Home Blog Page 66

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் வைத்தே கொலை: 5 ஐரோப்பிய நாடுகள் உறுதி!

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்துள்ளன.

இந்த நாடுகளை சேர்ந்த வெளியுறவத்துறை அமைச்சர்கள் இதனை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அவரது உடலில் எபபாட்டடின் (Epibatidine) என்ற விஷம் இருந்ததை இந்த நாடுகள் உறுதி செய்தன. இது தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு தவளை இனத்துக்கு உள்ள விஷம் எனவும் இந்த நாடுகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சர்வதேச சட்ட விதிகளை புறக்கணித்து இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தி உள்ளதாக இந்த ஐந்து ஐரோப்பிய நாடுகளும் கூறியுள்ளன.

இதோடு ரசாயன ஆயுத பயன்பாடு தொடர்பான விவகாரத்தில் ரஷ்யா மீது இந்த நாடுகள் முறைப்பாடுஅளித்துள்ளதாகவும் தகவல்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே பெப்ரவரிமாதத்தில் நவால்னி, ரஷ்யாவின் கார்ப் நகரத்தில் உள்ள ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்புக்கு புதின்தான் காரணம் என நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா குற்றச்சாட்டு வைத்தார். ‘புதின் என் கணவருக்கு விஷம் வைத்து கொன்றார்’ என யூலியா தெரிவித்தார்.

 

அனல் பறக்கும் ஆட்டம்: கொழும்பில் இன்று பலப்பரீட்சை! வெற்றி யாருக்கு?

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று (15) இரவு கொழும்பில் நடைபெறுகிறது.

‘ஏ’ பிரிவுக்கான இந்த முக்கிய லீக் ஆட்டம், ஆர். பிரேமதாச மைதானம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

நடப்பு சாம்பியனான இந்தியா அணி, 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை எதிர்கொள்வதால், இந்தப் போட்டி உலகக் கோப்பையின் முக்கியமான மோதலாகக் கருதப்படுகிறது.

இந்தப் போட்டி பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அரசியல் பதற்றங்களுக்குப் பின்னர் நடைபெறுகிறது. வங்கதேச அணிக்கு ஏற்பட்ட நீக்கத்தை எதிர்த்து, பாகிஸ்தான் அணி முதலில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க முடிவு செய்தது.

ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), மற்றும் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், பாகிஸ்தான் அணி தனது முடிவை வாபஸ் பெற்றது. இதன் பின்னரே இன்றைய மோதல் உறுதியாகியுள்ளது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தனது முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்திலும், நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி தன்னம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

ஆனால் இந்திய அணியின் பேட்டிங்கில் இடையிடையே விக்கெட்டுகள் சரிவது கவலை அளிக்கிறது. அமெரிக்காவுக்கு எதிராக 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும், நமீபியாவுக்கு எதிராக இறுதி கட்டத்தில் 5 விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

பிரேமதாசா மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், இந்திய அணி கூடுதல் சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, தனது முதல் இரண்டு போட்டிகளிலும் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகளை வீழ்த்தி வெற்றி பாதையில் உள்ளது. மேலும், கடந்த இரண்டு வாரங்களாக இலங்கையிலேயே தங்கி விளையாடி வருவது, அந்த அணிக்கு கூடுதல் அனுபவத்தை வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் அணியில் உஸ்மான் தாரிக், ஷதாப் கான், முகமது நவாஸ், அப்ரார் அகமது உள்ளிட்ட பல திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது, இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு சவாலாக இருக்கும்.

இந்தியா – பாகிஸ்தான் மோதல் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுகிறது. இரு அணிகளும் பலம் வாய்ந்த வீரர்களுடன் களமிறங்குவதால், இன்றைய போட்டி கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பையில் ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்தியா முயற்சிக்கும் நிலையில், பாகிஸ்தான் அதிரடி வெற்றியை பதிவு செய்யும் நோக்குடன் களமிறங்குகிறது. இதனால் கொழும்பில் இன்று நடைபெறும் இந்த மோதல், ரசிகர்களுக்கு பரபரப்பான கிரிக்கெட் விருந்தாக அமையும் என்பது உறுதி.

தேர்தலுக்கு அஞ்சவில்லை: மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும்! அரசு திட்டவட்டம்!!

மாகாணசபைத் தேர்தலைக் கண்டு தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை எனவும், உரிய முறைப்படி அவை நடத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபேவர்தன விடுத்த சவாலுக்கு பதிலடி கொடுத்து கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“அரசின் மீதான மக்கள் செல்வாக்கை அளவிடுவதற்கு மாகாண சபைத் தேர்தல் ஒன்றும் அவசியமில்லை.

கடந்த பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் மக்கள் வழங்கிய தெளிவான ஆணையின் அடிப்படையிலேயே இந்த அரசு இயங்கி வருகின்றது.

லக் ஷ்மன் யாப்பா போன்றோர் இழந்த அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்கவே இத்தகைய சவால்களை விடுகின்றனர்.

மாகாண சபைத் தேர்தல் முறைமைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து, முறையான ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தவே நாம் திட்டமிட்டுள்ளோம். இதில் எவ்வித அரசியல் காலதாமதமும் இல்லை.

கடந்த கால ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து அரசு எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே எதிர்க்கட்சியினர் தற்போது தேர்தல் கோஷத்தை எழுப்புகின்றனர்.

எமது முதன்மை நோக்கம் நாட்டைப் பொருளாதார ரீதியாகவும், ஊழலற்ற நிர்வாக ரீதியாகவும் கட்டியெழுப்புவதாகும். அதற்குத் தடையாக இருக்கும் எவ்வித அழுத்தங்களுக்கும் அரசு பணியாது.” -எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

சிறீதரன் நீக்கம் உட்கட்சி விடயம்: உண்மை வெளிவரும் என்கிறார் சுமந்திரன்!

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும்.

இது குறித்து கிளிநொச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளேன். இருப்பினும், இதனை முழுமையாகப் பகிரங்க வெளியில் சொல்வதற்கு இது தருணமல்ல. தேவை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்துவோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சிறீதரன் எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சித் தலைமையகத்தில் சுமந்திரனைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“கிளிநொச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகளுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினேன். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளித்துள்ளேன்.

சிறீதரன் விவகாரம் என்பது ஓராண்டு காலமாக நீடித்து வரும் ஒரு விடயமாகும். கட்சி அவருக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆலோசனைகளை வழங்கியிருந்தது. இறுதியாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் அவர் பின்பற்றாத காரணத்தினாலேயே, அவரை நியமித்த அரசியல் குழு தற்போது அவரை அந்தப் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிக ஏற்பாட்டின் படி, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அந்தப் பதவியைப் பொறுப்பேற்பார். உண்மையில் அந்தப் பதவிக்குரிய பணிகளை இதுவரையில் அவரே முன்னெடுத்து வந்தார். இது ஏற்கனவே அரசியல் குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.

இது குறித்து கிளிநொச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளேன். இருப்பினும், இதனை முழுமையாகப் பகிரங்க வெளியில் சொல்வதற்கு இது தருணமல்ல. தேவை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்துவோம்.” – ” – எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சுமந்திரனுடனான சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஒன்றியப் பிரதிநிதிகள், “கட்சிக்குள் நிலவும் குழப்பங்கள் ஆரோக்கியமானவை அல்ல. சிறீதரன் எம்.பி. திட்டமிட்டுப் பழிவாங்கப்படுகின்றார்.

அவருக்கு எதிராகச் சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் கலாசாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, கட்சி ஒருமித்த பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை சுமந்திரனிடம் வலியுறுத்தியுள்ளோம்.” – என்றனர்.
…………….

14 வருடங்களுக்கு பிறகு விசேட கூட்டத்தை நாளை நடத்துகிறது சட்டத்தரணிகள் சங்கம்!

சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசர விசேட கூட்டத்தை கூட்டியுள்ளது.

இந்த விசேட கூட்டம் நாளை (15) மாலை 3 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.

சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் தவறாது பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வாறான விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சட்டத்துறை பாதுகாப்பு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் சட்டத்துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இந்த அவசரக் கூட்டம் நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முக்கிய தீர்மானங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசன்துறை துறைமுகமும் இந்தியா வசமாகும்: விமல் குற்றச்சாட்டு!

“காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இது தேசத்துரோக நடவடிக்கையாகும்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் விமல்வீரவன்ச மேலும் கூறியவை வருமாறு,

“ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதியும் அங்கு செல்கின்றார்.

இலங்கையிலுள்ள கனிம வளங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காகவே இவர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராக அன்று போராடிய ஜே.வி.பியினர் இன்று அடிக்கடி இந்தியா விரைந்து செல்கின்றனர். இங்குள்ள கனிம வளங்களை இந்தியாவுக்கு வழங்குகின்றனர்.

இந்தியாவுடன் திருட்டுதனமாக ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அவற்றுள் என்ன உள்ளது என்பது எவருக்கும் தெரியாது.

அதேவேளை, காங்கேசன்துறை துறைமுகத்தையும் விரைவில் இந்திய மயப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்குரிய திட்டம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை எடுத்து 10 ஆண்டுகளுக்கு தமது நிர்வாகத்தை முன்னெடுக்க இந்திய தரப்பு திட்டமிட்டுள்ளது. அதன்பின்னரும் அது அவர்கள் வசமே இருக்ககூடும்.

அடுத்து திருகோணமலை துறைமுகமும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்தியாவுக்கு ஏற்கனவே எண்ணெய் குதங்கள் உள்ளன.

மிக முக்கிய மர்மஸ்தானம்தான் திருகோணமலை துறைமுகம். அதனையும் இந்தியாவுக்கு வழங்க முயற்சிக்கப்படுகின்றது.

எமது நாட்டு வளங்களை இந்திய மயப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.” – என்றார் விமல் வீரவன்ச.

இங்கிலாந்து அணி வெற்றி!

T20 World Cup தொடரின் 23ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிக் கனியை ருசித்தது.

Eden Gardens மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து தேசிய கிரிக்கெட் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்கள் எடுத்தது.

தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ஸ்கொட்லாந்து, நடுப்பகுதியில் விக்கெட்டுகளை இழந்து சற்றே பின்னடைவை சந்தித்தது.

153 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியது. சில விக்கெட்டுகள் விரைவில் சரிந்தாலும், நடுப்பகுதி கூட்டாண்மை ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இறுதியில் 18.2 ஓவர்களில் 155 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்தது.

இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி தங்களது பிரிவில் முக்கிய முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது.

தொழிலாளர்கள் அனைவருக்கும் 1,750 ரூபா கிடைக்கவில்லை: கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு!

“தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் 1,750 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது என்பது அப்பட்டமான பொய். இந்த சம்பள உயர்வின் நன்மை 50 சதவீதத்துக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“ அரசாங்கம் முழு நாட்டிற்கும் பொய் மாயையை உருவாக்கி அதனை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் உண்மையை மூடி மறைக்கின்றது.

எந்தவிதமான அரசியல் தொழிற்சங்க காழ்;புணர்ச்சியும் இல்லாமல் என்னால் சொல்லப்படுகின்ற உண்மையை நியாயமாக சிந்திப்பவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தோட்டங்களில் வேலை செய்கின்றவர்களில் அரை பங்குக்கும் குறைவானவர்களே நிரந்தர தொழிலாளர்கள். இவர்களுக்கே 1550 ரூபாய் அடிப்படை சம்பளமும், வேலை செய்கின்ற நாட்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 200 ரூபாயும் கிடைக்கிறது.

தோட்ட நிர்வாகங்கள் நிரந்தர தொழிலாளர்களாக இருந்தவர்களை நிர்பந்தத்தின் மூலமும் அடக்குமுறை சட்டங்களின் மூலமும் தற்காலிக தொழிலாளராக மாற்றி யிருக்கிறது.

இவ்வாறான தற்காலிக தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களுக்கு சமமான அளவில் உழைப்பை வழங்குகின்றனர். ஆனால் அவர்களுக்கு இந்த சம்பள உயர்வில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

இதே போல தொழிலாளர் பற்றாக்குறை என்பதை காரணம் காட்டி ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களும் நிரந்தர தொழிலாளர்கள் வழங்கும் உழைப்புக்கு சமமான அளவில் உழைப்பை வழங்கி வருகிறார்கள் இவர்களுக்கும் இந்த சம்பள உயர்வின் நன்மை கிட்டவில்லை.

அதேபோல பரிக்கப்படும் தேயிலைக் கொழுந்திற்கு மட்டும் ஊதியம் பெறுகின்ற தொழிலாளர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இந்த சம்பள உயர்வில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இப்படி இருக்கும் போதே இதை எப்படி ஒரு சம்பள உயர்வு என ஏற்றுக் கொள்ள முடியும்?

குறைந்தபட்சம் இந்த நாட்டின் பிரஜை என்ற வகையிலும், தோட்டத்தில் வேலை செய்கின்ற தொழிலாளி என்ற வகையிலும் இவர்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 200 ரூபாய் கூட கிடைக்கவில்லை என்பது தான் யதார்த்தமான உண்மை.

ஜனாதிபதி அவர்களே நீங்கள் ஒரே ஒரு தோட்டத்துக்கு வாருங்கள் நீங்கள் விரும்புகின்ற ஊடகங்களையும் அழைத்து வாருங்கள். உங்களோடு பொதுவான நடுநிலையாளர்களையும் அழைத்து வாருங்கள் அங்கே வேலை செய்கின்ற தொழிலாளர்கள் அனைவரையும் வரிசைப்படுத்துங்கள்.

அவர்கள் ஒவ்வொருவரிடமும் நீங்கள் அதிகரித்துக் கொடுத்த சம்பளம் கிடைக்கின்றதா என்பதை கேளுங்கள். அதை அப்படியே பகிரங்கப்படுத்தினால் வழங்கப்பட்டுள்ளது சம்பள உயர்வா? என்பது நாட்டிற்கும் உலகத்துக்கும் விளங்கும்.

பெருந்தோட்ட தொழில்துறையோடு சம்பந்தப்படாத பலர் ஊடகங்களில் வருகின்ற பெருப்பித்த தகவல்களைப் பார்த்து சம்பள உயர்வு தொடர்பாக பெருமை பட்டுக் கொள்ளலாம். ஆனால் அந்த மக்களோடு இருந்து அவர்கள் அனுபவித்து வருகின்ற பிரச்சனைகளை அறிந்தவர்களுக்கு இந்தப் பகட்டு பரப்புரை புரியும்.

தோட்டங்களில் புதிதாக புதிய தொழில்நுட்பத்துடன் தேயிலை கொழுந்தின் நிறைய அளக்கும் கருவிகளின் மூலம் ஒவ்வொரு தோட்டத் தொழிலாளர்களிடமிருந்தும் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10 கிலோ தேயிலை கொழுந்து கொள்ளையடிக்கப்படுகிறது. இதை மட்டுப்படுத்துவதற்கு நாட்டில் வலுவான சட்டங்கள் இருக்கின்ற போதும் அதை தோட்ட நிர்வாகங்கள் உதாசீனப்படுத்துகின்றன.

பெருந்தோட்ட மக்கள் சம்பள உயர்வினால் சந்தோஷமடைந்துள்ளதாக காட்டுவதன் மூலம் தோட்டங்களின் நிலவுகின்ற பிரச்சனைகளை மூடி மறைக்க முட்படக்கூடாது.

தோட்டத் தொழிலாளர்கள் கடந்த காலங்களில் அடைந்த முன்னேற்றத்தை மறந்துவிடவில்லை. யார் ஆளும் கட்சியாக வந்தாலும் அவர்களின் பின்னால் ஓடுவதற்கு சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அது எல்லா சமூகத்திலும் எல்லா நாட்டிலும் இருக்கின்ற பொதுவான விடயம்.

இப்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒவ்வொரு செயற்பாட்டாளரும் நம்மை அர்ப்பணித்து மக்கள் மத்தியில் செல்ல வேண்டியது முக்கியமானதாகும்.

ஏனெனில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாமே நிலையானவர்கள். எமக்கே நம் மக்கள் மீது பொறுப்பு இருக்கிறது. சிலர் மனோ ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி எம்மை செயல்படவிடாமல் தடுப்பதற்கு முயற்சித்தாலும் அந்த முயற்சிகளை தவிடு பொடியாக்கி எமது தமிழ் மக்களுக்காக நிலையாக நின்று பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது.” எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன், ரஷ்யாவுக்கிடையில் அடுத்தவாரம் அமைதிப் பேச்சு!

அமெரிக்கா மத்தியஸ்த முயற்சியின் கீழ், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நாட்களில் நடைபெறவுள்ளது.

இந்தத் தகவலை இரு தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளன.

அபுதாபி நகரில் அண்மையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முன்னேற்றம் எட்டப்படவில்லை என வோலோடிமிர் ஸெலென்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

சுமார் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போர் நிலைக்கு வரும் ஜூன் மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா இரு நாடுகளுக்கும் அழுத்தம் வழங்கியுள்ளது. இந்தப் பின்னணியிலேயே ஜெனீவா சந்திப்பு நடைபெறுகிறது.

அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், களத்தில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கிழக்கு உக்ரைனில் ரஷியா மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்காகக் கொண்டு உக்ரைன் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஸெலென்ஸ்கி, அங்கு உக்ரைன்–ஜெர்மனி இணைந்து நிறுவியுள்ள ட்ரோன் உற்பத்தி ஆலையை பார்வையிட்டுள்ளார்.

ஜெனீவா பேச்சுவார்த்தை, நீண்டகாலமாக நீடிக்கும் இந்த இரத்தச் சண்டைக்கு முடிவுக் கட்டுமா என்ற கேள்வி உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

நாடாளுமன்றத்தை கொளுத்த முற்பட்டவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை அவசியம்!

அரகலயவின்போது நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கு வந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவை கொலை செய்த நபர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஏனெனில் காட்டாட்சிக்கு இடமளிக்க கூடாது. நாட்டில் சட்டம் அமுலாக வேண்டும்.

நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கும் நபர்கள் வந்தனர். சிலர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். அவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆட்சியின்கீழ் அது நடக்குமா என்பது சந்தேகமே;.” – என்றார் எஸ்.எம். மரிக்கார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

அமரர் கே. வேலாயுதம் – மலையகத்தின் குரலாய் ஒலித்த கொள்கைவாதி!

0
மலையகத் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமரர் கே. வேலாயுதம் அவர்களின் 76ஆவது ஜனன தினம் நேற்று (06) அனுஷ்டிக்கப்பட்டது. கல்வி,...

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

0
"அஸ்வெசும” கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். இதற்கமைய மாதாந்தம் 17,500 ரூபாவை பெறும் அஸ்வெசும...