Home Blog Page 4002

ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம் – ரமேஷ் பத்திரண

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் எண்ணம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது என்று அக்கட்சியின் உறுப்பினரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

” நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை நாம் எதிர்பார்க்கின்றோம். அந்த வரத்தை மக்கள் வழங்குவார்கள் எனவும் நம்புகின்றோம்.

சிலவேளை, மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால்கூட நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களுக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறமுடியும்.

எனவே, எமது கூட்டணியிலுள்ள தரப்புகளைதவிர, ஏனைய கட்சிகளை இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்கும் எண்ணம் இல்லை.” – என்றும் கூறினார்.

மொட்டு கூட்டணிக்குள் மோதல் ஆரம்பம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலருக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது. இதனால் இரு தரப்பினருமே பொதுவெளியில் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்துவருகின்றனர்.

2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிடும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சில மாவட்டங்களில் தனித்து களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பவே முடியாது என்றும் அவருடன் தொடர்பை வைத்துள்ள உறுப்பினர்களுக்குகூட மொட்டுகட்சி ஆதரவாளர்கள் வாக்களிக்ககூடாது என்றும் பிரசன்ன ரணதுங்க தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டுவருகிறார்.

அத்துடன், மொட்டு கட்சியின் பொலன்னறுவை மாவட்ட வேட்பாளர் ரொஷான் ரனசிங்க, அநுராதபுரம் மாவட்ட வேட்பாளர் எஸ்.எம். சந்திரசேன, களுத்துறை மாவட்ட வேட்பாளர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

” ஜனாதிபதி தேர்தலின்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் எம்முடன் இணைந்து போட்டியிடுகின்றனர். ஆனால், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே மக்கள் பேராதரவை வழங்கவேண்டும்.” – எனவும் குறிப்பிடுகின்றனர்.

பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் இவ்வாறான கருத்துகளால் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, உப தலைவர் மஹிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கத்துக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை இல்லாது செய்யும் நோக்கிலேயே இவர்களின் கருத்துகள் அமைந்துள்ளன. ஐ.தே.கவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையிலேயே அவர்களின் கருத்துகள் அமைந்துள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சதாசிவத்துக்கு ஆதரவாக எஸ்.பி. பிரச்சாரம்

இன்று மலையக மக்களின் தலைமையை எடுத்து வழிநடத்தும் அனுபவமும் சக்தியும் சதாசிவத்திடம் இருக்கின்றது என முன்னாள் அமைச்சர் எஸ். பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் பெருந்தோட்ட பகுதியில் பாடசாலைகள், விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ததோடு பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு அரசாங்க தொழில்வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான சுப்பையா சதாசிவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

அக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர், தொழிற்சங்க அரசியல் அனுபவமுள்ள சதாசிவத்தை பாராளுமன்றத்திற்கு அனுப்பி அவருக்கு பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு அமைச்சை பெற்றுக்கொடுத்து மலையக பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்வோம்.

மலையகத்தின் ஏகோபித்த தலைவராக இருந்த அமரர் அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமானுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு மலையகத்திற்கு பெரும் சேவை செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவத்தை மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் மலையகத்திலுள்ள தோட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்துக்கொள்ளலாம்.

அமரர் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மலையக தலைவராக இருந்தார். இன்று அவரும் எம்முடன் இல்லை என்றார்.

உலகை புரட்டி எடுக்கும் கொரோனா – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 5 லட்சத்து 38 ஆயிரத்து 168 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 16 லட்சத்து 3049 ஆயிரத்து 415 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 45 லட்சத்து 12 ஆயிரத்து  256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 697 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 65 லட்சத்து 79 ஆயிரத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 38 ஆயிரத்து 160  பேர் உயிரிழந்துள்ளனர்.

‘காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்களிக்கலாம்’

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் ஒரு மணிநேரத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காலை ஏழு மணி முதல் மாலை 5 மணிவரை வாக்களிக்கமுடியும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வழமையாக காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை 9 மணிநேரமே வாக்களிப்பு இடம்பெறும். எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தேர்தலை நடத்தவேண்டியதாலேயே வாக்களிப்பு நேரம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபா எங்கே? ஹக்கீம் கேள்வி!

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 மார்ச் முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்தது.

ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று ஏழு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறு மக்களை ஏமாற்றும் அரசாங்கத்துக்கு ஆகஸ்ட் 5 ஆம் திகதி பொது மக்கள் தக்கபாடம் புகட்டவேண்டும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘ஜீவன் தலைமையில் இ.தொ.காவின் வெற்றிப்பயணம் தொடரும்’

இன்னும் 10 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமே தொடரும். அந்த ஆட்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பங்காளிக்கட்சியாக இருந்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் 06.07.2020 இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” தலைவர் இருக்கின்றபோது கட்சிபேதமின்றி மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்தார். அவரின் மகன் ஜீவன் தொண்டமான் இன்று தலைமையேற்றுள்ளார். அவரின் தலைமையின் கீழ் தேர்தலில் போட்டியிடுகின்றோம். இந்நிலையில் இ.தொ.காவை பலப்படுத்துவதற்காகவும், ஜீவனுக்காகவும் இளைஞர் கூட்டம் திரள்வதை காணக்கூடியதாக உள்ளது.

பெருமளவான மக்களும் எமது கூட்டங்களில் பங்கேற்கின்றனர். இது மகிழ்ச்சியளிக்கின்றது. ஏனெனில் கட்சியில் இணையாவிட்டாலும் பரவாயில்லை, மலையக சமூகமாக எல்லோரும் ஒன்றாக இருங்கள் என எமது தலைவர் கூறினார். அந்த ஒற்றுமையை தற்போது காணமுடிகின்றது.

ஜனாதிபதி தேர்தலின்போது மலையக மக்களுக்காக எமது தலைவரால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

அடுத்துவரும் 10 ஆண்டுகள் கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதியாக இருப்பார். அவர் தலைமையிலான அரசாங்கமே செயற்படும். அந்த கூட்டணியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் பங்காளிக்கட்சியாக இருக்கின்றது. எனவே, மக்களுக்கான சேவைகளை எம்மால் தொடரமுடியும்.

தேர்தல்  முடிவடைந்ததும் சில அரசியல்வாதிகள் நுவரெலியா மாவட்டத்தைவிட்டு ஓடிவிடுவார்கள். ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவ்வாறு அல்ல. உங்களுடன்தான் இருக்கப்போகின்றார். இதுதான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும், ஏனையோருக்குமிடையில் உள்ள வித்தியாசமாகும்.

காங்கிரஸ் அனைத்துவிதமான அபிவிருத்திகளையும் செய்துள்ளது. எனவே, மொட்டு சின்னத்துக்கு வாக்களித்து இ.தொ.கா. உறுப்பினர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

பொகவந்தலாவயில் குளவிக்கொட்டு – ஐவர் பாதிப்பு

பொகவந்தலாவ கிலானி தோட்டத்தில், தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வனர்த்தம் இன்று (6) மதியம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேயிலை மலையில் கற்குகை ஒன்றில் கூடுகட்டியிருந்த குளவிகளே, கலைந்துவந்து தாக்கியுள்ளன.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

‘அரசியல் நடிகர்களுடன் இணைந்து செயற்படமுடியாது’ -ஜீவன்

“மலையகத்தில் குறைகூறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். சாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும். அரசியலில் நடிப்பவர்களுடன் இணைந்து செயற்படமுடியாது. அடிமட்ட தொண்டர்களுக்காக காங்கிரஸின் கதவு திறந்தே உள்ளது. நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் 06.07.2020 இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு கம்பனிகள் இணக்கம் தெரிவித்துவிட்டன. ஆனால், நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளை எம்மால் ஏற்கமுடியாது. மூன்று மாதங்களுக்கு 100 ரூபா கொடுப்பனவை வழங்கினர்.இதனால் நிலுவை சம்பளத்தை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, நாம் நிபந்தனையை ஏற்று கையொப்பமிட்டால் இவர்களுக்கும், எங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

