Home Blog Page 41

பரிசுத்தப் பாப்பரசருக்கு இலங்கைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி அழைப்பு

 

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வத்திக்கானில் நாடுகளுடனான உறவுகளுக்கான துணைச் செயலாளர் மிஹைட்டா பிளாஜ் அருட் தந்தையை(Msgr. Mihăiță Blaj) சந்தித்து இந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழை கையளித்தார்.

மத்திய கிழக்கு போர் சூழல்: அனைத்து தரப்பு கூட்டத்துக்கு சஜித் அழைப்பு!

ஈரான்மீதான தாக்குதலானது ஐ.நா. சாசனத்தைமீறும் செயலாகும். அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (3) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அதேபோல ஐக்கிய அரபு அமீகரம், சவூதி, கட்டார் உள்ளிட்ட நாடுகள்மீது ஈரான் நடத்திய தாக்குதலையும் கண்டிக்கின்றோம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால் எமது நாட்டுக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் அவசியம்.

இதற்கான அழைப்பை ஜனாதிபதி விடுக்க வேண்டும். கட்சி பேதம் இன்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.

“கடல்-கடந்த இந்திய குடியுரிமை (OCI) வேண்டும்!

கடல்-கடந்த இந்திய குடியுரிமை(OCI), தூதரக கல்வி அறக்கட்டளை தொடர்புகளில் சிறந்த தீர்வுகளை எதிர்பார்கிறோம்! மனோ கணேசன், இந்திய தூதர் சந்தோஷ் ஷாவிடம் எடுத்துரைப்பு!

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில், அவர்களுக்கு இலகுவாக கடல்-கடந்த இந்திய குடியுரிமை அந்தஸ்து (OCI) வழங்கல், இலங்கை இந்திய தூதரகத்தில் செயற்படும், இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை (CEWET) என்ற நிறுவனத்தின், நோக்கங்களை விரிவு படுத்தி, இன்றைய சமூக மலையக வளர்ச்சிக்கு ஏற்ப இந்நிறுவனத்தை புனரமைக்க வேண்டும்.

இது தொடர்பான முன்மொழிவுகளை, பாரத பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் மற்றும் இன்றைய இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா ஆகிய உங்களிடமும், இதற்கு முன்னாள் கடமையாற்றிய, கோபால் பாக்லே ஆகியோரிடமும் நாம் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக சமர்ப்பித்து உள்ளோம்.

இந்நிலையில் இந்த எமது முன்மொழிவு யோசனைகளை ஏற்று, அவற்றுக்கு உரிய தீர்வுகளை இந்திய அரசு வழங்க வேண்டும். அதற்கு இலங்கைக்கான இந்திய தூதராகிய உங்களை அறிவார்ந்த பங்களிப்பும் இருக்க வேண்டும், என எடுத்து கூறினேன் என இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜாவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன், அரசியல் குழு உறுப்பினர், சர்வதேச துறைக்கான ஜமமு உப தலைவர் பாரத் அருள்சாமி உள்ளடங்கிய தூதுக்குழுவுக்கும், இந்திய தூதர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது, இந்திய அரசியல் துறை கவுன்சிலர் ராம் பாபுவும் கலந்துகொண்டார். இது தொடர்பில் மனோ கணேசம் கூறியதாவது:

இலங்கை வாழ் மலையக தமிழர்களின் ஜனத்தொகை சுமார் 15 இலட்சம் ஆகும். இதில் 10 இலட்சம் பேர் தோட்ட பிரதேசங்களில் வாழ்கிறார்கள். இதில் ஆக ஒரு இலட்சம் பேர்தான் இன்று தோட்ட தொழிலாளர்களாக தொழில் செய்கிறார்கள். ஆகவே இந்த சமூகம், சுய முயற்சியால் பல்வேறு தொழில், வர்த்தக, துறைகளில் வளர்ந்து, இன்று ஒரு தேசிய சிறுபான்மை இனமாக உருமாற்றம் அடைந்து விட்டது.

