Home Blog Page 3951

1989 முதல் 2015 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள்!

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பரப்புரைக் கூட்டங்களை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியிருந்தாலும் அந்த கட்டளையை கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் ஏற்று – செயற்படுவதை காணமுடியவில்லை.

கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டது என முன்னதாக அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்தாலும், இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால், சுகாதார நடைமுறைகளுக்கு முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்கியே தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் தேர்தலுக்கான மொத்த செலவு ஆயிரம் கோடி ரூபாவைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 196 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 682 பேரும், சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 3 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 7 ஆயிரத்து 452 பேர் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் தகதிப்பெற்றுள்ளனர். இதில் எத்தனைபேர் வாக்களிப்பார்கள் என்பதை சரியாக கணித்துகூறமுடியாது. அதேபோல் அளிக்கப்படும் வாக்குகளில் எத்தனை வாக்குகள் நிராகரிக்கப்படும் என்பதையும் ஊகிக்கமுடியாது.

ஆனால், கடந்த காலங்களில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் தொடர்பான விபரத்தை பார்ப்போம்.

இலங்கையர்களுக்கு 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. இதன்படி இலங்கையின் முதலாவது அரசுப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 1931 ஜுன் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை நடைபெற்றுள்ளது.

1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு, அவர் அங்கம் வகிக்கும் கட்சிக்கான நிறத்தின் அடிப்படையிலேயே வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.1947 ஆம் ஆண்டுதான் அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களுக்கும் தேர்தல் சின்னங்கள் வழங்கப்பட்டு, தொகுதிவாரி முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது.

எனினும், 1978 இல் தொகுதிவாரிமுறைமாறியது. விகிதாசார – விருப்புவாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றளவிலும் அந்தமுறையிலேயே தேர்தல் நடைபெற்றுவருகின்றது.

1. தேர்தல் திகதி – 1989 பெப்ரவரி 15

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 59 லட்சத்து 62 ஆயிரத்து 31 ( 63.60%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3 லட்சத்து 65 ஆயிரத்து 563 ( 6.13%)

செல்லுபடியான வாக்குகள் – 55 லட்சத்து 96 ஆயிரத்து 468 ( 93.87%)

2.1994 ஒக்டோபர் 16

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 83 லட்சத்து 44 ஆயிரத்து 95 (76.24%)

நிராகரிக்கப்பட்ட வாக்ககள் – 4 லட்சத்து 389 ( 4.80% )

செல்லுபடியான வாக்குகள் 79 லட்சத்து 43 ஆயிரத்து 706 (95.20%)

3.2000 ஒக்டோபர் 10

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 91 லட்சத்து 28 ஆயிரத்து 823 (75.62%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 481,155 (5.27 %)

செல்லுபடியான வாக்குகள் 86 லட்சத்து 47 ஆயிரத்து 668 ( 94.72% )

5.2001 டிசம்பர் 05

அளிக்கப்பட்ட வாக்குகள் – 94 லட்சத்து 49 ஆயிரத்து 813 ( 76.03% )

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4 லட்சத்து 93 ஆயிரத்து 944 ( 5.22%)

செல்லுப்படியான வாக்குகள் – 89லட்சத்து 55 ஆயிரத்து 869 ( 94.77% )

5. 2004 ஏப்ரல் 02  

அளிக்கப்பட்ட வாக்குகள் – 97 லட்சத்து 97 ஆயிரத்து 680

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5 லட்சத்து 34 ஆயிரத்து 948 

செல்லுப்படியான வாக்குகள் – 92 லட்சத்து 62 ஆயிரத்து 732

6.2010 ஏப்ரல் 08 

அளிக்கப்பட்ட வாக்குகள் 86 லட்சத்து 30 ஆயிரத்து 689 ( 61.26% )

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5லட்சத்து 96 ஆயிரத்து 972 ( 6.92% )

செல்லுபடியான வாக்குகள் – 80 லட்சத்து 33 ஆயிரத்து 717 ( 93.08%)

7.2015 ஒக்டோபர் 17 

அளிக்கப்பட்ட வாக்குகள் ஒரு கோடியே 16 லட்சத்து 84 ஆயிரத்து 98 ( 77.66%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5லட்சத்து 17 ஆயிரத்து 123  ( 4.43% )

செல்லுபடியான வாக்குகள் – ஒரு கோடியே 11 லட்சத்து 66 ஆயிரத்து 975 ( 95.57%)

வாக்கு என்பது உங்கள் பலம் – உரிமை. எனவே, அதனை முறையாக அளிக்கவேண்டியதும் உங்கள் பொறுப்பாகும்.

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற பின்னர், உங்களுக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டில் முதலில் தேர்தலில் போட்டியிடும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்துக்கு முன்னால் புள்ளடி (X) இடவேண்டும்.

