு இருக்கும் விதத்தை மாற்ற தான் சிகிச்சை ஏன் எடுத்துக்கொண்டேன் என ஸ்ருதி ஹாசன் பேசி உள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மும்பையில் உள்ள தனது வீட்டில் தான் தனிமையில் இருந்து வருகிறார். தனக்கு பிடித்த பல்வேறு விஷயங்களை செய்து அதை வீடியோ அல்லது புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்காக பதிவிட்டு வருகிறார். அவர் சினிமாவுக்கு வந்து பதினொரு வருடங்கள் ஆவதை சமீபத்தில் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதற்காக அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி கூறி ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருந்தார் ஸ்ருதி.

இன்னிலையில் தற்போதைய லேட்டஸ்ட் பதிவு ஒன்றில் இது போன்ற அசாதாரண சூழ்நிலையில் நாம் மற்றவர்களுடன் பேச வேண்டியது மற்றும் தொடர்பில் இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி அவர் பேசியிருக்கிறார்.

நாம் கவலைகளை மறந்து அடுத்த விஷயத்தை நோக்கி செல்ல வேண்டும். நாம் பேசுவதும், மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் நாம் பேசுவோம், மற்றவர்கள் பேசுவதையும் கவனிப்போம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ருதிஹாசன் எப்போதும் எந்த விஷயத்தை பற்றியும் மிகவும் வெளிப்படையாக பேசுபவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதை பற்றி பேசி இருக்கிறார். எதற்காக அதை செய்தார் மற்றும் அப்படி தோற்றமளித்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற கட்டாயம் இருக்கிறதா என அவரிடம் கேட்டதற்கு,” இருக்கிறது என்று தான் நினைக்கிறேன், ஆனால் இல்லை. மற்றவர்கள் கூறுவதை நான் கவனித்த காலம் ஒன்று இருக்கிறது. என்னுடைய மூக்கு சிகிச்சை நானே தான் விருப்பப்பட்டு செய்து கொண்டேன். என்னுடைய மூக்கு உடைந்து விட்டதால் நான் அதை செய்தேன். அது இருந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை அதனால் நானே விருப்பப்பட்டு அதை செய்தேன். யாரும் என்னிடம் அப்படி செய்ய சொல்லி கூறவில்லை. என் முகத்தை பற்றி பலரும் பல்வேறு விமர்சனங்களை கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். அதற்காகவே நான் பல விஷயங்களை செய்திருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.மேலும் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வதை ஊக்குவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எந்த நடிகை ஆவது தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளவில்லை என கூறினால் அது அப்பட்டமான பொய்யாகத்தான் இருக்கும், காரணம் ஒருவருடைய முகம் அவ்வளவு அதிகம் எப்போதுமே மாறிவிடாது. ஒரு பெண் இதை செய்கிறார் என்றால் அது அவரது சொந்த விருப்பம், செய்யாமல் இருப்பதும் அவரது விருப்பம் தான் எனக் கூறி இருக்கிறார் ஸ்ருதி.

மேலும் இதற்கு முன்பு ஒரு முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டது பற்றி இன்ஸ்டாகிராமில் பேசியிருந்தார் ஸ்ருதி. அவர் “இது என்னுடைய வாழ்க்கை, என்னுடைய முகம், ஆம் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். அதனால் நான் வெட்கப்படவில்லை. நான் அதை ஊக்குவிக்கவும் இல்லை, அதற்கு எதிராக பேசுகிறேனா? அதுவும் இல்லை. நான் எப்படி வாழவேண்டும் என்பதை நான் தான் தீர்மானித்தேன்” என கூறியிருந்தார்.

‘அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி காற்றில் ‘ – ஹிரண்யா ஹேரத்

ஜனாதிபதித் தேர்தலின்போது மிளகு உற்பத்தியாளர்களுக்கு உறுதிமொழி வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது மௌனம் காப்பது ஏன் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ஹிரண்யா ஹேரத் கேள்வி எழுப்பினார்.