இலங்கை மக்கள் எல்லோரும் ஏறக்குறைய இந்திய வம்சாவளி மக்கள்தான். சமீபத்தைய இந்திய வம்சாவளி மக்கள், மலையக தமிழர் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் இந்திய வம்சாவளி என்ற அடையாளம் மறைக்க பட முடியாதது. மறைக்க பட அவசியமும் இல்லை. பாரத நாட்டுக்கு இந்திய வம்சாவளி மலையக தமிழர் மீது பாரிய தார்மீக கடப்பாடு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் நாம் இங்கு வந்து கலந்து பேசுகிறோம்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் மற்றும் இன்றைய இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா ஆகிய உங்களிடமும், இதற்கு முன்னாள் கடமையாற்றிய, கோபால் பாக்லே ஆகியோரிடமும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, எமது பிரதான தேவைகள் தொடர்பில் எழுத்து மூல ஆவணங்கள் சமர்பித்து உள்ளோம். இவை பற்றி பின்வரும் இரண்டு விடயங்கள் தொடர்பில் நேரடியாக நான் பலமுறை எடுத்து கூறியும் உள்ளேன். எமது முன்மொழிவுகளை ஏற்று, அவற்றுக்கு தீர்வுகளை இந்திய அரசு வழங்க வேண்டும். அதற்கு இலங்கைக்கான இந்திய தூதராகிய உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும்,

கடல்-கடந்த இந்திய குடியுரிமை அந்தஸ்து (OCI)

இலங்கையில் வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு, அவர்கள் விரும்பினால், இலகுவான தகுதி அடிப்படையில் கடல்-கடந்த இந்திய குடியுரிமை (OCI) அந்தஸ்தை வழங்குவதை இந்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். இத்தொடர்பில், மொரீஷியஸிற்கு பொருந்தும் OCI கட்டமைப்பு ஒரு முன்மாதிரியாக அமையலாம்.

கொழும்பிற்கு விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற எனது கலந்துரையாடலின் போது, இது தொடர்பில் சாதகமான பதிலை பிரதமர் வழங்கினார். தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ், பிஜி, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி சமூகங்கள் வலுவான சமூக-பொருளாதார முன்னேற்றங்களை அடைந்துள்ளன. ஆனால், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழர், அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக பின்னடைவை எதிர்கொள்கிறார்கள்.

இந்த பின்னணியில், இலங்கை வாழ் மலையக தமிழருக்கு, விருப்பத்தின் அடிப்படையில், OCI அந்தஸ்தை வழங்குவது ஒரு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கையாகவும் அமையும். குறிப்பாக, 1964ஆம் ஆண்டின் சிறிமா–சாஸ்திரி ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய நலன்களை முன்னிறுத்தியதாகும். இது, இலங்கையின் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதையும், ஆகவே, இந்த அந்தஸ்து, நமது மக்களின், வரலாற்றை அங்கீகரிப்பதுடன், கல்வி, தொழில், தொடர்பாடல், வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்து சமூகத்தை வலுப்படுத்தும் என்பதையும் என்பது பாரத அரசு உணர வேண்டும்.

கல்வி வளர்ச்சியை விரிவுபடுத்தல்

1946 முதல் இலங்கை இந்திய தூதரகத்தில், செயல்படும் நிறுவனமான தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை (CEWET), மறுசீரமைக்கப்பட்டு, “இந்திய வம்சாவளி தமிழர்-சமூக மேம்பாட்டு அறக்கட்டளை (IOT-CDT)” என்ற பெயரில் விரிவு படுத்த வேண்டும். இன்று நமது சமூகம் தோட்டங்களை தாண்டி, சமூக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய அரசின் நிதி ஆதரவு பெற்ற அனைத்து புலமை பரிசில், கல்வித் வளர்ச்சி திட்டங்கள், இந்த அறக்கட்டளை மூலம் நடைபெற வேண்டும்.

(a) புலமை பரிசில் தொகையையும், எண்ணிக்கையும் அதிகரித்தல்

(b) நமது பள்ளிகளில் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய பாட ஆசிரியர்களை உருவாக்க தமிழ் வழி ஆசிரியர் பயிற்சி கல்லூரி நிறுவல்
(c) மலையகம் தமிழ் பெண்களுக்காக தாதியர் பயிற்சி நிறுவனத்தை அமைத்தல்
(d) இலங்கைச் சட்டப்படியும், இந்திய நவோதயா பள்ளிகள் முறைப்படியும், இந்து சர்வதேச பள்ளிகளை நிறுவுதல்
(e) நுவரேலிய மாவட்டத்தில் தமிழ்நாட்டின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்துடன் கூட்டிணைந்து, மலையக பல்கலைக்கழக வளாகத்தை (High-Lands

University Campus) நிறுவி, எதிர்காலத்தில் இதனை முழுமையான தேசிய பல்கலைக்கழகமாக வளர்த்தல்.

