Home Blog Page 3929

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடம்: உடனடியாக செயற்பட்ட ஜீவன் தொண்டமான்

லிந்துலை ஆகரகந்தை தோட்டத்தில் தீ விபத்தால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளதுடன், அவர்களை பாதுகாப்பான இடமொன்றில் தங்காலிகமாக தங்கவைப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தீ அனர்த்தம் தொடர்பில் கேள்வியுற்றதும், சம்பவ இடத்துக்கு விரைந்து மக்களுக்கு தேவையானவற்றை உடன் செய்துகொடுக்குமாறு இ.தொ.காவின் உப தலைவர் சக்திவேலுக்கு கண்டியில் இருந்து அவசர ஆலோசனை வழங்கினார் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்.

இதனையடுத்து ஆகரகந்தை தோட்டத்துக்கு தவிசாளர் கதிர்செல்வனுடன் சென்ற சக்திவேல், மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அத்துடன், நிவாரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும், மக்கள் தற்காலிக இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

க.கிசாந்தன்

சஜித்தை ஆதரித்த உறுப்பினர்களுக்கு ஆப்பு வைத்தார் ரணில் – முற்போக்கு கூட்டணியும் கலக்கத்தில்!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ள தமது கட்சி உறுப்பினர்கள் 115 பேரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (28) கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது.

இதன்போதே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிடும் 54 முன்னாள் எம்.பிக்களையும், பிரச்சாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் 61 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களையும் நீக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, யானை சின்னத்தின்கீழ் போட்டியிட்ட ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை நீக்குவது சம்பந்தமாகவும் பரீசிலிக்கப்பட்டுவருகின்றது.

இதன் முதற்கட்டமாகவே தமது கட்சியில் அங்கம் வகித்த உறுப்பினர்களை ஐ.தே.க. நீக்கியுள்ளது. ஏனையோரை நீக்குவது சம்பந்தமாக சட்டரீதியாக ஆராயப்பட்டுவருவதாக சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகரகந்தை தோட்டத்தில் தீ! 10 லயன் குடியிருப்புகள் தீக்கிரை!!

லிந்துலை ஆகரகந்தை தோட்டத்தில் இன்று (28) காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. இதனால் 10 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனையடுத்து அயலவர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 1 மணித்தியாலயத்தின் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கு இரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.

எனினும், சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 10 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் தற்காலிகமாக தோட்ட கலாச்சார மண்டபத்திலும், தோட்ட முன்பள்ளி பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் லிந்துலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

க.கிசாந்தன்

8 வயது சிறுவனுக்கு கசிப்பு கொடுத்த தாய்மாமனுக்கு மறியல்!

எட்டு வயது நிரம்பிய சிறுவனுக்கு கசிப்பினை பருக்கிவிட்டு, தலை மறைவாகியிருந்த சிறுவனின் தாய் மாமன் கைது செய்யப்பட்டு, பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில்  ஆஜர் செய்யப்பட்டப் போது, நீதிபதி கீர்த்தி கும்புறுஹேன, அந்நபரை  30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

ஹல்துமுள்ளைப் பகுதியின் நீட்வூட் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த லெட்சுமன் சிவகுமார் என்ற 42 வயது நிரம்பிய நபரே, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவராவார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நபரின் சகோதரியின் மகனான எட்டு வயது நிரம்பிய சிறுவனுக்கு அந்நபர் ஆகக் கூடுதலான கசிப்பினைப் பருக்கியமையினால், அச் சிறுவன் ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச் சிறுவனின் தாய் மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்த நிலையில், அவரைப் பற்றிய எவ்வித தகவலும் இல்லாதுள்ளதென்றும், சிறுவனின் தகப்பனும் மதுவிற்கு அடிமையாகிய நிலையில் இருந்து வருவதும், குறிப்ப்pட்ட சிறுவனுக்கு சிறுவனின் தாய் மாமனான நபர், கசிப்பினை ஆகக் கூடுதலாக பருக்கியமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

ஹல்துமுள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசன்ன த சில்வா, மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

பதுளை நிருபர் – எம். செல்வராஜா, பதுளை

‘உலகளவில் ஒரு கோடியே 66 லட்சம் பேருக்கு கொரோனா பரவியது’

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 66 லட்சத்து 51 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 66 லட்சத்து 51 ஆயிரத்து 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒருகோடிக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 56 ஆயிரத்து  672 பேர் உயிரிழந்துள்ளனர்.

கெலிஓயா விபத்தில் மூவர் பலி!

