Home Blog Page 69

சபாநாயகர் பதவி விலக வேண்டும்: சஜித் அணி வலியுறுத்து!

சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

“இலங்கை அரசியல் வரலாற்றில் சிறப்பாக செயல்பட்ட சபாநாயகர்கள் உள்ளனர். எனினும், தற்போதைய சபாநாயகர் படு மோசமாக நடந்துகொள்கின்றார். ஆளுங்கட்சிக்கு சார்பாகவே செயல்படுகின்றார்.

சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் ஒருவரே, இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அது தொடர்பில் இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழு விசாரணை முன்னெடுக்குமானால் சபாநாயகர் பதவி விலக வேண்டும்.

இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவை ஊடாகவே நியமிக்கப்படுகின்றனர். அந்த பேரவையின் தலைவராக சபாநாயகரே பதவி வகிக்கின்றார்.

சட்டம் என்பது அனைவருக்கும் சமம் எனில், சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் பதவி விலக வேண்டும் எனவும் மரிக்கார் எம்.பி. மேலும் வலியுறுத்தினார்.

தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட லெதண்டி தோட்ட தொழிலாளர்கள், தங்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த சம்பள உயர்வு எவ்வித போராட்டமோ வேலைநிறுத்தமோ இன்றி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, ஜனாதிபதிக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

இதனை முன்னிட்டு, சிறி செல்வவிநாயகர் ஆலயம் ஆலயத்தில் இன்று காலை விசேட பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொழிலாளர்கள் பொங்கல் சமர்ப்பித்து, ஜனாதிபதியின் நீண்ட ஆயுளும் நல்லாட்சியும் நிலைக்க வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், கடந்த காலங்களில் பல போராட்டங்களும் எதிர்ப்புகளும் நடைபெற்ற பின்னரே குறைந்தளவிலான சம்பள உயர்வுகள் கிடைத்ததாக தெரிவித்தனர்.

“நல்லாட்சி காலத்தில் 50 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என கூறப்பட்டாலும், அது கூட முழுமையாக கிடைக்கவில்லை. ஆனால் தற்போது எந்தவித போராட்டமுமின்றி 400 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பது எங்களுக்கு பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது,” என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தேயிலை கொழுந்துகளை பறித்து கடின உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களின் கரங்களை நேரில் தொட்டு அவர்களின் வாழ்வாதார நிலையை கேட்டறிந்த ஜனாதிபதியை இதற்கு முன் தாங்கள் கண்டதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அந்த சந்திப்பு தொடர்பான காட்சிகளை காணொளியில் பார்த்தபோது தாங்கள் மனம் நெகிழ்ந்ததாகவும் தெரிவித்தனர்.

மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பள உயர்வு, தொழிலாளர்களிடையே புதிய நம்பிக்கையையும் எதிர்கால நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

6.5 ஓவர்களில் 100 ஓட்டங்கள்:இந்திய அணி சாதனை!

T20 உலகக்கிண்ண தொடரில் இந்திய அணி புதிய வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. T20 உலகக்கிண்ண வரலாற்றில் அதிவேகமாக 100 ஓட்டங்களை கடந்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

நமீபியா தேசிய கிரிக்கெட் அணி அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெறும் 6.5 ஓவர்களில் 100 ஓட்டங்களை கடந்தது. இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்டம் இந்த சாதனையை சாத்தியமாக்கியது.

இதற்கு முன்னர், கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ண தொடரில் நெதர்லாந்து தேசிய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு எதிராக 7 ஓவர்களில் 100 ஓட்டங்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.

அந்த சாதனையை தற்போது இந்திய அணி முறியடித்து புதிய உலகக்கிண்ண சாதனையை நிலைநிறுத்தியுள்ளது.

இந்த T20 உலகக்கிண்ணத்தின் 18வது லீக் போட்டி அருண் ஜெட்லி மைதானம், புதுடெல்லி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நமீபியா அணிகள் மோதின.

போட்டியில் முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு, நமீபியா அணியை 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியும், புதிய சாதனையும் இந்திய அணியின் வலிமையை வெளிப்படுத்துவதுடன், உலகக்கிண்ண தொடரில் அந்த அணி வலுவான போட்டியாளராக திகழ்வதை உறுதிப்படுத்தியுள்ளது.

முருத்தெட்டுவே ஆனந்த தேரரைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராமய விகாரையில் அதன் விகாராதிபதி சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை இன்று (13) சந்தித்தார்.

தற்போதைய அரசாங்கத்தால் சங்கைக்குரிய மகா சங்கத்தினருக்கும் சம்புத்த சாசனத்திற்கும் செய்து வரும் பழிவாங்கல்கள், அகௌரவங்கள் தொடர்பிலும், இனவாதத்தை தூண்டும் விவதமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் விதம் தொடர்பிலும் இங்கு அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் நிமித்தம் தேரரிடம் ஆசீகளையும் ஆலோசனைகளையும் பெற்றார்.

சிரேஷ்ட இடதுசாரி தலைவர் திஸ்ஸ விதாரண காலமானார்!

லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்று காலமானார். மரணமடையும் போது அவருக்கு 91 வயதாகும்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஜயவர்த்தனபுர கோட்டை நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை உயிரிழந்தார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண, 2004ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கை நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினராக பதவி வகித்தார். இடதுசாரி அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட அவர், நாட்டின் அரசியல் மற்றும் சமூக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர் எனக் கருதப்படுகிறார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும், பின்னர் சிரேஷ்ட அமைச்சராகவும் பதவி வகித்தார். அவரது காலத்தில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டு முக்கிய பங்கு வகித்தார். இந்த குழுவின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

அவரது மறைவு இலங்கை அரசியல் துறைக்கு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. அரசியல் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அவரது மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்குமா சிம்பாப்வே?

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (13) மூன்று முக்கியமான லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தொடரின் அடுத்த கட்டத்திற்கான தகுதி வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்காக அணிகள் கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய முதல் போட்டியாக 19ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் இலங்கை நேரப்படி முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

வலுவான அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலியா, தங்களது ஆதிக்கத்தை தொடர முயற்சிக்கிறது.

அதேவேளை, எதிர்பாராத வெற்றிகளை பதிவு செய்யும் திறன் கொண்ட சிம்பாப்வே அணி, இந்த போட்டியில் அதிர்ச்சி வெற்றியை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரண்டாவது போட்டியாக, 20ஆவது லீக் ஆட்டத்தில் கனடா தேசிய கிரிக்கெட் அணி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தேசிய கிரிக்கெட் அணி அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இரண்டு அணிகளும் தொடரில் முன்னேறுவதற்கான முக்கிய வாய்ப்பை பெற இந்த போட்டியில் வெற்றியை இலக்காகக் கொண்டு களமிறங்குகின்றன.

குறிப்பாக, சமநிலை கொண்ட அணிகளாக இருப்பதால் இந்த போட்டி கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய மூன்றாவது மற்றும் கடைசி போட்டியாக, 21ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து தேசிய கிரிக்கெட் அணி மற்றும் அமெரிக்கா தேசிய கிரிக்கெட் அணி அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி சென்னை நகரில் இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அண்மைக் காலங்களில் முன்னேற்றம் கண்டுவரும் இரு அணிகளும் தங்களது திறமையை நிரூபிக்க இந்த போட்டியை முக்கியமாகக் கருதுகின்றன.

இந்த மூன்று போட்டிகளும் தொடரின் புள்ளிப்பட்டியலில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றன.

குறிப்பாக, முன்னணி அணிகளும் வளர்ந்து வரும் அணிகளும் நேருக்கு நேர் மோதுவதால் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான மற்றும் பரபரப்பான போட்டிகளை காணும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி வெற்றிபெறும் சாத்தியம்!

பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி வெற்றிபெறுவதற்குரிய சாத்தியம் உள்ளது.

ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை அக்கட்சி நெருங்கிவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனவே, பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் கடந்த 2024ம் ஆண்டு மாணவர் புரட்சி வெடித்தது. இதனையடுத்து மக்கள் போராட்டமும் வெடித்ததால் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா இராஜினாமா செய்தார்.

தமது பாதுகாப்பு கருதி அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போதும் அங்கேயே தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து போராட்டக்காரர்களின் ஆதரவுடன் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு மலர்ந்தது. 2026 பெப்ரவரி 12 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய பங்களாதேஷில் நேற்று தேர்தல் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

இதனால் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி (பிஎன்பி), அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே இரு முனை போட்டி நிலவியது.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதியில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது.

இதில் 50 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்து 755 வேட்பாளர்கள், 273 சுயேட்சைகள் போட்டியிட்டனர்.

நாடு முழுவதும் உள்ள 42 ஆயிரத்து 779 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

8 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 9 லட்சம் பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பளித்தனர்.

150 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் பி.என்.பி. கட்சி அபார வெற்றி பெற்றதை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மரக்கறி விலைப்பட்டியல் (13.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

‘சுயம்பு’ படத்​தில் செங்கோல் வரலாறு: ஹீரோ நிகில் சித்தார்த்தா தகவல்

நடிகர் நிகில் சித்தார்த்தாவின் 20-வது படம் ‘சுயம்பு’. இதை பரத் கிருஷ்ண​மாச்​சாரி இயக்​கியுள்ளார். சம்​யுக்​தா, சுனில், அஜய், நபா நடேஷ் உள்பட பலர் நடித்​துள்​ளனர். தாகூர் மது வழங்க, பிக்​சல் ஸ்டுடியோ சார்​பில் புவன் மற்றும் கர் தயாரிக்​கின்​றனர்.

மெகா பட்​ஜெட்​டில் உரு​வாகி​யுள்ள இந்​தப் படத்​துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ரவி பஸ்ரூர் இசையமைத்​துள்​ளார். ஏப்​.10-ம் தேதி வெளி​யாகும் இப்​படத்​தின் டீஸர் நேற்று வெளி​யிடப்​பட்​டது. ஹைத​ரா​பாத்​தில், இதற்​காக நடந்த விழா​வில், படம் பற்றி ஹீரோ நிகில் சித்​தார்த்தா கூறும்​போது, “இந்​திய வரலாற்​றின் சிறப்பு வாய்ந்த மற்​றும் தனித்​து​வ​மான அம்​ச​மான செங்கோலின் வரலாற்​றி​லிருந்து உரு​வான கதை​தான் இப்படம்.

இந்​திய நாடாளு​மன்​றத் தொடக்க விழா​வின் போது அங்கு செங்​கோல் நிறு​வப்​பட்​டதை அறிவோம். ஆனால் செங்​கோலுக்​குப் பின்​னால் உள்ள வரலாற்​றைப் பலர் அறிந்​திருக்​க​வில்​லை. இது நேர்​மை​யான, நெறி வழு​வாத ஆட்சியின் சக்​தி​யைக் குறிப்​பது. இந்த செங்​கோலுக்கு சோழ பேரரசு உள்​ளிட்ட இந்​தி​யப் பேரரசுகளில் அதிக முக்கி​யத்​து​வம் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

அதைச் சுற்​றி​யும் ஹீரோவைச் சுற்​றி​யும் உருவாக்கப்பட்டுள்ள கற்​பனை​யான கதை​தான் சுயம்​பு” என்று கூறி​யுள்​ளார். தெலுங்​கு, தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் உரு​வாகி​யுள்ள இப்​படம் 2 பாகங்​களாக வெளி​யாகிறது.இப்​படம் பற்றி இயக்​குநர் பரத் கிருஷ்ணமாச்​சாரி, “இது சில வரலாற்று நாயகர்​களைப் பற்​றிய கதை. ஆயிரம் ஆண்​டு​களுக்கு முன் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. உண்​மைச் சம்​பவங்​களின் பின்​னணி​யில் கற்​பனை கதை” என்று ஏற்​கெனவே கூறியிருந்​தார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

முழு நாகரிகமே இன்றிரவு அழியப்போகிறது: ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

0
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” -என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது...

ஈரானின் கார்க்தீவுமீது அமெரிக்கா தாக்குதல்!

0
ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள்மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியுள்ளன என்பதை அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கக்கோரி அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவிற்கு ஈரான்...

“மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி”!

0
நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதியினால் மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி மே இறுதி வரை தடையற்ற வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்படும் டீசல் மற்றும் பெட்ரோல்...