Home Blog Page 3948

கைதுக்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி ரிஷாட் மனு தாக்கல்

கைதுக்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், நேற்று (16) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோரூடாக இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அடிக்கடி மேற்கொள்ளப்படும் விசாரணைகளாலும், கைதுக்கான முயற்சிகளினாலும் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்கள் தனக்கு ஏற்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவரென்ற வகையில், இன்றைய தேர்தல் சூழலில் பல வேலைப்பாடுகள் உள்ளன. அடிக்கடி என்னைக் கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவது, எனது தேர்தல் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றது. மேலும், தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளதால், பல கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டியுள்ளது.

இதற்கு முன்னரும் அடிக்கடி என்னை விசாரணைக்கு அழைத்தனர். கடைசியாக பத்து மணி நேரம் நான் விசாரிக்கப்பட்டேன். இவ்வாறான செயற்பாடுகளால் எனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தப்படுவதாகவே நான் உணர்கிறேன்.

என்னை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும், நாடாளாவிய ரீதியில் எமது கட்சிக்குக் கிடைக்கவிருக்கும் ஆசனங்களை குறைப்பதற்காகவுமே, இவ்வாறான திட்டமிட்ட சூழ்ச்சி நடைபெறுவதாக நான் கருதுகிறேன். எனவே, இந்தக் கைது முயற்சிகளைத் தடுத்து நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில், வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், கைத்தொழில் அபிவிருத்தி சபையூடாக “கொலொஸஸ்” நிறுவனத்திற்கு செப்பு விநியோகித்தமை பற்றி விசாரிக்கவே, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவரை அழைத்துள்ளதாகத் தெரியவருகிறது.

தனி வீட்டு திட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு திகா சாட்டையடி

மலையகத்துக்கான தனிவீட்டுத் திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் சிலர் போலிப்பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

சாமிமலை, மாக்கொல தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கட்சி மற்றும் தொழிற்சங்க பேதமின்றியே மலையகத்துக்கான தனி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. எவ்வித பாகுபாடுமின்றியே வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. ஆனால், வீடமைப்பு திட்டம் தொடர்பில் சிலர் வீண் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

தனது தாத்தாவும், அப்பாவும்தான் வீடமைப்பு திட்டத்தை கொண்டுவந்தனர் என ஒருவர் கூறுகிறார். சந்திரசேகரனின் பெயரையும் உச்சரிக்கின்றனர். கடந்த காலங்களில் சந்திரசேகரனின் பெயரை குறிப்பிடாதவர்கள் இன்று வாக்குகளுக்காக அவ்வாறு செய்கின்றனர்.

நில உரிமை தொடர்பில் கதைக்கின்றனர். நான் போராடாமலேயே எமது மக்களுக்கு நில உரிமையினை பெற்றுக்கொடுத்தேன். 80 வருடங்களாக ஒரு பேட்டைகூட அமைக்காதவர்கள், இனி கைத்தொழில் பேட்டைகள் கொண்டுவரப்போகின்றார்களாம்.

எதிர்வரும் 6 ஆம் திகதி நாமே வெற்றிபெறுவோம். நான் அமைச்சராவேன். மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பேன்.” – என்றார்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

‘தேயிலை தொழிற்சாலைகளுக்கு ஒருவாரம் காலக்கெடு’

மத்திய மாகாணத்தில் உற்பத்தியை நிறுத்தியுள்ள தேயிலை தொழிற்சாலைகள் தொடர்பில் உரிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து ஒரு வார காலத்திற்குள் அந்த தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தேயிலை சபைக்கு ஆலோசனை வழங்கினார்.

13 தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்திகளை நிறுத்துவது குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் வழங்கப்படக்கூடிய தீர்வு தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு இன்று (2020.07.17) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.

