Home Blog Page 3949

‘மலையக சமுகமாற்றத்துக்கான திட்டங்கள் முன்வைக்கப்படும்’

” பெருந்தொட்டத்  தொழிலாளர்கள் உட்பட மலையகத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவ்வாறு குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால அடிப்படையில் தீர்க்கலாம் என்பது தொடர்பான யோசனைகள் அடங்கிய பொறிமுறையை தயாரித்துவருகின்றோம்.”. –  என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான வெற்றிப்பிரச்சாரத்தை, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் வேலாயுதம் தினேஷ் குமார், மக்கள் மத்தியில் உரையாற்றும்போது இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” மலையகத்தில் வாழும் மக்களின் நலன்புரி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு விசேட செயலணியொன்று அமைக்கப்படும் என்றும், பிரதமரின் நேரடி கண்காணிப்பின்கீழ் அது இயங்கும் என்றும் எனது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பை வரவேற்பதுடன், அந்த செயலணிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும். அதற்கு தயாராகவே இருக்கின்றேன்.

அட…! இவர்களால் தேர்தலில் வெற்றிபெறமுடியாது, பிறகு எப்படி செயலணி அமைப்பது என சிலர் கொக்கரிக்கலாம். ஆனால், இன்று ஐக்கிய மக்கள் சக்திக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக தென்படுகின்றது.  எனவே, சஜித் தலைமையில் நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம். நுவரெலியா மாவட்டத்திலும் வரலாற்று வெற்றியை பதிவுசெய்வோம்.

குறிப்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர், எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்தேன். தற்போது பிரச்சாரத்துக்கு சென்றால்கூட மக்களின் கருத்துகளை கோரிவருகின்றேன். இதற்கமைய குறுகிய, மத்திய மற்றும் நீண்டகால அடிப்படையில் எவ்வாறு பிரச்சினைகளை தீர்க்கலாம் என்பதற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கையை விசேட செயலணியிடம் கையளிப்பேன்.

அவற்றை செயல்படுத்துவதற்கு அழுத்தமும் கொடுப்பேன்.
சிலவேளை, மாற்று தரப்புக்கு மக்கள் ஆணைவழங்கினால்கூட ஜனாதிபதியிடம் குறித்த திட்டம் கையளிக்கப்படும்.

குளவி தாக்குதல், தொழில் பாதுகாப்பு, நியாயமான சம்பளம், சுகாதார மேம்பாடு  உட்பட சில விடயங்களை குறுகிய காலத்துக்குள் தீர்க்கலாம். இப்படி மூன்று கட்டத்துக்குள் தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டு, விஞ்ஞானப்பூர்வமான அதற்கான பொறிமுறை தயாரிக்கப்படும்.

 எனவே, தூரநோக்கு சிந்தனையும் தொலைநோக்கு பார்வையும் எம்மிடம் உள்ளது. சமுக மாற்றத்துக்காக எமது திட்டங்களை அமுல்படுத்துவதற்கு மக்கள் ஆணை வழங்கவேண்டும்.” – என்றார்

‘நல்லாட்சியில் மலையகம் புறக்கணிப்பு’

மலையகத்தில் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் எத்தனை வீடுகளை மக்களுக்கு கையளித்தது – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

மலையக இளைஞர்களுக்கு எத்தனை அரச வேலைவாய்ப்புகளை வழங்கினார்கள்? அரச வேலைவாய்ப்புகளில் மலையக இளைஞர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டனர், எவ்விதமான காத்திரமான அபிவிருத்திகளும் மலையகத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

இப்படியிருக்கையில் அவர்களுக்கு எந்த நம்பிக்கையில் மீண்டும் மக்கள் வாக்களிப்பார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தலவாக்கலை பி.கேதீஸ்

‘தேசிய அரசாங்கம் அமைக்கும் எண்ணம் இல்லை’ – மொட்டு கட்சி

பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கும் எண்ணம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது என்று கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில்  நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தொடர்பில் அரசாங்கம்மீதும், சுகாதார அமைச்சர்மீதும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டிவருகின்றார். மறுபுறத்தில் திசைதெரியாமல் தேசிய மக்கள் சக்தியின் பயணம் தொடர்கின்றது. தேர்தலின் பின்னர் தேசிய அரசு அமையும் என விமர்சிக்கின்றனர்.

ஆனால் நாம் தேசிய அரசு அமைக்கமாட்டோம். அதற்கான தேவையும் ஏற்படாது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையே எமது இலக்காக இருக்கின்றது. அதற்கேற்ற வகையிலேயே வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இலக்கை அடைவோம். எமது அணியின் பங்களிப்புடன் ஆட்சியமைப்போம்.

அதேவேளை, கொரோனா 2ஆவது அலை ஏற்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார். கத்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கொத்தணி பரவலே ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்துவோம்.” – என்றார்.

‘கிளங்கன் வைத்தியசாலைக்கு கிளினிக் வருவோருக்கு பெரும் சிரமம்’

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் கிழமை நாட்களில் கிளினிக் வைத்திய பரிசோதனைகளுக்கு வருவோர் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பெருந்தோட்ட மக்களின் வைத்திய சேவைக்காக நிர்மாணிக்கப்பட்டதே கிளங்கன் ஆதார வைத்திய சேவையாகும். இருப்பினும் இவ் வைத்தியசாலையில் மக்கள் பரிசோதனைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வைத்திய பரிசோதனைக்காக விடியற்காலை 4.00 மணிக்கு வந்தாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது நாட்டில் நிலவி வரும் கொரோனா வைரஸ் தாக்கமும் தங்களுடைய வைத்திய பரிசோதனைகளுக்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்திய பரிசோதனையின் போது இடம்பெறும் கெடுபிடிகளால் உரிய முறையில் வைத்திய பரிசோதனைகளையும் பெற்றுக்கொள்ள முடியாது ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகவும் கவலைத்தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையின் சுற்றுபுறத்தில் துர்நாற்றம் வீசுவதால் நீண்ட நேரம் இருக்க முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆதலால் தாம் எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு ஒன்றை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

எட்டுத் திக்கிலும் ஜீவனுக்கு பெருகிவரும் பேராதரவு! வர்த்தக சமுகமும் சங்கமம்!!

மலையகத்தில் மாற்றத்தையும் – மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடிய அத்தனை தலைமைத்துவ பண்புகளும் ஜீவன் தொண்டமானிடம் இருக்கின்றன என்றும், எனவே, அவரின் வீறுகொண்ட அரசியல் பயணத்துக்கு மலையக மக்கள் முழு ஆதரவையும் வழங்கவேண்டும் என்றும் மலையக வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் அண்மைக்கால அறிவிப்புகளானவை, எதிர்கால மலையகம் சிறப்பாகவும், வளம்மிக்கதாகவும் இருக்கும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுத்தேர்தலுக்கான வெற்றிப்பிரச்சாரத்தில் வேங்கைவேகத்தில் ஈடுபட்டுவரும் ஜீவன் தொண்டமானுக்கு எட்டுதிக்கிலும் பேராதாவு பெருகிவருகின்றது. இந்நிலையில் மலையகத்திலுள்ள பல வர்த்தக அமைப்புகள் அவருடன் கைகோர்த்துள்ளன. குறிப்பாக இளம் தொழில் முயற்சியாளர்களும் தமது பூரண ஆதரவை ஜீவனுக்கு வழங்கியுள்ளனர்.

எதற்காக ஜீவனுக்கு இந்த ஆதரவு என்பதை தெளிவுபடுத்திய வர்த்தகர்கள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு,

” மலையக சமுகம் தொடர்ந்தும் பின்னடையாக இருப்பதற்கான காரணங்களை ஜீவன் தொண்டமான் அடையாளம் கண்டுள்ளார் என்பதை அவரின் உரைகள் உணர்த்துகின்றன. அத்துடன், அத்தடைகளை எவ்வாறு தகர்க்கலாம் என்பதற்கான திட்டங்களையும், யோசனைகளையும் அவர் முன்வைத்துவருகின்றார். ஆக, அவரது அரசியல் பயணத்தில் தூரநோக்கு சிந்தனையும், தொலைநோக்கு பார்வையும்  இருப்பதை காணமுடிகின்றது.

அதுமட்டுமல்ல  மலையகத்துக்கு எவ்வாறானதொரு தலைமைத்துவம் வேண்டுமோ – அதற்கேற்ற வகையில் தன்னை செலுக்கும் பொறுப்பு என் சொந்தங்களான மலையக மக்களுக்கு இருப்பதாக ஜீவன் அறிவித்துள்ளமை, காங்கிரசுக்கும்,  மக்களுக்குமிடையில் உள்ள நெருக்கமான உறவை பிரதிபலிக்கின்றது என்பதுடன், தான் மக்களுக்கான அரசியலையே நடத்தப்போகின்றேன் என்ற உத்தரவாதத்தையும் ஜீவன் இதன்மூலம் வழங்கியுள்ளார்.

இப்படியான வாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஆகவே, அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியம், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வீரம் ஆகியவற்றுடன் புத்தாக்க சிந்தனைகளையும் உள்வாங்கி, புதுயுகம் நோக்கி மலையக சமுகத்தை ஜீவன்  தொண்டமான் அழைத்துசெல்வார் என்பதை அவரின் செயற்பாடுகள் உறுதிப்படுத்திவிட்டன. இதன்காரணமாகவே மாற்றத்தின் பங்காளிகளாக நாமும் இணைந்துள்ளோம்.

தற்போது தபால்மூல வாக்களிப்புகள் இடம்பெற்றுவருகின்றன. மலையகத்திலுள்ள பல அரச ஊழியர்கள் இ.தொ.கா. வேட்பாளர்களை ஆதரித்துள்ளனர். அவர்களுடன் கலந்துரையாடும்போது இந்த விடயம் தெரியவந்தது. இனிவரும் நாட்களிலும் அரச ஊழியர்கள் பேராதரவை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றனர்.

கட்சி செயலாளர்களை இன்று சந்திக்கிறார் மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்  ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) நடைபெறவுள்ளது.

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்குரிமையை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பிலும் அதற்கான வழிமுறைகள் சம்பந்தமாகவும்  இதன்போது ஆராயப்படவுள்ளது.
அதேவேளை, ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன், சில  பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவும் பட்சத்தில், அப்பகுதி முடக்கப்டுமானால்  அப்பகுதிகளுக்கு பிரிதொரு நாளில் தேர்தல் நடத்தப்படும். ஆனால், அவ்வாறானதொரு நிலை ஏற்படாது என நம்புகின்றோம் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரியில் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தும் பெரும்பான்மையினர் – ஆனந்தகுமார் ஆவேசம்

இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தனது கள பிரசார நடவடிக்கைகளை இன்று அதிரடியாக ஆரம்பித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் எல்லை பகுதியான பனில்கந்த பகுதிக்கு சென்ற எஸ்.ஆனந்தகுமார், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

பனில்கந்த பகுதி மக்களுக்கு இதுவரை எந்தவித தீர்வையும் வழங்க தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தவறிவிட்டதாக அந்த பகுதி மக்கள் கவலை வெளியிட்டனர்.

இந்த நிலையில், தமக்கான குரலாக பிரதிநிதியொருவர் வருகைத்தந்ததை வரவேற்ற பனில்கந்த மக்கள், தமக்கான பிரச்சினைகளையும் எடுத்துரைத்தனர்.

விடயங்களை ஆராய்ந்த எஸ்.ஆனந்தகுமார், தீர்வு திட்டங்கள் நிறைவேற்றப்படும் விதத்தையும் மக்களுக்கு தெளிவூட்டியிருந்தார்.

இதையடுத்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய எஸ்.ஆனந்தகுமார், பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பை தான் உறுதி செய்வதாக கூறினார்.

பல தசாப்த காலமாக தாம் விளையாடிய மைதானத்தை தற்போது பெரும்பான்மை சமூகம் தன்வசப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மைதானத்தில் பெரும்பான்மை சமூகம் மரக்கன்றுகளை நட்டு, தமது மைதானத்தை கையகப்படுத்தி கொண்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், லயின் வீட்டுத் திட்டங்களின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் மக்கள் எஸ்.ஆனந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல எஸ்.ஆனந்தகுமார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதிகாரிகள் பெரும்பான்மை சமூகத்திற்கு ஆதரவாக கருத்துரைக்க ஆரம்பித்த நிலையில், எஸ்.ஆனந்தகுமார் அவேசப்பட்டு அதிகாரிகளை உரிய முறையில் செயற்படுமாறு வலியுறுத்தியிருந்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது உரிமைகளை விட்டு கொடுக்க வேண்டாம் என கூறிய அவர், தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள போராடுமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் உரிமைகளை இழந்த தமிழ் சமூகத்தின் பாதுகாப்பிற்காக போராடும் மக்களின் பின்புலத்தில் என்றும் தான் இருப்பதாக இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் உறுதியளித்தார்.

தமிழ் மக்களின் மனங்களை நிச்சயம் வெல்வோம் – நாமல்

” போரில் இருந்து வடக்கை மீட்டுவிட்டோம். அடுத்ததாக இன ரீதியான அரசியல் பிடிக்குள் இருந்தும் வடக்கை மீட்டெடுக்கவேண்டும். வடக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கு எமக்கும் இன்னும் காலம் எடுக்கும். அதுவரையில் பொறுமைகாப்போம். ஆனால், நம்பிக்கையை பெறுவதற்கான போராட்டத்தை கைவிடமாட்டோம்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் வடக்குக்கு சென்றுவருகின்றீர்கள். இளைஞர்களை சந்திக்கின்றார். அப்படி இருந்தும் ஏன் இன்னும் அங்கு வாழும் இளைஞர்களின் ஆதரவை பெறமுடியாதுள்ளது என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

“தெற்கு இளைஞர்களுக்கு இணையானவர்களே வடக்கு இளைஞர்களும். அவர்களிடம் நான் வித்தியாசத்தை காணவில்லை. தேசிய கட்சியொன்றுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பை முதலில் நாம் அவர்களுக்கு வழங்கவேண்டும். ஜனாதிபதித்தேர்தலின்போது மாத்திரமே அந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே வாக்குகளை பெற முயற்சிக்கப்படுகின்றது. மைத்திரிபால சிறிசேனவும், சஜித் பிரேமதாசவும் அவ்வாறே வாக்குகளைப்பெற்றனர்.

எமக்கு 6 அல்லது 8 வீதம் கிடைத்தாலும் பரவாயில்லை, தனிவழியில் செல்லவேண்டும் என்ற முடிவில் இருக்கின்றோம். எனவே, தேசிய நீரோட்டத்துக்குள் சங்கமிப்பதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்கவேண்டும். வாக்கு கிடைக்கவில்லை என்பதற்காக முயற்சியை கைவிடக்கூடாது.

உதாரணமாக ஜே.வி.பி இளைஞர்களை ஐக்கிய தேசியக்கட்சி கொன்றது. அவ்வாறு செய்த ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே.வி.பியும் இணைவதற்கு 30 ஆண்டுகள் எடுத்தன. இருதரப்புகளும் இணைந்துசெயற்படவில்லை எனக்கூறமுடியாது. கடந்தகாலங்களில் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவாகவே ஜே.வி.பி. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளனர்.

2 ஜனாதிபதி தேர்தல்களில் ஐ.தே.க. பக்கம் நின்றனர். ஆனாலும் இதற்கு 30 ஆண்டுகள் எடுத்தன. எமது அரசியல் பயணத்துக்கு வடக்கு மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு 30 ஆண்டுகள் எடுக்கும் என நாம் கூறவில்லை. அதற்காக தொடர்ந்தும் முயற்சிக்கவேண்டும்.

குறிப்பாக டயஸ்போராக்கல் இன்னும் தனி நாட்டுக்காக குரல் எழும்பும் நிலையிலும்,, தெற்கிலுள்ள தேசிய கட்சி வடக்கில் அரசியல் செய்யாத நிலையிலும்கூட எமக்கு 10 வீத வாக்ககள் கிடைக்கின்றது. எனவே, வடக்கை கைவிடவேண்டாம் என தெற்கிலுள்ள கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இனரீதியிலான அரசியல் இருக்கவில்லை. தேசிய அரசியலே அங்கு முன்னெடுக்கப்பட்டது. எனவே, தேசிய நீரோட்டத்தில் அவர்களை சங்கமிக்கவைப்பதற்கு வாய்ப்பு வழங்கவேண்டும். எனவே, வடக்கு அரசியலை கைவிடவேண்டாம் என கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

‘கணவன் எனக்கூறி கள்ள காதலனை கொரோனா முகாமில் தங்க வைத்த பெண் பொலிஸ் அதிகாரி’

பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர், ஏற்கனவே திருமணம் ஆன நபரை தன் கணவர் என கூறி கொரோனா தடுப்பு மையத்தில் தன்னுடன் தங்க வைத்து நாடகம் ஆடி உள்ளார்.

இந்தியாவின், மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அனைத்து காவல்துறையினரும் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் சில பொலிஸ் அதிகாரிகள் அவர்களது குடும்பதினருடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அப்படி தனிமைப்படுத்தப்படும்போது அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தனது கணவருக்கும் கொரோனா இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால், அவரையும் தன்னுடன் தனிமைப்படுத்த வேண்டும் என மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

பெண் பொலிஸ் அதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையில் தபால் துறையில் வேலை பார்த்து வந்த ஒருவரை அழைத்து வந்து கொரோனா தடுப்பு முகாமில் பெண்  தனிமைப்படுத்தினர்.

இதற்கிடையில், பஜாஜ் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் தனது கணவருக்கு கொரோனா உள்ளது என கூறி மருத்துவமனை ஊழியர்கள் அழைத்து சென்று உள்ளனர். ஆனால், அவர் பெண் பொலிஸ் ஒருவருடன் கொரோனா தடுப்பு முகாமில் உள்ளார் எனவும், அவரை மீட்டுத்தரவேண்டும் எனவும்  மனு கொண்டுத்தார்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், கொரோனா தடுப்பு முகாமில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரிக்கு திருமணம் ஆகவில்லை என்பதை கண்டுபிடித்தனர். மேலும், அவருடன் கொரோனா முகாமில் உள்ள நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதையும், இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் காதலித்து குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த ஆண்டு நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியின் போது பெண் பொலிசுக்கும், அந்த தபால் துறையில் வேலை செய்து வந்த நபரும் சந்தித்துள்ளனர் அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

தனது கணவர் பெண் பொலிசுடன், தனியாக குடும்பம் நடத்தி வந்தது அந்த நபரின் மனைவிக்கு தற்போது தான் தெரிய வந்ததுள்ளது.

இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்தையடுத்து பெண் பொலிஸ் அதிகாரியும், அவரது ரகசிய காதலனும் வெவ்வேறு கொரோனா தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

‘வாக்கு உங்கள் பலம் – மலையக எதிர்காலத்துக்காக அதனை பயன்படுத்தவும்’

பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெற்று, சஜித் பிரேமதாச பிரதமரானால் மாத்திரமே இந்த நாட்டில் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்ககூடிய ஒரே தலைவர் சஜித்தான். அவர் பிரதமரானால் மாத்திரமே நம்மால் நிம்மதியாக வாழமுடியும்.

தோட்டத்தில் பிறந்து, வளர்ந்து மக்களின் கஷ்டங்களை புரிந்துகொண்ட ஒருவர்தான் தலைவராக வரவேண்டும் என தொடர்ச்சியாக கூறிவருகின்றேன். எமது சங்கத்துக்கும் அப்படியானவர்தான் தலைவராக வருவார். நான் தோட்டத்தில் பிறந்து, மக்களோடு மக்களாக வாழ்ந்து, வளர்ந்தவன்.

வாக்கு என்ற பலம் உங்களிடம் உள்ளது. அந்த பலம்தான் மலையகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்றது. எனவே, சேவை செய்யக்கூடியவர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.

 

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை Pope Leo தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் தொடர்பான திருத்தந்தை லியோவின் கருத்துக்களை...

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...