நுவரெலியா மடுள்ள பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினா எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நுவரெலியா மாவட்டம் உட்பட நாட்டில் மிளகு உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்ளை கைவிடமாட்டார் என்றும், மிளகுக்கு சிறந்த விலை வழங்கப்படும் எனவும் கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்திருந்தார். ஆனால், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அந்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. இதனால் மிளகு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நவீன் திஸாநாயக்க அமைச்சராக இருந்தபோதுகூட இவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. தற்போதும் அதே நிலைமை நீடிக்கின்றது. அதேபோல் மரக்கறி உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிவாரணத் திட்டங்கள் இல்லை.  இந்நிலைமையை எமது ஆட்சியில் மாற்றியமைப்போம். விவாசாயிகளை பாதுகாப்போம்.” – என்றார்.

 

’13’ ஐ நிராகரிப்பதற்கு சிறந்த வாய்ப்பு – சரத் வீரசேகர

” உயிரை தியாகம்செய்தே ஒற்றையாட்சி முறைமையை பாதுகாத்தோம். எனினும், 13 ஆவது திருத்தச்சட்டம் பலவந்தமாக திணிக்கப்பட்டது. 13 இல் உள்ள அதிகாரங்கள் வடக்கிலுள்ள இனவாத அரசியல்வாதிகளின் கைகளுக்கு முழுமையாக சென்றுவிட்டால் தனிஈழம் அமைவதை தடுக்கமுடியாது. எனவே, 13 இற்கு முடிவு கட்டவேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அத்துடன், புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரே சம்பந்தன் எனவும் அவர் விமர்சித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பண்டையகாலம் தொட்டு ஒற்றையாட்சி முறைமையையும், எமது அடையாளங்களையும்  எமது முதாதையர்கள் பாதுகாத்து வந்தனர். உயிர் திகாயமும் செய்துள்ளனர். இவ்வாறு பாதுகாக்கப்பட்டுவந்த நாட்டிலேயே பலவந்தமாக திணிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டமூலம் சமஷ்டி கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுநர் இல்லாவிட்டால் சமஷ்டி அமுலுக்குவரும் நிலைமை காணப்படுகின்றது.
13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என சஜித் கூறுகின்றார். அவ்வாறு நடைபெற்றால் ஒற்றையாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். தமிழ் மக்களுக்கு அநீழி இழைக்கப்படுகின்றது என்பதை எவராவது உரிய வகையில் உறுதிப்படுத்தினால் 13 இற்கு அப்பால்செல்வதற்குகூட தயார் என்றே மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தார். 13 பிளஸ் அமுல்படுத்தப்படும் என அவர் அறிவிக்கவில்லை என்றே நான் நினைக்கின்றேன்.
தமிழர்களுக்கு இந்த நாட்டில் அநீதி இழைக்கப்படவில்லை. தென்பகுதிகளில் உள்ள பலக்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்கின்றனர். ஆனால், வடக்கில் எமது மாணவர்களுக்கு அவ்வாறானதொரு நிலை இல்லை. சிங்களவர்களுக்கு வடக்கில் வாழமுடியாது என விக்கேஸ்வரன் குறிப்பிடுகின்றார். அவர் சிங்களவர்களுடன்தான் வாழ்ந்தார், படித்தார், பதவியில் இருந்தார். பிள்ளைகளையும் சிங்களவர்களுக்கே மணம் முடித்துவைத்தார்.
இப்படியான இனவாத நபரொருவரின் கைகளுக்குள் 13ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரங்கள் சென்றால் என்ன நடக்கும்? பொலிஸ், காணி மற்றும் தொல்லியல் தொடர்பான அதிகாரங்களும் உள்ளன. எனவே, இப்படியானவர்களின் கைகளுக்கு அதிகாரங்கள் சென்றால் நமக்கு நாடு மிஞ்சுமா? தனி ஈழம் நோக்கி பயணிப்பதை தடுத்து நிறுத்த முடியுமா? எனவே, 13ஆவது திருத்தச்சட்டத்தை நிராகரிப்பதற்கு மக்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ” – என்றார்.

மஸ்கெலியாவில் தொடர் கொள்ளை! பின்னணி என்ன? மக்கள் பீதியில்!