 

இலங்கையிடம் ஈரான் தூதுவர் விடுத்துள்ள கோரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலில், சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து இலங்கை தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீண்டகால அணிசேரா வெளியுறவுக் கொள்கை என்பது, பொதுமக்களின் உயிரிழப்புகள் மற்றும் சர்வதேச விதிமீறல்களின் போது மௌனமாக இருப்பதைக் குறிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை ஒரு நடுநிலையான நாடு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், நடுநிலைமை என்பது மௌனம் காப்பது என்று அர்த்தமல்ல” எனக் குறிப்பிட்ட அவர், பிஞ்சு குழந்தைகள் கொல்லப்படும்போது ஒரு நாடு அமைதியாக இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள், ஈரானின் பொதுமக்களின் தனிப்பட்ட சொத்துகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டிய தூதுவர், போரிடும் தரப்புகளுக்கு இடையே அணிசேராமல் இருப்பதே நடுநிலைமை என்றும், ஆனால் சர்வதேச சட்டங்கள் மீறப்படும்போது அதற்கு அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் படத்தின் வசூல் யாருமே எதிர்பாராத விதத்தில் அமைந்துள்ளது.

உலகளவில் 3 நாட்களில் 22 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த வசூலால் படக்குழுவினர் பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள். மேலும், வரும் நாட்களில் இதே வசூல் தொடர்ந்தால் கண்டிப்பாக இப்படம் வசூல் சாதனை படைக்கும் எனக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமே இப்படம் ஓடிமுடியும் போது, ரூ.15 கோடி வரை பங்குத் தொகையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படம் வெளியாகும் முன்பே ஓடிடி உரிமம், தொலைக்காட்சி உரிமம், இசை உரிமம் உள்ளிட்ட அனைத்தையும் விற்றதன் மூலமே படக்குழுவினருக்கு நல்ல லாபம் கிடைத்துவிட்டது. இதனால் திரையரங்க வசூல் என்பது அதிகப்படியான லாபமாகவே பார்க்கப்படுகிறது.

 

மத்திய கிழக்கு போர்: இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆராய்வு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (03) இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அச்சந்திப்பில் பங்கேற்றனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல்தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் தாக்கங்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 10 லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கையர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகளால் சில யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.

ரியாத்தில் அமெரிக்க தூதரகம்மீது தாக்குதல்: உரிய பதிலடி வழங்கப்படும் என்கிறார் ட்ரம்ப்!

தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரமே மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் நேரடியாகக் களமிறங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா , ரியாத்திலுள்ள அமெரிக்க தூதுரகம்மீது ஈரான் இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன், இதற்கான பதிலடி நடவடிக்கை பற்றி அவர் விரைவில் தெரியப்படுத்துவார் எனவும் தெரியவருகின்றது.

அமெரிக்க தூதுரகம்மீதான தாக்குதலில் குறைந்த அளவிலான சேதங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சவூதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் தேவைப்பட்டால் மட்டுமே அமெரிக்க படையினர் ; நேரடியாகக் களமிறக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உடன் வெளியேறுங்கள்: மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு உத்தரவு!

மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 14 நாடுகளில் வசிக்கும் தனது நாட்டு குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன், சிரியா நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்கர்கள் வணிக ரீதியிலான விமானங்கள் கிடைக்கும்போதே அங்கிருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகம்மீது ஈரான் தாக்குதல்: தொடரும் மோதல்!

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இஸ்​ரேலும் அமெரிக்கா​வும் இணைந்து ஈரான் மீது கடந்த சனிக் கிழமை வான்​வழி தாக்​குதல் நடத்​தின. இதில் ஈரானின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உட்பட உயர்​மட்​டத் தலை​வர்​கள் பலர் உயி​ரிழந்​தனர்.

இதையடுத்​து, இஸ்ரேல் மட்டுமல்லாது அமெரிக்க ராணுவ ​தளங்கள் அமைந்​துள்ள கத்தார் மற்​றும் பஹ்ரைன் தலைநகரங்கள், ஐக்​கிய அரபு அமீரகத்​தின் அதிக மக்​கள் தொகை கொண்ட நகரங்​கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலை சவூதி பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்துக்குள் கரும்புகை சூழ்ந்ததோடு, கட்டிடத்தின் சில பகுதிகள் தீயில் எரிந்தன. தூதரக வளாகத்தில் பரவிய தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரியாத்தில் உள்ள இந்த அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பாதுகாப்பு கருதி ஏற்கெனவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் அச்சுறுத்தல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டு, ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...