கடந்த நான்கு வருடங்களாக ஆயிரம் ரூபா பற்றி மட்டுமே கதைத்தார்கள். இவ்வாறு கதைத்து ஏனைய பிரச்சினைகளை மூடிமறைத்துவிட்டனர். ஆயிரம் ரூபாவைத்தவிர எமக்கு வேறு பிரச்சினைகள் இல்லையா? இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கின்றதா?இல்லை. கேட்டால் வீடு கட்டிக்கொடுத்தோம் என்கின்றனர். வேலையிண்மை பிரச்சினைக்கும், வீட்டுப்பிரச்சினைக்கு இருக்கும் தொடர்புதான் என்ன?

நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற குறைகூறும் அரசியல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனை நாம் மாற்றியமைக்கவேண்டும். அப்பா உயிருடன் இருக்கும்போது அவரின் பெயரைப்பயன்படுத்தியே அரசியல் செய்தனர். அவர் பாவம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஆனால், இன்னும் அவரை வைத்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். அப்பாமீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் போலியானவை என்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்போது என்னை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

தேர்தல் காலத்தில் மட்டும் அல்ல அதற்கு முன்னர் களத்துக்குசென்று நான் மக்களுக்கு சேவைசெய்துள்ளேன். மண்சரிவு இடம்பெறும்போது உடனே சென்றுள்ளேன். ஆனால், அதனையும் வாய்கூசாமல் விமர்சிக்கின்றனர். தீ விபத்து இடம்பெற்ற ஒரு பகுதிக்கு சென்றால், ஜீவன் தொண்டமான்தான் தீ வைத்துள்ளார் என கூறுமளவுக்கு கீழ்த்தரமாக அரசியல் நடத்துகின்றனர்.

இப்படியான கருத்துகளை பார்த்துவிட்டு வெளிமாவட்டங்களில் இருப்பவர்கள் சிரிக்கின்றனர். தற்போதுள்ள அரசியல் சாக்கடையென விமர்சிக்கின்றனர். அதனை சுத்தப்பட்டுத்துவதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும்.

மலையகத்துக்கு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது பிள்ளைகள் பாடசாலைக்கே செல்வதில்லை, பல்கலைக்கழகத்தை வைத்து என்ன செய்வது என சில அரசியல்வாதிகள் கேட்கின்றனர். அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது சிறப்பாக இருந்த திட்டங்களை மக்களுக்காக நாம் முன்னெடுக்கும்போது விமர்சிக்கின்றனர்.

மலையக அரசியல்வாதிகள் என்று ஒன்றிணைந்து செயற்படுகின்றார்களோ அன்றுதான் மலையகம் முன்னேறும். இதுதான் உண்மையான விடயம்.

நீங்கள் தலைமைத்துவத்தில் இருக்கின்றீர்கள். இணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுக்கலாம்தானே என நீங்கள் கேட்கலாம். தூங்குபவனை எழுப்பலாம். ஆனால், தூங்குபவன்போல் நடிப்பவனை எழுப்பமுடியாது என எனது தந்தை அடிக்கடிகூறுவார்.

ஆயிரம் ரூபா வழங்குவதாக ரணில் விக்கிரமசிங்க கூறவே இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவிக்கின்றார். அதேபோல் தொண்டமான் பெயர்பலகையை அகற்றவில்லை எனவும் குறிப்பிடுகின்றார். ஆனால்இ உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும். இப்படியானவர்களுடன் இணைந்து வேலைசெய்யமுடியுமா?

அப்பா இருக்கும்போது சந்திரசேகரனுடன் இணைந்து செயற்பட்டார். அப்பா, ஐயா, சந்திரசேகரன் ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும்போதே தனிவீட்டுத்திட்டம் மலையகத்துக்கு வந்தது. ஆனால், நாங்கள்தான் தனி வீடுகட்டினோம் என்று பொய்யுரைக்கின்றனர்.

