Home Blog Page 4011

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 38 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 38 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 955 ஆக அதிகரித்துள்ளது.

112 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 11 பேர் உயிரிழந்தனர்.

செந்தில் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி – உறுதிப்படுத்தினார் நிமல்

” பொதுத்தேர்தலின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமையும் எமது அரசாங்கத்தில் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதியான செந்தில் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தை பசறையில் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

” பதுளையில் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் எமது அரசாங்கத்தில் இருக்க வேண்டும். எம்முடன் இருக்கும் ஒரேயொரு பிரதிநிதி செந்தில் தொண்டமான். பதுளை மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு செந்தில் தொண்டமான் பாரிய சேவையாற்றி வருகிறார். எமது மக்களையும் அரவணைத்துக்கொண்டே பயணிக்கின்றார். அவருக்கு எமது அரசாங்கத்தில் சக்தி வாய்ந்த அமைச்சரவை அமைச்சு பதவியொன்று வழங்கப்படும்.” என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான சச்சிந்திர ராஜபக்சவும் கலந்துகொண்டார்.

– பதுளை செய்தியாளர்-

ஜீவனின் அழைப்பையேற்று மீண்டும் தாய்க்கட்சி திரும்பும் ஆதரவாளர்கள்!

அடிமட்ட தொண்டர்களுக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கதவு திறந்தே உள்ளது என பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள அறிவிப்பையடுத்து, காங்கிரஸ் என்ற தாய்க்கட்சிக்குள் மீண்டும் வருவதற்கு பலரும், தோட்டத் தலைவர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பீடத்துக்கும், அடிமட்ட தொண்டர்களுக்குமிடையிலான உறவு கட்டியெழுப்பப்படாததாலேயே கடந்த காலங்களில் கடும் அதிருப்தியில் ஆதரவாளர்கள் சிலர் காங்கிரஸை விட்டுவெளியேறினர். தலைவரை நேரில் சந்திக்க முடியவில்லையே என்ற ஆதங்கள் அவர்களுக்குள் இருந்தது. மற்றும்படி சலுகைகளுக்காக அவர்கள் வெளியேறவில்லை.

” தலைவரை சூழ இருந்த சிலரே மக்களுக்கும் அவருக்குமிடையிலான உறவை துண்டித்ததுடன், தேசிய தலைவரை ஒரு மாவட்டத்துக்குள்ளேயே முடக்கினர்.” என்று பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். இளைஞர் அணி பொதுச்செயலாளராக அவர் பதவியேற்றப்பின்னர் இந்நிலைமையை மாற்றியமைக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது எங்கு தவறு இடம்பெற்றுள்ளது என்பதை பகிரங்கமாக சுட்டிக்காட்டி, அடிமட்ட தொண்டர்களுக்காக காங்கிரஸ் கதவு திறந்தே உள்ளது என்ற அறிவிப்பை பெருந்தன்மையோடு பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ளார்.

ஜீவன் தொண்டமானின் அண்மைக்கால அரசியல் அணுகுமுறைகளால் மகிழ்வுற்றுள்ள மக்கள் அவருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துவிட்டனர்.

அத்துடன், காங்கிரஸில் இருந்து சென்ற மக்களும் மீண்டும் இணைவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். தோட்டத் தலைவர்கள் ஊடாக பொதுச்செயலாளருக்கு இது விடயம் தொடர்பில் தூது அனுப்பியுள்ளனர்.

மக்களால் வழங்கப்பட்ட மேற்படி தகவலை தோட்டத் தலைவர்கள், பொதுச்செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். இதன்படி தோட்டவாரியாக நடைபெறும் கூட்டங்களின்போது அவர்கள், பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர்.

அதேவேளை, காங்கிரஸின் இருந்து – வளர்ந்து – முதுகில்குத்திவிட்டு வெளியேறிய அரசியல்வாதிகளுக்கு கட்சிக்குள் மீண்டும் இடமில்லை என பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைகட்டி வாழ்ந்த யுகம் முடிந்துவிட்டது – இனி தலைநிமிர்ந்து வாழ்வோம்!

” எமது மலையக சொந்தங்கள் கைகட்டியே வாழவேண்டும் என இன்னமும் சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் எதிர்ப்பார்ப்பை நாம் தவிடுபொடியாக்கி – எம்மவர்களை தலைநிமிர்ந்து வாழவைப்போம்.எமது இளைஞர்கள் சிறந்தவர்கள், அவர்களின் பங்களிப்புடன் நிச்சயம் சமூகமாற்றத்தை ஏற்படுத்துவோம்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ் குமார் தெரிவித்தார்.
 
‘கொவிட் – 19’ வைரஸ் தாக்கத்தையடுத்து பாரியளவு மக்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீடுகள்தோறும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார்.
 
மலையகத்தின் மூத்த தொழிற்சங்க வாதிகளுள் ஒருவரான அமரர் கே. வேலாயுதம் ஐயாவின் மகன் என்பதால் மக்கள் மத்தியில் தினேஷ் குமாருக்கான ஆதரவும் அதிகரித்துவருகின்றது.
 
மக்கள் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட வேட்பாளர் தினேஷ் குமார்,
 
” எமக்கு தேர்தலைவிடவும் மக்களின் பாதுகாப்பே முக்கியம். அதுமட்டுமல்ல வேலைநேரங்களில் கூட்டத்துக்கு அழைத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தடையேற்படுத்தக்கூடாது என்பதும் எனது நோக்கமாகும். இதன்காரணமாகவே நீங்கள் வீடுகளில் இருக்கும்நேரம் பார்த்த, வந்து பிரச்சாரம் செய்கின்றேன்.
வேலைநேரங்களில் உங்களுக்கு வழங்கப்படும் இடைவெளியிலும்கூட சந்திக்கின்றேன்.
 
வெள்ளையர்கள் ஆட்சிகாலத்தில் இருந்த மலையகம் அல்ல இன்று. மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அன்றுபோல் இன்றும் மலையக மக்கள் வழிநடத்த சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எமது இளைஞர்கள் பல்துறைகளிலும் சாதனைப்படைத்துவருகின்றனர்.
 
அண்மையில்கூட மூன்று யுவதிகள் சட்டத்தரணிகளாக பதவியேற்றனர்.
ஆக கைகட்டி வாழ்ந்த யுகம் முடிவடைந்துவிட்டது. தலைநிமிர்ந்து வாழும் யுகம் பிறக்கும். அதனை அடைவதே எமது நோக்கம். அதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்.” – என்றார்.

ஹட்டன், குடாகமவில் விபத்துக்குள்ளானது வேன்!

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வேன் ஒன்று இன்று (07) அதிகாலை விபத்துக்குள்ளானது.

ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற வேனே,  குடாகம பகுதியில் வைத்து, பாதையை விட்டுவிலகி வீதியோர பாதுகாப்பு கல்லில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வேன் சாரதி தலைமறைவாகியுள்ளார் என தெரிவித்த பொலிஸார்,
விபத்து தொடர்பில் முறைபாடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நிலவுவதால் ஹட்டன் – நுவரெலியா வீதி வழுக்கும் தன்மை காணப்படுவதால்
சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

வெலிக்கடை சிறைச்சாலை கைதிக்கு கொரோனா தொற்று!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதியொருவர் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

குறித்த கைதி கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு தடுத்துவைக்கப்பட்டவரென அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கைதிக்கு கொரோனா பரவியுள்ள நிலையில், அவருடன் தொடர்பை பேணியவர்கள், அவருடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள்,  சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோருக்கும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.  தற்போது அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அரசால் பெறமுடியாது – அநுர

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறமுடியாது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

” போர்முடிவடைந்த பின்னர் 2010 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதுகூட மஹிந்த தரப்பால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை மக்கள் வாக்குகள்மூலம் பெறமுடியாமல்போனது.

ஆனால், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களை விலைக்குவாங்கி, பெரும்பான்மையை உருவாக்கிக்கொண்டு 18 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தனர். இம்முறையும் ஆளுந்தரப்பால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறமுடியாது. தேர்தல் முடிவடைந்ததும் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியலே நடக்கும்.” – என்றார்.

ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம் – ரமேஷ் பத்திரண

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் எண்ணம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது என்று அக்கட்சியின் உறுப்பினரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

” நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை நாம் எதிர்பார்க்கின்றோம். அந்த வரத்தை மக்கள் வழங்குவார்கள் எனவும் நம்புகின்றோம்.

சிலவேளை, மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால்கூட நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களுக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறமுடியும்.

எனவே, எமது கூட்டணியிலுள்ள தரப்புகளைதவிர, ஏனைய கட்சிகளை இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்கும் எண்ணம் இல்லை.” – என்றும் கூறினார்.

மொட்டு கூட்டணிக்குள் மோதல் ஆரம்பம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலருக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது. இதனால் இரு தரப்பினருமே பொதுவெளியில் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்துவருகின்றனர்.

2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிடும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சில மாவட்டங்களில் தனித்து களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பவே முடியாது என்றும் அவருடன் தொடர்பை வைத்துள்ள உறுப்பினர்களுக்குகூட மொட்டுகட்சி ஆதரவாளர்கள் வாக்களிக்ககூடாது என்றும் பிரசன்ன ரணதுங்க தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டுவருகிறார்.

அத்துடன், மொட்டு கட்சியின் பொலன்னறுவை மாவட்ட வேட்பாளர் ரொஷான் ரனசிங்க, அநுராதபுரம் மாவட்ட வேட்பாளர் எஸ்.எம். சந்திரசேன, களுத்துறை மாவட்ட வேட்பாளர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

” ஜனாதிபதி தேர்தலின்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் எம்முடன் இணைந்து போட்டியிடுகின்றனர். ஆனால், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே மக்கள் பேராதரவை வழங்கவேண்டும்.” – எனவும் குறிப்பிடுகின்றனர்.

பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் இவ்வாறான கருத்துகளால் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, உப தலைவர் மஹிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கத்துக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை இல்லாது செய்யும் நோக்கிலேயே இவர்களின் கருத்துகள் அமைந்துள்ளன. ஐ.தே.கவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையிலேயே அவர்களின் கருத்துகள் அமைந்துள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சதாசிவத்துக்கு ஆதரவாக எஸ்.பி. பிரச்சாரம்

இன்று மலையக மக்களின் தலைமையை எடுத்து வழிநடத்தும் அனுபவமும் சக்தியும் சதாசிவத்திடம் இருக்கின்றது என முன்னாள் அமைச்சர் எஸ். பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் பெருந்தோட்ட பகுதியில் பாடசாலைகள், விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ததோடு பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு அரசாங்க தொழில்வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான சுப்பையா சதாசிவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

அக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர், தொழிற்சங்க அரசியல் அனுபவமுள்ள சதாசிவத்தை பாராளுமன்றத்திற்கு அனுப்பி அவருக்கு பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு அமைச்சை பெற்றுக்கொடுத்து மலையக பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்வோம்.

மலையகத்தின் ஏகோபித்த தலைவராக இருந்த அமரர் அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமானுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு மலையகத்திற்கு பெரும் சேவை செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவத்தை மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் மலையகத்திலுள்ள தோட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்துக்கொள்ளலாம்.

அமரர் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மலையக தலைவராக இருந்தார். இன்று அவரும் எம்முடன் இல்லை என்றார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மத்திய மாகாண உள்ளூராட்சிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கௌரவிப்பு

0
மத்திய மாகாணத்தின் உள்ளூராட்சி நிறுவனங்களிடையே 2025 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொது நூலக வாசகர் செயல்பாடுகள் போட்டிகள், நகர அழகுபடுத்தல் மற்றும் பொதுச் சேவைகள் எண்ணிமமாக்கல் திட்டங்களில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும்...

ஊழல்: குருணாகல் பிரதி மேயரின் கட்சி உறுப்புரிடையை இடைநிறுத்தியது ரிஷாட் கட்சி!

0
குருணாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஸாருடீன் மெய்னுடீனின் கட்சி உறுப்புரிமை உடனுக்குக்கு அமுலுக்குவரும் வகையில் இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சியின் சட்டவிவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி றுஷ்டி ஹபீப் அறிவித்துள்ளார். குருணாகல் மாநகர சபையின் ஒப்பந்த...

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அதிகரிப்பு!

0
  2026ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி, 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு உபயோகிப்பாளர் பிரிவினருக்கு...