இதன்போது, மத்திய மாகாண தேயிலை தொழிலாளர்கள் கூறியதாவது, உரிய சோதனையின்றி மத்திய மாகாணத்தில் 13 தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கு தேயிலை சபை நடவடிக்கை எடுத்துள்ளமையினால்  சுமார் ஒரு இலட்சம் பேர் வரையிலானோர் இதுவரையில் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இக்காரணத்தினால் உரிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து அந்த தொழிற்சாலைகளின் உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண தேயிலை தொழிலாளர்கள் இதன்போது பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த தேயிலை தொழிற்சாலைகள் தொடர்பில் தனித்தனியாக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து கூடிய விரைவில் தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரினால் தேயிலை சங்கத்தின் தலைவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அதேபோன்று சட்டவிரோதமான முறையில் தேயிலை உற்பத்திகள் தொழிற்சாலைகளுக்குள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

‘மலையக மக்கள் எனது மக்கள் – அவர்களுக்கான சம்பள உயர்வை நான் தடுக்கவில்லை’

பெருந்தோட் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்குவதற்கு எந்த இடத்திலும் நான் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை வேட்பாளருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” பெருந்தோட்ட தொழிலாலாளர்களுக்கு 750 ரூபா கிடைக்கின்றது. இத் தொகையுடன் இன்னும் 250 ரூபா சேர்த்து  கொடுப்பதற்கு நான் எங்குமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
நான் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இருந்தப்படியால் கடந்த 2016 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது அமைச்சியின் கீழ் இயங்கும் தேயிலை சபை மூலம் 500 மில்லியன் ரூபா கடனாக பெற்றுக் கொடுத்தேன்.
அது மாத்திரமில்லாமல் 50 ரூபா பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக மேலும் 600 மில்லியன் ரூபா ஒதுக்கினேன். அந்த வேளையின் போது நாட்டில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் ஆட்சி மாற்றதை சர்வாதிகாரமாக கொண்டுவந்ததால் அந்த பணம் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாமல் போய்விட்டது.இந்த விடயம் திகாம்பரத்திற்கும் நன்கு தெரியும்.
அரசியல் இலாபம் பெறுவதற்ககாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக திகாம்பரம் கூறி வருகின்றார்.
மலையக மக்கள் எனது மக்கள் அவர்கள் தமிழராக இருதாலும் சரி சிங்களவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் எனது தொகுதி மக்கள் அவர்களுக்கு 250 ரூபா சம்பளம் அதிகரித்தால் நான் ஒரு பௌத்தன் என்ற ரீதியில் மகிழ்ச்சியடைவேன்.
அத்தோடு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை தீர்மானிப்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியதோட்ட தொழிலாளர் சங்கமும் தொழிற்சங்க கூட்டமைப்பும் முதலாளிமார் சம்மேளனமும் செய்துக்கொள்ளும் கூட்டு ஒப்பந்தம் மூலமேசம்பள உயர் தீர்மானிக்கப்படும்.அந்த கூட்டு ஒப்பந்தத்தில் திகாம்பரம் இல்லை.
அவர் வேண்டுமானால் அவரின் தொழிற்சங்க அங்கத்தினரின் பலத்தை பயன்படுத்தி சட்ட ரீதீயாக இவ் ஒப்பந்தத்தில் இணைந்துக் கொள்ளலாம். நான் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டும் . என முதலாளிமார் சம்மேளனத்திற்கு கோரிக்கை முன் வைத்தேன். கூட்டு ஒப்பந்தத்தின் மூலமே தீர்மானிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
திகாம்பரம் அரசியல் இலாபம் தேடுவதற்காக என் மீது சேரு பூசுகின்றார். நான் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர் களுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்துள்ளேன்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பீடம் என்னை இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவராக நியமித்துள்ளது. இதன்படி  எதிர்வரும் கூடுஒப்பந்தத்தில் கலந்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயமாக சகோதர பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.என கூறினார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் கைது!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன், ஹட்டன் பொலிஸாரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட கொடுக்க, வாங்கலொன்று தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே இக்கைது இடம்பெற்றுள்ளது.

சிவநேசன் கைது செய்யப்பட்டுள்ளதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

சிவநேசன் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் என்பதுடன் இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சைக் குழு 7இல் களமிறக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின் கவனம் திரும்பியுள்ளது.

கருத்து கணிப்பில் செந்தில் 80 வீதத்தால் முன்னிலை!

