Home Blog Page 70

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நிபந்தனைகளுடன் மலையகக் காணி உரிமையையும் இணைக்கவும்!

இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ‘ஜி.எஸ்.பி. பிளஸ்’ வரிச்சலுகையைத் தனது கட்சி ஆதரிக்கின்றது என்றும், எனினும் இந்த முன்னுரிமைச் சலுகையானது மலையகத் தமிழர்களின் காணி உரிமை மற்றும் கண்ணியமான குடியுரிமை உரிமைகளை உறுதிப்படுத்தும் நிபந்தனைகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய இயக்குநர் பவுலா பம்பலோனி தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினரைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோவின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பேராசிரியர் விஜயசந்திரன் மற்றும் பரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டு மலையக மக்களின் தற்போதைய நிலைப்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.

இதன்போது மனோ கணேசன் எம்.பி. முன்வைத்த முக்கிய விடயங்கள் வருமாறு:-

கட்டமைப்பு சார்ந்த புறக்கணிப்பு

மலையகத் தமிழ்ச் சமூகம் தொடர்ச்சியாகக் கட்டமைப்பு ரீதியான புறக்கணிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றது.

நாட்டின் பிரதான ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொடுத்து தேசிய பொருளாதாரத்தைத் தாங்கி நின்ற போதிலும், நிலமின்மை, வறுமை மற்றும் பொருளாதாரச் சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகள் அம்மக்களைத் தொடர்ந்தும் வாட்டி வதைக்கின்றன.

அரசின் மௌனம்

தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் மலையகப் பிராந்தியத்தின் நீண்டகால வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்துப் பலமுறை சுட்டிக்காட்டியும், இது தொடர்பான பேச்சுகளுக்கு இலங்கை அரசு தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றது.

வீடமைப்புத் திட்டத்தில் பாரபட்சம்

அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்த மலையகக் குடும்பங்கள், அரசின் தேசிய வீடமைப்புத் திட்டத்தில் இருந்து திட்டமிட்டு விலக்கப்பட்டுள்ளனர்.

“அரசின் பொதுவான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு 5 மில்லியன் ரூபா வழங்கப்படுகின்றது. ஆனால், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் அந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படாமல், இந்திய நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் 2.7 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இது அப்பட்டமான பாரபட்சமாகும்.” – என்றும் மனோ கணேசன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் சர்வதேச சமூகத்தின், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீடு மற்றும் கண்காணிப்பு அவசியம் என்பதையும் தூதுக்குழுவினரிடம் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

சங்கு கூட்டணியின் பேராளர் மாநாடு சாவகச்சேரியில் பெப்ரவரி 22ஆம் திகதி

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 5 தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைத்துச் செயற்படும் இந்தக் கூட்டணி, தனது எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் கொள்கை விளக்கங்களை முன்வைக்கும் நோக்கில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாட்டில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), ந.சிறீகாந்தா (தமிழ்த் தேசியக் கட்சி) மற்றும் சி.வேந்தன் (ஜனநாயகப் போராளிகள் கட்சி) உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் கூட்டணியின் சார்பில் வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் வெற்றி பெற்ற பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பல தரப்பினர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கைக்கு நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதாக ADB உறுதி!

இலங்கைக்கு நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி மீண்டும் உறுதிப்படுத்தியது

– மத்திய மலைநாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தல்.

இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும், பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின், உள்நாட்டுக்கான புதிய பணிப்பாளர் ஷானன் கவுலின் (Shannon Cowlin) தெரிவித்தார்.

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் நாட்டுக்கான புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷானன் கவுலின், இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார். புதிய பணிப்பாளரை ஜனாதிபதியிடம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிராந்திய பணிப்பாளர் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு செயல்முறையின் வினைத்திறன் குறித்து தூதுக்குழுவினர் இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இச்சகலந்துரையாடலில் ‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எட்டப்பட்ட பொருளாதார முன்னேற்றத்தின் பலன்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.

மத்திய மலைநாடு மற்றும் மலைப்பகுதிகளில் நிலவும் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்புகளை விளக்கிய ஜனாதிபதி, அந்த சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை மீளமைக்கவும், நீர் மூலங்களைப் பாதுகாக்கவும் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிரந்தர வாழ்வாதாரங்களை உருவாக்கித் தருவது தொடர்பான அவசரத் தேவையை வலியுறுத்தினார். இச்சவால்களை எதிர்கொள்ள நீண்டகால வேலைத்திட்டமொன்றின் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் ஒத்துழைப்புக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

மேலும், 2026 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள், எதிர்பார்க்கப்படும் வரவுசெலவுத் திட்டத்தின் ஊடான ஆதரவு மற்றும் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் உள்ளிட்ட எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது. . இதன் மூலம் நிலையான அபிவிருத்திக்காக இலங்கை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இடையிலான பரஸ்பர அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் அதன் தெற்காசிய திணைக்களத்தின் (SARD) பணிப்பாளர் நாயகம் சோனா சிரேஸ்தா (Sona Shrestha), உள்நாட்டுக்கான சிரேஷ்ட பொருளாதார நிபுணர் லிலியா அலெக்சான்யன் (Lilia Aleksanyan) மற்றும் பிரதம பொருளாதார அதிகாரி லக்ஷினி பெர்னாண்டோ ஆகியோரும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.என்.ஆர்.டி. அபொன்சு ஆகியோரும் கலந்துகொண்டனர்.

“இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தீர்வு வேண்டும்”

தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் விசேட கூட்டமொன்றை நாளை 13 ஆம் திகதி யாழ். நல்லூரில் நடத்துகின்றது.

கட்சி தலைவரான சிறிதுங்க ஜயசூரிய சிறப்பு பேச்சாராக பங்கேற்று, தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு தீர்வை வழங்குமாறு வலியுறுத்தவுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், வடக்கு மீன சமூகத்தின் பிரச்சினைகள் உடன் தீர்க்கப்பட வேண்டும் எனவும் இதன்போது இடித்துரைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி – தோட்டத்தொழிலாளர்கள் சந்திப்பு அரசியல் நாடகம்: சஜித் அணி விசனம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சந்தித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அது அரசியல் நாடகம் என்ற தொனியில் ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பெருந்தோட்டத் தொழிலாளர்களை நேற்று சந்தித்தமை தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த எஸ்.எம். மரிக்கார், தென்னிந்திய நடிகர்களே தோற்றுவிட்டனர். தோட்டத்திலுள்ள லயன் வீடொன்றுக்கு சென்று உணவு சாப்பிடும் படம் மட்டும் வெளிவரவில்லை. அதனை மறந்துவிட்டார்கள்போலும்.” – என்றார்.

இத்தாலி அணி அபார வெற்றி!

இத்தாலி மற்றும் நேபாளம் அணிகளுக்கிடையிலான போட்டியில் இத்தாலி அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

T 20 உலக்கிண்ண தொடரின் 17வது போட்டியில் இத்தாலி மற்றும் நேபாளம் அணிகள் இன்று மோதின.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இத்தாலி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய நேபாளம் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது.

124 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இத்தாலி அணி 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 வெற்றி இலக்கை அடைந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முடிவுக்கு வந்தது கவரவில தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்!

கவரவில தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டம் இன்று (12) முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்கள் நாளை முதல் வேலைக்கு செல்வார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி தோட்டத்திலுள்ள 8 தொழிலாளர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், நீதி கோரியும் கடந்த 50 நாட்களாக போராடிவந்தனர்.

இப்போராட்டம் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டமாக மாறியது. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மூவர் நேற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளருமான கிருஷ்ணன் கலைச்செல்வி இன்று காலை கவரவில தோட்டத்துக்கு சென்றிருந்தார்.

குறித்த 08 தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் சேர்ப்பதற்கு தோட்ட நிர்வாகம் ஒப்பு கொண்டுள்ளது எனவும், ஏனைய பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படும் எனவும் தொழிலாளர்களிடம் உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்தே போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்றம் உறுப்பினர் கலைச்செல்வி,

“உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் 50 நாட்களாக வேலை நிறுத்தப்பட்டதால் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டன.

சில தொழிற்சங்க பிரதிநிதிகள் அரசியல் லாபங்களுக்காக தோட்டத் தொழிலாளர்களை தவறாக வழிநடத்தியுள்ளனர்.

நாளை (13) வேலைக்குத் திரும்பும் இந்த 08 தோட்டத் தொழிலாளர்களின் இழந்த உரிமைகளை தோட்ட நிர்வாகம் வழங்காவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

துருக்கி நாடாளுமன்றில் களேபரம்: எம்.பிக்களுக்கடையில் தள்ளு முள்ளு!

துருக்கியின் புதிய நீதி அமைச்சராக, அரச தலைமை சட்டத்தரணி அகின் குர்லெக்கை ஜனாதிபதி எர்டோகன் நியமித்தார். இதற்கு எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் அகின் குர்லெக் எம்.பியாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தபோது எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகின் குர்லெக்கின் பதவி பிரமாணத்தை தடுக்க முயற்சித்தனர்.
இதனால் ஆளும்கட்சி எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது.

ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மோதலில் ஈடுபட்டவர்களை பாதுகாவலர்கள் தடுத்தனர்.

மோதல் ஏற்பட்டபோதிலும் அகின் குர்லெக் எம்.பியாக பதவி ஏற்று கொண்டனர். அவரை சுற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டு ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்தனர்.

 

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்தார் சுஹரா புகாரி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கொழும்பு மாநகர சபைக்குப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த திருமதி முஹம்மது புகாரி பாத்திமா சுஹரா (Mrs. Mohamed Buhari Fathima Sohara), தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தின் (Budget) போது, கட்சியின் தீர்மானத்தை மீறி ஆளும் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அவர் ஆதரவாக வாக்களித்தார்.

இதன் காரணமாக அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வகித்த மாநகர சபை உறுப்பினர் பதவியும் வெற்றிடமானது.

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 10A(1)(a) பிரிவின் கீழ், கொழும்பு மாநகர சபையின் தெரிவத்தாட்சி அதிகாரி பியுமி அத்திகலவினால் (Piumi Attygalle) இதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2026 பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதியிடப்பட்ட 2475/05 இலக்க விசேட வர்த்தமானி மூலம், திருமதி சுஹரா புகாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக இல்லாது போனமையால், அவரது மாநகர சபை உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றி!

ஓமான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களை பெற்றது.

இம்முறை நடைபெறும் உலகக்கிண்ண தொடரில் அணியொன்று (இதுவரையான ஆட்டம்) பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

அணித் தலைவர் தசுன் சானக்க அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றார்.

குசல் மெண்டிஸ் 61 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் 226 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கி ஓமான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதன்படி இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

 

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

முழு நாகரிகமே இன்றிரவு அழியப்போகிறது: ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

0
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” -என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது...

ஈரானின் கார்க்தீவுமீது அமெரிக்கா தாக்குதல்!

0
ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள்மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியுள்ளன என்பதை அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கக்கோரி அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவிற்கு ஈரான்...

“மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி”!

0
நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதியினால் மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி மே இறுதி வரை தடையற்ற வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்படும் டீசல் மற்றும் பெட்ரோல்...