பேராதனை – கம்பளை வீதியின் கெலிஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தம்பதியினர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலம்பொடை பகுதியைச் சேர்ந்த 53 மற்றும் 54 வயதான தம்பதியினரும் கெலிஓயாவைச் சேர்ந்த 54 வயதான ஒருவரும் விபத்தில்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெலிஓயா நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் ஒன்றுடன் மோதுண்ட பாதசாரி, பின்னால் வந்த முச்சக்கரவண்டியிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து, குறித்த முச்சக்கரவண்டி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காருடன் மோதி குடை சாய்ந்துள்ளது.

இந்த விபத்தில், மோட்டார்சைக்கிள் ஓட்டுனர், பாதசாரி மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் பாதசாரியும் உயிரிழந்துள்ளனர்.

பதுளையில் புதையல் தோண்டிய 11 பேர் கைது!

பதுளை அம்பகாவத்தை பிரதேசத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த 11 பேரை, பதுளைப் பொலிஸார் நேற்றிரவு (27) கைது செய்துள்ளனர். அத்துடன், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகணரங்களையும், கற்பாறைகளை வெடி வைக்கப் பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்கள் பலவற்றையும் கைப்பற்றினர்.

மீட்கப்பட்ட பொருட்களில் டெட்னேட்டர் 02, வெடி நூல் இரண்டு ரோல்கள், அமேனியம் சல்பேட் வெடி மருந்துகள், குழிகளிலிருந்து கற்பாறைகளை வெளியில் எடுக்க பயன்படுத்தப்படும் “ஜெக்” என்ற பாரந்தூக்கிகள் இரண்டு, கேபல்கள் மற்றும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணத் தொகுதிகள் ஆகியனவும் அடங்கியுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர், பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபள்யு.எம்.சிரிவர்தன தெரிவித்தார்.

எம். செல்வராஜா  – பதுளை நிருபர்

‘இதொ.கா என்பது வெறும் பேச்சு அல்ல அது மக்களின் மூச்சு’ – சக்தி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை மக்களுக்காக குரல் கொடுக்கும் ஸ்தாபனம். அதை எவராலும் மறக்க முடியாது மறுக்கவும் முடியாது. இதொ.கா என்பது வெறும் பேச்சு அல்ல அது மக்களின் மூச்சு – என்று  இ.தொ.கா வின் உபதலைவரும் முன்னாள் மத்திய மாகாண உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான சக்திவேல் தெரிவித்துள்ளார்.

சென்கிளயர், மெரயா, மட்டுக்கலை பகுதிகளில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

” அன்று மக்கள் குடியிரிமையின்றி நாடற்றவர்களாக காணப்பட்டபோது குடியுரிமை, வாக்குரிமை வாங்கி கொடுத்து தலைநிமிர்ந்து நடக்க வைத்தது இ.தொ.கா. அதை வைத்துக்கொண்டு நேற்று மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் இ.தொ.காவை விமர்சனம் செய்கின்றனர்.

80 வருடமாக மக்களுக்கு இ.தொ.கா செய்ததை பட்டியலிட்டால் அது பல பாகங்களை கொண்ட புத்தமாக வெளிவரும்.அதை தெரியாதவர்கள் என்ன செய்தார்களென கேட்கின்றனர். ஒவ்வொரு ஊரிலும் ஏதோ விடயத்தை இ.தொ.கா செய்துள்து.அதனால் தான் மக்கள் இன்றும் இ.தொ.காவுடன் காணப்படுகின்றனர்.இ.தொ.கா என்பது வெறும் பேச்சு அல்ல அது மக்களின் மூச்சு.” – என்றார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

4 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளேன் – திகா

” மலையகத்தில் கடந்த நான்கரை வருட காலமாக பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளேன், தனிவீடுகள் கட்டிக் கொடுத்துள்ளேன், காணி உரிமை பெற்றுக்கொடுத்துள்ளேன், உறுதிப்பத்திரம் பெற்றுக்கொடுத்துள்ளேன்,காபட் வீதிகளை அமைத்துக் கொடுத்துள்ளேன், பிரதேச சபைகளை அதிகரித்துள்ளேன், அதிகார சபையினை உருவாக்கியுள்ளேன். ஆனால் இன்று மலையத்தில் எவ்வித அபிவிருத்தியினையும் மேற்கொள்ளாதவர்கள் வாய்க்கூசாமல் பொய் கூறுகின்றனர்.”

-இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

லிந்துலை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” மலையகத்தில் இன்று 4000 வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளேன். அதில் 2000 வீடுகளைப் பயனாளிகளிடம் ஒப்படைத்துள்ளேன்,2000 வீடுகள் கட்டி முடித்த போதிலும் அவற்றை இன்னும் தண்ணீர் ,மின்சாரம் இல்லாத காரணத்தினால் ஒப்படைக்கவில்லை. அதனை எனக்குப் பின் வந்த அமைச்சர்கள் செய்திருக்க வேண்டும்.

சஜீத் பிரேமதாச அவர்கள் தோல்வியடைந்தவுடன் எனது அமைச்சுப்பதவிகள் இல்லாது போனது. அதனால் எனது அபிவிருத்தி தொடர முடியாது போனது.நான் லயத்தில் பிறந்த காரணத்தினால் எனக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும் அதனால் எனது காலத்தில் உங்களுக்கு உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுத்துள்ளேன்.

நான் செய்த சேவைகள் என்னவென்று ஒரு பத்திரிகை மூலம் உங்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளேன். ஆனால் இன்று ஒரு சிலர் ஏ4 சீட்டில் தங்களது இலக்கத்தை மட்டும் கொடுத்துள்ளார்கள். ஆகவே உங்களுக்கு யார் சேவை செய்தார் என்பது நன்கு தெரியும். அதே நேரம் இந்த அரசாங்கம் வந்த பின் விலைவாசிகள் அதிகரித்துள்ளது.

தமிழ் பிரதிநிதித்துவத்தினை இல்லா தாக்கப்பார்க்கிறது.நமக்குத் தமிழ் பிரதிநிதித்துவம் இருந்தால் மாத்திரம் தான் நமது பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் கதைக்கலாம். எங்களிடம் அதிகாரம். இருந்தால் தான் தோட்ட நிர்வாகமும் பொலிஸ் அதிகாரிகளும் பயப்படுவார்கள். ஆனால் இன்று மலை மலையாக வந்து வாய் கூசாமல் பொய் சொல்லுகிறார்கள். ” – என்றார்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

2023- உலக கிண்ண தொடருக்கான தகுதிகான் போட்டிகள் நாளை மறுதினம் ஆரம்பம்!

2023 ஆம் ஆண்டு உலக கிண்ண தொடருக்கான தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று ஐ.சி.சி. நேற்று அறிவித்தது.

13ஆ வது ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) ஒருநாள் சூப்பர் லீக் என்ற பெயரில் கணக்கிடப்படும் தொடரில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் முழு உறுப்பினர்களான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் 2015-17ஆம் ஆண்டில் நடந்த உலக சூப்பர் லீக் போட்டியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து ஆகிய 13 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் தலா 4 ஒருநாள் போட்டி தொடரில் விளையாட வேண்டும். ஒவ்வொரு தொடரிலும் 3 ஒருநாள் ஆட்டங்கள் இடம் பெறும். இதன்படி ஒரு அணி மொத்தம் 24 ஒருநாள் போட்டியில் விளையாடும்.

ஒவ்வொரு வெற்றிக்கும் 10 புள்ளியும், கைவிடப்பட்ட ஆட்டம், முடிவு இல்லை மற்றும் ‘டை‘யில் முடிந்த ஆட்டத்துக்கு தலா 5 புள்ளியும் வழங்கப்படும். இந்த போட்டி தொடரின் முடிவில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் போட்டியை நடத்தும் இந்தியா ஆகியவை நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

சூப்பர் லீக் போட்டியில் தகுதி இலக்கை எட்டாத 5 அணிகள், 5 அசோசியேட் நாட்டு அணிகளுடன் இணைந்து உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் மோத வேண்டும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டியின் எஞ்சிய 2 தகுதிக்கான இடங்களை தனதாக்கும்.

2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் ஒருநாள் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த போட்டியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் உலக கோப்பை தகுதிக்கான ஒருநாள் சூப்பர் லீக் போட்டி வருகிற 30 ஆம் திகதி  தொடங்கும் என்று (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது.  முதல் போட்டியில் இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

சி.எஸ்.கேயின் வெற்றி வேட்டை தொடருமா?

0
ஐ.பி.எல்.தொடரில் இன்று நடைபெறும் 27 ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் இன்று (18) மோதுகின்றன. இப்போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும். சன்ரைசர்ஸ்...

ஆர்.சி.பியின் வெற்றிநடை தொடருமா?

0
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இப்போட்டி...

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம்

0
உலகின் செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலகின் 24 ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்து கணிப்புகளின் அடிப்படையிலேயே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற...