Home Blog Page 4065

இம்முறை மக்கள் ஏமாறத் தயாரில்லை

பதுளை தோட்டப்புறங்களில் செந்தில் தொண்டமானுக்கு உள்ள அசைக்க முடியாது செல்வாக்கால் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும் பெரும்பான்மையினர்!!

– இம்முறை மக்கள் ஏமாறத் தயாரில்லை : தனி விருப்ப வாக்குகளுடன் செந்தில் தொண்டமானை பாராளுமன்ற அனுப்புவதில் உறுதியாகவிருக்கும் பதுளை தமிழர்கள் –

பதுளை மாவட்டத்தில் தோட்டப்புறங்களில் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்குள்ள அசைக்க முடியாத செல்வாக்கால் அவரின புகைப்படமின்றி தோட்டப்புறங்களில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதையறிந்து பெரும்பான்மை அரசியல்வாதிகள் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தையும் தமது சுவரொட்டிகளில் இணைத்து அச்சிட்டு வருவதை பரவலாக காணமுடிகிறது.

பதுளைத் தேர்தல்களம் நாளுக்குநாள் பரபரப்படைந்து வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தமிழ் வேட்பாளராக களமிறங்கியுள்ள செந்தில் தொண்டமானின் செல்வாக்கு தோட்டப்புறங்களில் அசைக்க முடியாத அளவு வளர்ச்சிக்கண்டுள்ளது. அத்துடன், பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களும் தொடர்ந்து செந்தில் தொண்டமானுடன் கைகோர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், தோட்டப்புறங்களில் செந்தில் தொண்டமானின் புகைப்படமின்றி எந்தவொரு பெரும்பான்மை வேட்பாளரும் இம்முறை வாக்குளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதால் தமது சுவரொட்டிகளுடன் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தையும் சேர்த்து அச்சிட்டு அனைத்து தோட்டப்புறங்களிலும் பொது இடங்களிலும் ஒட்டிவருகின்றனர்.

ஆனால், பதுளைவாழ் தமிழர்கள் இம்முறை அதிகூடிய தனி விருப்ப வாக்குகள் மூலம் செந்தில் தொண்டமானை பாராளுமன்றத்திற்கு அனுப்பி அரசாங்கத்தில் ஓர் அதிகாரம் மிக்க அமைச்சுப் பதவியை பெற்றுக்கொடுப்பதில் உறுதியாகவுள்ளனர். புத்திஜீவிகளும், ஆசிரியர் சமூகமும் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளதுடன், போலியான பிரசாரங்களை கண்டு மக்கள் ஏமாறக் கூடாதென கேட்டுக்கொள்கிறது.

கடந்த மாகாண சபைத் தேர்தலின் செந்தில் தொண்டமான் 33 வாக்குகளைப் பெற்றிருந்தார். முதலமைச்சராக நியமிக்கப்பட்ட சாமர சம்பத் 35 வாக்குளைப் பெற்றிருந்தார். சாமர சம்பத் பெற்றுக்கொண்ட வாக்குகளில் 8ஆயிரம் வாக்குகள் தோட்டப்புற வாக்குகளாகும். அந்த வாக்குகள் செந்தில் தொண்டமானுக்கு அளிக்கப்பட்டிருந்தால் ஊவா மாகாண முதலமைச்சராக ஒரு தமிழர் தெரிவாகியிருக்க முடியும். பதுளையில் 80 சதவீதம் பெரும்பான்மையினரும் 20 சதவீதம் சிறுபான்மையினரும் வாழ்கின்றனர். செந்தில் தொண்டமானுக்கு உள்ள அசைக்க முடியாத செல்வாக்கு காரணமாகவே அனைத்து பெரும்பான்மை அரசியல்வாதிகளும்; இவ்வாறு அவருடைய புகைப்படத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இம்முறை பதுளைவாழ் தமிழ் மக்கள் தெளிவாக உள்ளனர். இவ்வாறான போலி சுவரொட்டிகள் மற்றும் பிரசுரங்களை கண்டு நம்பிவிடாமல் தனி விருப்ப வாக்குளை செந்தில் தொண்டமானுக்கு அளித்து அமைய போகும் அரசாங்கத்தில் மலையகத் தமிழர்களின் உரிமைகளை பேரம் பேசி வென்றெடுக்கக் கூடிய அதிகாரத்தை பெற வழிசமைக்க வேண்டுமெனவும் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

‘நல்லாட்சி காலப்பகுதியே மலையகத்துக்கு பொற்காலம்’

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. அதனை பெரும் வெற்றியாக மாற்றவேண்டிய பொறுப்பு மக்களுடையது. எனவே, தொலைநோக்குடன் சிந்தித்து தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” வெறுமனே கைகளை வீசிக்கொண்டு அல்லாமல் மலையகத்துக்கு ஆக்கப்பூர்வமான சேவைகளை செய்துவிட்டே மக்கள் முன்னணிலையில் வாக்குகேட்டு வந்துள்ளோம்.

2015 முதல் 2019 வரையான காலப்பகுதியே மலையகத்துக்கு பொற்காலமாகும். 40 ஆண்டுகளுக்குமேல் செய்யப்படாதிருந்த பல விடயங்களைக்கூட நான்கரை வருடங்களில் செய்து செயல்வீரர்கள் என்பதனை தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி அல்ல. அது மலையக மக்களுக்கான கூட்டணி. உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் இயக்கமாகும். எம்மால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைக்கூட தொடர்ந்து முன்னெடுக்கமுடியாத நிலையிலேயே ஆளுங்கட்சி பக்கமுள்ள இன்றைய மலையக அரசியல்வாதிகள் இருக்கின்றனர் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்று நாம் அமைச்சுப்பதவிகளை பெற்ற பின்னர் அபிவிருத்திகள் தொடரும் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

நான்கவரை வருடங்களில் எம்மால் பல சேவைகளை செய்யமுடிந்தால் இன்னும் ஐந்தாண்டுகள் கிடைத்தால் எவ்வளவு சேவைகளை மக்களுக்கு வழங்கக்கூடியதாக இருக்கும். எனவே. வாய்ச்சொல் வீரர்களுக்கு அல்லாமல் செயல்வீரர்களுக்கே மக்கள் வாக்களிக்கவேண்டும்.

நுவரெலியா மாவட்டத்துக்குதான் அதிகம் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். இந்தத்தேர்தலிலும் சில சுற்றுலாப்பயணிகள் போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவடைந்ததும் அவர்கள் சென்றுவிடுவார்கள். .எனவே, முற்போக்கு கூட்டணிக்கு நம்பிக்கையுடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கிடைத்த வாக்குரிமையை வீணடிக்கவேண்டும். உரிய வகையில் பயன்படுத்துங்கள்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘நல்லாட்சியால் பாரிய நிலப்பரப்பை இழந்துள்ளோம்’ – மஹிந்த

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் துறைமுக நகரத்தில் இலங்கைக்கு சொந்தமாகவிருந்த பாரிய அளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச செயலக பிரிவின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு நேற்று மாலை வீரக்கெட்டியவில் இடம்பெற்றது. இதன்போது பிரதமர் இந்த தகவலை வெளியிட்டார்.
துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றப்பட்டுள்ளதனை மீளவும் வழமைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் அரசாங்கத்தின் கீழ் நாட்டையே வேலைத்தளமாக்கி மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் கடந்த ஐந்து வருடங்கள் முழுமையாக தடைப்பட்டுள்ள நிலையில் கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு நடவடிக்கையும் இரண்டு வருடங்கள் தடைப்பட்டிருந்ததாக பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த காலப்பகுதியினுள் துறைமுக நகர ஒப்பந்தத்தை மாற்றியமையினால் எங்கள் நாட்டிற்கு சொந்தமாகவிருந்த நிலப்பரப்பை குறைத்து கடந்த அரசாங்கம் ஒப்பந்தம் தயாரித்துள்ளது.
ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் துறைமுக நகரத்தின் மூலம் இழந்த நிலப்பரப்பை மீள பெறுவதற்கு தற்போது எமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக நாட்டின் அனைத்து பிரதேசத்திலும் அபிவிருத்தி மேற்கொள்வதற்காக ஒரே அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை அதிகரித்து மாகாண மட்டத்தில் அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
எங்கள் அரசாங்கத்தின் கீழ் தங்காலை சிறைச்சாலையை அங்குனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டதனை பிரதமர் இதன் போது நினைவு கூர்ந்தார்.  அதன் மூலம் தற்போது வரையில் அங்குனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் ஓரளவு பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு மேலதிகமாக அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை இதுவரையில் ஆசியாவின் சிறந்த எடுத்துக்காட்டுடைய சிறைச்சாலையாகியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் சமல் ராஜபக்ஷ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ.சானக மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் இணைந்திருந்தனர்.

‘முற்போக்கு கூட்டணியே இரண்டாவது பெரிய தமிழ்க்கட்சி’

மக்களின் தோழனாக இருந்து மலையக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

கடந்த காலங்களில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நம்மவர்கள் யானைக்கே வாக்களித்தார்கள். இம்முறை யானை சின்னம் இல்லை. அது காட்டுக்குபோய்விட்டது.எனவே, தொலைபேசிக்கு வாக்களிக்கவும். சஜித் பிரேமதாச பிரதமரானால்தான் நாங்கள் அமைச்சராக முடியும். எனவே, முதலில் தொலைபேசிக்கு வாக்களித்துவிட்டு மூன்று விருப்பு வாக்குகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

திகாம்பரம், உதயகுமார், ராதாகிருஷ்ணன் ஆகிய மூவரும் மலையக மக்களுக்கு கூடுதல் சேவைகளை செய்துள்ளோம். கண்டியில் இருந்து வாக்கு கேட்டுவந்துள்ளனர். மேலும் சிலரும் வருகின்றனர். இவர்களுக்கு வாக்களிப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

தமிழ் முற்போக்கு கூட்டணிதான் இலங்கையிலுள்ள இரண்டாது பெரிய தமிழ்க்கட்சியாகும். 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்வசம் இருந்தனர். மூன்று அமைச்சுகள்கூட வழங்கப்பட்டிருந்தன. அவற்றின்மூலம் நாம் சேவைசெய்து காட்டினோம்.

க.கிசாந்தன்

தொண்டமானின் திட்டங்கள் தொடரும் – ரமேஷ்

எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான்,  மலையகத்தை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருந்தார். அவர் எம்மைவிட்டு பிரிந்திருந்தாலும் அவரின் வேலைத்திட்டங்களை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று இ.தொ.கா வின் நிதிச்செயலாளரும்,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்ரவன் தெரிவித்தார்.

மஸ்கெலியா கிளன்டில் தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கடந்த ஆட்சியின்போது நாம் எதிர்கட்சியிலேயே அமர்ந்திருந்தோம். அதனால் எமது வேலைத்திட்டங்கள் தடைப்பட்டன.இருப்பினும் மாகாண அமைச்சில் அதிகாரம் காணப்பட்டமையினால் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.

அதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது பல வேலைத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சென்றுள்ளோம். அவ்வாறனதொரு அரசாங்கமே பொதுத்தேர்தலின் பின் அமைய உள்ளது.  அதில் இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதோடு அமரர் ஆறுமுகன் தொண்டமான் காண நினைத்த அபிவிருத்தியை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவோம்.” – என்றார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

சிவாஜிலிங்கம் கைதாகி விடுதல

இரண்டாம் பதிப்பு : கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்க்ள தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் கைதுசெய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

முதல் பதிப்பு : தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று முற்பகல் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றப் பிடியாணை உத்தரவிலேயே சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கும் பொலிஸார் விவரத்தை வெளியிட மறுக்கின்றனர்.

பாலித்த தெவரப்பெருமவுடன் சண். பிரபா சங்கமம்!

களுத்துறை மாவட்ட சிறுபாண்மை மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளையும் பங்களிப்புகளையும்  வழங்கிவரும் களுத்துறை மாவட்ட வெற்றி வேட்பாளர் பாலித்த தெவரப்பெருமவுடன் கைகோர்த்தார் சண்.பிரபா.

களுத்துறை மாவட்டத்தில் தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக தான் உதவி புரிவதாக பாலித்த தெவரப்பெரும தன்னிடம் உறுதியளிததுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் சண்.பிரபா தெரிவித்துள்ளார்.

நேற்று (04/07) அவரது காரியாலயத்திற்குச் சென்று சந்தித்த வேளையிலேயே தெவரப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சிறுபாண்மை மக்களிள் வாக்குகள் மாத்திரம் அலல பெரும்பாண்மை மக்களின் வாக்குகளையும் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவுவேன்.

இத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்திற்கு சிறுபாண்மை பிரதிநிதித்துவத்தை வெற்றிக் கொள்வதற்கு  நிச்சயமாக  உதவுவேன் என உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலில் இருந்து விலக தயாரா? ராதாவுக்கு அனுசா சவால்!

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் தனக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பொதுத்தேர்தலில் இருந்து அவர் விலகவேண்டும் – என்று பொதுத்தேர்தலில் சுயேட்சையாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நான் அரசாங்கத்திடம் 2 கோடி ரூபா பணம் வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். நான் பணம் வாங்கியிருந்தால் அதனை நிரூபித்துக்காட்டுமாறு மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய தலைவருக்கு சவால் விடுக்கின்றேன்.

அவ்வாறு நிரூபித்தால் பொதுத்தேர்தலில் இருந்து விலகிக்கொள்கின்றேன். இல்லையேல் பாராளுமன்றத் தேர்தலில் இருந்து நீங்கள் விலகவேண்டும் என்பதை சவாலாக இன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்றார்.

எனது மகனுக்கு கட்சியில் பதவி இல்லை – திகா திட்டவட்டம்

“தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தொழிலாளி ஒருவரின் பிள்ளையே தலைவராகவேண்டும். ஒருபோதும் எனது மகனை கொண்டுவந்து கட்சியில் பதவிகளை வழங்கமாட்டேன்.” – என்று சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

வீடு வேண்டும் என்ற எல்லோருடைய கோரிக்கையையும் ஒரே நாளில் நிறைவேற்றிவிடமுடியாது. எல்லோருக்கும் வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டோம் எனவும் நான் கூறவில்லை. எமக்கு கிடைத்த நான்கரை வருடங்களில் பல வீட்டுத்திட்டங்கள் முன்னெடுத்தோம். இதனால்தான் தனிவீடு தொடர்பான கருத்தாடல்கள்கூட இன்று இடம்பெற்றுவருகின்றன.
எனக்கு பின்னால் எனது மகன் அரசியலுக்கு வரப்போவதில்லை. ஏனெனில் அவருக்கு உங்களைப் பற்றி தெரியாது. சொகுசாக வாழ்ந்தவர். ஆனால் நான் அப்படியானவன் அல்லன். உங்களது கஷ்டங்கள் அறிந்தவன். அவற்றை நானும் அனுபவித்துள்ளேன்.  எனவே, என்னுடைய மகனை கொண்டுவந்து தொழிலாள் தேசிய சங்கத்தின் தலைவராக்கமாட்டேன். இந்த சங்கத்துக்கு தலைவராகக்கூடிய தகைமை – உரிமை உங்களின் பிள்ளைகளுக்கே இருக்கின்றது. தேர்தலுக்காக இதனை நான் பேசவில்லை. உண்மையாகவே சொல்கின்றேன்.
மலையக இளைஞர்களே, நுவரெலியா மாவட்டத்தில் எமது இருப்புக்கு ஆபத்து வரப்போகின்றது. ஒரு கட்சியில் எட்டு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குகளை சிதறடிக்க மேலும் பலர் போட்டியிடுகின்றனர். எமக்கான பிரதிநிதித்துவம் இருந்தால் மட்டுமே பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கதைக்கமுடியும். அவ்வாறு இல்லாவிட்டால் தட்டிக்கேட்கமுடியாத சூழ்நிலை ஏற்படும்.
நாம் என்றும் மக்களோடு மக்களாகவே இருப்போம். ஓடி ஒளியமாட்டோம். எமது கைகளுக்கு மீண்டும் அதிகாரம் வந்தால் அபிவிருத்தியில் புரட்சியை ஏற்படுத்துவோம்.
அண்ணன் கிரிக்கெட் விளையாடினார் என்பதற்காக தம்பியை இங்கு களமிறக்கி கோடி கணக்கில் செலவுகளை செய்து, பெட், போல்களை வழங்கி வாக்குகளை உடைத்து, எமது பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு முயற்சிக்கின்றனர்.
அதேவேளை, போர்காலத்தில் கொழும்பில் இருந்துக்கொண்டு தமிழ் மக்களுக்காக போராடியவர்தான் எமது தலைவர் மனோ கணேசன். அவரை கட்டாயம் கொழும்பில் வெற்றிபெற செய்யவேண்டும். அதற்கேற்ற வகையில் நமது தமிழ் மக்கள் வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும்.

600 கோடி ரூபா அபிவிருத்தி – ஊவாவில் செந்தில்தான் ஹீரோ

பதவி விலக அரவிந்தகுமார் தயாரா? சேவைப்பட்டியலை வெளியிட்டு சிவலிங்கம் சவால் விடுப்பு!
ஊவாவில் வரலாறுகாணாத அபிவிருத்தியை முன்னெடுத்த ஆளுமைமிக்க தலைவரே செந்தில் தொண்டமான்!