இம்முறைப் பொதுத் தேர்தலில், பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் ஐந்து தமிழ் வேட்பாளர்களில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் செந்தில் தொண்டமான், முன்னிலையில் உள்ளார் என்று, கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது என ‘தமிழ்மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சமூக அபிவிருத்தி மன்றம், ஊவா மாகாணத் தமிழ்ப் பட்டதாரிகள் ஒன்றியம், தமிழ் யூனியன், நாளைய மலையகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, பதுளை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகளிலேயே, செந்தில் தொண்டமான் முன்னிலையில் உள்ளார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, சமூக அபிவிருத்தி மன்றம், கந்தேகெதரை நகரத்தை அடிப்படையாகக் கொண்ட 15 தோட்டங்களில் மேற்கொண்ட ஆய்வில், செந்தில் தொண்டமான் 81 சதவீதமளவில் முன்னிலையிலுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஊவா மாகாணத் தமிழ்ப் பட்டதாரிகள் ஒன்றியம், ஒன்றியத்திலுள்ள 400 உத்தியோகத்தர்களிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பிலும், அவர் 81 சதவீதம் முன்னிலையிலுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தமிழ் யூனியன் அமைப்பானது, தபால்மூல வாக்களிப்பில் ஈடுபட்ட 1,476 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் 82 சதவீதத்தில் செந்தில் முன்னிலையிலுள்ளார்.

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில், நாளைய மலையகம் மேற்கொண்ட ஆய்வில், செந்தில் தொண்டமான் 79 சதவீதமும் தொலைபேசிச் சின்னம் 12 சதவீதமும், யானைச் சின்னம் 6 சதவீதமும், மக்கள் விடுதலை முன்னணி 2 சதவீதமும், சுயேச்சை குழுக்கள் 1 சதவீதமும் பெற்றுள்ளன.

மலையக சகவாழ்வு சங்கம் மேற்கொண்ட ஆய்வில், 81.6 சதவீதமளவில் செந்தில் தொண்டமான் முன்னிலையிலுள்ளார். ” – என்றுள்ளது.

அதேவேளை, அரச புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட கருத்து கணிப்பிலும் செந்தில் தொண்டமானே முன்னிலை வகிப்பார் என தெரியவந்துள்ளது.

‘கொவிட் -19’ இலங்கையில் மேலும் ஐவர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 05 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,O12 ஆக அதிகரித்துள்ளது.

664  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 12 ஆக இருக்கின்றது.

பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எடுத்துள்ள முடிவு

‘கொரோனா’ வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் தமது தொழிற்சங்கம் இன்று மதியம் 12.30வுடன் விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சு உரிய தீர்வுகளை முன்வைக்காதலால் அதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் 1 கோடியே 39 லட்சம் பேருக்கு கொரோனா பரவியது!

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 39 லட்சத்து 53 ஆயிரத்து 344 ஆக அதிகரித்து உள்ளது.

இவர்களில் 82 லட்சத்து 85 ஆயிரத்து 183 பேர் குணமடைந்துள்ளனர். 50 லட்சத்து 75 ஆயிரத்து 383 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 59 ஆயிரத்து 900 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5 லட்சத்து 92 ஆயிரத்து 778 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

‘வாக்களிக்க விடுமுறை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் தொடர்பில் முறையிடவும்’

வாக்களிப்பதற்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து விடுமுறை பெறுவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் தம்மிடம் முறைப்பாடு செய்யுமாறு மக்களிடம் கஃபே அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கஃபே அமைப்பின் முறைப்பாட்டு பிரிவு, குறித்த முறைப்பாடுகளை ஏற்குமென அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இன்று (17.07.2020) அறிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு தேர்தலிலும் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வாக்குரிமையை மீறுகின்றன என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இது ஒரு பாரதூரமான நிலையென குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம், தாம் வாழும் பிரதேசத்திற்கு ஏற்ப விடுமுறையை பெற்றுக்கொள்வது ஊழியர்களின் உரிமையென குறிப்பிட்டுள்ள அஹமட் மனாஸ், அதற்கேற்ப நிறுவனங்களின் தலைவர்கள் தமது ஊழியர்களுக்கு கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டுமென  சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில், விடுமுறை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கஃபே அமைப்பு செயற்படுவதாகவும், ஆகவே அவ்வாறான முறைப்பாடுகளை 0114341524 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது 0112866224 என்ற தொலைநகல் (FAX) இலக்கத்தின் ஊடாக அல்லது info@caffesrilanka.org மின்னஞ்சல் ஊடாக கஃபே அமைப்பின் முறைப்பாட்டு பிரிவுக்கு அறிவிக்குமாறு அஹமட் மனாஸ் மக்கீன் கோரியுள்ளார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை Pope Leo தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் தொடர்பான திருத்தந்தை லியோவின் கருத்துக்களை...

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...