Home Blog Page 59

ரணில், சஜித் ஏப்ரலில் சங்கமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுக்கிடையிலான பேச்சு எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் இறுதிப்படுத்தப்படும் என்று ஐ.தே.கவின் பிரதி செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அடுத்த தேர்தலை கூட்டணியாகவே எதிர்கொள்வோம் எனவும் அவர் கூறினார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ஐக்கிய மக்கள் சக்தி இணைவுக்கு தாமதப்படுத்தினால் அது அக்கட்சிக்கே பாதகமாக அமையும்.

இணைவுக்குரிய பேச்சு நடக்கும்போது அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்குரிய உத்தரவாதத்தைக் கோரினால் கலந்துரையாடல் முறிவடையலாம்.

ஏனெனில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகைமையை நிரூபிக்கும் வகையில் செயலை காட்ட வேண்டும்.” – எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்!

இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை வியாழக்கிழமை) முதல் தமது புனித ரமழான் நோன்பினை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1447ஆம் ஆண்டிற்கான புனித ரமழான் மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, இன்று புதன்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்கப் பிரதிநிதிகள், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமை குறித்துக் கிடைக்கப் பெற்ற ஆதாரபூர்வமான தகவல்களைத் தொடர்ந்து, பிறைக் குழுவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்படி, இன்று இரவு முதல் பள்ளிவாசல்களில் விசேட ‘தராவிஹ்’ தொழுகைகள் ஆரம்பமாவதுடன், நாளை வியாழக்கிழமை புனித நோன்பு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இறைவனை வணங்கி, ஈகைப் பண்பை வளர்க்கும் இந்த மாதத்தை இலங்கை முஸ்லிம்களும் பக்தி உணர்வுடன் வரவேற்கத் தயாராகி வருகின்றனர்.

பிரிட்டன் துணை பிரதமர் – தமிழ்த் தேசிய தலைவர்கள் சந்திப்பு!

Screenshot

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவரின் இல்லத்தில், நேற்று பிற்பகல் 2:30 மணி முதல் சுமார் 45 நிமிட நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஆகியோரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டனர்.

ட்ரம்பின் விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி சந்திப்பு: ஏ.ஐ. மாநாட்டில் நாளை உரை!

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இன்று (18), நாளை (19) மற்றும் நாளை மறுநாள் (20) ஆகிய தினங்களில் பல முக்கிய சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

அதற்கமைய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோருக்கும்(Sergio Gor) இடையிலான சந்திப்பு இன்று (18) முற்பகல் நடைபெற்றது.

இதேவேளை, AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள அரச தலைவர்களுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் விசேட இரவு விருந்து உபசாரத்திலும் ஜனாதிபதி இன்று (18) கலந்துகொள்ளவுள்ளார்.

செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அரச தலைவர்கள் மற்றும் உலகின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்கேற்புடன் இம்மாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (19) உரையாற்றவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளதுடன், மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே(Tshering Tobgay) உள்ளிட்ட அரச தலைவர்கள் பலருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.

நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்

ICC Men’s T20 World Cup தொடரின் 35-வது லீக் போட்டியில், பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி மற்றும் நமீபியா தேசிய கிரிக்கெட் அணி அணிகள் இன்று மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்கம் முதலே தாக்குதல்மிகு ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்கள் என்ற வலுவான மொத்தத்தைப் பதிவு செய்தது.

அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய பர்ஹான், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் (100) அடித்து அணிக்கு உறுதுணையாக இருந்தார்.

200 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலடி கொடுத்த நமீபியா அணி, பாகிஸ்தான் அணியின் கட்டுப்பாட்டான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 17.3 ஓவர்களில் 97 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரின் சூப்பர் 8 சுற்றுக்குள் உறுதியாக நுழைந்துள்ளது.

பாதுகாப்புச் செயலர், இந்தோனேசிய தூதுவர் சந்திப்பு!

இந்தோனேசிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர், ewi Gustina Tobing பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

வருகை தந்த தூதுவரை அன்புடன் வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் அவருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இச்சந்திப்பு இலங்கை மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை அளித்ததுடன் இரு தரப்பினரும் பரஸ்பர நலன் குறித்து கலந்துரையாடி, தொடர்ச்சியான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர்.

மத்திய கிழக்கில் போர் விமானங்களை குவித்த அமெரிக்கா!

மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன் – தெஹ்ரான் இடையேயான பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவிகிதத்தைக் கையாளும் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்மோஸ் நீரிணையில் ஈரான் கடற்படை திங்கள்கிழமை முதல் பிரம்மாண்ட போா்ப் பயிற்சியைத் தொடங்கியது.

இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமையன்று, ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு மத்தியில், ஹார்மோஸ் நீரிணையில் ஏவுகணை சோதனைகளை நடத்தி ஈரான் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த உலகளவிலான பதற்றத்துக்கு மத்தியில், கடந்த 24 மணி நேரத்தில் எஃப்-35, எஃப்-16, எஃப்-22 ரகத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட போர் விமானங்களை மத்திய கிழக்கில் அமெரிக்கா நிலைநிறுத்தி தனது ராணுவ வலிமையை அதிகப்படுத்தியுள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையேயான பிரச்சினையில் ஜெனீவாவில் அமெரிக்கா மற்றும் ஈரானைச் சேர்ந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நிலையில் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போர் விமானங்கள் மட்டுமின்றி, வான்வழியில் எரிபொருள் நிரப்பும் டேங்கர்களும் மத்திய கிழக்கு நோக்கி நகர்ந்து வருகின்றன. அமெரிக்க அதிகாரிகளின் கூறும் தகவலின் படி, மத்திய கிழக்கில் வலிமையை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களும், ஈரானில் நடந்த போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கிய விதமும் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் போர்ப் பதற்றத்தை உருவாக்கியது.

ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஏற்கெனவே மத்திய கிழக்கு பகுதியில் ஒரு விமானம் தாங்கி போா்க்கப்பல் இருக்கும் நிலையில், உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலையும் அமெரிக்கா அங்கு அனுப்பி வைத்திருக்கிறது.

பொருளாதாரத் தடைகளை நீக்கினால் மட்டுமே அணுசக்தி கட்டுப்பாடு குறித்து விதிக்க ஒப்புக்கொள்வோம் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. அணுசக்தி மட்டுமின்றி, ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு IMF முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பெப்ரவரி 17ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி Kristalina Georgieva தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்தார்.

இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும், அண்மைக்கால பொருளாதார மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி Kristalina Georgieva பாராட்டியதுடன், ’

டிட்வா’ சூறாவளியானது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், அதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கும் மீளெழும் திறனைக் கட்டியெழுப்புவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

’டிட்வா’ சூறாவளிப் பாதிப்பிற்குப் பின்னர் இலங்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்புகளைப் பிரதமர் பாராட்டினார். பொருளாதார வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி ஊடாக, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு நேரடியாகப் பயன்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

மேலும், அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை உறுதி செய்தல், சுற்றுலாத்துறையின் தரத்தை மேம்படுத்துதல், நிலையான முதலீட்டு வாய்ப்புகளை ஈர்ப்பதன் அவசியம் ஆகியன குறித்தும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.

கல்வியை வெறும் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, திறன்கள் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மையமாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளரின் பணிக்குழாம் பிரதானி Andreas Bauer, ஆசிய பசிபிக் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி Krishna Srinivasan, (மூலோபாய தொடர்பாடல் பிரிவுத் தலைவர்) கலாநிதி Pierre Mejlak), இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி Martha Woldemichael, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, பிரதி ஆளுநர் கலாநிதி சி. அமரசேகர, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை, பங்களாதேஷ் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு!

பங்களாதேஷின் பிரதமராக பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மானை . அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

பிரதமரின் பதவியேற்பு விழா டாக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கையின் சார்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்றிருந்தார்.

இந்நிகழ்வின் பின்னர் பங்களாதேஷின் பிரதமரான தாரிக் ரஹ்மானை சந்தித்த அமைச்சர், இலங்கை அரசாங்கத்தின் சார்பாகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்திய தலைவர்கள், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடினர்.

பங்களாதேஷிடம் இருந்து மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் இருதரப்பு வர்த்தக மேம்பாடு குறித்தும் இந்த சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மேலும், பங்களாதேஷின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்தும் இரு தரப்பினரும் ஆலோசித்தனர்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்

0
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...