Home Blog Page 42

ஒரே குடையின் கீழ் தமிழ்க் கட்சிகள்! தீர்வுக்குப் புதிய சட்டக் கட்டமைப்பை உருவாக்கும் சட்டத்தரணிகள் பேரவை

தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக சிதறிக்கிடக்கும் தமிழ்க் கட்சிகளின் பலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலமான முறையில் முன்னிறுத்துவதற்குத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒரு பொதுவான சட்டக் கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைத்து இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய பயணத்தை வேகப்படுத்துவதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும் என்று தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி க.ச.இரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள துவாரகா மண்டபத்தில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சிதையாமல் பாதுகாப்பதற்கும் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் ஒருமித்த குரலில் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் இவ்வாறானதொரு மேடை அவசியமாகின்றது.

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்றக் கட்சிகள் யாவும் ஒரு சில முக்கியமான விடயங்களில் ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு மூடிய அறை கூட்டமாக அமைந்திருந்ததுடன் அங்கு பகிரப்பட்ட கருத்துக்கள் அந்தந்த அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகக் கருதப்படும். வரும் காலங்களில் மிக விரைவில் மீண்டும் கூடி பிரதானமான பல முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளோம்.” – என்றார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கருத்தைப் பகிர்கையில்,

“இது ஒரு வெற்றியென்பதை தாண்டி ஒரு தொடக்கம் மாத்திரமே. இனப் பிரச்சினை சம்பந்தமாக ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தமிழ்க் கட்சிகள் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் அதன் நுணுக்கமான விவரங்கள் குறித்து இனிவரும் சந்திப்புகளில் விரிவாக ஆராயப்பட வேண்டும்.” – என்றார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இக்கூட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. நீண்டகாலமாக நிலவும் இனப் பிரச்சினைக்கு அரசியல் சாசனம் ஊடாகத் தீர்வு காண்பதற்கான தொடர்ச்சியான நகர்வாக இது அமைவதோடு தமிழ்க் கட்சிகள் யாவும் ஒரே சட்டக் குடையின் கீழ் ஒன்றிணைந்திருப்பது ஒரு பாரிய வெற்றி.” – என்றார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறுகையில்,

“இச்சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றது. சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அடுத்தகட்ட செயற்றிட்டங்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையே மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை இனிவரும் காலங்களில் தமிழ் கட்சிகளை இணைக்கும் பாலமாகச் செயற்பட வேண்டும். தனித்தனியாகப் பிரிந்து நின்று செயற்பட்ட நிலையை மாற்றி மக்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பதை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் ஒரே குரலில் சொல்ல வேண்டிய காலம் கனிந்துள்ளது. இக்கூட்டு முயற்சி தற்போதைய அரசுக்கு ஒரு பலமான செய்தியைச் சொல்லும்.” – என்றார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினரும் கலந்துகொண்டனர்.

தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களான சட்டத்தரணி க.ச.இரத்தினவேல் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன், பேராசிரியர் அ.சர்வேஸ்வரன், சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா, சட்டத்தரணி வ.ச.நிரைஞ்சன், சட்டத்தரணி ஞா.ரனித்தா மற்றும் சட்டத்தரணி ம.யூட் தினேஷ் உள்ளிட்ட முக்கிய சட்ட வல்லுநர்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

இந்தச் சந்திப்பானது நீண்டகாலமாகத் தனித்தனியாகப் பயணித்த தமிழ் அரசியல் சக்திகளை ஒரு பொதுவான இலக்கின் கீழ் கொண்டு வருவதற்கான முதல் படியாக அமைகின்றது. தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் நடுநிலையான வழிகாட்டலில் எட்டப்பட்டுள்ள இந்த ஆரம்பகட்ட இணக்கப்பாடானது வரும் காலங்களில் ஒரு பலமான அரசியல் அழுத்தக் குழுவாக உருவெடுக்க வழிவகுக்கும். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான விபரமான ஆவணங்களைத் தயாரித்து அடுத்தகட்டச் சந்திப்புகளில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மத்திய கிழக்கு நிலைவரம் குறித்து ஆராய்வு!

நாடாளுமன்றம் இன்று (03) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் மற்றும் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் என்பன தொடர்பில் எதிரணிகள் கேள்விகளை எழுப்ப உள்ளன.

இதனால் இன்றைய சபை அமர்வின்போது மத்திய, கிழக்கு விவகாரம் தொடர்பிலேயே அதிகளவு பேசப்படலாம் என தெரியவருகின்றது.

குறிப்பாக மத்திய கிழக்கு நிலைவரம் தொடர்பில் இந்தவார நாடாளுமன்ற அமர்விலேயே விசேட விவாதமொன்றை எதிரணி கோரலாம் என தெரியவருகின்றது.

அத்துடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார் என தெரியவருகின்றது.

மரக்கறி விலைப்பட்டியல் (03.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ட்ரம்பின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது: முன்னாள் ஜனாதிபதி ரணில்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்ற நாடுகளில் அரசாங்கங்களை மாற்ற எடுத்த நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் இதுபோன்ற நடவடிக்கைகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.‎

இன்று ஊடகங்களுக்கு செவ்வியளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் விவகாரம் மிகவும் தீவிரமான மற்றும் சிக்கலான பிரச்சினை. இவ்வாறான முறையில் ஒரு அரசாங்கத்தை வலுக்கட்டாயமாக அகற்றுவது, ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

இந்த நடவடிக்கைகள் அனைத்துலக சட்டம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய நடைமுறைகளுடன் இணங்கவில்லை என்று சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே போன்ற நாடுகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளன.

