Home Blog Page 43

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இலங்கை எடுத்துள்ள முக்கிய முடிவுகள்!

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் இலங்கை அவதானம் செலுத்தியுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தேவைகளை கவனிப்பதற்கும் அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில்; தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அவர்களது விசா காலத்தை எவ்வித கட்டணமுமின்றி இரண்டு வாரங்களுக்கு (14 நாட்கள்) நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேவைப்படின் இதனை மேலும் நீடிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். நாட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களை ஆராயவும் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அந்தந்த தூதரகங்களுடன் கலந்துரையாடி முறையான வேலைத்திட்டமொன்றை உடனடியாகத் தயாரிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும், சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள தடைகளை கருத்திற்கொண்டு, வெளிவிவகார அமைச்சு மற்றும் விமான நிறுவனங்கள் இணைந்து மாற்று வான்வழிகள் ஊடாக சுற்றுலாப் பயணிகள் தமது நாடுகளுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல், இலங்கைக்கு வர எதிர்பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் எவ்வித இடையூறுமின்றி வருகை தருவதற்கு மாற்று இடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவும், அதற்கான வசதிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

நாட்டில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன், 1912 என்ற உடனடி அழைப்பிலக்கத்தின் ஊடாக எந்தவொரு பிரச்சினையையும் அறிவிக்க முடியும்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்க 1989 என்ற அவசர அழைப்பிலக்கத்தின் ஊடாக விசேட கட்டுப்பாட்டு அறை செயற்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றுடன் மேலதிகமாக, வெளிவிவகார அமைச்சு தலையிட்டு மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை உருவாக்கியுள்ளது.

அவசர காலங்களில் விரைவாகச் செயற்படவும், இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அனைத்துத் தூதரகங்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் தயார் நிலையில் உள்ளன.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் உள்ளக போக்குவரத்து நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுக்கவும், நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் உடனடித் தீர்மானங்களை எடுக்கவும் அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக இந்தக் கலந்துரையாடலில் மேலும் வலியுறுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிவிவகார ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சாமிந்த பத்திராஜ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க மற்றும் சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், சுற்றுலாத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை உள்நாட்டு சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் (SLAITO) தலைவர் நளின் ஜயசுந்தர, செயலாளர் நிலான் விக்ரமசிங்க, இலங்கை சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் (THASL) உறுப்பினர்களான சந்திரா விக்ரமசிங்க, நிஹால் முஹந்திரம் உள்ளிட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

போரின் வேகம் குறையாது: 4 வாரங்களுக்கு நீடிக்கும்!

ஈரான்மீதான இராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பரப்பளவு மற்றும் தற்போதைய இ ராணுவ நிலைவரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த காலக்கெடுவைத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல என்றும், அமெரிக்காவின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை போரின் வேகம் குறையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தாங்கள் எதிர்பார்த்ததை விடப் மிகப்பெரிய வெற்றி எனவும் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், இந்தப் போரில் மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதை அவர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்கள் மிகச்சிறந்த வீரர்கள் என்று புகழாரம் சூட்டிய ட்ரம்ப், போர்க்களத்தில் இத்தகைய உயிரிழப்புகள் துரதிர்ஷ்டவசமானவை எனினும் தவிர்க்க முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (02.03.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஈரான் முன்னாள் ஜனாதிபதியும் பலி!

ஈரானை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜஜாத் Mahmoud Ahmadinejad பலியாகியுள்ளார்.

சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் நர்மக் பகுதியில் உள்ள அவரது வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவரும் அவரது பல பாதுகாப்புப் படையினரும் பலியாகியுள்ளனர்.

அதேவேளை, ஈரான்மீதான தாக்குதலை சீனா, ரஷ்யாh, வடகொரியா உள்ளிட்ட நட்பு நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை அவசியம் என அரபுலக கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

கமேனி கொலைக்கு பழிவாங்குவது எங்கள் கடமை: ஈரான்ஜனாதிபதி சபதம்

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் கொலைக்கு பழிவாங்குவது இஸ்லாமிய குடியரசின் உரிமை மற்றும் கடமை என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்தார்.

இதுகுறித்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் மசூத் பெசெஷ்கியன் வெளியிட்ட அறிக்கையில், “இந்த வரலாற்று குற்றத்தின் குற்றவாளிகள் மற்றும் மூளையாக செயல்பட்டவர்களைப் பழிவாங்குவதை தனது சட்டபூர்வமான கடமை மற்றும் உரிமை என்று ஈரான் இஸ்லாமிய குடியரசு கருதுகிறது.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மிக உயர்ந்த அரசியல் தலைவரும், உலகளவில் ஷியா மதத்தின் முக்கிய தலைவருமான ஒருவரின் படுகொலை என்பது உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான, குறிப்பாக ஷியாக்களுக்கு எதிரான, வெளிப்படையான போர் அறிவிப்பாகக் கருதப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீண் அச்சம் வேண்டாம், எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!

