Home Blog Page 71

குற்றவாளிகளே தம்மைத்தாமே விசாரிக்கும் அவலம்!

குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமைதான் இந்த நாட்டில் காணப்படுகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போரற்ற சூழலில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வீதிகளில் சுதந்திரமாக நடமாட கூடிய சூழலில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு அதனை நியாயப்படுத்த முடியாது.

வாகனம் ஒன்றை நிறுத்துமாறு கட்டளையிட்டு, அவர்கள் கட்டளையை மீறிச் சென்றால் வாகனத்தை நிறுத்த வைப்பதற்கான நடவடிக்கையைத்தான் பொலிஸார் மேற்கொள்ள முடியுமே தவிர சாரதியைச் சுட்டு கொல்ல முடியாது.

வாகனத்தில் மாட்டின் சாணகம் இருந்ததாகப் பொலிஸார் காண்பித்தமையைப் பார்த்த வேளை, அது கொண்டு வந்து கொட்டப்பட்டது போன்றே காணப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வாகனத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் பொலித்தீன் பை ஒன்றில் சாணகம் காணப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதியான விசாரணைகளை முன்னெடுப்பார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.

நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் உள்ளமையால்தான் இவ்வாறான செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றனர். அவசரகாலச் சட்டம் ஊடாகப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அதனூடாகவே கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் அவசரகாலச் சட்டத்தின் ஊடாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு தம்மைப் பாதுகாத்தனர்.

ஒரு குற்றவாளியாக இருந்தாலும் பொலிஸார் சுட்டுப் படுகொலை செய்கின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதியான விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் எங்கள் நாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களே தம் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் துரதிஷ்டவசமான நிலைமை காணப்படுகின்றது. குற்றம் செய்ததாகக் கூறப்படும் பொலிஸாரே இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.” – என்றார்.

கனடாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய திருநங்கை!

கனடாவில் பாடசாலையொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜெஸ்ஸி வான் ரூட்செலர் என்றழைக்கப்படும் 18 வயதான திருநங்கையே இந்த செயலை செய்துள்ளார்.

கனடாவின பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில் நேந்று நடந்த ப்பாக்கிச் சூட்டில் ஐந்து மாணவர்கள், ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஜெஸ்ஸி, முதலில் தனது வீட்டில் 39 வயது தாய் மற்றும் 11 வயது தம்பியைச் சுட்டுக் கொன்றுள்ளார்.

அதன் பின்னரே தான் முன்பு பயின்ற பாடசாலைக்குச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு ஜெஸ்ஸி பாடசாலை நூலகத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இவரையும் சேர்த்து இந்த சமபவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆணாகப் பிறந்த ஜெஸ்ஸி, தன்னை திருநங்கையாக அடையாளபப்படுத்தி கொண்டார்.

சமூக அழுத்தம் காரணமாக அவருக்குக் மனநல பிரச்சனைகள் இருந்ததாகவும், முன்னதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸார் அவரது வீட்டிற்குச் சென்று வெவ்வேறு காரணங்களுக்காக விசாரணை நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

அதேவேளை, மேற்படி தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அரசு அலுவலகங்களில் ஏழு நாட்களுக்குத் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று கனடா பிரதமர் அறிவித்தார்.

தோல்விப் பயத்தில் தேர்தல் இழுத்தடிப்பு

“கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி. அந்த அச்சத்தினாலேயே தேர்தலை நடத்தாமல் அரசு இழுத்தடிப்பு செய்கின்றது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இந்த அரசு குறுகிய காலத்திலேயே மக்களின் நன்மதிப்பை இழந்து வருகின்றது. இதற்கு அண்மையில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தல்களே சிறந்த உதாரணம்.

குறிப்பாக, குருநாகல் மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்துக் கூட்டுறவு சங்கத் தேர்தல்களிலும் அரசு தோல்வியடைந்துள்ளது. நாடு முழுவதும் இதே நிலைமைதான் நீடிக்கின்றது.

தேர்தலுக்குப் பயமில்லை என்று மேடைகளில் கூறினாலும், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்குத் துணிவு இல்லை.” – என்றார்.