அதன்பின்னர் அக்கட்சியில் போட்டியிடும் மூவருக்கு விருப்பு வாக்குகளை வழங்கலாம். வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு மேல் புள்ளடி இடவேண்டும்.

மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்தமுடியாது. நீங்கள் விரும்பும்பட்சத்தில் ஒருவருக்கு மாத்திரம் விருப்பு வாக்கை வழங்கலாம். ( அவ்வாறு வழங்கினால் மூன்று வாக்குகளும் அவருக்கு சென்றடையும் என அர்த்தப்படாது)

கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுக்கு முன்னால் புள்ளடி இடாமல் விருப்பு வாக்கு பயன்படுத்தப்படுமானால் அந்த வாக்கு நிராகரிக்கப்பட்ட வாக்காகவே கருதப்படும். மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்துவதும் பிழையான நடைமுறையாகும். புள்ளடி இடுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் இடவும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த வாக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது.

வாக்களிப்பு நிலையத்துக்கு செல்வதற்கு முன்னர் வாக்காளருக்கான அட்டை, அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ( தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு….) இருக்கின்றனவா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இம்முறை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே தேர்தல் நடைபெறுகின்றது. எனவே, முகக்கவசம் அணிந்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுங்கள். வாக்களிப்புக்காக ஒரு மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதால் இறுதிநேரம்வரை காத்திருக்காது முடிந்தளவு விரைந்துசென்று வாக்குரிமையை பயன்படுத்தவும்.

(வழமையாக காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையே வாக்களிப்பு இடம்பெறும். இம்முறை மாலை 5 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.)

எழுத்து – ஊடகவியலாளர் ஆர்.சனத்

‘2ஆம் அலை அடிக்க முன் பரிசோதனைகளை அதிகரிக்கவும்’

‘கொரோனா’ வைரஸ் பரவியுள்ளதா என்பதனை கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனைகளை உடன் அதிகரிக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,

” கொரொனா பரிசோதனைகளை அதிகரியுங்கள் என இன்று ஜனாதிபதி கூறுகிறார்.இவரென்ன மூன்று மாத உறக்கத்தில் இருந்து இன்றுதான் விழித்தாரா?

கொரொனா நோயாளிகளுடன் தொடர்பாளர்கள், இந்நாட்டில் 40,000 பேர் இருக்கிறார்கள். அவர்களை கண்டறிய உடன் பரிசோதனைகளை அதிகரியுங்கள் என மூன்று மாதங்களுக்கு முன்னரே சொன்னேன்.

அப்போது மனோ பொய் சொல்கிறார். அவரை கைது செய்யுங்கள் என ஒரு தேரர் உட்பட பலர் கத்தினார்கள்.

என்னை கைது செய்ய வரும் பொலிஸ்காரர்களை மாலை பொதூ வர்வேற்க காத்திருந்தேன். வரவில்லை.

சரி இப்போதாவது, பரிசோதனைகளை அதிகரியுங்கள். உடன் அதை செய்யுங்கள். இரண்டாம் அலை அடிக்க முன் அதை செய்யுங்கள், ஆளவந்தோரே..!” – என்றுள்ளது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை உறுதி – மொட்டு கட்சி சூளுரை!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய சில விடயங்கள் உள்ளன. எனவே, அவற்றை இல்லாதொழித்து ஒற்றையாட்சியை அடிப்படையாகக்கொண்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (15) கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது ஆளுங்கட்சி எதற்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கோருகின்றது, அதனை பெறமுடியுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு 19 தடவைகள் திருத்தப்பட்டுள்ளன. உதாரணமாக நாம் ‘சேட்’ ஒன்றை வாங்கியிருந்தோம். 19 தடவைகள் கிழிந்த இடங்களை தைத்து பாவித்துவிட்டோம். அவ்வாறு தைத்த இடங்களும் கிழிய ஆரம்பித்தால், புதிய “சேட்டை’ வாங்குவதே சிறந்த தேர்வாக இருக்கும்.

19 தடவைகள் திருத்தப்பட்டுள்ள எமது நாட்டு அரசியலமைப்பில் நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய சில விடயங்களும் உள்ளன. அவற்றை நீக்குவதற்கும், அனைத்து இன மற்றும் மத மக்களை சமமாக வாழ வைக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை ஒற்றையாட்சிக்குள் உருவாக்குவதற்கும் புதிய அரசியலமைப்பு அவசியம். இதற்கு தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்குவார்கள். இதற்கு அஞ்சியே எதிரணிகள் கூச்சலிடுகின்றன.” – என்றார்.

‘சக்திவேலின் சக்தியை காட்டுவேன்’

” அமோக வாக்கு என்ற சொல்லுக்கு அர்த்தம் இ.தொ.கா. அதில் சக்திவேலின் சக்தியை பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டும்.” – என்று காங்கிரஸின் உபத்தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான பழனி சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அக்கரப்பத்தனை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

” எங்கு சென்றாலும் இ.தொ.காவுக்கு இருக்கும் வரவேற்பு பேரானந்தத்தை கொடுக்கின்றது.அலை அலையாக மக்கள் எம்மை வரவேற்கின்றனர்.நிச்சயம் சக்திவேலின் சக்தி என்ன என்பதை பொதுத்தேர்தல் முடிவுகளில் தெரியும்.” – என்றார்.

ஒரு கோடியே 36 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 36 லட்சத்து 92 ஆயிரத்து 610 ஆக அதிகரித்து உள்ளது.  அத்துடன், கொரோனாவால் அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,92,910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 80 லட்சத்து 37 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,616 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5 லட்சத்து 86 ஆயிரத்து 839 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,15,991 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்றால் மேலும் 958 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 1,40,101 ஆக உயர்ந்து உள்ளது.

பிரேசிலில் ஒரே நாளில் 39,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 19,70,909 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனா தொற்றால் 1,261 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 75,523 ஆக உயர்ந்து உள்ளது.

தேயிலை விலை வீழ்ச்சி – சிறுதோட்ட உரிமையாளர்கள் கவலை

இரத்தினபுரி மாவட்டத்தில் பச்சை கொழுந்து ஒரு கிலோவின் விலை 105 ஆக இருந்த போதிலும் தற்பொழுது அதன் விலை 90 ரூபாவாக குறைந்து உள்ளது. இதனால் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கில் பல கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கொவிட்-19 (கொரோனா) வைரஸ் நிலைமையின் பின்னர் இம்மாவட்டத்தில் 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பச்சை கொழுந்து ஒரு கிலோ 120-, 105 ரூபாவுக்கிடையில் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களிடமிருந்து சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பெற்று வந்தனர்.

எனினும் ஜூன் மாதம் முதல் கொழுந்தின் விலை ஒரு கிலோவிற்கு 90 ரூபாவுக்கும் 87 ரூபாவுக்கும் இடையில் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் அதிகளவு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் வாழும் இரத்தினபுரி மாவட்டத்தில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் சிறிய தேயிலை தோட்ட சூழலில் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

தேயிலை தொழிற்சாலைகளின் மூலம் கிடைக்கும் பணத்தில் தொழிலாளர்கள் சம்பளம், உர வகைகள் உட்பட உற்பத்திக்குத் தேவையான ஏனைய செலவுகளை சமாளிக்க வேண்டி உள்ளது. தேயிலைக் கொழுந்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் தமக்கு பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

‘கொரோனா’ தலைதூக்கினால் மீண்டும் ஊரடங்கு?

கொரோனா’ வைரஸ் வேகமாக பரவினால் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் பிரகாரம் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. ஓரிரு இடங்களிலேயே பிரச்சினை இருக்கின்றது. நாடு தழுவிய ரீதியில் வைரஸ் தாக்கம் இருந்தால்தான் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பரீசிலிக்ககூடியதாக இருக்கும்.

குறிப்பாக கொரோனா வைரஸ் பரவில் அதிகரித்தால் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு (ஊரடங்கு சட்டம்) செல்லவேண்டியேற்படும். அதற்கான தேவை தற்போது எழவில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலை உருவாகாது என நம்புகின்றோம்.

அதேவேளை, அநுராதபுரம் ராஜாங்கனை பகுதி தற்போது முடக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.  மூன்று பிரிவுகளில் வாழும் சுமார் 12 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். எவரும் வெளியில் செல்லமுடியாது. வெளியில் இருந்து எவரும் உள்ளே வரமுடியாது.

ஏனைய பிரதேசங்களிலும் எவராவது அடையாளம் காணப்பட்டால் இதே நடைமுறை தொடரும். இவ்வாறு செய்ததால்தான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கமுடியும்.” -என்றார்.

‘அரசாங்கத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பம்’

” முற்போக்கு சிந்தனை இல்லாத இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிப்பயணம் ஆரம்பித்துவிட்டது. எனவே, எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், இந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை எனவும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகூட கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

‘தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு வேட்டுவைக்க துரோகிகள் சதி’

கண்டி  மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதற்கு ஆளுங்கட்சியிலுள்ள பேரினவாதிகள் சக்கர வியூகம் வகுத்து செயற்படும் நிலையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி ஒட்டுமொத்த சமுகத்தையும் காட்டிக்கொடுக்கும் வகையில் செயற்படும் தமிழ் அரசியல் துரோகிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கம்பளை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் வேட்பாளர் வேலுகுமார் மேலும் கூறியதாவது,

“ ஜனாதிபதித்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களும் தமிழ்பேசும் மக்களை புறக்கணிக்கும் வகையிலும், அவர்களை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணத்துடனுமே செயற்பட்டுவருகின்றனர்.

சிங்கள, பௌத்த வாக்குகளால்தான் தான் வெற்றிபெற்றேன் என்று ஜனாதிபதி வீராப்பு பேசுகிறார். மறுபுறத்தில் வாக்குகளுக்காக தமிழ், முஸ்லிம் மக்களிடம் கையேந்தமாட்டோம் என இனவாதிகள் கொக்கரிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல சிறுபான்மையின மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்மீது அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் என்றெல்லாம் முத்திரை குத்தப்படுகின்றது. இந்த நாட்டில் உண்பதற்கு மட்டுமே தமிழ் பேசும் மக்கள் வாய்திறக்கவேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு.

இம்முறை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யவேண்டும் அல்லது இருப்பதை குறைக்கவேண்டும் என்பதற்காகவே எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டும், பிறப்பால் மாத்திரமே தமிழர்களான சில கறுப்பாடுகளை, கைக்கூலிகளை ராஜபக்ச அணி வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது. அவர்களால் வெற்றிபெறமுடியாது. ஆனால், வாக்குகளை சிறதடித்து பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யமுடியும். எனவே, இப்படியான சதிகார கும்பலை மக்கள் வாக்குரிமை என்ற ஆயுதத்தின் ஊடாக கறுவறுக்கவேண்டும். அவர்களுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும், எமது சமுகத்துக்கு எதிராக வழங்கப்படும் வாக்குகளாகும்.

கண்டி மாவட்டத்திலும் இப்படியான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டுவிட்டனர். இருந்தாலும் மக்களின் மனதை மாற்றுவதற்கான முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். எது எப்படியோ கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது கண்டி தமிழர்களின் அடையாளம் மட்டுமல்ல சுயகௌரவமும்கூட. அதனை எந்தவொரு காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்ககூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர்.

வெற்றி வேட்பாளராக நானே இருக்கின்றேன். எனக்கு வாக்களிப்பதன்மூலமே பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்பது மக்களுக்கு தெரியும். ” – என்றார்.

நுவரெலியா மாவட்டத்தை நாமே கைப்பற்றுவோம் – திகா சூளுரை!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியிலேயே மலையகத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே, எம்மை வெற்றிபெற வைக்கவேண்டியது மக்களின் பொறுப்பாகும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான திகாம்பரம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியினதும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியினதும், பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சரும்,  நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தலைமையில் 15.07.2020 அன்று அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் மதியம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இவரோடு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான வே.இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், வேலாயுதம் தினேஷ்குமார், எம்.ரவீந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது திகாம்பரம் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” கண்டியில் இருந்து வந்த ஒருவர், பெட், போல்களை வழங்கி வாக்கு கேட்கிறார். மற்றைய தரப்பு அனுதாப வாக்கு திரட்டுகின்றது. எமது அணி மட்டுமே மக்களுக்கு சேவைகளை செய்துவிட்டு, அவற்றை சுட்டிக்காட்டு ஓட்டு கேட்கின்றது. எனவே, நுவரெலியா மாவட்டத்தில் எமது வெற்றி நிச்சயம். ஐந்து ஆசனங்களை வென்று மாவட்டத்தையும் கைப்பற்றுவோம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதுபோல பெருந்தோட்டத்துறையில் அதிகாரிகளாக பணிபுரிபவர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும். அவர்களுக்கான வீட்டு திட்டமும் அவசியம்.

இந்த நாட்டில் இனவாத தலைவர்களே இருக்கின்றனர். ஆனால், அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்ககூடியவரே சஜித். அவரது கரங்களை நாம் பலப்படுத்தவேண்டும். தமிழ், முஸ்ஸிம் மக்களின் வாக்குகள் தேவையில்லை என விமல் கூறுகின்றார். அப்படியானால் எதற்காக அவர்களுக்கு நாம் வாக்களிக்கவேண்டும்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக தொழிலாளி ஒருவரே வரவேண்டும். எனக்கு பின்னர் எனது மகனை நான் கொண்டுவரப்போவதில்லை.” – என்றார்.

க.கிசாந்தன்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ட்ரம்புடன் விவாதிக்க விரும்பவில்லை: திருத்தந்தை பதில்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தான் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை Pope Leo தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் தொடர்பான திருத்தந்தை லியோவின் கருத்துக்களை...

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...