 

” எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: தற்போது நாட்டுக்குத் தேவையான போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.” – என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேவையற்ற சேமிப்பைத் தவிர்க்கவும்: எனவே, தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்று தெரிவித்தார்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

யாழ்ப்பாணம், நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளிலும் இந்நிலைமை காணப்பட்டது. இந்நிலையிலேயே அரசாங்க தரப்பில் இருந்து மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு அனுமதியா? விமானப்படை மறுப்பு!

 

இலங்கை வான்வெளியில் வெளிநாட்டு இராணுவ ஜெட் விமானங்கள் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை, இலங்கை விமானப்படை நிராகரித்துள்ளது.

ஈரானில் உள்ள இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையிலும், உள்ளூரில் வான்வழி நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையிலும், வெளிநாட்டு விமானங்கள் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின.

இதனை நிராகரித்துள்ள இலங்கை விமானப்படை , உள்ளூரில் விமான இயக்கங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு , ஏற்கனவே திட்டமிடப்பட்ட உள்நாட்டு ஒத்திகைகளின் ஒரு பகுதி என்று, கூறியுள்ளது.

விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் மார்ச் 2ஆம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெறும் முக்கிய விமானப்படை நாள் அணிவகுப்புடன் தொடங்கும்.

மார்ச் 6 முதல் 8 ஆம் திகதிவரை இரத்மலானை விமானப்படை தளத்தில் ஒரு பொது விமான கண்காட்சி நடைபெறவுள்ளது.

ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

 

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் தமது நாட்டு உச்ச கமேனி தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய ஈரானின் 40 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஏழு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கமேனியின் மகன், மருமகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் மேற்படி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான்மீதான கூட்டு போர் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் அதிஉச்ச தலைவர் பலி: மத்திய கிழக்கில் பதற்றம்!

ஈரானின் அதிஉச்ச தலைவரான அயோதுல்லா அலி கமேனி , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் உயிரிழந்துள்ளதை ஈரான் அரச ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கமேனியின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

இந்தத் தாக்குதலில் கமேனியின் இருப்பிடம் முற்றிலும் தரைமட்டமானதாகவும், நவீனத் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவர் இருந்த இடத்தை உறுதி செய்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கமேனியின் குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளனர்.

 

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தளபதி உயிரிழப்பு

ஈரான் ராணுவத்​தின் சக்​தி​வாய்ந்த படைப்​பிரி​வாக இஸ்​லாமிய புரட்​சிகர காவல் படை (ஐஆர்​ஜிசி) செயல்​படு​கிறது. இந்த படைப் பிரி​வின் முகாம்​களை குறி​வைத்து அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று மிகப்​பெரிய அளவில் வான்​வழி தாக்குதல்களை நடத்​தின.

இதில் ஈரானின் சக்தி வாய்ந்​தவர்​களில் ஒரு​வ​ராக இருந்​தவரும் ஐஆர்​ஜிசி தளப​தி​யு​மான முகமது பாக்​பூர் உயி​ரிழந்​து​விட்​ட​தாக இஸ்ரேல் செய்தி நிறு​வன​மான என்12 தெரி​வித்​துள்​ளது. ஆனால் ஈரான் இதை உறு​திப்​படுத்​த​வில்​லை.

கடந்த ஆண்டு இஸ்​ரேல், ஈரான் இடையே நடந்த சண்​டை​யில் ஐஆர்​ஜிசி தளபதி ஹுசைன் சலாமி கொல்​லப்​பட்​டார். இதையடுத்​து, ஈரான் உச்ச தலை​வர் அயத்துல்லா அலி காமேனி, முகமது பாக்​பூருக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்​கியதுடன் ஐஆர்​ஜிசி தளப​தி​யாக​வும் நியமித்​தார். இவர் பொறுப்பேற்றதும் இஸ்​ரேல், அமெரிக்கா​வுக்கு கடந்த மாதம் ஈரான் எச்​சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

ஈரான் வான்வெளியில் அமெரிக்க ஆதிக்கம்!

0
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின்...

‘’தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” நாளை ஆரம்பம்!

0
- நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும்...

முதல் வெற்றியை பதிவு செய்யுமா சி.எஸ்.கே?

0
மாலை 3.30 இற்கு ஆரம்பமாகும் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் , லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. இன்றிரவு இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் சென்னை...