Home Blog Page 56

23,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை – பிரதமர் தெரிவிப்பு

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கௌரவ பிரதமரும் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இதன் மூலம் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல்கள் கணிசமாகக் குறையும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் பரீட்சைகளை நடத்தி பட்டதாரிகளை இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத்தின் குழுக்களின்
பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, தொழிற்கல்வி
பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, கல்வி மற்றும் உயர்கல்வி
பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள கல்விச் சபையை நிறுவுவது பற்றிய உப குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவினால், இலங்கையில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சுசார் ஆலோசனைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள கல்விச் சபையை நிறுவுவது பற்றிய உப குழுவினால், இலங்கையில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் பல்வேறு கட்டக் கலந்துரையாடல்களின் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த அறிக்கையை அமைச்சின் இணையதளத்தில் வெளியிட்டு, பொது அறிவித்தல் மூலம் அந்த அறிக்கை தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு ஒரு மாத காலம் வழங்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், உயர்கல்வித் துறை தொடர்பான உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்னவும், பாடசாலைகளில் நிலவும் மனித வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் கௌரவ பிரதி அமைச்சர் (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன ஆகியோரும் முன்வைத்தனர்.

மேலும், பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்ஹ முன்வைத்தார்.

அத்துடன், தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் இந்த அமைச்சுடன் சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, அவை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபரங்களைக் கேட்டறிந்து கொள்ளல் மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டது.

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தொழிலாளர்களுக்கு பாதகமான எதுவும் ஒப்பந்தத்தில் இல்லை!

 

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதகம் விளைவிக்ககூடிய எவ்வித விடயமும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் இல்லை.” என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை சட்டவிரோதம் எனக் கூறி சிலர் விமர்சிக்கின்றனர். இப்படியான விமர்சனம் மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளம் தோட்டத் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும்.
சம்பள உயர்வை எவ்வாறு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது பற்றியே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மக்களுக்கு முரணான எதுவும் இல்லை.” – என்றார்.

 

 

ஜனாதிபதி அநுர, பிரதமர் மோடிக்கிடையில் டெல்லியில் இரு தரப்பு பேச்சு!

AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (20) நண்பகல் புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் (Hyderabad House) இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை மிகுந்த நட்புடன் வரவேற்ற இந்தியப் பிரதமர், தனது அழைப்பை ஏற்று AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இணைந்துகொண்டனர். இதன்போது இலங்கை – இந்திய இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடினர்.

இதேவேளை, ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது இலங்கைக்கு வழங்கிய விசேட ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி, இந்தியப் பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

பகைமை அரசியலை முன்னெடுக்கிறார் பொன்சேகா: மஹிந்த அணி பதிலடி!

“மக்களுக்கான அரசியலை செய்யாது, பகைமை அரசியலையே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னெடுத்துவருகின்றார்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திஸ்ஸகுட்டியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, பொன்சேகா நேற்று முன்தினம் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் அவரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையிலேயே திஸ்ஸ குட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ ராஜபக்ச குடும்பம்மீது பொன்சேகாவுக்கு வைராக்கியம் உள்ளது. அதனால்தான் பல்வேறு கருத்துகளை கூறிவருகின்றார்.

அவர் முன்னெடுப்பது பகைமை அரசியலாகும்;. எனவே, அவர் கூறுவது தொடர்பில் கவனத்தில் எடுக்க வேண்டியதில்லை. மக்கள் நம்பமாட்டார்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிறையில் அடைத்தாலும் ஜனாதிபதியாகி சாதனை படைப்பார் நாமல்: திஸ்ஸ குட்டியாராச்சி சூளுரை

“ ஜனாதிபதி தேர்தலின்போது நாமல் ராஜபக்ச சிறை வைக்கப்படுவாரானால், சிறைக்குள் இருந்தே தேர்தலில் வென்றவர் என்ற சாதனையை அவர் படைப்பார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மக்கள் ஆதரவு எமது பக்கம் திரும்புவதால் நாமல் ராஜபக்சவை எப்படியாவது உள்ளே (சிறைக்குள்) போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

நாம் எதற்கும் தயார், நாமலை சிறையில் அடைத்தாலும் வெளியில் இருந்து நாம் செயல்படுவோம்.

ஜனாதிபதி தேர்தல் நடக்கும்போது நாமல் சிறையில் இருந்தால் நிச்சயம் அவர் வெற்றிபெறுவார். சிறையில் இருந்து ஜனாதிபதி தேர்தலை வென்றவர் என அவர் வரலாற்றில் இடம்பிடிப்பார்.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் மொட்டு கட்சியின் பலம் தெரியவரும்.”- என்றார் திஸ்ஸ குட்டியாராச்சி.

தோட்ட நிர்வாகங்களால் பாலர் பாடசாலைக்கும் நெருக்கடி: கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு!

” பெருந்தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்ற பாலர் பாடசாலைகளுக்கும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது பெருந்தோட்ட நிர்வாகங்கள்.;”

இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

” பெருந்தோட்ட நிறுவனங்கள் பிள்ளை பராமரிப்பு நிலையங்களை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் தோட்டங்களின் முன் பள்ளிகளை நடத்தி வருகின்றன.

பிள்ளை பராமரிப்பு நிலையங்களுக்கும் முன்பள்ளிகளுக்கும் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

பிள்ளை பராமரிப்பு நிலையங்கள் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தமது வேலை நேரத்தில் குழந்தைகளை பராமரிப்பதற்காக தோட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகின்றன.

முன் பள்ளிகள் சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வியை இலக்காகக் கொண்டு நடத்தப்படுகின்றன. சிறுவர்கள் பாலர் கல்வி வயதை எட்டும் வரை சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அவசியமாகின்றன.

அதே நேரத்தில் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வயது வரை பிள்ளை பராபரிப்பு நிலையங்களில் இருக்க வைக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

பெருந்தோட்ட நிறுவனங்கள் முன் பள்ளிகளை இல்லாமலாக்கி சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்குள் சிறார்களை முடக்கி வைக்க முற்படுகின்றன. இதில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு உள்நோக்கம் இருப்பதாகவே நாம் கருதுகிறோம்.

தற்காலத்தில் ஆரம்பக் கல்விக்கு பாலர் பாடசாலைகள் மிக முக்கியமானவை. மலையக சிறுவர்கள் முன் பள்ளிகள் ஊடாக ஆரம்ப அறிவினை கொள்வதற்கு தோட்ட நிர்வாகங்கள் தடையாக இருக்கக் கூடாது.

அதே நேரத்தில் முன் பள்ளிகளை முகாமை செய்வதற்கு மாகாண சபைகள் மாகாண கல்வி அமைச்சுக்கு கீழ் நிறுவனங்களைக் கொண்டுள்ளன.இந்த விடயத்தை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தனியான ஆரம்பக் கல்வி பிரிவு இருக்கின்றன.

ஆனால் இவை தோட்டங்களின் இருக்கின்ற முன் பள்ளிகள் சம்பந்தமாக எவ்வித கரிசனையும் செலுத்துவதில்லை.

மாகாண சபைகள் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சில கொடுப்பனவுகளை செய்கின்றன. அது கூட பெருந்தோட்ட பிரதேசங்களில் இருக்கின்ற முன் பள்ளிகளுக்கு கிடைப்பதில்லை.

தோட்டங்களில் இருக்கின்ற முன் பள்ளிகளும் அதில் கற்பிக்கின்ற ஆசிரியர்களும் கல்வி கற்கின்ற மாணவர்களும் இந்த நாட்டுக்கு சம்பந்தமில்லாதவர்கள் போலவும் குறிப்பிட்ட தோட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் போலவும் கணிக்கப்படுகின்றனர்.

இதனால்தான் தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை தோட்ட நிறுவனங்களில் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் வாழுகின்ற குடும்பங்களின் தலைவிதியை தோட்ட முகாமையாளர் நிர்ணயிக்கின்ற கொடூரமான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அவர்கள் பெருந்தோட்ட பயிர்களை பராமரித்து முகாமைத்துவம் செய்வதில் எந்தவிதமான தடையும் கிடையாது. ஆனால் அவர்களுக்கு அங்கு வாழுகின்ற மக்கள் மீது அதிகாரத்தை செலுத்துவதற்கு எவ்வித அருகதையும் கிடையாது .

தோட்ட முகமைத்துவங்களின் அடாவடித்தனம் தற்போது சிறு சிறு பிரச்சனைகளாக தோன்றலாம். ஆனால் இது எதிர்காலத்தில் பூதாகரமாக மாறுகின்ற போது நாட்டின் அமைதியை சீர்குலைப்பதாக அமையும். அரசாங்கம் தோட்ட குடியிருப்பாளர்களின் பிரச்சினை ஆழமாக ஆராய்ந்து தோட்ட குடியிருப்பு பிரதேசத்தில் தோட்ட முகாமைத்துவத்துக்கு இருக்கின்ற அதிகாரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் இருக்கின்ற முன் பள்ளிகளுக்கு தோட்ட நிர்வாகங்கள் கொடுக்கின்ற அச்சுறுத்தலுக்கு எதிராக எதிர்வரும் 22 ஆம் திகதி அட்டனில் நடைபெறுகின்ற கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு எமது பூரணத்துவமான ஆதரவை வழங்க உள்ளோம்.

அதே நேரத்தில் மலையகத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் மலையக பாலர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற முன் பள்ளிகளை தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் நடத்திச் செல்வதற்கு தடையாக இருக்கின்ற சக்திகளுக்கு எதிராக அணி திரள வேண்டும். எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய விசேட தெரிவுக்குழு: மனோ, சாணக்கியனுக்கு இடம்!

மாகாணசபைத் தேர்தலை எந்தமுறைமையின்கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குரிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதன்போதே மேற்படி குழுவுக்குரிய உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சபாநாயகர் அறிவித்தார்.

மேற்படி விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதி அமைச்சர்களான முனீர் முலபர், சுனில் வட்டகல, அருண் ஹேமசந்திரா ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், லக்ஷ்மன் நிபுனராச்சி ஆகியோர் குழுவில் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் இரா. சாணக்கியன், சமன்மலி குணசிங்க, தர்மபிரிய விஜேசிங்க, சந்தன சூரியாராச்சி மற்றும் நிஷாம் காரியப்பர் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

“மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்காவின் அனைத்து தளங்களையும் தாக்குவோம்” – ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா போர் தொடுக்கும்பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் அனைத்துதளங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு ஈரான் கடிதம் அனுப்பியுள்ளது.

பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுர இன்று இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் , பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் இன்று (20) நடைபெறவுள்ளது.

புதுடெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பிரதமர் மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றுள்ளார்.

இதற்கு இணையாகவே மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளார, பாதுகாப்பு மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

மேற்படி சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி நாடு திரும்புவார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்

0
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...