அரசின் வாக்குறுதிகள் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், “புதிய அரசமைப்பை உருவாக்குவதாகக் கர்தினால் ஆண்டகைக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி என்னவானது? அதேபோல், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைத் தாம் ஆட்சிக்கு வந்ததும் வெளிப்படுத்துவோம் என்று கூறினார்கள்.

தற்போது இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இரண்டாவது ஏப்ரல் மாதம் (உயிர்த்த ஞாயிறு நினைவு தினம்) நெருங்குகின்றது. ஆனால், இதுவரை பிரதான சூத்திரதாரி யார் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. கர்தினால் ஆண்டகையை இந்த அரசு ஏமாற்றிவிட்டது.” – என்றும் குற்றம் சாட்டினார்.

“நாட்டை முன்னோக்கிச் செல்வதற்கான எந்தவொரு திட்டமும் இந்த அரசிடம் இல்லை. கடந்த ஒரு வருடத்தில் எவ்வித அபிவிருத்தியோ அல்லது மாற்றமோ நிகழவில்லை. மாறாக, நாடாளுமன்றத்திலும் ஏனைய இடங்களிலும் நாடகங்களை அரங்கேற்றுவதிலேயே அரசு குறியாக உள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலும் உயிர்த்த ஞாயிறு விவகாரத்தை வைத்துப் புதிய நாடகத்தை அரங்கேற்றாமல், உண்மையான சூத்திரதாரியைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.” – என்றும் நளின் பண்டார எம்.பி. வலியுறுத்தினார்.

இலங்கை, ஓமான் அணிகள் இன்று மோதல்!

டி -20 உலகக்கிண்ண தொடரில் இந்திய அணி 2 ஆவது ஆட்டத்தில் நமீபியாவை இன்று எதிர்கொள்கிறது.

டெல்லியில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

நமீபியாவை வீழ்த்தி 2 ஆவது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

டி 20 போட்டியில் இந்திய அணி நமீபியாவுடன் மோதுவது 2ஆவது முறையாகும். இதற்கு முன் 2021 உலகக் கோப்பையில் துபாயில் நடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

அதேவேளை, இன்று முற்பகல் 11 மணிக்கு பல்லேகலேவில் நடக்கும் போட்டியில் பி பிரிவில் உள்ள இலங்கை-ஓமான் அணிகள் மோதுகின்றன.

மாலை 3 மணிக்கு மும்பையில் நடக்கும் போட்டியில் சி பிரிவில் உள்ள இத்தாலி- நேபாளம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளில் முதல் வெற்றியை பெறப்போவது யார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மரக்கறி விலைப்பட்டியல் (12.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பங்களாதேஷில் இன்று பொதுத்தேர்தல்!

பங்களாதேஷில் கடந்த 2024-ல் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

பெப்ரவரி 12 ஆம் திகதி (இன்று) பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பங்களாதேஷில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

350 இடங்களைக் கொண்ட பங்களாதேஷ் 300 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வெள்ளை நிற வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளன.

இத்தேர்தலில் தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையில் 10 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையில் 11 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

அதேபோல் இஸ்லாமிய அந்தோலன் வங்கதேசம் கட்சி, ஜாதியா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

தேர்தலில் 1,981 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,518 பேர் முதல் முறையாக போட்டியிடுகிறார்கள். 12.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.இன்று காலை தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடையும். அதன்பின் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

தேர்தலுக்காக நாடு முழுவதும் சுமார் 43,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 24,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சூர்யா ஜோதிகா காதல் திருமணத்திற்கு இந்த பிரபல நடிகை தான் காரணம்! – மனம்திறந்த சிவகுமார்

சூர்யா – ஜோதிகா 1999ஆம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

இதனையடுத்து சூர்யா – ஜோதிகா இருவரும் 2006ஆம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், சூர்யா ஜோதிகாவை காதல் திருமணம் செய்து கொண்டதற்கு முக்கிய காரணம் ராதிகா தான் என்று சிவகுமார் பேசியுள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சிவகுமார், “உயிரிலே கலந்தது’ படப்பிடிப்பில் தனியாகவே இருந்த சூர்யாவை ஜோதிகாவிடம் `பேசு பேசு’ என சொன்னவர் ராதிகா தான். திரைப்படங்களில் 150 கதாநாயகிகளை லவ் பண்ணுவது போல நடித்துள்ளேன். என்னால் எப்படி மகனின் காதலுக்கு நோ சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.

