Home Blog Page 44

ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

 

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் தமது நாட்டு உச்ச கமேனி தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரான் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கமைய ஈரானின் 40 நாள்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஏழு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கமேனியின் மகன், மருமகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் மேற்படி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான்மீதான கூட்டு போர் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் அதிஉச்ச தலைவர் பலி: மத்திய கிழக்கில் பதற்றம்!

ஈரானின் அதிஉச்ச தலைவரான அயோதுல்லா அலி கமேனி , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் உயிரிழந்துள்ளதை ஈரான் அரச ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கமேனியின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

இந்தத் தாக்குதலில் கமேனியின் இருப்பிடம் முற்றிலும் தரைமட்டமானதாகவும், நவீனத் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவர் இருந்த இடத்தை உறுதி செய்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கமேனியின் குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளனர்.

 

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தளபதி உயிரிழப்பு

ஈரான் ராணுவத்​தின் சக்​தி​வாய்ந்த படைப்​பிரி​வாக இஸ்​லாமிய புரட்​சிகர காவல் படை (ஐஆர்​ஜிசி) செயல்​படு​கிறது. இந்த படைப் பிரி​வின் முகாம்​களை குறி​வைத்து அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று மிகப்​பெரிய அளவில் வான்​வழி தாக்குதல்களை நடத்​தின.

இதில் ஈரானின் சக்தி வாய்ந்​தவர்​களில் ஒரு​வ​ராக இருந்​தவரும் ஐஆர்​ஜிசி தளப​தி​யு​மான முகமது பாக்​பூர் உயி​ரிழந்​து​விட்​ட​தாக இஸ்ரேல் செய்தி நிறு​வன​மான என்12 தெரி​வித்​துள்​ளது. ஆனால் ஈரான் இதை உறு​திப்​படுத்​த​வில்​லை.

கடந்த ஆண்டு இஸ்​ரேல், ஈரான் இடையே நடந்த சண்​டை​யில் ஐஆர்​ஜிசி தளபதி ஹுசைன் சலாமி கொல்​லப்​பட்​டார். இதையடுத்​து, ஈரான் உச்ச தலை​வர் அயத்துல்லா அலி காமேனி, முகமது பாக்​பூருக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்​கியதுடன் ஐஆர்​ஜிசி தளப​தி​யாக​வும் நியமித்​தார். இவர் பொறுப்பேற்றதும் இஸ்​ரேல், அமெரிக்கா​வுக்கு கடந்த மாதம் ஈரான் எச்​சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக போராட்டம்!

“பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” எனும் முழக்கத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

‘தாயக செயலணி’ அமைப்பின் ஏற்பாட்டில் இந்த எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன.

யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அங்கிருந்து பேரணியாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்பினர், கல்விச் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்க எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்துக்கு அருகில் போராட்டக்காரர்கள் ஒன்றுகூடினர். அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்ட அவர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவைச் சென்றடைந்தனர்.

இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதத் தலைவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலதரப்பட்டோர் பங்கேற்றனர்.

தற்போது நடைமுறையில் உள்ள அடக்குமுறை மிகுந்த ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை’ உடனடியாக நீக்க வேண்டும் எனவும், அதற்குப் பதிலாக அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் புதிய ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை’ முற்றாகக் கைவிட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கவும், மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தவும் இவ்வாறான கறுப்புச் சட்டங்கள் நாட்டுக்குத் தேவையில்லை என்பதே இப்போராட்டத்தின் பிரதான செய்தியாக அமைந்தது.

புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரின் ஆதரவும் அவசியம்!

புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

எதிர்கால சந்ததியினருக்காக மேற்கொள்ளப்படும் இந்த புதிய கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இந்த திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரின் ஆதரவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றத்தை மீளாய்வு செய்த ஜனாதிபதியின் செயலாளர், இது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.

2026 ஆம் ஆண்டின் எதிர்வரும் காலத்துக்கான வேலைத் திட்டங்கள், 2027 ஆம் ஆண்டுக்கான தயார்நிலைகள், கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பாக 25.01.2026 அன்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களை செயல்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

பாடத்திட்ட அபிவிருத்தி, மனிதவள மேம்பாடு, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், மதிப்பீட்டு முறை மற்றும் பொதுமக்களை விழிப்புணர்வூட்டல் ஆகிய துறைகளுக்கான உபகுழுக்களின் நியமனத்தின் தற்போதைய நிலை குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

தேசிய, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் கல்வி மறுசீரமைப்பு செயல்முறையை திறம்படச் செய்வதற்காக நிறுவப்பட்ட குழுக்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வுத் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மேலும், தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் ஒழுங்குபடுத்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தர உறுதிக் கட்டமைப்பு குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சரத் ஆனந்த, கல்விப் பணிப்பாளர் டபிள்யூ. கே. எஸ். எஸ். பெரேரா, மேலதிக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திலக் வத்துஹேவா, தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ. டி. ஏ. டி சில்வா உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜேர்மனியின் பிரேமன் மேயருடன் விஜித ஹேரத் சந்திப்பு! – தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை குறித்துக் கலந்துரையாடல்

யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்ட ஜேர்மனியின் பிரேமன் நகர மண்டபத்தில், பிரேமன் மேயர் ஆண்ட்ரியாஸ் போவன்சுல்ட் தனக்கு அளித்த சிறப்பான வரவேற்புக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

“பிரேமன் மேயருடனான இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, வாகன உற்பத்தி, வர்த்தகம் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பிரேமன் நகரம், இலங்கையில் தற்போது உருவாகி வரும் புதிய பொருளாதார வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்துச் சுமூகமான முறையில் ஆலோசிக்கப்பட்டது.

ஜேர்மனியப் பயணிகள் மத்தியில் இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகத் தொடர்ந்து மாறி வருகிறது. இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாத்துறை சார்ந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தச் சந்திப்பு மிக முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள் – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீதான தாக்குதலை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்’ என்று அந்நாட்டுக்கு பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப் பகிர்ந்த பதிவில், “ஈரானின் புரட்சிகர இஸ்லாமியப் படையினருக்கும், ஆயுதப் படைகளுக்கும், காவல் துறைக்கும், நான் இன்றிரவு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறேன். உங்கள் ஆயுதங்களைத் துறந்து சரணடையுங்கள்… உங்கள் மீதான நடவடிக்கைகள் நிறுத்தப்படும். இல்லாவிட்டால், உறுதியாக மரணத்தை எதிர்கொள்வீர்கள்” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், இந்தத் தாக்குதல், ஈரான் தனது அணுசக்தி மையங்களில் மீள்கட்டமைப்பு செய்வதை தடுக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டதாகவும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டாக ஈரான் மீது தீவிரத் தாக்குதலை தொடங்கியுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ (Operation Epic Fury) என்று பெயரிடப்பட்டுள்ளது. பதிலடிக்கு ‘ஆபரேஷன் ரோர் ஆஃப் தி லயன்’ ( Operation Roar of the Lion ) என்று ஈரான் பெயர் வைத்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் – அமெரிக்க ராணுவ கூட்டுத் தாக்குதல் ஈரானின் அரசு கட்டிடங்கள், ராணுவ நிலைகளைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அதிகாரபூர்வ அலுவலகத்தையும் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியை ட்ரம்ப் வெளிப்படுத்திய சில நாட்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அணுகுண்டை தயாரிக்க மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும் என்பதுதான அமெரிக்காவின் நிபந்தனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தத் தாக்குதலை ட்ரம்ப் புகழ்ந்துள்ளார். “அமெரிக்கர்களுக்கான அச்சுறுத்தல்களை துடைத்தெறியும் தாக்குதல் இது. ஈரான் மீள் கட்டமைக்கும் அணு ஆயுதங்களை அழிப்பதே எங்களின் திட்டம். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க அமெரிக்க ஒருபோதும் அனுமதிக்காது” என்று கூறியுள்ளார்.

ஈரான் ராணுவம், காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப், ஈரான் மக்களுக்கான ஒரு செய்தியையும் கூறியுள்ளார்.

அதில் ட்ரம்ப், “சக்திவாய்ந்த ஈரானிய மக்களே, இன்றிரவு உங்களுக்கு நீங்கள் விரும்பிய சுதந்திரம் கைகளில் கிட்டும். அதுவரை பாதுகாப்பாக இருங்கள். வீடுகளை விட்டு வெளியே செல்லாதீர்கள். வெளியே ஆபத்துள்ளது. குண்டுகள் எங்கு வேண்டுமானாலும் விழக்கூடும். எல்லாம் முடியட்டும். உங்களுக்கான அரசை நீங்களே உருவாக்குங்கள். அது உங்களிடமே விடப்படும்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

கச்சத்தீவு திருவிழா நிறைவு: பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு!

 

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நேற்று (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று (28) நிறைவடைந்தது.

நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளால் திருவிழாக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றன.

அத்துடன், யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தையர்களின் பங்குபற்றலுடன் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து இன்றைய தினம் காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்கள் இணைந்து, திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் (28.02.2026)காலை திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் நிறைவடைந்தது.

இலங்கை இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த ஆண்டு 13, 500ற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதிலடியை ஆரம்பித்தது ஈரான்: அமெரிக்கா எச்சரிக்கை!

 

“ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தையும் நிர்மூலமாக்குவோம்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் சூளுரைத்துள்ளார்.

ஈரான்மீது அமெரிக்காவும்,இஸ்ரேலும் கூட்டு தாக்குதலை முன்னெடுத்துவரும் நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி அலுவலகம், உச்சத் தலைவரின் வளாகம், புலனாய்வு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி நிறுவனம் உள்ளிட்டவைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ அமெரிக்கர்களை பாதுகாப்பதே எங்களின் நோக்கம். ஈரான் எப்போதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க கூடாது.

ஈரானில் ஆட்சியில் உள்ள அச்சுறுத்தல்களை அகற்றுவதே எங்கள் முக்கிய நோக்கம்.

ஈரானில் மிகப்பெரிய அளவில் தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்திருக்கிறது. அணு ஆயுத மறுகட்டுமானத்திற்கு ஈரான் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தும் நிர்மூலமாக்குவோம். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதில் உலகத்திலேயே ஈரான் முதலிடத்தில் உள்ளது.”எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இஸ்ரேல், அமெரிக்கா மீது விரைவில் பதில் தாக்குதல் நடைபெறும் என ஈரான் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இஸ்ரேல் நகரங்கள்மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது.

அத்துடன், மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க படை தளங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரியவருகின்றது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான்மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு தாக்குதல்!

ஈரான்மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து இன்று வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“The Shield of Judah” என்ற பெயரிலேயே தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

தெஹ்ரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மற்றும் அரசியல் மையங்கள் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் ஜனாதிபதியின் வாசஸ்தலம், புலனாய்வுத்துறை அமைச்சகம், முக்கிய அரசியல் தலைவர்களின் இருப்பிடங்கள், உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனவே, ஈரானின் ஆன்மீகத் தலைவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் “உடனடி அவசர நிலை” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டுள்ளன. ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளின் வான்வெளிகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தனது இராணுவப்படைகளை மத்திய கிழக்கில் குவித்து வந்த நிலையில், இந்த நேரடி தலையீடு முழு அளவிலான போருக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

செய்தி

மரக்கறி விலைப்பட்டியல் (06.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

விஜித ஹேரதஅடுத்த மாதம் ரஷ்யா பயணம்

0
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வது குறித்து பேச்சு நடத்துவதற்காகவே அவர்...

வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு: எரிவாயு விலையும் எகிறியது!!

0
இலங்கையில் நேற்று (06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய லிற்றோ மற்றும் லாப்ஸ் LAUGFS கேஸ் நிறுவனங்கள் புதிய விலை பட்டியலை வெளியிட்டுள்ளன. இதற்கமைய 12.5 கிலோ எடையுடைய...