Home Blog Page 65

ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

டி -20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று (16) நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகம் அணியை ஐந்து விக்கெட்டுகளால் வீழ்த்தி பரபரப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

D குழுவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி டெல்லி நகரில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி, தன்னம்பிக்கையுடன் விளையாடி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி முக்கியமான ஐந்து விக்கெட் வெற்றியைப் பதிவு செய்தது.

பங்களாதேஷின் புதிய பிரதமர் நாளை பதவியேற்பு: இலங்கைக்கும் அழைப்பு!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.

இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்களாதேஷில் பிஎன்பி ஆட்சி அமைய உள்ளது. பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை (17) பதவியேற்க உள்ளார்.

பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு, பங்களாதேஷ் நேற்று அழைப்பு விடுத்துள்ளது.

எனினும், வரும் 17 ஆம் திகதி பிரதமர் மோடி மும்பையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரனைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்க உள்ளார்.

இதனால், பிரதமருக்குப் பதிலாக பதவியேற்பு விழாவுக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் செல்லவுள்ளனர்.

அதேவேளை, இலங்கைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அல்லது பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை, சவுதி அரேபியா இடையே வான்பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு இணக்கம்!

 

இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் அண்மையில் சந்தித்து, வான் பாதுகாப்புத் துறையில் எதிர்கால ஒத்துழைப்பும் திறன் மேம்பாட்டும் குறித்து கருத்து பரிமாறிக் கொண்டனர்.

இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர , சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படைகளின் தளபதி லெப்டினன் ஜெனரல் மஸ்யாத் அல் அம்ரோவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இச்சந்திப்பு, ரியாதில் உள்ள Saudi Ministry of Defence வளாகத்தில், World Defence Show 2026 நிகழ்வுக்கு பிரதி அமைச்சரின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நடைபெற்றது.

இக் கலந்துரையாடலின் போது, “தித்வா” சூறாவளி அனர்த்தத்தின் போது சவூதி அரேபியா வழங்கிய ஆதரவிற்காக இலங்கைத் தரப்பு நன்றியைத் தெரிவித்ததுடன் இரு நாடுகளுக்கிடையிலான நிலைத்த நட்புறவின் வெளிப்பாடு எனவும் தெரிவித்தது.

மேலும், அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தைகள் (Staff Talks) மூலம் அனுபவப் பகிர்வு ஏற்படுத்துதல், பாதுகாப்பு கலந்துரையாடல்களில் பரஸ்பர பங்கேற்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைப் படையினரின் வான் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியாவில் சிறப்பு பயிற்சி வாய்ப்புகளை வழங்குமாறும் இலங்கைத் தரப்பு கோரிக்கை விடுத்தது.

இச் சுமூக சந்திப்பின் போது வான் பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கிடையிலான தொழில்முறை இராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

‘மலையகம்’ எமது தாயகம்: அது எம் தேசிய அடையாளங்களின் இருப்பிடம்!

” மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் உள்ளடக்கம் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.இது கட்சி அரசியல் மற்றும் முதலாளித்துவ இலாப நோக்கம் கொண்ட ஒப்பந்தமாகும்..”

இவ்வாறு மனித உரிமை மற்றும் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

பெருந்தோட்ட நிறுவனங்கள் இவ் ஒப்பந்தந்திற்கான நன்றியையும் மகிழ்ச்சியையும் ஜனாதிபதியின் (11.02.2026) மலையக விஜயத்தின்போது வெளிக்காட்டிவிட்டன.

அரசாங்கத்தின் நன்றி கடன் இதைவிட அமோகமாக இருக்கும். இது தொடர்பில் மலையக முற்போக்கு சக்திகள் மிகுந்த அவதானத்துடனும் தீர்க்கதரிசனத்துடனும் செயற்படல் வேண்டும்.

ஜனாதிபதி பெருந்தோட்ட தொழிலாளர்களை சந்தித்ததை தற்செயல் நிகழ்வல்ல அது நன்கு திட்டமிட்ட நிகழ்வு என்பதை அன்றைய காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. ஜனாதிபதியை தோட்ட அதிகாரிகள் காத்திருந்து வரவேற்றதும் தொழிலாளர்களின் ஆடை அலங்காரம் என்பவற்றோடு ஜனாதிபதிக்கு போர்தப்பட்ட பொன்னாடையும் இதனை வெளிப்படுத்தியிருந்தன.

தொழிலாளர்கள் தமக்கான சம்பளம் அதிகரித்த விடயத்தை மாத்திரம் சுட்டிக்காட்டி ஜனாதிபதி இருநூறு ஆண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்தி மகிழ்ந்ததோடு; மண்ணில் கால் பதித்தமைக்கு நன்றியும் கூறினர். இறுதியில் நாங்கள் உங்களோடு இருக்கின்றோம் எனக் கூறியதோடு, மகிழ்ச்சியின் உச்சத்தின் உணர்வில் “நீங்களே கடவுள்” என்றும் கூறினர்.

தொழிலாளர்களுக்கு அதிகரித்து கொடுக்கப்பட்ட ரூபாய் 400 என்பது அரசாங்கமும் பெருந்தோட்ட நிறுவனங்களும் தங்கள் குடும்ப சொத்தில் இருந்து கொடுக்கவில்லை. தொழிலாளர்களின் இரத்த வியர்வை சிந்திய இலாபத்தில் கிள்ளி எடுத்து கொடுக்கும் தொழிலாளர்களின் பணமாகும்.

அதே பணத்தில் தோட்ட முகாமையாளர்களும், அதிகாரிகளும் பெறும் சம்பளத்தோடும் அனுபவிக்கும் சுகபோக வாழ்வோடும் ஒப்பிடுகையில் சிறு தொகையே அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல இன்னும் மூன்று வருடங்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் எந்த சக்தியாலும் வாய் திறக்க முடியாத அளவிலேயே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.

அதிலும் வருகைக்காண ஊக்குவிப்பு பெடுப்பனவு மலையகத்தவர்களின் அரசாங்கத்திற்கான ஒத்துழைப்பிலேயே தாங்கியுள்ளது. அரசாங்கம் தமது அரசியல் இலாப நட்ட கணக்கிலேயே அதனை நோக்கும்.

இந்த நிச்சியமற்ற ஊக்குவிப்பு பணத்தினை தேசிய மக்கள் சக்தி மலையக வாக்கு வங்கியில் நிலையான வைப்பாக்கி உள்ளதென்பதை ஜனாதிபதியின் மலையக விஜய நிகழ்வுகள் காட்டுகின்றன. மலைய மண்ணில் பிறந்தவரும், மக்கள் விடுதலை முன்னணியின் நீண்ட கால உறுப்பினரும், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியை பலப்படுத்த எடுக்கும் முயற்சிக்கும் மத்தியில்; ஜனாதிபதி மலையகத்தில் தமது வாக்கு வங்கியை தற்போதைக்கு பலப்படுத்தியுள்ளார் என்றே கூறலாம்.

தொழிலாளர் சமூகம் ஜனாதிபதிக்கு தமது மகிழ்ச்சியை தெரிவிக்கவும் வாழ்த்தவுமே தமது வாய்களை திறந்தனர். மகிழ்ச்சி களிப்பில் ஒளிப்படங்களை எடுத்ததையும் காணக் கூடியதாய் இருந்தது. பெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடி தொடர்பாகவோ தமது அடிப்படை வாழ்வாதார பிரச்சினை தொடர்பாகவோ எவரும் கதைக்கவில்லை. காணி உரிமை விடயமாக எவரும் எதையும் கேட்கவில்லை. இது தொடர்பில் கதைக்கக் கூடாது. மனு கொடுக்கவும் கூடாது எனும் அழுத்தம் இருந்ததா? அது தொழிலாளர்களுக்ககே வெளிச்சம்.

நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு இவ்வாறு ஜனாதிபதி செல்லும் போது ஒரு பக்கம் உத்தியோகபூர்வ வரவேற்பு நடந்தாலும்; மறுபக்கம் நீதி கோரி மனுக்கள் கொடுப்பதும், வீதி மறியல் போராட்டம் நிகழ்வதும் உண்டு. ஆனால் ஜனாதிபதி மலையக பாதைகளில் செல்லும்போதும் மலையக மண்ணின் மக்களோடு நின்ற போதும் எங்கும் நீதி போராட்டம் நடத்துவதுமில்லை. கோரிக்கை பதாதைகள் தூக்கவும் இல்லை. கோசம் எழுப்பவும் இல்லை. தேயிலை கொழுந்து பறிக்கும் போதும் கவ்வாத்து வெட்டும் போதும் செடிகள் அமைதியாக இருப்பது போல மலையக மக்களும் அமைதியாக நின்றனர்.

மலையகத்தின் தொழிற்சங்களினதும் அரசியல் கட்சிகளினதும் தலைவர்கள் மலையக மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள், தேவைகள், உரிமைகள் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளை, குறிப்பாக இந்திய தூதுவரை, தமிழக முதலமைச்சரை ஏன் ஐ.நா பிரதிநிதிகளை சந்திக்க முயற்சிப்பதை நாம் அறிவோம்.

ஆனால் மலையகத்திற்கு வந்த ஜனாதிபதியை இவர்கள் சந்தித்ததாக தெரியவில்லை. தமது தொண்டர்களை மனுக்களை கொடுப்பதற்கு உற்சாகப்படுத்தவுமில்லை. இது ஏன்? அரசாங்கத்திற்கு மலையக அரசியல் தலைமைகளுக்கும் இடையில் அரசியல் புரிந்துணர்வு ‘டீல்’ எதுவும் உள்ளதா? இதுவே மக்கள் கேள்வி.

ஜனாதிபதியின் மலையக விஜயத்தின் போது உற்சாக எழுச்சியைத் தவிர அரசியல் எழுச்சியை காண முடியவில்லை. இதற்கு தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளின் தலைமைகளுமே பொறுப்பேற்க வேண்டும். மக்களுக்கு அரசியல் விழிப்பு ஏற்படுத்தாது அவர்களை அரசியல் மயப்படுத்தாது அரசியல் அமைப்புபடுத்தாது கட்சி அரசியலுக்குள் மட்டும் கட்டுப்படுத்தி தமது சுயநல அரசியலை முன்னெடுப்பது இதற்கு காரணம் ஆகும். இந்நிலை நீடிக்க கூடாது.

மலையக  முற்போக்கு சக்திகள் விழிப்படைந்து மக்களை அரசியல் மயப்படுத்தி கட்சி அரசியலுக்கு அப்பால் செயல்படுவதற்கு வழி வகுக்காது விடின் மலையகம்  சுற்றுலாத்தலமாகவும், அரசாங்கத்துக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் தொழிலாளர் வாழும் நிலப் பிரதேசமாக மட்டுமே இருக்கும். ‘மலையகம்’ மலையகத்தவர்களின் தாயகம். அது எம் தேசிய அடையாளங்களின் இருப்பிடம். இனமாக திரட்சி கொள்வோம்.” – என்றுள்ளது.

பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி!

மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் என்.எம். பெரேரா நிலையத்திற்கு நேற்று (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்குள் நுழையுமா இலங்கை?

டி-20 உலக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரவு 7 மணிக்கு கண்டி, Pallekele International Cricket Stadium மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி, இரு அணிகளுக்கும் அடுத்த சுற்று வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான மோதலாகக் கருதப்படுகிறது.

நடப்பு உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதனால் அணியின் நம்பிக்கை உச்சத்தில் உள்ளது.

இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்றால், இலங்கை அணி நேரடியாக சுப்பர்-8 சுற்றுக்குள் தகுதி பெறும். இதனால், சொந்த மண்ணில் விளையாடும் இலங்கை அணிக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மறுபுறம், உலக கிரிக்கெட்டின் பலம்பொருந்திய அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா, தனது முந்தைய போட்டியில் Zimbabwe அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

இதனால், சுப்பர்-8 சுற்றுக்கான வாய்ப்பை உயிருடன் வைத்திருக்க ஆஸ்திரேலியா அணிக்கு இன்றைய வெற்றி கட்டாயமாகியுள்ளது.

இன்றைய இலங்கை-ஆஸ்திரேலியா மோதல், உலகக்கிண்ண தொடரின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான போட்டிகளில் ஒன்றாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வரத்தில் பிரதமர் வழிபாடு

 

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட சிவபூஜை வழிபாடுகளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் கௌரவப் பிரமுகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, விசேட அபிஷேக மற்றும் ஆராதனை பூஜைகளில் அவர் பங்கேற்றார்.

நாட்டின் அமைதி, சுபீட்சம் மற்றும் இனங்களுக்கிடையிலான மத நல்லிணக்கத்தை வேண்டி நடைபெற்ற இந்த வழிபாடுகளில், பிரதமருடன் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்களும் கலந்துகொண்டனர்.

சிவராத்திரி தினத்தில் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரத்துக்குப் பிரதமர் வருகை தந்தமையானது, நாட்டின் கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது.

வழிபாடுகளின் பின்னர், பிரதமர் ஆலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன், ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புகளையும் கேட்டறிந்துகொண்டார்.

பிரிட்டன் துணை பிரதமர் இலங்கை விஜயம்!

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி நாளை மறுதினம் 17 ஆம் திகதி திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

17 ஆம் திகதி காலை கொழும்பு வரும் டேவிட் லாமி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தங்கியிருக்கும் போது பிரித்தானிய துணைப் பிரதமர் தமிழ் அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

பிரித்தானிய துணைப் பிரதமரைச் சந்திப்பதற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐ.நா. பணியகத்தில் நடைபெறும் நிகழ்வில் குழந்தைகள் பராமரிப்புக்கான உலகளாவிய பரப்புரைக்கான சாசனம் குறித்த உடன்பாட்டிலும் டேவிட் லாமி கையெழுத்திடுவார்.

பிரித்தானிய துணைப் பிரதமர் லாமி செவ்வாய்க்கிழமை மாலை சிறிலங்காவில் இருந்து புறப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் மோதல் – கொழும்பில் வரலாறு காணாத பாதுகாப்பு!

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை துடுப்பாட்டப் போட்டிக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று தேசிய பாதுகாப்புச் சபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.

தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி , இரு பரம எதிரிகளுக்கும் இடையிலான போட்டியைக் காண வரும் ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

போட்டியைக் காண இரு நாடுகளின் மூத்த இராஜதந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகளும் வருவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய போட்டியை முன்னிட்டு, எந்த அவசர சூழ்நிலையிலும் பயன்படுத்துவதற்காக, சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்திகள் பல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் இரண்டு நாடுகளின் அணிகள், இராஜதந்திரிகள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முழு மைதானத்தின் பாதுகாப்பும், காவல்துறை சிறப்பு அதிரடிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக காவல்துறை, கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் அரச புலனாய்வு சேவை உள்ளிட்ட 2800 அதிகாரிகள், கண்காணிப்பு பணிகளுக்காக மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிறுத்தப்படுவார்கள் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

போட்டியை குறிவைத்து நடத்தப்படும் எந்தவொரு சைபர் தாக்குதலையும் தடுக்க, காவல்துறை இணையக் குற்றப் பிரிவின் ஒரு குழுவும் தயார் நிலையில் இருக்கும்.

750 இராணுவத்தினரைக் கொண்ட குழுவும் மைதானத்திற்கு அருகில் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்காக, ஒரு சிறப்பு “ட்ரோன் நடவடிக்கை”யை மேற்கொள்வதற்கு சிறிலங்கா விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரேமதாச மைதானத்திற்கு அருகில், அனுமதிக்கப்படாத ட்ரோன்கள் பறக்க விடப்படுவதை உறுதி செய்யும் வகையில், ட்ரோன்களைத் தடுக்கும் “ஜாமர்”கள் நிறுத்தப்படும்.

இன்றைய ஆட்டத்திற்காக இராணுவ கொமாண்டோக்களின் அணியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சிறப்பு காவல்துறை உந்துருளிப் பிரிவுகள் மைதானத்தின் அருகே ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான விரிவான பாதுகாப்பு நடவடிக்கை நேற்று மாலை மைதானத்தின் சுற்றுப்புறத்திலும், மைதானத்திற்குள்ளேயும் சோதனை நடவடிக்கையுடன் தொடங்கியது.

போட்டிக்குப் பின்னர், கடைசி பார்வையாளர் மைதானத்தை விட்டு வெளியேறும் வரை சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடரும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பங்களாதேஷின் புதிய பிரதமர் 17 ஆம் திகதி பதவியேற்பு!

பங்களாதேஷின் புதிய பிரதமராக பி.என்.பி. கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (17) பதவியேற்கவுள்ளார்.

நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இலங்கை, சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இதற்குரிய அழைப்பை விடுத்துள்ளது என தெரியவருகின்றது.

2024 இல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு பங்களாதேஷில் முதல்முறையாக கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடந்தது.

இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

அமரர் கே. வேலாயுதம் – மலையகத்தின் குரலாய் ஒலித்த கொள்கைவாதி!

0
மலையகத் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமரர் கே. வேலாயுதம் அவர்களின் 76ஆவது ஜனன தினம் நேற்று (06) அனுஷ்டிக்கப்பட்டது. கல்வி,...

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

0
"அஸ்வெசும” கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். இதற்கமைய மாதாந்தம் 17,500 ரூபாவை பெறும் அஸ்வெசும...