மருத்துவராக பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா: ரசிகர்கள் வாழ்த்து!

தென்னிந்தியத் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, தற்போது மருத்துவ பட்டம் பெற்றுள்ளார்.

மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அவர் தனது எம்பிபிஎஸ் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். கடந்த ஆறு ஆண்டுகளாகத் சினிமாவையும் மருத்துவக் கல்வியையும் ஒரே நேரத்தில் பின்தொடர்ந்து வந்த அவர் தற்போது வெற்றிகரமாகப் பட்டத்தைப் பெற்றுள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பட்டமளிப்பு விழாவில் அங்கி அணிந்து, பட்டத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீலீலாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மேடையில் பட்டம் பெற்றவுடன் அவர் தனது குடும்பத்தினரை நெகிழ்ச்சியுடன் அணைக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

24 வயதான ஸ்ரீலீலா, 2020-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். திரையுலகில் பிஸியான நடிகையாக இருந்தபோதிலும், கல்வியில் கவனம் செலுத்தி இந்தச் சாதனையைப் படைத்த அவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீலீலாவின் தாயார் ஸ்வர்ணலதாவும் பெங்களூருவில் ஒரு புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்த ஸ்ரீலீலா, தனது தாயைப் போலவே மருத்துவத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற என்ற நோக்கத்தை கொண்டிருந்தார். ‘புஷ்பா 2’ படத்தின் ‘கிஸிக்’ பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இவர், தற்போது கார்த்திக் ஆர்யன் ஜோடியாகப் பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.

தற்போதுபவன் கல்யாணுடன் ‘உஸ்தாத் பகத் சிங்’ போன்ற முக்கிய படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் வெளியானது.

யாழில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியைகள் இன்று!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் பிணையில் விடுவிக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலா 25 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும், தலா இரண்டு ஆள் பிணைகளிலும் அவர்களை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அல்லைப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த ‘ஹயஸ்’ ரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வாகனத்தை ஓட்டிச் சென்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வாகனத்தில் பயணித்த மற்றுமொரு நபரும் சிறுவனின் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டு, முன்னதாக எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நேற்று புதன்கிழமை, சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கைதானவர்கள் நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தில் சம்பவத்தை விவரித்துள்ளனர்.

ஆரம்பத்தில் சிறுவனின் சிறிய தந்தையே வாகனத்தை ஓட்டியுள்ளார். எனினும், தீவுப் பகுதியில் வைத்து சிறுவன் விருப்பம் தெரிவித்ததால் அவரிடம் வாகனத்தை ஒப்படைத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸார் மறித்தபோது வாகனத்தை நிறுத்தாது சிறுவன் செலுத்தியுள்ளார். மண்டைதீவு காவலரணில் பொலிஸார் மறிக்கத் தயாராக இருந்ததைக் கண்டு வாகனத்தை மீண்டும் அல்லைப்பிட்டி நோக்கித் திருப்பியபோது, பின்னால் துரத்தி வந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

வாகனத்தில் இருந்ததாகக் கூறப்படும் சாணகம், கயிறு, வாள் மற்றும் வாகனத்தில் விழுந்துள்ள ஏனைய துப்பாக்கிச் சூடுகள் குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இவர்கள் சட்டவிரோத மாடு இறைச்சிக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் எனப் பல்வேறு செய்திகள் பரவி வந்தன. இருப்பினும், உயிரிழந்த சிறுவன் அல்லது கைதான இருவர் மீதும் இதற்கு முன்னர் குற்றச்சாட்டுக்கள் அல்லது குற்றப் பின்னணிகள் இருந்ததாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் எவ்விதத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் இறுதிக்கிரியைகள் இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளன.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

முழு நாகரிகமே இன்றிரவு அழியப்போகிறது: ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

0
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” -என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது...

ஈரானின் கார்க்தீவுமீது அமெரிக்கா தாக்குதல்!

0
ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள்மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியுள்ளன என்பதை அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கக்கோரி அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவிற்கு ஈரான்...

“மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி”!

0
நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதியினால் மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி மே இறுதி வரை தடையற்ற வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்படும் டீசல் மற்றும் பெட்ரோல்...