Home Blog Page 55

இராஜதந்திர வழியில் தீர்வை எட்டலாம்: ஈரான் நம்பிக்கை!

அமெரிக்காவுடன் அமைதி மற்றும் இராஜதந்திர உறவை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஈரான்மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கும் என தகவல்கள் வெளிவரும் நிலையில், பேச்சுமூலம் தீர்வை எட்டலாம் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் நடந்த பேச்சுகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததால், ஈரான் விரைவில் ஒரு ஒப்பந்த வரைவை முன்வைக்கலாம் என தெரியவருகின்றது.

ஈரானின் அணுசக்தி உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், கடுமையான கண்காணிப்புகளுக்கு உட்படுத்தப்படவும் அந்த நாடு முன்வந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒருபுறம் கெடு விதித்து எச்சரித்தாலும், பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான முடிவை எட்டுவதற்கான வாய்ப்புகள் தற்போதும் நிலவுகின்றன.

ரஜினி – கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியீடு!

உச்ச நட்சத்திரங்களான ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தினை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் அறிமுக ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன், இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளனர். புரோமோவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் தோன்றுகின்றனர். முந்தைய படங்களில் ப்ரோமோக்கள் போலவே, இப்படத்தின் ப்ரோமோ வீடியோவையும் காமெடி கலந்த ஆக்‌ஷனாக நெல்சன் உருவாக்கியுள்ளார்

ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளில் தீவிரமாக உள்ளார். அதன்பின்னர், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். அதனைத் தொடர்ந்தே ரஜினி – கமல் இணையும் படத்தின் பணிகளை நெல்சன் தொடங்கவுள்ளார்.

மாகாணசபைத் தேர்தலில் மொட்டு கட்சியே வெல்லும்!

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துவருகின்றது. எனவே, மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் வெற்றிபெறும்.” – எனவும் திஸ்ஸ குட்டியாராச்சி குறிப்பிட்டார்.

கோயில் விழா அழைப்பிதழில் சாதி பெயர் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் ​திரு​விழாக்​களுக்​கான அழைப்​பிதழ்​களில் உபய​தா​ரர்​களின் பெயரில் சாதி பெயர் இடம்​பெறக் கூடாது என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​வு பிறப்பித்துள்​ளது.

திருப்​போரூர், கந்​தசு​வாமி கோயில் மாசி பிரம்​மோற்சவ விழாவுக்​கான அழைப்​பிதழில் சாதிப் பெயர்​களை பயன்​படுத்த தடை விதிக்​கக் கோரி திருப்​போரூரை சேர்ந்த சமரன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி டி.பரத சக்​கர​வர்த்​தி, விழா அழைப்​பிதழில் உபய​தா​ரர்​களின் பெயர்​கள் சாதிப் பெயருடன் இடம் பெற்​றுள்​ளதைக் குறிப்​பிட்​டு, அறநிலை​யத்துறை நடத்​தும் விழா​வில், சாதி பெரு​மையை ஊக்​கு​விப்​பதை அனு​ம​திக்க முடி​யாது.

அடுத்த விழாக்​களின்​போது அச்​சிடப்​படும் அழைப்​பிதழ்​களில் உபய​தா​ரர்​களின் பெயர்​கள் மட்​டுமே இடம் பெற வேண்​டும். சாதி பெயர்​கள் இடம்பெறக் கூடாது என உத்​தர​விட்​டு,வழக்கை முடித்து வைத்​துள்​ளார்.

மேலும், அந்த உத்​தர​வில், பிறப்​பொக்​கும் எல்லா உயிர்க்​கும் என சொல்​லும் நிலை​யில், பிறப்​பால் மட்​டுமே சாதி வரு​கிறது. பிறப்பு மட்​டுமே மக்​களை பிளவுபடுத்​துகிறது. நாட்​டில் சாதியை ஒழிக்க ஒவ்​வொரு அதி​காரி​களும் முயற்​சிக்க வேண்​டுமே தவிர, அதை பெரிதுபடுத்​தக் கூடாது எனவும் நீதிப​தி அறி​வுறுத்​தி​யுள்​ளார்​.

நன்றி -Hindu tamil

 

 

அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதி, இலங்கை பாதுகாப்பு செயலர் சந்திப்பு!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை தளபதி அட்மிரல் Stephen T. “Web” Koehler, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இச்சந்திப்பில், பகிரப்பட்ட பாதுகாப்புச் சவால்கள், கடல்சார் பாதுகாப்பு, அனர்த்த நிவாரண திறன்களை மேம்படுத்தல், ஒத்துழைப்பை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக கடல்சார் கள விழிப்புணர்வை (Maritime Domain Awareness) வலுப்படுத்துதல் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர், அமெரிக்காவின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு மற்றும் சமீபத்திய ‘டிட்வா’ இயற்கை அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட அவசர மனிதாபிமான உதவிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்த அளிக்கப்பட பங்களிப்புகளை சுட்டிக்காட்டினார்.

கலந்துரையாடலின் போது, சட்டவிரோத கடத்தல் உள்ளிட்ட சர்வதேச குற்றச் செயல்கள் மற்றும் பிற பாரம்பரியமற்ற சவால்களை எதிர்கொள்ளும் பொது உறுதிப்பாட்டை இருதரப்பும் வலியுறுத்தின.

விரிவான கடல் பரப்புப் புரிதலை (Domain Awareness) உருவாக்குவதற்காக மேம்பட்ட தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டது.

அமெரிக்க கடலோர காவல் படையின் கப்பலின் வருகை, இலங்கை கடற்படைக்கு (SLN) நாட்டின் கடல் எல்லைகளில் பாதுகாப்புச் சவால்களை சமாளிக்க விரிவான செயல்திறனை வழங்கும் முக்கியமான முன்னேற்றமாகக் குறிப்பிடப்பட்டது.

இரு தரப்பும் தற்போதைய பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடியதுடன், கூட்டு பயிற்சிகள், பயிற்சி திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு முன்முயற்சிகள் மூலம் ஈடுபாட்டை மேலும் மேம்படுத்தும் வழிகளையும் ஆராய்ந்தன.

அட்மிரல் Koehler, கடல் பாதுகாப்பு, பிராந்திய நிலைத்தன்மை மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய பொது இலக்குகளுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் பசுபிக் கடற்படை கட்டளை அதிகாரிகள் மற்றும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் Matthew ஹவுஸ் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, இஸ்ரேல் தீவிரம்

ஈ​ரான் மீது மிகப் பெரிய அளவில் தாக்​குதல் நடத்த அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

ஈரானில் அடக்​கு​முறை​களுக்கு எதி​ராக போராட்டம் நடத்திய மக்கள் மீது அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயி​ரிழந்​தனர். பொது​மக்​களை கொல்வதை நிறுத்​தா​விட்​டால், ஈரான் மீது தாக்​குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்​கனவே எச்சரிக்கை விடுத்​திருந்​தார்.

இதற்​கிடை​யில், அமெரிக்கா – ஈரான் இடையே ஜெனி​வா​வில் நடைபெற்ற அணு ஆயுத ஒழிப்பு பேச்​சு​வார்த்தை பலன் அளிக்கவில்லை என்​றால், ஈரான் மீது மிகப் பெரிய தாக்​குதல் நடத்த அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வரு​வ​தாக தகவல்கள் தெரிவிக்​கின்​றன.

ஈரான் அருகே யுஎஸ்​எஸ் ஆபிர​காம் லிங்​கன் விமானம் தாங்கி போர்க்​கப்​பல் தனது துணைப் போர்க் கப்​பல்​களு​டன் தயார் நிலை​யில் உள்​ளது. இந்​நிலை​யில் யுஎஸ்​எஸ் ஜெரால்ட் ஆர்ஃபோர்ட் போர்க் கப்​பலும் மத்​திய கிழக்கு நோக்கி அனுப்பப்பட்​டுள்​ளது.

மேலும், அமெரிக்கா போர்த் தளவாடங்​களை மத்​திய கிழக்கு பகுதி​யில் குவித்​துள்​ளது. இது மிகப் பெரிய தாக்​குதலுக்கு அமெரிக்கா​வும், இஸ்​ரேலும் தயா​ராகி வரு​வது போல் தெரி​கிறது. இந்த தாக்​குதல் சில வாரங்​கள்​ தொடரலாம்​ எனவும்​ கூறப்படுகிறது

சூப்பர் 8 சுற்று இன்று ஆரம்பம்: நியூசிலாந்து, பாகிஸ்தான் பலப்பரீட்சை!

T20 World Cup உலகக்கிண்ண தொடரில் மிக முக்கிய சுற்றான சூப்பர் 8 super 8 சுற்றுஇன்று (21) ஆரம்பமாகின்றது.

இதற்கமைய சூப்பர் 8 சுற்றில் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

22 ஆம் திகதி இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

கண்டி பல்லேகல மைதானத்தில் முற்பகல் 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். அன்றைய தினமே இரவு 7 மணிக்கு இந்தியாவில் நடைபெறும் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.

23 ஆம் திகதி ஒரு போட்டி மட்டுமே நடைபெறுகின்றது. சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இந்தியாவில் மோதவுள்ளன.

24 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் கண்டி பல்லேகல மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

25 ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.

26 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணி தென்னாபிரிக்கா அணியை எதிர்கொள்கின்றது.

அதே நாளில் (26) இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியும் இடம்பெறுகின்றது.

27 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் களம் காண்கின்றன.

28 ஆம் திகதி இலங்கை , பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

மார்ச் முதலாம் திகதி சிம்பாப்வே, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் களம் காண்கின்றன.

அதேநாளில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறும்.

மார்ச் 4 ஆம் திகதி அரை இறுதிச்சுற்று ஆரம்பமாகும்.
மார்ச் 8 ஆம் திகதி இறுதிப்போட்டி இடம்பெறும்.

 

 

 

இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பில் இறையாண்மைக்கு முன்னுரிமை உறுதி

இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் அண்மைக்கால பாதுகாப்பு அபிவிருத்திகள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக மீளாய்வு செய்தனர்.

குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளைப் பிரதி அமைச்சர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.

அமெரிக்க விமானப்படையின் 36-வது அவசரக்கால பதிலளிப்பு குழுவின் ஊடாக, இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்கள் மற்றும் விமானப்படை வீரர்களைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட வான்வழிப் போக்குவரத்து வசதிகள், இலங்கையின் மீட்புப் பணிகளுக்குப் பெரும் பக்கபலமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய அவசர நிலைகளை ஒரு திருப்புமுனையாகக் கொண்டு, சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து நாட்டை மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதன்போது, அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நான்கு கடலோர பாதுகாப்பு கப்பல்கள், பீச்கிராப்ட் கிங் எயார் விமானம், அதிநவீன ‘பிளீட் பிராட்பேண்ட்’ (FleetBroadband) செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு மற்றும் 10 பெல் TH-57 பயிற்சி ஹெலிகள் ஆகியவற்றின் பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்தார்.

இதற்குப் பதிலளித்த அட்மிரல் கோஹ்லர், இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நான்காவது கடலோர பாதுகாப்பு கப்பல் இன்று சனிக்கிழமை அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

இறுதியாக, இந்தோ -பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அதன் சவால்களை எதிர்கொள்ளும் போது, நாடுகளின் இறையாண்மையை மதிப்பதே மிக முக்கியமானது என்பது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட அட்மிரல் கோஹ்லர், 2024 ஏப்ரல் 4 அன்று அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதியாகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச இராணுவ நடவடிக்கைகளில் அவர் தலைமைத்துவம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரக்கறி விலைப்பட்டியல் (21.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

கம்பளை, நாவலப்பிட்டிய வீதியில் கோர விபத்து: 3 வயது சிறுமி பலி!

கம்பளை, நாவலப்பிட்டி பிரதான வீதியின் நாகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலைவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கம்பளை நோக்கிப் பயணித்த காரொன்று, பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் அவரது இரு படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி 3 வயதுடைய பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

க.யோகா

 

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்

0
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...