மஸ்கெலியா பிரவுன்சிவிக்  தோட்டத்தில்  கடந்த வாரம் கருப்பு நிறத்திலான உடையணிந்த மூன்று  நபர்கள்  லயன் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து  ஆறு வீடுகளில்  பணம் நகை என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையிலும்,  இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தோட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இதே போன்றதொரு கொள்ளைச் சம்பவம் கடந்த வாரம் மஸ்கெலிய நயன்சா தோட்டத்திலும் பதிவாகியுள்ளதையடுத்து மக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

நேற்றுகூட மஸ்கெலிய நகரத்தில்  எட்டு வர்த்தக நிறுவனங்கள் உடைக்கப்பட்டு அதில் ஒரு  வர்த்தக நிலையத்தில் பணம்  மற்றுமொரு வர்த்தக நிலையத்தில் மீல் நிரப்பு அட்டைகள் என்பன களவாடப்பட்டுள்ளன.

இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கெமராக்களிள் பதிவாகியிருந்தததை காணகூடியதாக இருக்கின்றது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்ற நிலையில் இது வரைக்கும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை .

இவ்வாறான தொடர் கொள்ளைச் சம்பவங்களால் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் தாம் பெரும் அச்சத்துடனேயே  வாழ்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினர்.

எனவே இப்பகுதி மக்களின்  பாதுகாப்பை உறுதிப்படுத்த  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

( சாமிமலை ஞானராஜ்)

‘களுத்துறை மாவட்ட மக்கள் பொறுப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும்’

களுத்துறை மாவட்ட மக்கள் பொறுப்புடன் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் சண்.பிரபா தெரிவித்துள்ளார்.

மாவட்ட தோட்டப் பகுதிகளில் இடம்பெறும் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

களுத்துறை மாவட்டத்தில் வரலாற்றில் முதற்தடவையாக தமிழ்ப்பேசும் பிரதிநிதியொருவர் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாகவே காணப்படுகின்றது.  2015ஆம் ஆண்டுத் பொதுத்தேர்தலுடன்  ஒப்பிட்டுப் பார்க்கும்   இம்முறை ஐ.தே.கட்சி இரண்டுக்கும் மேற்பட்ட ஆசனங்களை  பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

அவ்வாறான சூழ்நிலையில் இரண்டாவதாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு தமிழ்ப் பேசும்  பிரதிநிதியயொருவருக்கே  அதிகமாக இருக்கின்றது. இந்த யாதார்த்த நிலைமையை புரிந்துக்கொண்டு களுத்துறை மாவட்ட மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அத்தோடு தங்களுடைய சுயநலத்துக்காகவும் தங்களுக்கு கிடைக்கின்ற அற்ப சொற்ப  சலுகைகளுக்காகவும் இன்று வாக்குகளை பிறருக்கு பெற்றுக்கொடுக்க துடிக்கும் தேர்தல் கால முகவர்களிடம் இருந்து களுத்துறை மாவட்ட மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இந்தத் தேர்தல் வெறுமனே கைக்கட்டி பார்த்துக்கொண்டிருக்கும் விடயம் அல்ல. இம்மாவட்ட மக்கள் தங்களுக்கான தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முஸ்தீபு காட்ட வேண்டும். ஆகவே களுத்துறை வாழ் மக்கள் மற்றும் புத்தி ஜீவிகள் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் , அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து களுத்துறை மாவட்ட மக்களை ஒட்டு மொத்தமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மலேசியாவில் நஜீப் ரசாக் பிரதமராக இருந்த போது, 2015 ஆம் ஆண்டு அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதியான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் கையாடல் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த முறைப்பாடு மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும் போராட்டங்களும் நடைபெற்றன.

இதையடுத்து அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனைகளின் போது 273 மில்லியன் டாலர் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அவருடைய 408 வங்கி கணக்குகளையும் முடக்கி வைத்திருந்தனர்.

நஜிப் மீது அரசுத்தரப்பு நம்பிக்கை மோசடி, பணமோசடி, அதிகார அத்துமீறல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

நஜீப் ரசாக் மீதான 7 குற்றச்சாட்டுக்களும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள கோலாலம்பூர் நீதிமன்றம் , அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. நஜிப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இத்தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்யப் போவதாக கூறப்படுகிறது.

‘கொரோனா’வின் தாக்கம் – 70 லட்சம் குழந்தைகள் பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடியால் 70 லட்சம் குழந்தைகள் தங்களது வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் பாதிக்கப்படுவார்கள் என ஐநா தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உணவு விநியோகத்தை பாதிப்பதின் விளைவாக கிட்டத்தட்ட 70 லட்சம் குழந்தைகள் தங்களது வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

118 ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கொரோனா ஏற்படுத்தும் தாக்கத்தை நிபுணர்களின் குழு விவரித்துள்ளது.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே மிதமாக அல்லது கடுமையாக உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் பாதிக்கப்படுவது 14.3 சதவிகிதம் அதிகரிக்கும் என்று அவர்கள் கண்டறிந்தனர், இதன் விளைவாக கூடுதலாக 67 பாதிப்புகள் அதிகரிக்க வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

ஆரம்பகால வாழ்க்கையில் ஊட்டச்சத்தின் மீது கொரோனா தொற்றுநோயின் ஆழமான தாக்கம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், மேலும் கல்வியில் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பாதிப்புகள், நாட்பட்ட நோய் அபாயங்ளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உடல் மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள போது தசைகள் மற்றும் கொழுப்பு மறைந்து போகும் போது தங்களது உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத பாதிப்பு ஏற்படும் என கூறியுள்ளனர்.

‘தொலைபேசிக்கு வாக்களித்தால் ஜனநாயக ஆட்சி மலரும்’ – குடும்ப ஆட்சி வேண்டாம் என்கிறார் ராதா

” மொட்டு  கட்சிக்கு வாக்களித்தால் குடும்ப ஆட்சி தொடரும், தொலைபேசி சின்னத்திற்கு வாக்களித்தால் ஜனநாயக ஆட்சி மலரும். எனவே எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
லிந்துலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
” நாட்டில் குடும்ப ஆட்சி நிலவியதன் காரணமாகவே இந்த நாட்டு மக்கள் 2015 ஆம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தினார்கள்.அந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சரியாக செயற்படவில்லை என்ற காரணத்தால் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால் இன்று மீண்டும் இந்த நாட்டில் குடும்ப ஆட்சி ஒன்று ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை இந்த அரசாங்கம் அமைத்து வருகின்றது.அதன் ஒரு பகுதியாகவே அநேகமான ராஜபக்சக்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.அவர்கள் வெற்றி பெறுகின்ற நிலையில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு குடும்ப ஆட்சி ஏற்படுத்தப்படும்.அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அது இந்த நாட்டிற்கு ஏற்புடையதாக இருக்காது.
இதனை கருத்தில் கொண்டே நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த முறை சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகின்றோம். நாங்கள் வெற்றி பெற்று சஜித் தலைமையில் ஒரு ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவோம்.
இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெற்றால் மாத்திரமே சிறுபான்மை மக்கள் சுதந்திரமாகவும் உரிமைகளோடும் வாழ முடியும்.எனவே யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அந்த சரியான தீர்மானத்தை நீங்கள் அனைவரும் எதிர்வரும் 5 ஆம் திகதி  எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

முறிந்து விழுந்தது மரக்கிளை – உடைந்து சரிந்தது மின்கம்பம்! இரு மணிநேரம் போக்குவரத்து தடை!!

நாவலப்பிட்டிய, தலவாக்கலை பிரதான வீதியில் இன்று பகல் மரக்கிளையும் மின்கம்பமும் உடைந்து வீழ்ந்ததால் அவ்வீதி ஊடான போக்குவரத்து சுமார் இரு மணிநேரம் தடைப்பட்டது. அத்துடன், மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
 
விடாது பெய்த அடை மழை காரணமாகவே நாவலப்பிட்டிய ஜயதிலக்க விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இருந்த மரக்கிளையும், மின்கம்பமும் இவ்வாறு உடைந்து விழுந்துள்ளன.
இதனையடுத்து மின்சார சபை ஊழியர்களும், போக்குவரத்து பொலிஸாரும் ஏனைய ஊழியர்களும் இணைந்து மரக்கிளையையும், மின்கம்பத்தையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
 
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ் 

நாவலப்பிட்டியவில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழும் யுகத்தை நானே ஏற்படுத்தினேன்!