சுமார் 30 ஆயிரத்துக்குள் மேல் வீடுகள் கட்டப்பட்டன. அந்த வீடுகளில் கூரைகள் எல்லாம் காற்றில் பறக்கவில்லை. தோட்டத்தில் வேலைசெய்தார் மட்டும்தான் வீடு என்பது அல்ல தோட்டத்தில் பிறந்திருந்தாலும் வீடு வழங்கப்படும் என்பதே எமது நோக்கம். ஏழு பேர்சஸ் என்பதற்குள் முடங்காமல் காணி உரிமையை பெற்றுக்கொடுக்க திட்டமிட்டிருந்தோம். கிராமமொன்றை உருவாக்கி பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதே எமது இலக்கு.

காங்கிரஸின் கதவு அடிமட்ட தொண்டர்களுக்காக திறந்தே உள்ளது. மீண்டும் வாருங்கள். தலைவரை பார்க்கமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் சிலர் சென்றனர். அவர்கள் வரலாம். ஆனால், முதுகில் குத்திவிட்டு சென்றவர்களுக்கு இடமில்லை.” – என்றார்.

க.கிசாந்தன்

‘ இ.தொ.காவுக்கு மீண்டுமொருமுறை அரசியல் பலத்தை தாருங்கள்’

” எமது தலைவர் இருக்கும்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெற்றிநடைபோட்டது. அவர் இல்லாத நிலையிலேயே இம்முறை தேர்தலை எதிர்கொள்கின்றோம். எனவே, இ.தொ.காவுக்கு மீண்டுமொருமுறை அரசியல் பலத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்று இ.தொ.காவின் உப தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் 06.07.2020 இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

” எங்களது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இல்லாத நிலையிலேயே இம்முறை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தேர்தலை சந்தித்துள்ளது. நாங்கள் எதிர்பாராத விதமாக தலைவர் எம்மைவிட்டு பிரிந்திருந்தாலும், எங்களுக்கெல்லாம் தெம்புதருவது போல் தம்பி ஜீவன் தலைமையேற்று வழிநடத்தி வருகிறார்.

அத்துடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை பலப்படுத்துவதற்காக இளைஞர்களும், மக்களும் இன்று அலைகடலென அணிதிரண்டுள்ளனர். இன்னும் 50 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்த தேர்தல் போடவிருக்கின்றது. எனவே, இது மிகமுக்கிய தேர்தலாகும்.

எங்களின் தலைவரின் ஆளுமை மிகப்பெரியது. அதனை எவராலும் நிரப்பமுடியாது. அவரின் பேரம்பேசும் சக்தி பலமுடையது. அதனைவைத்துக்கொண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெற்றிநடைபோட்டது.

தொழில்வாய்ப்பு, இருப்பு என எமக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தீர்ப்பதற்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அவசியம். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே உரிமைகளை வென்றுக்கொடுத்துள்ளது. ஆகவே, மீண்டுமொரு அரசியல் பலத்தை வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

15 லட்சம் மலையகத் தமிழர்களுக்கு வழிகாட்டுகின்ற மாவட்டமாக நுவரெலியா மாவட்டம் இருப்பதால் இங்கிருந்து கூடுதல் பிரதிநிதிகள் பாராளுமன்றம் செல்லவேண்டும். தம்பி ஜீவன் தலைமையில் எமது உறுப்பினர்கள் ஐவரையும் தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

க.கிசாந்தன்

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையைப் புனரமைக்கக் கோரி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!

0
நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையின் மிக மோசமான நிலையைக் கண்டித்தும், அதனை உடனடியாகப் புனரமைக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் இன்று நமுனுகுல நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். பல ஆண்டுகளாகப் பராமரிப்பு...

சொந்த தொகுதியில் ஸ்டாலின் தோல்வி!

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதி...

மாலைதீவு ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரச பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை (Dr. Mohamed Muizzu) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி...