Home Blog Page 57

மரக்கறி விலைப்பட்டியல் (20.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஆஸ்திரேலியா, ஓமான் அணிகள் இன்று மோதல்!

ICC ஆண்கள் T20 உலகக்கிண்ணம் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் (20) நிறைவுபெறுகின்றன. தொடரின் கடைசி லீக் ஆட்டமாக பலம்பொருந்திய ஆஸ்திரேலியா அணியும், புதுமுக அணியான ஓமான் அணியும் மோதவுள்ளன.

இந்தப் போட்டி கண்டி நகரில் அமைந்துள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த உலகக்கிண்ண தொடரில் முன்னணி அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட ஆஸ்திரேலியா அணி, எதிர்பாராத தோல்விகளால் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.

இது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொடரின் கடைசி போட்டியில் வெற்றியைப் பதிவு செய்து ஆறுதல் பெறுவதற்கும், தங்களது திறமையை நிரூபிப்பதற்கும் ஆஸ்திரேலியா அணி தீவிர முயற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தொடரின் அடுத்த கட்டமான சூப்பர் 8 சுற்று நாளை (21) முதல் ஆரம்பமாகிறது. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வலுவான பாகிஸ்தான் அணியும், சமநிலை திறன் கொண்ட நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன.

இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகள், உலகக்கிண்ணத்தின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் முக்கியமான போட்டிகளாக அமையவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இலங்கை, அமெரிக்க படைகளுக்கிடையிலான கூட்டு பயிற்சி ஒத்துழைப்பு குறித்து ஆராய்வு!

அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை (United States Pacific Fleet) தளபதி அட்மிரல் Stephen T. Koehler, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை நேற்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.

இதன்போது நடந்த சுமூகமான கலந்துரையாடலில், பசுபிக் பிராந்தியத்தில் உருவாகி வரும் பாதுகாப்பு சூழ்நிலைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

உருவெடுத்து வரும் கடல்சார் சவால்களை சமாளிப்பதற்காக நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்பதில் இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தை வெளியிட்டனர்.

கடல்சார் துறை விழிப்புணர்வை மேம்படுத்துதல், தகவல் பகிர்வை வலுப்படுத்துதல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதாபிமான அவசரநிலைகளுக்கு ஒருங்கிணைந்த பதிலளிப்பை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் கூட்டு முயற்சிகளை அதிகரிப்பதின் அவசியத்தையும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

சர்வதேச குற்றச்செயல்கள், சட்டவிரோத கடத்தல் உள்ளிட்ட பாரம்பரியமற்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக அமெரிக்க பிரதிநிதிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

மேலும், அமெரிக்க மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையிலான பயிற்சி பரிமாற்றங்கள் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பும் இதன் போது ஆய்வு செய்யப்பட்டது.

அமெரிக்க அரசாங்கத்தின் நீண்டகால ஆதரவு மற்றும் நன்கொடைகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

குறிப்பாக 10, TH-57 Sea Ranger ஹெலிகொப்டர்கள், B-Type Reliance Class 210 feet Cutter கப்பல், ‘டித்வா’ சூறாவளி நிவாரண நடவடிக்கைகளுக்கான நன்கொடைகள் மற்றும் பல்வேறு அனர்த்த நிவாரண மற்றும் மனிதாபிமான உதவி முயற்சிகளின் கீழ் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவுகள் ஆகியவற்றை அவர் முக்கியமாக குறிப்பிட்டார்.

அமெரிக்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் உட்பட தூதரக அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

போர்கால சரணடைவு குறித்து பொன்சேகா கூறுவது புது விடயம் அல்ல!

பி#ரபாகர#ன் படையினரிடம் சரணடைய வேண்டும் என மஹிந்த ராஜபக்ச போர் காலத்தில் கூறி இருந்தார். எனவே, பொன்சேகா கூறுவது புதிய விடயம் அல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பொன்சேகா வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச கூறியவை வருமாறு,

“பி#ரபாகர#னுக்கு துப்பாக்கியை வைத்துவிட்டு இராணுவத்திடம் சரணடைய வேண்டியது மட்டுமே எஞ்சியுள்ளது என்பதை போர் நடக்கும் காலப்பகுதியிலேயே மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

எனவே, பொன்சேகா வெளியிட்ட கருத்து அவருக்கு வேண்டுமானால் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். அது புதிய விடயம் அல்ல.

வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு ஒரு புறத்தில் பொன்சேகா குறிப்பிடுகின்றார். மறுபுறத்தில் தப்பிச்செல்ல வழி சமைத்தார் எனக் கூறுகின்றார்.

நாம் தமிழர்களுக்கு எதிராக போர் செய்யவில்லை. பு#லி பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே போரிட்டோம்.

குறைந்தளவு சேதங்கள், குறைந்தளவான உயிரிழப்புகளுடன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே மஹிந்த ராஜபக்கவின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்தார்.

டயஸ்போராக்கள் மற்றும் தற்போதைய அரசாங்கம் கூறுவதுபோல மஹிந்த ராஜபக்ச கொ#லையாளி அல்ல என்பதை பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி.” – என்றார்.

“பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும்”

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான காணி உறுதிப் பத்திரம் விரைவில் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வாக்குறுதி அளித்ததாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வேண்டுகோளுக்கிணங்க மலையகத்தின் எதிர்கால கல்வி மற்றும் பாடசாலை காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள், அடிப்படை வசதிகள்,பெளதீக வளங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (19) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

பிரதி அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய முதல் தடவையாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், கிருஷ்ணன் கலைச்செல்வி, அம்பிகா சாமுவேல், ரவீந்திர பண்டார, அனுஷ்கா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பெருந்தோட்டப் பாடசாலைகளில் காணப்படும் காணி பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. பெருந்தோட்டப் பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் சுமார் இரண்டு ஏக்கர் காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்துடன் அது தொடர்பாக கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் பேசப்பட்டது.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்ததுடன் மலையகத்தில் காணப்படும் 864 பாடசாலைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை ஒன்றினை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இந்த அறிக்கையில் மலையக பாடசாலைகளில் காணப்படும் அனைத்து பிரச்சனைகள் தொடர்பான ஒரு மதிப்பீடு செய்து தனக்கு வழங்குமாறு குறிப்பிட்ட பிரதமர், அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மலையக பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டங்களைத் தீட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, கணித விஞ்ஞான பாடங்களை மேம்படுத்தல், பௌதிக வளப்பற்றாக்குறைகளை சரிசெய்தல், விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்தல், அதன் மூலம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விளையாட்டுத்துறை சார்ந்த ஓர் தமிழ் மொழி மூலமான பாடசாலை உருவாக்குதல், மாவட்டங்களில் பெருந்தோட்டப் பாடசாலைகள் அதிகமாகக் காணப்படும் பிரதேசங்களில் மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ் பிரிவு ஒன்றினை உருவாக்குதல் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டு ஒரு சுமுகமான தீர்வும் எட்டப்பட்டது.

இக் கலந்துரையாடலின் போது கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் உயர் அதிகாரிகள், பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

“AI குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல இலங்கை தயார்”

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் இன்று (19) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு குறித்த இலங்கையின் நோக்கம் என்பது தனித்து வெற்றியைப் பெறுவது அல்ல எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தனது நாடு AI உட்கட்டமைப்பை பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லையாகப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.எனவே, பின்வரும் 04 அடிப்படை விடயங்களை மையமாகக் கொண்ட பிராந்திய ஒத்துழைப்பை இலங்கை முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நலனுக்காகப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ‘AI Impact 2026’ மாநாடு புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதன் அரச தலைவர்கள் அமர்வின் ஆரம்ப நிகழ்வு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), அபுதாபி முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan), பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா (Lula de Silva) மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அரச தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டுடன் இணைந்ததாக புதுடில்லி பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் அரச தலைவர்கள் பார்வையிட்டனர். அத்துடன், மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் குழுவாக புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டனர்.

AI Impact 2026 மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை வருமாறு:

செயற்கை நுண்ணறிவானது பொருளாதாரங்கள், அரச நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் சமூகங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சிறப்பான தருணத்தில், புதுடில்லியில் உங்களுடன் இணைந்துகொள்வதை நான் கௌரவமாகக் கருதுகிறேன். கடந்த நூற்றாண்டுகளில் தொழில்மயமாக்கல் ஏற்படுத்தியதைப் போலவே, தேசிய வளர்ச்சிப் பாதையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாற்றத்தக்க சக்தியாக AI தொழில்நுட்பம் விளங்குகின்றது.

எவ்வாறாயினும், AI தொழில்நுட்பத்தில் வலுவடைந்துள்ள நாடுகளுக்கும் அத்தகைய வசதியற்ற நாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் இடைவெளியானது, பல நாடுகளின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பாரிய ஆபத்தை உருவாக்குகிறது. இவ்வாறு பின்தள்ளப்படும் நாடுகள் உலகளாவிய வளர்ச்சி மற்றும் நவீன பொருளாதார வாய்ப்புகளிலிருந்து மேலும் பல்வேறு பக்கவிளைவுகளுக்கு உள்ளாக நேரிடும். இதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் அனைவரையும் உள்ளடக்கிய, நீதியான மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.

பல வளர்ந்து வரும் பொருளாதாரங்களைப் போலவே இலங்கையும் AI தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே, சரியான நோக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் நாம் நம்பிக்கையுடனும் தயக்கமின்றியும் செயற்பட வேண்டிய தீர்மானமிக்க தருணம் வந்துள்ளது.

தொழில்நுட்ப அறிவு கொண்ட இளம் மனித வளம் இலங்கையில் உள்ளது. மேலும், வலுவான சட்டக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளுடன் இணைக்கப்பட்ட பொருளாதார கலாசாரமும் எம்மிடம் உள்ளன. நாம் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பிற்கான சட்டக் கட்டமைப்புகளை நவீனமயப்படுத்தி, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்வதுடன், புத்தாக்கங்களை ஊக்குவிக்கக்கூடிய பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கக்கூடிய நிறுவனங்களை வலுப்படுத்துகிறோம்.

AI தொழில்நுட்பத்தின் நோக்கங்கள், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து உலகம் விவாதித்து வருகிறது. ஆனால் இதுவரை கவனிக்கப்படாத ஒரு முக்கியமான அம்சத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதுதான் கலாசார பொருத்தப்பாடு. இந்த தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் கலாசார மதிப்புகள் மற்றும் திறன்களை மேலும் மேம்படுத்த உதவ வேண்டும். உலகத்தரம் வாய்ந்த AI தொழில்நுட்பம் ஒரு சில மொழிகள் மற்றும் கருத்தியல்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டால், நமது தனித்துவமான கலாசார பன்முகத்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு, தமது மொழி மற்றும் கலாசாரம் மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையாகும். அத்தகைய கலாசார பொருத்தப்பாடுகளை அடைய, விரிவான ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பும் அவசியம். இதன்போது, நமது உள்ளூர் மொழிகளையும் கலாசார அறிவையும் டிஜிட்டல் மயமயப்படுத்தி, அவற்றை செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளில் ஒருங்கிணைக்க வேண்டும். அத்துடன், பாதுகாப்பில் அதிகளவில் கவனம் செலுத்துவதும் முக்கியம். AI இன் பாதகமான விளைவுகளிலிருந்து நமது கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை நிறுவ வேண்டும்.

தனித்து வெற்றியை அடைவது எமது தொலைநோக்குப் பார்வை அன்றி ஒருங்கிணைவதாகும். பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லையாக AI உட்கட்டமைப்பு வசதிகளை நாம் பார்க்கிறோம். எனவே, இலங்கை ஒரு பிராந்திய ஒத்துழைப்பை முன்மொழிகிறது. இதன்போது, குறைந்த விலையில் பெறக்கூடிய மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக்கொண்ட மொழி தரவுத்தொகுப்புகள், பொதுவான மதிப்பீட்டு முறைகள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் மற்றும் கூட்டு திறன் மேம்பாடு ஆகிய 04 பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டமைவது மிகவும் முக்கியம் ஆகும்.

இந்த முயற்சி, AI இன் நன்மைகளை பரந்த மற்றும் சமமான முறையில் அணுகுவதற்கு நம் அனைவருக்கும் உதவும் என்று நான் நம்புகிறேன். இந்த நிலைமையில், தேசிய மற்றும் பிராந்திய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய AI திறனுடன் கூடிய தரவு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை இலங்கை ஆராய்ந்து வருகிறது.

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப திறன்களில் உலக அளவில் தலைமையை அடைந்து வருகின்ற இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு, நிலைபேறான, பாதுகாப்பான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள பிராந்திய AI தரவு மைய திறன்களை நிறுவுவதற்கு இலங்கைக்கு பெரும் ஆற்றல் உள்ளது.

எந்தவொரு நாட்டுக்கும் தனியாக AI இற்கு தயாரான எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். உலகம் மற்றும் இந்தப் பிராந்தியத்தியத்தில் உள்ள நாடுகளின் கருத்துக்களையும் ம் கவனத்தில் கொண்டு, புது டில்லியில் நாம் இணங்கிய கூட்டு அறிக்கையில் இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவம், சிறப்பம்சமாக நோக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

எனவே, யாரையும் கைவிடாத வகையிலும் நெறிமுறைகளின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு குறித்து பொதுவான மதிப்புகளைப் பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்ளவும், கூட்டாக முன்னோக்கிச் செல்லவும் இலங்கை தயாராக உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை அணியை வீழ்த்தியது சிம்பாப்வே!

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான T20 போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இறுதி ஓவர்வரை ரசிகர்களை இருக்கைகளின் நுனியில் அமர வைத்த இந்தப் போட்டி மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்றது.

கொழும்பில் அமைந்துள்ள ஆர். பிரேமதாச மைதானம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி தன்னம்பிக்கையுடன் விளையாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து 179 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சிம்பாப்வே அணி, சிறப்பான கூட்டணிகளை அமைத்து போட்டியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இறுதியில் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டிய சிம்பாப்வே அணி, முக்கியமான வெற்றியைப் பதிவு செய்தது.

இவ்விரு அணிகளுமே சூப்பர் 8 சுற்றுக்குள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று செயல் திட்டங்களுடன் பதுளையில் களமிறங்கும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்!

மூன்று செயல் திட்டங்களுடன் பதுளையில் களமிறங்கும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்!

⭕1 ). கனடா பிரம்டன் தமிழ் ஒன்றியம், கொழும்பு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் ஆகியவற்றின் பூரண அனுசரணையில் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பதுளை மாவட்டம் பஸ்ஸரை பெல்காதென்ன வித்தியாலயத்தில் மடுல்சீமை, கல்லுள்ள, டூமோ, மற்றும் யூரி ஆகிய பிரதேசத்தில் உள்ள மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான கேஸ் குக்கர் எலெக்ட்றிக் kettle சமையல் பாத்திரங்கள் உள்ளடங்களாக உடுதுணிகளும் மலையைக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் நேரடியாக வழங்கப்பட உள்ளது.

⭕2 ). அத்தோடு ஹொப்டன் கெஹெல்வத்தை பிரதேச இளைஞர் யுவதிகளின் கலை, கலாச்சார வாசிப்புத்திறன் ஆகிவற்றை ஊக்குவிக்கும் முகமாக ஸ்ரீ மணி வாசகர் மண்டபத்திற்கு புத்தகங்கள், மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அன்றைய தினம் வழங்கி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இடம்பெற உள்ளது.

⭕3 ). மூன்றாம் செயல் திட்டமாக லுனுகலை Swinton Tamil வித்தியாலயத்திற்கு காரியாலய ஒழுங்கமைப்பு உபகரணங்களும் மன்றத்தினால் வழங்கப்படவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றி

ICC T-20 உலகக் கிண்ண தொடரில், இத்தாலி கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

ICC ஆண்கள் T20 உலகக் கிண்ணம் தொடரின் இன்றைய போட்டி C பிரிவில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் இத்தாலி அணிகளுக்கிடையே நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு போட்டித்திறனான மொத்தத்தைப் பெற்றுத் தந்தனர்.

பின்னர் 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலடி தந்த இத்தாலி அணி, மேற்கிந்திய தீவுகள் அணியின் கட்டுப்பாடான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இதன் காரணமாக, இத்தாலி அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து, தொடரில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

‘சமனொல சிறி – பசுமை யாத்திரை தேசிய வேலைத்திட்டம்

‘Clean Sri Lanka’ செயலகத்தால் முன்னெடுக்கப்படும் ‘சமனொல சிறி – பசுமை யாத்திரை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சிவனொளிபாத மலை புனிதப்பிரதேசம் உட்பட செல்வதற்கு கடினமான பகுதிகளில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றும் விசேட அதிரடிப்படை நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக, சிவனொளிபாத மலை புனித தலத்தின் நல்லதன்னி மற்றும் இரத்தினபுரி பிரவேசப் பாதைகளில் மேற்கொள்ளப்படும் ஒரு நாள் சிரமதான நிகழ்ச்சித்திட்டம் இன்று (19) வெற்றிகரமாக ஆரம்பமாகியது.

அரச நிறுவனங்கள், முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புத் திணைக்களம், தனியார் துறை, சிவில் அமைப்புகள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் இணைந்து, பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, இன்று (19) மு.ப 05.45 க்கு நல்லதன்னி பொலிஸ் நிலையம் அருகில் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி மற்றும் ‘Clean Sri Lanka’ செயலகத்தின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ். பி. சி. சுகீஸ்வர ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு ‘Clean Sri Lanka’ வேலைத் திட்டத்துடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதுடன், பிரஜைகளின் மனப்பாங்கு விருத்திக்கான புதிய அணுகுமுறைகளைப் பெறவும் வழிவகுக்கும். மேலும், பெறுமதிமிக்க மற்றும் சுற்றாடல் பாரம்பரிய மதத் தளமாக இந்தப் புனிதப் பிரதேசத்திற்கு, சுற்றுலா ஈர்ப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது.

அத்துடன், உணர்திறன் மிக்க சுற்றாடல் வலயமான சிவனொளிபாத மலை புனிதப்பிரதேசத்தின் சுற்றாடல் கட்டமைப்புக்கு பாதிப்பை விளைவிக்கும் செயல்கள் அல்லது நடத்தைகளில் ஈடுபடாமல் இருப்பது குறித்தும் இதன்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேற்கண்ட திட்டத்திற்கு இணையாக, பக்தர்களிடையே ஒழுக்கநெறிமுறை பண்புகளை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு திட்டங்களும் இந்த வருடம் சிவனொளிபாத யாத்திரை காலம் முழுவதும் ‘Clean Sri Lanka’ கருத்தியலின் கீழ் முன்னெடுக்கப்படும்.

அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் ‘ வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, சிறந்த மனப்பாங்குடன் கூடிய ஒழுக்கநெறிமுறை சார்ந்த சமூகத்தை உருவாக்குவதன் மூலம் சுற்றாடலை நேசிக்கும் மற்றும் சுற்றாடல் நிலைபேற்றுத்தன்மையை மதிக்கும் பிரஜைகளை உருவாக்குவதற்காக ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் சுற்றாடல் தூணின் கீழ் செயற்திட்டங்கள் மற்றும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்

0
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...