– அபிவிருதிகளை ஆவணங்களுடன் பட்டியலிட தயார் : வாபஸ் பெற அரவிந்தகுமார் தயாரா என சிவலிங்கம் பகிரங்க சவால் விடுப்பு –

ஊவாமாகாண அரசியல் வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், பதுளையில் எந்தவொரு தமிழ் அரசியல் வாதியும் செய்யாத பாரிய அபிவிருத்தித் திட்டங்களை செய்துள்ளார். 6000ம் மில்லியனுக்கும் அதிகமான நிதியை தோட்டப்புறங்களின் பாதை அபிவிருத்திக்கு மாத்திரம் பெற்றுக்கொடுத்துள்ளார் என ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஊவாவில் கிட்டத்தட்ட 134 கிலோ மீற்றர் தோட்டப்புற பாதை கார்ப்ட் இடப்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டுக்குள் ஊவாவில் உள்ள அனைத்து தோட்டங்களுக்கும் காபட் பாதை போடப்பட்டிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தம்மைவிட அபிவிருத்தித் திட்டங்களை செய்துள்ள எவரும் அதனை பட்டியலிட தயார் என்றால் தாம் தேர்தலில் இருந்து வாபஸ் பெற தயாரென கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சிவலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஊவாவில் செந்தில் தொண்டமானின் அரசியல் பயணம் ஆரம்பமான நாள் முதல் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தோட்டப்புறங்களை நோக்கிக் கொண்டுவரப்பட்டுள்ளன. எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் செய்திராத அபிவிருத்திட்டங்களை செந்தில் தொண்டமான் செய்துள்ளார். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தோட்ட உட்கட்டமைப்பு, கலாசாரம் என அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தியை செய்துள்ள ஒரே ஆளுமைமிக்க தலைவர் செந்தில் தொண்டமான்தான்.

ஏ.டி.பி மூலம் 4500 மில்லியனுக்கும் அதிகமான நிதியை தோட்டப்புற பாதைகளை கார்ப்ட் செய்வதற்காக 36 தடவைகளுக்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுக்கொடுத்துள்ளார். அத்தோடு மாகாண சபை மூலமாக 1700 மில்லியனுக்கும் அதிகமான நிதியையும் அவர் பெற்றுக்கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 7000ம் மில்லியன் வரையான நிதியை தோட்டப்புற பாதைகளின் அபிவிருத்திக்கு மாத்திரம் ஒரு மாகாண அமைச்சராக இருந்து பெற்றுக்கொடுத்துள்ளார்.

இதுவரை மலையகத்தில் தமிழ் அமைச்சராகவிருந்த எவரும் செய்யாத அபிவிருத்திகளை செந்தில் தொண்டமான் ஊவாவில் செய்துள்ளதுடன், அவர்களைவிட குறைந்தது ஒரு ரூபாவேனும் அதிகமாக அபிவிருத்தியை செய்திருப்பார்.

தோட்டப்புற பாதைகளின் அபிவிருத்திக்கு மாத்திரமே இந்தளவு நிதியை பெற்றுக்கொடுள்ள அவர் தோட்ட உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் உட்பட ஏனைய அபிவிருத்திக்கும் பாரிய நிதியை பெற்றுக்கொடுத்துள்ளார். அவரின் அபிவிருத்திகளை ஓர் அறிக்கையில் பட்டியலிட்டுவிட முடியாது.

செந்தில் தொண்டமான் செய்துள்ள சேவையில் துளியளவும் செய்யாத அரவிந்தகுமார் வெட்டிப் பேச்சு பேசிவருகின்றனர். செந்தில் தொண்டமானின் சேவைகளை பட்டியலிட நாம் தயாராகவுள்ளோம். அரவிந்தகுமார் வாபஸ் பெறுவதற்கு தயாரா?. ஊவாவில் செந்தில் தொண்டமான்தான் ஹீரோ மற்றவர்கள் எல்லாம் ஷீரோ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

0
இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே'...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

செய்தி

சுரேஷ் சலேவுக்கு சித்திரவதையா? அரசு மறுப்பு!

0
“சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. விசாரணைகளை திசைதிருப்பவே சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர். கோட்டாபய ராஜபக்ச உட்பட இருவருக்கு பயணம் தடை விதிக்கப்பட்ட பின்னரே குழப்பம் அடைந்துள்ளனர்.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...

ஆட்சி மாற்றம் குறித்து கனவு காணும் பொருளாதாரக் கொளையாளிகள்!

0
“ராஜபக்சக்கள் பொருளாதாரக் கொலையாளிகள். அந்த பொருளாதாரக் கொலையாளிகளால்தான் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டி ஏற்பட்டது.” என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது...