Home Blog Page 4003

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் 14 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 17 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது.

148 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 11 பேர் உயிரிழந்தனர்.

1000 ரூபா கதை இனியும் வேண்டாம் -உழைப்புக்கேற்ற ஊதியமே வேண்டும்

வாக்கு வேட்டைக்காக தேர்தல் காலத்தில் மட்டும் ஆயிரம் ரூபா தொடர்பில் பேசாமல், தோட்டத்தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் வடிவேல் புத்திரசிகாமணி தெரிவித்தார்.

பூண்டுலோயா சீன் தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” ஆரம்பத்தி கத்தியால் நூறு தேயிலை செடிகளை கவ்வாத்து வெட்டியவர்கள் தற்போது இயந்திரத்தால் ஆயிரம் செடிகளை வெட்டுகின்றனர்.ஆரம்பத்தில் மருந்து கொள்கலனால் நூறு தேயிலைச்செடிகளுக்கு மருந்து தெளித்தவர்கள் தற்போது ஆயிரம் தேயிலைச்செடிகளுக்கு மருந்து தெளிக்கின்றனர்.

நாளுக்கு நாள் தோட்டத்தொழிலாளர்களுக்கு வேலை செய்யும் அளவு கூடிவிட்டது.ஆனால் சம்பளம் கூடவில்லை. தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பிரச்சனை இல்லை ஆயிரம் பிரச்சனைகள் வேலைக்கேற்ற ஊதியத்தை கொடுத்தால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுக்க நேரிடும்.

எனவே ஆயிரம் ரூபாயில் அரசியல் செய்வதை விடுத்து வேலைக்கேற்ற ஊதியத்தை பெற முயற்சி செய்யுங்கள்.” – என்றார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

100 அடி பள்ளத்தில் வீழ்ந்து பார ஊர்தி விபத்து – இருவர் படுகாயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூரிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி ஏற்றிச் சென்ற பாரஊர்தி ஒன்றே, வீதியைவிட்டு விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது. இதனால், சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து இருவரும் உடனடியாக வைத்தியசாலை கொண்டுசெல்லப்பட்டனர்.

‘பிரேக்’ பிடிபடாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

க.கிசாந்தன், க.நிஷாந்தன்

‘யானை மிதித்தால் மொட்டு நசுங்கிவிடும்’ – ஆனந்தகுமார்

” எனக்கு எதிர்ப்பு அரசியல் பிடிக்காது. இந்த மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்யவேண்டும். எதிர்கால திட்டங்கள் என்ன? என்பது தொடர்பில் தெளிவுபடுத்தவே காத்திருந்தேன்.

ஆனால், நான், போட்டியிடும் சின்னமான, யானையை இந்த மாவட்டத்திலிருக்கும் அக்கா கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த யானையின் பலம் அந்த அக்காவுக்கு தெரியாது என இரத்தினபுரி மாவட்ட ஐ.தே.க வேட்பாளர் எஸ். ஆனந்தகுமார் தெரிவித்தார்.

யானை மித்தால், மொட்டு நசுங்கிவிடும் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விருப்புகின்றேன்.

இறக்குவானையில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எஸ். ஆனந்தகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

உங்களுக்கு எல்லோருக்கும் தெரிந்திருக்காது. ஐக்கிய தேசிய கட்சி, நடமாடும் பிணமாய் அலையும் இறந்தக் கட்சியாகும் என, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். அவர், எங்கிருந்து வந்தார் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

பதவிக்காக யானை ஒருபோதும் சோரம்போனதில்லை. எதிர்காலத்திலும் போகாது. ஆனால், பவித்ரா வன்னியாரச்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கையை காட்டிக்கொடுத்துவிட்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுக்கு முட்டுக்கொடுத்து கொண்டிருக்கின்றார்.

ஐ.தே.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார திட்டத்தினால்தான், ஓரளவுக்கு நாடு நிமிர்ந்து நிற்கிறது. இல்லையேல், கொரோனாவின் தாக்கத்தில், ஒருவேளை உணவை உண்பதற்கு கூட வக்கில்லாது. பட்டியினால் செத்து மடிந்து வீதியோரங்களில் பல பிணங்கள் கிடந்திருக்கும். ஒவ்வொரு வீட்டு சமையலறைகளிலும் அடுப்பு எரிகிறது என்றால், அது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தயவால் என்றார்.

யானையின் பலம் யாருக்கும் தெரியாது. சீண்டிவிட்டால் அங்குசத்துக்கு கூட அடங்காது. இரத்தினபுரியில் காட்டு யானைகள் இல்லை. அதனால், யானையின் பலம் எல்லோருக்கும் தெரியாது. இரத்தினபுரி மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று, குறிப்பாக, தோட்டத்தொழிலாளர்கள், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று, பாராளுமன்றத்துக்குச் சென்று, எம்மக்களை மறந்தவர்களே இங்கிருக்கின்றனர்.

எங்களுடைய மக்களுக்கு அவர்கள் மட்டுமல்ல. மலையகத்தில் பழம் தின்னும் கொட்டை போட்டதாகக் கூறப்படும் மலையக அரசியல்வாதிகள் கூட, இரத்தினபுரி மக்களை மறந்தே விட்டனர். இங்குவாழும் சிறுபான்மை மக்களின் மீது கையை வைத்து சீண்டும் போதெல்லாம். அதற்கெதிராக நாமே குரல் கொடுத்தோம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் முடியுமானால் பெருமளவான வாக்குகளை பெற்று காட்டுமாறு பவித்ரா வன்னியாராட்ச்சிக்கு பகிரங்க சவால் விடுப்பதாகவும் எஸ்.ஆனந்தகுமார் குறிப்பிட்டார்

சங்கக்காரவை அரசாங்கம் குறிவைத்தது ஏன்?

எதிரணி அரசியல்வாதிகளுக்கு எதிராக பழிவாங்கும் படலத்தை கட்டவிழ்த்துவிட்ட அரசாங்கம் இன்று தேசிய விளையாட்டு வீரர்களையும் வேட்டையாட தொடங்கியுள்ளது. எனவே, இந்த கொடூங்கோல் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஏதேச்சதிகார பாதையை நோக்கியே பயணிக்கும். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டி, குண்டசாலை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

” இனவாதம் பேசி, மதவாதத்தை தூண்டி குறுக்குவழியிலாவது ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்காக ஒருபுறத்தில் பாடுபடும் அரசாங்கம், மறுபுறத்தில் எதிர்காலத்தில் தமக்கு அச்சுறுத்தலாக மாறுவார்கள் எனக் கருதப்படும் நபர்களை வேட்டையாடிவருகின்றது. நாம் எதையும் செய்வோம். அதற்கு எதிராக வாய் திறந்தால் கழுத்துக்கு கத்திவரும் என்ற எச்சரிக்கையை விடுக்கும் வகையிலேயே ஆளுங்கட்சியின் அணுகுமுறைகள் அமைந்துள்ளன. சங்கா, மஹேல போன்றவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டதுகூட இதன்ஓர் அங்கமாகும்.

இலங்கை நாட்டுக்கு பெருமை சேர்ந்த சங்கக்கார, மஹேல ஜயவர்தன போன்றவர்கள் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் தம்மால் முடிந்த சமுகசேவைகளை செய்துவருகின்றனர். நாட்டுக்கு எதிரான திட்டங்களை விமர்சிக்கின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமைப்பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு தெரிவாவதற்கான அனைத்து தகுதிகளும் சங்கக்காரவுக்கு இருக்கின்றது. எனவே, சங்கக்காரவின் பெயரை எவரும் பரிந்துரைக்காமல் இருப்பதற்கான சூழ்ச்சித்திட்டமா இந்த விசாரணை என்ற சந்தேகமும் எமக்கு எழுகின்றது.

ஆட்டநிர்ணய சதி தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான தகவல்களை இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு விளையாட்டு சட்டத்தின் பிரகாரம், ஆட்டநிர்ணய சதி தொடர்பில் தவறான தகவலை வெளியிட்டால் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஆட்ட நிர்ணய சதி தொடர்பான தகவலை வெளியிட்ட அரசியல்வாதிக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை என்ன? ” – என்றார்.

‘1000 ரூபாவை வைத்து பூச்சாண்டி காட்டுகின்றனர்’

சம்பள உயர்வு விவகாரத்தில் தற்போது,“பூச்சாண்டி” காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.  ஆறு மாதங்களுக்கு முன்பிருந்து முன்வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தற்போதைய நிலைக்கு போதுமானதல்ல – என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

வேட்பாளர் வடிவேல் சுரேஸ், பதுளையில் தமது வாசஸ்தலத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

“அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வாழ்வாதார செலவு உயர்வு ஆகியவற்றை ஈடுசெய்ய இவ் ஆயிரம் ரூபா சம்பள உயர்வினால் முடியாது. இது குறித்து, எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் நேரடியாக தெளிவுப்படுத்தியுள்ளேன்.

தேர்தலுக்குப் பின் சஜித் பிரேமதாச பிரதமரானதும், வாழ்க்கைச் செலவு உயர்விற்கமையவும், அவர் ஏற்கனவே கூறிய 1500 ரூபா  என்ற சம்பள உயர்விற்கு அப்பால் நியாயமான சம்பள உயர்வை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பேன்.” – என்றார்.

சஜித் அணி இணைந்தால்கூட பதவிகள் வழங்கப்படாது – ஐ.தே.க.

பொதுத்தேர்தலின் பின்னர் சஜித் அணியினர் ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்தால்கூட அவர்களுக்கு எவ்வித பதவிகளும் வழங்கப்படாது என்று ரணில் அணி உறுப்பினரான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கூட்டணியொன்றை உருவாக்குவதற்கே ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியது. ஆனால், சஜித் தரப்பு கட்சியொன்றை உருவாக்கியது. அந்த கட்சியின் நிறம் நீலம். அதனை அவர்கள் வெளிப்படுத்துவதில்லை.

ஐக்கிய தேசியக்கட்சியின் பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். தொகுதி அமைப்பாளர் பதவியில் ஏற்பட்டிருந்த வெற்றிடங்கள்கூட நிரப்பட்டுள்ளன.

பொதுத்தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படுவோம் என சஜித் அணியினர் கூறிவருகின்றனர். 20 ரூபா கொடுத்து அங்கத்துவம் பெறலாம். ஆனால், அவர்களுக்கு எவ்வித பிரதித் தலைவர், உப தலைவர், தேசிய அமைப்பாளர் என எவ்வித பதவிகளும் வழங்கப்படாது.” – என்றார்.

50 ரூபாவைக்கூட வழங்காதவர்களுக்கு வாக்குகளை அள்ளிக்கொடுப்பது சரியா?

” இந்திய அரசாங்கத்தின் நிதியில் மலையகத்தில் வீடுகளை கட்டினார்களேதவிர, நல்லாட்சியின்கீழ் மலையக மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். சதாசிவம் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

 ” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் என தலவாக்கலையில் நடைபெற்றக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார். ஆனால், அவர்களின் ஆட்சியில் 50 ரூபாவைக்கூட  தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளை இங்கு கட்டினார்கள். மற்றும்படி எம் மக்களுக்காக எதனையும் நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் செய்யவில்லை.இப்படி நடந்தும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளருக்கே வாக்குகளை அள்ளி, அள்ளி கொடுத்தீர்கள்.

எனவே, இம்முறையாவது ஆளுங்கட்சிக்கு வாக்களித்து, வெற்றியின் பங்காளிகளாக மாறுமாறு மலையக மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். என்னைப்போன்ற அனுபவமுள்ள அரசியல்வாதிகளால் நிச்சயம் சேவையாற்றமுடியும். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் என்னை நம்புகின்றனர். மக்களும் ஆதரவு வழங்குவார்கள்.” – என்றார்.

‘நான் கட்டிக்கொடுத்த வீடுகள் குருவிக்கூடா’ – திகா சீற்றம்

” தமிழ் முற்போக்கு கூட்டணியானது மலையக மக்களுக்காக உணர்வுப்பூர்வமாக சேவையாற்றியுள்ளது.” – என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” எமது மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்களால் மட்டுமே மலையகத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்ககூடியதாக இருக்கும். எனவே, இப்படியானவர்களுக்கு வாக்களிப்பதா அல்லது தேர்தல் காலத்தில் வந்து விளையாட்டு பொருட்களை வழங்குபவர்களுக்கும், எங்கள் அப்பா செய்யாதவற்றை நான் செய்வேன் எனக் கூறுபவர்களுக்கும் வாக்களிப்பதா என மக்கள் முடிவெடுக்கவேண்டும்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு நானும், ராதா அண்ணனுமே அமைச்சர்களாவோம். கடந்த நான்கரை வருடங்களில் நாம் இருவரும் மக்களுக்கு உணர்வுப்பூர்வமாக சேவைகளை செய்துள்ளோம். அவ்வாறு செய்துவிட்டே வாக்கு கேட்டுவந்துள்ளோம்.

எப்படிதான் சேவை செய்திருந்தாலும் நான் கட்டிய வீட்டை குருவிகூட என விமர்சிக்கின்றனர். நான் குருவிகூடாவது கட்டிக்கொடுத்தேன். அவர்கள் அதையாவது செய்தார்களா? ” – எனவும் திகாம்பரம் கேள்வி எழுப்பினார்.

மலையகத்துக்கு தேவை பண அரசியலா, நேர்மை அரசியலா?

” நம்மவர்கள்தான் நம்மை ஆள வேண்டும். எனவே, கொழும்பில் இருந்தும், கண்டியில் இருந்தும் வருபவர்கள் தீபாவளி காலத்தில் வியாபாரம் செய்ய வருவது போல் வருவார்கள். சீசன் முடிவடைந்ததும் சென்றுவிடுவார்கள். இவர்களை நம்பக்கூடாது.”

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பிலிப்குமார் தெரிவித்தார்.

”  மலையகத்துக்கு தேவை பண அரசியலா, நீதி, நேர்மை மற்றும் வெளிப்படைதன்மை மிக்க அரசியலா என்பது குறித்து சிந்தித்தே மக்கள் முடிவெடுக்கவேண்டும்.” எனவும் அவர் கூறினார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையைப் புனரமைக்கக் கோரி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!

0
நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையின் மிக மோசமான நிலையைக் கண்டித்தும், அதனை உடனடியாகப் புனரமைக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் இன்று நமுனுகுல நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். பல ஆண்டுகளாகப் பராமரிப்பு...

சொந்த தொகுதியில் ஸ்டாலின் தோல்வி!

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதி...

மாலைதீவு ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரச பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை (Dr. Mohamed Muizzu) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி...