Home Blog Page 68

இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியது ஜே.வி.பி.குழு!

ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர்.

இந்திய கலாசார உறவுகள் பேரவையின் சிறப்பு பார்வையாளர்கள் திட்டத்தின் கீழ், ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் பெப்ரவரி 5 ஆம் திகதி தொடக்கம், 12,ஆம் திகதி வரை இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

இது ரில்வின் சில்வாவின் முதலாவது இந்திய பயணமாகும்.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜ் மற்றும் இளங்குமரன் ஆகியோரும், ஹேமதிலக கமகே மற்றும் கல்பனா மதுபாஷினி உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.

ஜேவிபி குழுவினர், புதுடெல்லி, அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்று, உயர் மட்டக் கூட்டங்கள் மற்றும் நிறுவன பார்வையிடல்களில் பங்கேற்றது.

புதுடெல்லியில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் ஆகியோரைச் சந்தித்தனர்.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வை மகாசாகர் திட்டத்தின் கீழ் நம்பகமான பங்காளியாக சிறிலங்காவுக்கு இந்தியா அளித்த உறுதிப்பாட்டை இந்தியத் தரப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.

பகிரப்பட்ட வளர்ச்சி வாய்ப்புகள், சமூக நல முயற்சிகள் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட மேம்பாடு குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

புதுடெல்லியில் இந்தியாவின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள ஆணையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், கதி சக்தி முயற்சி மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்குச் சென்ற ரில்வின் சில்வா குழுவினருக்கு, டிஜிட்டல் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிலையான விவசாயம் ஆகியவற்றில் இந்தியாவின் திறன்கள் பற்றி விளக்கப்பட்டது.

அகமதாபாத்தில், ஜேவிபி குழுவினர், குஜராத் முதல்வர் பூபேந்திர படேலையும், துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவியையும் சந்தித்தனர்.

பால் பண்ணை, உள்கட்டமைப்பு, கூட்டுறவு, நிதி தொழில்நுட்பம், சுற்றுலா, புதுமை மற்றும் தொழில்முனைவோர் போன்ற துறைகளில் குஜராத்தின் உள்ளடக்கிய வளர்ச்சி மாதிரிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில், ரில்வின் சில்வா குழுவினர் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனைச் சந்தித்ததுடன், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கும், பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் வசதியான விழிஞ்சம் ஆழ்கடல் கொள்கலன் துறைமுகத்திற்கும் சென்று பார்வையிட்டனர்.

ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழுவின் பயணம் இருதரப்பு புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சிறிலங்காவில் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அரசியல் தலைமையுடன் இந்தியாவின் தொடர்ச்சியான ஈடுபாட்டை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் களமிறங்கியது இந்திய அணி: பாகிஸ்தானுடன் நாளை மோதல்!

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோதல் நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளது.

உலக கிரிக்கெட் ரசிகர்களின் முழு கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இந்த மாபெரும் போட்டியின் மீது திரும்பியுள்ளது.

இந்த பரபரப்பான ‘கிரிக்கெட் போர்’ கொழும்பிலுள்ள ஆர். பிரேமதாச மைதானம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

இந்த போட்டியில் பங்கேற்கமாட்டோம் என முன்பு பாகிஸ்தான் அறிவித்திருந்தது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இலங்கை மேற்கொண்ட தீவிர இராஜதந்திர முயற்சிகளின் பின்னர், பாகிஸ்தான் அணி இறுதியில் சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்தியா–பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான அரசியல் பதற்றம் காரணமாக, இரு அணிகளின் மோதல் எப்போதும் சாதாரண போட்டியாக இல்லாமல், ஒரு பெரும் கௌரவப் போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. மைதானத்தில் ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு ஓட்டமும் ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கப்போகிறது.

நாளைய மோதல் வெறும் கிரிக்கெட் போட்டி அல்ல — அது பெருமை, மரியாதை, ஆதிக்கம் ஆகியவற்றை நிரூபிக்கும் மாபெரும் போராட்டமாக அமையவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

டி-20 உலகக்கிண்ணம்: இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு!

இலங்கையில் நடைபெறும் T20 கிரிக்கெட் உலகக்கோப்பை (T20 World Cup) போட்டிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்கிறது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

இலங்கையில் நடைபெறும் T20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்கான முழுமையான பாதுகாப்பு கட்டமைப்பை அமுல்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

இந்தப் போட்டியின் சர்வதேச முக்கியத்துவத்தையும், உலகம் முழுவதிலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெருமளவிலான பார்வையாளர்களை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், முப்படைகள், புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

அனைத்து போட்டி மைதானங்கள், அணிகல் தங்கியிருக்கும் ஹோட்டல்கள், பயிற்சி தளங்கள், விமான நிலையங்கள் மற்றும் ரசிகர் மையங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும்.

24 மணி நேரமும் செயல்படும் வகையில் மைதான சுற்றுவட்ட பாதுகாப்பு, நுழைவு கட்டுப்பாடு, வாகன சோதனை நிலையங்கள் மற்றும் கூட்டம் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் போட்டிகள் நடைபெறும் காலம் முழுவதும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும்.
பங்கேற்கும் அணிகள், போட்டி அதிகாரிகள், விஷேட பிரமுகர்கள் (VIP) மற்றும் இராஜதந்திரிகளின் பாதுகாப்பு விடயங்கள் விசேட பாதுகாப்பு பிரிவுகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

CCTV கண்காணிப்பு உட்பட நவீன கண்காணிப்பு முறைகள், நிகழ்நேர களநிலவரம் தொடர்பாக அறியவும் விரைவான பதிலளிப்பு திறனையும் மேம்படுத்தவும் உதவும்.
வான்வழி பரப்பு கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் அவசரநிலை பதிலளிப்பு குழுக்கள் மற்றும் அவசர மருத்துவ குழுக்கள், அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

போட்டியின் சிறப்பை பாதுகாக்கும் அதேவேளை, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை நிலைநிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உறுதியளிக்கிறது.

மேலும் பொதுமக்கள், குறிப்பாக பார்வையாளர்கள், பாதுகாப்பு தரப்பினருடன் ஒத்துழைத்து, போட்டி மைதானங்களின் வழிகாட்டல்களை பின்பற்பற்றி, ஒழுங்கு விதிமுறைகளை நிலைநிறுத்தவும், சந்தேகத்துக்கிடமான செயல்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்ய சட்ட அமுலாக்க தரப்பினருக்கு உதவுமாறும் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக் கொள்கிறது.

உலகத்தரம் வாய்ந்த சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை உயர்ந்த தொழில்முறை மற்றும் சிறந்த முறையில் நடத்தும் இலங்கையின் திறனை பிரதிபலிக்கும் வகையில், பாதுகாப்பான மற்றும் மறக்கமுடியாத T20 உலகக்கோப்பை (T20 World Cup) போட்டி அனுபவத்தை வழங்க இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதிபூண்டுள்ளது.

கனடாவை வீழ்த்தி அசத்திய ஐக்கிய அரபு அமீரகம்!

ICC T20 World Cup தொடரில் நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி, கனடா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முக்கியமான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இன்று (13) மாலை நடைபெற்ற இந்த 19-வது லீக் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் களமிறங்கிய கனடா அணிக்கு UAE பந்துவீச்சாளர்கள் கடும் சவாலை ஏற்படுத்தினர். தொடர்ந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த கனடா அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

UAE அணியின் பந்துவீச்சாளர் ஜுனைத் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி கனடா அணியின் முன்னேற்றத்தை தடுத்தார்.

151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய UAE அணி நிதானமாகவும் திட்டமிட்டும் ஆடியது. ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தபோதிலும், நடுப்பகுதியில் வீரர்கள் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர்.

இறுதியில் UAE அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியதன் மூலம், இந்த தொடரில் தங்களது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளது.

கட்சி தீர்மானங்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை!

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார்.

கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய தேவை இருப்பதினால், மேலும் எவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தவிசாளர்களைக் கேட்டிருக்கின்றார்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இது பற்றிய தகவல்களை அவர் வழங்கியிருக்கின்றார் எனத் தெரிகின்றது.

கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் ஆலோசையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை அவர் தெரியப்படுத்தி இருக்கின்றார் என அறியவந்தது.

பங்களாதேஷில் ஆட்சியை பிடித்தது பி.என்.பி. கட்சி: யார் இந்த தாரிக் ரஹ்மான்?

வங்கதேசத்தின் ‘டார்க் பிரின்ஸ்’ என்றழைக்கப்படும் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு நாடு திரும்பியவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார்.

வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் (வயது 60) தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பிறகு பொதுத்தோ்தல் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிஎன்பி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-ஏ-இஸ்லாமி இடையே நேரடிப் போட்டி நிலவியது.

300 தொகுதிகளைக் கொண்ட வங்கதேச நாடாளுமன்றத்தில், வேட்பாளா் ஒருவரின் மறைவு காரணமாக ஒரு தொகுதியில் தோ்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 212 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று பிஎன்பி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான், போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

யார் இந்த தாரிக் ரஹ்மான்?

பிஎன்பி கட்சியின் நிறுவனர் ஜியாவுர் ரஹ்மானின் மகன்தான் தாரிக் ரஹ்மான் ஆவார். ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரஹ்மான், 1971 ஆம் ஆண்டு மேற்கு பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார்.

1981 ஆம் ஆண்டில் ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி கலீதா ஜியா கட்சிப் பொறுப்பையும் பிரதமர் பதவியையும் ஏற்றார்.

பெண் ஒருவர் பொதுவெளியில் வருவதற்கே கடும் எதிர்ப்புகள் இருந்த காலகட்டத்தில், கலீதா ஜியாவை பிரதமராக்க அவரது மகன் தாரிக் ரஹ்மான் உறுதுணையாக இருந்தார்.

1991 – 1996 மற்றும் 2001 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் கலீதா ஜியா பிரதமராகப் பதவி வகித்தபோது, முக்கிய முடிவுகள் அனைத்தையும் தாரிக் ரஹ்மானே எடுத்தார். நிழல் பிரதமராக வலம்வந்த தாரிக் ரஹ்மானை ‘டார்க் பிரின்ஸ்’ என்று வங்கதேச அரசியல் கட்சிகள் அழைத்தன.

2007 ஆம் ஆண்டு ராணுவத்தின் உதவியுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற இடைக்கால அரசு, ஊழல், பண மோசடி மற்றும் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாரிக் ரஹ்மானை கைது செய்தது.

சுமார் 17 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாரிக் ரஹ்மான், மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெற்று, சிகிச்சைக்காக பிரிட்டன் நாட்டுக்குச் சென்றார்.

பின்னர், பிரிட்டனிலேயே தஞ்சமடைந்த தாரிக் ரஹ்மா, கடந்த 2025 டிசம்பரில் அவரது தாய் கலீதா ஜியா உயிரிழந்தபோதுதான் வங்கதேசம் திரும்பினார்.

தாயின் இறுதிச் சடங்குக்குப் பிறகு பிஎன்பி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார் தாரிக் ரஹ்மான்.

வங்கதேச தேர்தல் பிரசாரங்களில் தீவிரம் காட்டிய தாரிக் ரஹ்மான், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவேன் என்றும், ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றுவேன் என்றும் வாக்குறுதி அளித்தார்.

முக்கிய வாக்குறுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன் எனத் தெரிவித்தார்.

மேலும், முஸ்லிம்கள், ஹிந்துக்கள், பெளத்தர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான தேசத்தை உருவாக்க தன்னுடன் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கும் தடை விதிக்கப்பட்டிருந்த சூழலில், மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

விரைவில் வங்கதேசத்தின் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார் தாரிக் ரஹ்மான்.

வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை பெரும் அட்டகாசம்!

மட்டக்களப்பு – வாழைச்சேனை நகருக்குள் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானை நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:-

இன்று அதிகாலை வேளையில் காட்டுப் பகுதியில் இருந்து வாழைச்சேனை நகருக்குள் நுழைந்த காட்டு யானை, வீதிகளில் சென்றவர்கள் மற்றும் குடியிருப்புகள் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதன்போது, யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த மூவர் அப்பகுதி மக்களால் உடனடியாக மீட்கப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாகக் கிராமப்புறங்களிலேயே காட்டு யானைகளின் ஊடுருவல் காணப்படும் நிலையில், தற்போது நகர்ப் பகுதிக்குள் யானை புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக காட்டு யானைகள் கிராமங்களுக்குள் மட்டுமன்றி, சனநெரிசல் மிக்க நகர் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வனவிலங்கு அதிகாரிகளும் பொலிஸாரும் இவ்விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது சிம்பாப்வே: 23 ஓட்டங்களால் வெற்றி!

T20 உலகக்கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில், கிரிக்கெட் உலகின் வல்லமைமிக்க அணியான ஆஸ்திரேலியாவை சிம்பாப்வே அணி அதிரடியாக வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. எனினும், இந்த முடிவு பின்னர் அவர்களுக்கே பெரும் சவாலாக மாறியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி ஆரம்பத்திலிருந்தே கட்டுப்பாட்டுடனும் நம்பிக்கையுடனும் விளையாடியது. அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரரான பிரையன் பென்னெட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரது பொறுப்பான மற்றும் தைரியமான துடுப்பாட்டத்தின் உதவியுடன், சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ஓட்டங்கள் என்ற சவாலான மொத்தத்தை பதிவு செய்தது.

170 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்திலிருந்தே அழுத்தத்திற்கு உள்ளானது. சிம்பாப்வே அணியின் கட்டுக்கோப்பான மற்றும் தாக்குதல்மிக்க பந்துவீச்சு, ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வரிசையை முறியடித்தது.

விக்கெட்டுகள் இடைவிடாமல் சரிந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி தங்களது முழு ஓவர்களையும் பயன்படுத்தியும் 146 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதன் மூலம், சிம்பாப்வே அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து, உலகக்கிண்ண தொடரில் மிகப்பெரிய அதிர்ச்சி வெற்றிகளில் ஒன்றை பதிவு செய்துள்ளது.

இந்த தோல்வி, ஆஸ்திரேலியா அணிக்கு கடுமையான பின்னடைவாக அமைந்துள்ளதுடன், சிம்பாப்வே அணியின் தன்னம்பிக்கையையும் தொடரில் அவர்களின் முன்னேற்ற வாய்ப்புகளையும் அதிகரித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டி பெரும் பரபரப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது சிம்பாப்வே: 23 ஓட்டங்களால் வெற்றி!

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக வருண ஸ்ரீ தனபால நியமனம்

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக வருண ஸ்ரீ தனபாலவை நியமித்துள்ளார்.

அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான வருண ஸ்ரீ தனபால, 2024 நவம்பர் 29 முதல் இன்றுவரை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளராகப் பணியாற்றினார்.

சபாநாயகர் பதவி விலக வேண்டும்: சஜித் அணி வலியுறுத்து!

சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

“இலங்கை அரசியல் வரலாற்றில் சிறப்பாக செயல்பட்ட சபாநாயகர்கள் உள்ளனர். எனினும், தற்போதைய சபாநாயகர் படு மோசமாக நடந்துகொள்கின்றார். ஆளுங்கட்சிக்கு சார்பாகவே செயல்படுகின்றார்.

சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் ஒருவரே, இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அது தொடர்பில் இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழு விசாரணை முன்னெடுக்குமானால் சபாநாயகர் பதவி விலக வேண்டும்.

இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவை ஊடாகவே நியமிக்கப்படுகின்றனர். அந்த பேரவையின் தலைவராக சபாநாயகரே பதவி வகிக்கின்றார்.

சட்டம் என்பது அனைவருக்கும் சமம் எனில், சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் பதவி விலக வேண்டும் எனவும் மரிக்கார் எம்.பி. மேலும் வலியுறுத்தினார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

ஈரானின் கார்க்தீவுமீது அமெரிக்கா தாக்குதல்!

0
ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள்மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியுள்ளன என்பதை அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கக்கோரி அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவிற்கு ஈரான்...

“மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி”!

0
நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதியினால் மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி மே இறுதி வரை தடையற்ற வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்படும் டீசல் மற்றும் பெட்ரோல்...

38 நாள்கள் தூங்கிய அரசை தீப்பந்தம் ஏந்தி எழுப்பினோம்

0
"கடந்த 38 நாள்களாக ஆழ்தூக்கத்தில் இருந்த அரசாங்கத்தை எதிர்க்கட்சியின் தொடர் போராட்டங்களே விழிக்கச் செய்துள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் 'டித்வா' புயல் நிவாரணத்தைப் போல வெறும் காகித அளவிலான பொய் வாக்குறுதிகளாக அமைந்துவிடக் கூடாது"...