அதிகார வர்க்கத்தாலும், இனவாத கும்பலாலும் கடந்த காலங்களில் அடக்கி ஆளக்கப்பட்ட, ஒடுக்கி ஓரங்கப்பட்ட நாவலப்பிட்டியவில் வாழும் தமிழ் மக்களுக்கு தலைநிமிர்ந்து வாழ்வதற்கான யுகத்தை நானே ஏற்படுத்திக்கொடுத்தேன். இதனால் அவர்களுக்கான அரசியல் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

நாவலப்பிட்டிய தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எமது மலையக மக்களுக்கு 1948 முதல் 88 வரையில் வாக்குரிமை இருக்கவில்லை.  40 ஆண்டுகளுக்கு பின்னரே அந்த உரிமை கிடைத்தது. இவ்விடத்தில் வாக்குரிமை தொடர்பில் ஏன் கதைக்கின்றேன் என்றால் அதன் பின்னால் கடந்த காலங்களில் அரங்கேறிய அடக்குமுறை கதையொன்று இருக்கின்றது.

அதாவது மலையக மக்களுக்கு வாக்குரிமை கிடைத்திருந்தாலும், அதனை சுதந்திரமாகவும், மனசாட்சியின் பிரகாரமும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு 2015 இற்கு முன்னர் நாவலப்பிட்டிய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை. வாக்களிப்பு இயந்திரமாகவே அவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும்தான் வாக்களிக்கவேண்டும் என மிரட்டப்பட்டனர். மறுத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. தோட்டங்களுக்கு குண்டர்குழுசென்று தாக்குதல் அராஜக அரசியலும் அரங்கேறியது.   அதுமட்டுமல்ல அபிவிருத்தியின்போது தோட்டப்பகுதிகள் புறக்கணிக்கப்பட்டன. ஏதோ பாசாங்கு காட்டுவதற்காக கிள்ளி கொடுக்கும் வகையில் ஆங்காங்கே வீதிகள் போடப்பட்டன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அதிகார வர்க்கத்தின் கோரப்பிடிக்குள் இருந்து தமக்கு சுதந்திரம் வேண்டும், உரிமை அரசியல் வேண்டும் என்பதற்காக 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போதும் பொதுத்தேர்தலின்போதும் நாவலப்பிட்டிய தொகுதியில் வாழும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு வாக்களித்தனர். கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்ற கனவை நிறைவேற்றுவதற்கு பங்களிப்பு வழங்கினர்.

மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் நான் பாராளுமன்ற உறுப்பினரானேன். எதற்காக நாவலப்பிட்டிய தொகுதியில் வாழும் தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்தார்களோ, எதனை எதிர்பார்த்தார்களோ அவற்றை நான் நிறைவேற்றியுள்ளேன் என்ற திருப்தி எனக்கு இருக்கின்றது.

அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கினேன். தலைநிமிர்ந்து வாழக்கூடிய யுகத்தை உருவாக்கினேன். கைகட்டி வாழ்வதற்கு பதிலாக அநீதியை தட்டிக்கேட்கும் தைரியத்தை வழங்கினேன்.

அதேபோல் நாவலப்பிட்டியவில் கதிரேசன், வெஸ்ட்வோல், கலமுதன உட்பட பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. புதிய கட்டடங்களும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.
கல்வித்துறைக்கான இப்படி பல சேவைகள் தொடர்ந்தன. நாவலப்பிட்டிய தொகுதியில் தனிவீட்டு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. வெறும் நான்கரை வருடங்களில்தான் இவற்றை நான் செய்தேன். சிற்சில குறைபாடுகள் இருக்கலாம். அதனை அடிப்படையாகக்கொண்டு சிலர் மத்தியில் விமர்சனமும் இருக்கின்றது. அவற்றையும் நாம் நிவர்த்தி செய்வோம்.  எனது வெற்றி உறுதி. அதனை வரலாற்று வெற்றியாக மாற்றியமைக்க நாவலப்பிட்டியவில் வாழும் தமிழ் மக்களின் ஆதரவு அவசியம். அதனை வழங்குவீர்கள் என நம்புகின்றேன்.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

அமைச்சரின் ராஜினாமா நாடகக்கூத்து!

0
“நிலக்கரி ஊழலை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் சகல முயற்சிகளையும் தோற்கடிக்க ஒன்றிணைவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, “...

” 22 ஆம் திகதிக்குள் இணங்க மறுத்தால் மீண்டும் குண்டுபோட நேரிடும்”

0
ஏப்ரல் 22 ஆம் திகதிக்குள் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற...

சி.எஸ்.கேயின் வெற்றி வேட்டை தொடருமா?

0
ஐ.பி.எல்.தொடரில் இன்று நடைபெறும் 27 ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் இன்று (18) மோதுகின்றன. இப்போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும். சன்ரைசர்ஸ்...