‎ஈரானின் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டாலும், இலங்கை உடனடி எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ள வாய்ப்பில்லை.

அத்தகைய இழப்புகளை ஈடுசெய்ய மற்ற நாடுகள் போதுமான எண்ணெயை உற்பத்தி செய்கின்றன.

‎இருப்பினும், ஈரான் இந்தப் பகுதி வழியாகச் செல்லும் எண்ணெய் தாங்கிகளைத் தாக்கத் தொடங்கி, எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினால், அது ஒரு கடுமையான பிரச்சினையாக மாறும். அது இன்னும் நடக்கவில்லை.

ட்ரம்ப் உலகம் தான் விரும்பியவாறு செயற்பட வேண்டும் என்று விரும்புகிறார், ஆனால் இது எமக்கு நல்லதல்ல, இந்த பிரச்சினை மிகவும், குழப்பமான விடயம்” என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான் திட்டவட்டம்!

“அமெரிக்காவுடன் ஈரான் பேச்சு நடத்தாது. தன்னைதானே தற்காத்துக்கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது.”என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையின்தலைவர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்தள பக்கம் ஊடாகவே அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘‘டொனால்ட் ட்ரம்ப் தனது தவறான நம்பிக்கைகளால் பிராந்தியத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்க துருப்புக்களுக்கு உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார்.

தனது ஆளுமையை நிலை நாட்டிக்கொள்வதற்கான விலையை, அமெரிக்க படையினர் மற்றும் குடும்பங்கள் மீது சுமத்துகிறார். இன்று, ஈரான் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறது.

ஈரானிய ஆயுதப்படைகள் படையெடுப்பைத் தொடங்கவில்லை. நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த மாட்டோம்’’ எனவும் ஈரான் தேசிய பாதுகாப்பு சபையின்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஈரான், அமெரிக்காவுடன் ஓமன் அரசு மூலம் பேச்சு முன்னெடுப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே ஈரான் தரப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்கள் குறித்து ஆராய நாளை விசேட கூட்டம்: சஜித் அழைப்பு!

மத்திய கிழக்கில் மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்களின் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமே சஜித் பிரேமதாசவால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (03) இந்த அவசர கூட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக, பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

மேற்படி மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் நமது நாட்டைபஇலங்கையை பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

இதன்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையில் சில யோசனைகள் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

 

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 31 பேர் பலி!

லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் பலியாகியுள்ளனர்.

ஈரானை குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழித் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது. ஈரானும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மேற்கு ஆசியாவில் நடக்கும் மோதலின் இடையே ஹிஸ்புல்லா படைகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் லெபனானின் பெய்ரூட்டில் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 149 பேர் காயமடைந்ததாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், குவைத் மீது ஈரான் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துவதால், அமெரிக்கா அங்குள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்குமாறு அவசர எச்சரிக்கை விடுத்தது.

எரிபொருள் கையிருப்பு குறித்து வீண் அச்சம் வேண்டாம்!

நாட்டில் போதுமானளவுக்கு எரிபொருள் கை இருப்பில் உள்ளது. எனவே, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ளவேண்டாம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“ நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வீண் அச்சத்தால் மக்கள் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அவ்வாறு அச்சம் கொள்ள தேவை இல்லை.

தேவையானளவு எரிபொருள் இருப்பில் உள்ளது. எமது கப்பல்கள் மத்திய கிழக்கு ஊடாக அல்ல, வேறு வழிகளில்தான் வருகின்றன. எனவே, விநியோகம் பாதிக்கப்படமாட்டாது. “ எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

நுவரெலியாவில் உறை பனி பொழிவு!

நுவரெலியா குதிரைப் பந்தய திடலில் இன்று (2) உறைப்பனி பொழிவு காணப்பட்டது.

கடந்த மாதங்களில் அதேபோன்ற நிலைமை காணப்பட்டது.

குறிப்பாக மாலை வேளையில் அதிகப்படியான குளிரான காலநிலை நிலவுகின்றது.

அத்துடன், அதிகாலைவேளை உறைப்பனி புற்கள்மீது படர்ந்து காணப்படுகிறது.

உலக அமைதிக்கு ஆபத்து: மத்திய கிழக்கு போர் முடியட்டும்! அமைதி மலரட்டும்!!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை முடிவுக்கு கொண்டுவருமாறு அனைத்து தரப்புகளிடமும் இலங்கை கோரிக்கை விடுக்கின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை மற்றும் எரிபொருள் விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று விசேட ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சரவைப் பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார்.

“ உயிரிழப்புகளையும், பேரிழப்புகளையுமே போர் தரும். எனவே, எங்கு நடந்தாலும், எவர் நடத்தினாலும் போரை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் உலக அமைதி, பிராந்திய ஸ்தீரத்தன்மை மற்றும் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உலக அமைதிக்காக இலங்கை அர்ப்பணிப்புடன் செயல்படும். அந்தவகையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை முடிவுக்கு கொண்டுவருமாறு அனைத்து தரப்புகளிடமும் இலங்கை கோருகின்றது.

அதேவேளை, மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

உள்நாட்டிலுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டார்.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...