Home Blog Page 7

அமெரிக்காவுக்கு துணை நிற்கும் அரசு நாடுகளை தோல்வி அடைய விடமாட்டோம்!

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் இலக்குகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், அமெரிக்கா வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட போர் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்தினார்.

வெள்ளை மாளிகையில் இருந்து 19 நிமிடம் அவர் ஆற்றிய தொலைக்காட்சி உரையில், ‘‘ஈரானுக்கு எதிரான போர் முடிவடையும் தருவாயில் உள்ளது. நாங்கள் இதை முடிக்கப் போகிறோம். மிக வேகமாக முடிக்கப் போகிறோம். நாங்கள் இலக்கை நெருங்கிவிட்டோம்.

ஈரான் ராணுவத்தை நசுக்க வேண்டும், ஈரானிய மதகுருமார்களின் அரசு பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு அளிக்கும் ஆதரவை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், ஈரான் அணுஆயுதம் பெறுவதை தடுக்க வேண்டும் ஆகிய நோக்கங்களுக்காகவே இந்த போரில் அமெரிக்கா இணைந்தது.

இந்த முக்கிய நோக்கங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த நான்கு வாரங்களில் நமது ஆயுதப் படைகள் போர்க்களத்தில் விரைவான, தீர்க்கமான, மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளன. இதுபோன்ற வெற்றிகளை இதற்கு முன் மிகச் சிலரே கண்டிருக்கிறார்கள்.

ஈரானில் உள்ள அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுவிட்டனர். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் அவர்கள் இருக்க வேண்டிய கற்காலத்துக்கே அவர்களை திரும்ப அழைத்துச் செல்லப் போகிறோம்.

அமெரிக்க பேச்சுவார்த்தையில் ஈரான் தீர்வை எட்டாவிட்டால், அவர்களின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும் நாங்கள் தாக்குவோம். எல்லா வாய்ப்புகளும் எங்களிடம் உள்ளன. அவர்களிடம் (ஈரானிடம்) எதுவும் இல்லை. அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் அரபு நாடுகள் காயப்படவோ அல்லது தோல்வியடையவோ நான் அனுமதிக்க மாட்டேன்’’ என தெரிவித்தார்.

போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு!

ஈரான் மீதான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் பெரும்பாலும் எட்டப்பட்டுவிட்டதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தற்போதைய பதற்றத்தைத் தணிக்கக் கோரியுள்ளார்.

இந்தப் போர் மேலும் நீடித்தால் உலகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்கள் அடைந்துவிட்ட நிலையில், இந்த ராணுவ நடவடிக்கையின் இறுதி முடிவு என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை என்று அல்பானிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, வன்முறையைக் குறைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டிய தருணம் இதுவென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் போரைத் தொடர்வதால் இனிமேல் சாதிக்க வேண்டியது ஏதுமில்லை என்பதே அவரது முக்கியக் கருத்தாக உள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (02.04.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேரைக் கொண்ட தேசிய இனம்!

“மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாகும்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் இஸபெல்லா மார்டினைக் கொழும்பிலுள்ள கனேடிய இல்லத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான இந்தத் தூதுக்குழுவில், கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர்களான பரணீதரன் மற்றும் பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பு குறித்து ஊடகங்களிம் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்ததாவது:-

“இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் கொழும்பு வீதிகளில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்களுக்கு எதிராக நான் போராடிய போது, எனக்குத் தஞ்சம் தந்த இடமே இந்தக் கனேடிய இல்லமாகும். இன்று எமது நலிவுற்ற மலையக மக்களின் உரிமைகளுக்காக இங்கு வந்துள்ளோம்.

மலையகத் தமிழர்களில் கூலித் தொழிலாளர்கள் ஒரு சிறு பிரிவினரே (சுமார் ஒரு இலட்சம் பேர்). ஆனால், ஒட்டுமொத்தமாக 15 இலட்சம் பேரைக் கொண்ட ஒரு தேசிய இனமாக மலையகச் சமூகம் வளர்ந்துள்ளது. எனவே, அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தொழிலாளர் பிரச்சினையாக மட்டும் பார்க்கக் கூடாது.

தோட்டப் பிரதேசங்களில் வாழும் மக்கள் இன்றும் முழுமையற்ற குடியுரிமை மற்றும் நவீன அடிமைத்தனத்தின் அறிகுறிகளுடனேயே வாழ்ந்து வருகின்றனர். இது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்.

கனடாவின் உலகளாவிய உதவிக் கரங்கள் மற்றும் மனித உரிமை கண்காணிப்பு நடவடிக்கைகள் நலிவுற்ற எமது மலையக மக்களையும் சென்றடைவதை கனடா உறுதிப்படுத்த வேண்டும் என்று தூதுவரிடம் வலியுறுத்தினோம்.” – என்றார்.

இந்தக் கருத்துக்களைக் கனேடியத் தூதுவர் மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டதுடன், இது குறித்த சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியதாகவும் மனோ கணேசன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

‘ஓரியன்’ விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா

நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இலங்கை நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம்.

இவர்கள் இந்த பயணத்தில் நிலவை சுற்றி வரவுளள்னர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969-ல் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது.

இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது.

இருப்பினும் அந்த முயற்சி பல்வேறு காரணங்களால் தாமதமானது. இந்த சூழலில் அந்த தடைகளை எல்லாம் தாண்டி இன்று ‘ஆர்டெமிஸ் -2’ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்வெளி பயணத்தில் மூன்று அமெரிக்க மற்றும் கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் பயணித்துள்ளனர். அவர்களது பயணம் 10 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் (விண்வெளி வீராங்கனை) மற்றும் கனடாவின் ஜெர்மி ஹன்சன் ஆகிய விண்வெளி வீரர்கள் அடங்கியுள்ளனர்.

கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர், மைய பகுதியில் உள்ள இயந்திரம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக சென்றது.

இதனை அடுத்து, ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு இருந்த ‘ஓரியன்’ விண்கலம் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்புவதற்கான முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இந்த விண்கலம் முதல் நாள் முழுவதும் பூமியின் சுற்றுப்பாதையை சுற்றிவந்த பின்னர் நிலவை நோக்கி செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் ‘ஓரியன்’ விண்கலம் நிலவை சுற்றி வந்த பின்னர் பூமிக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் கோரவில்லை: ட்ரம்பின் கூற்றை நிராகரித்தது ஈரான்!

ஈரான் ஜனாதிபதி போர் நிறுத்தம் கோரினார் என அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட கருத்தை ஈரான் வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

“ஈரான் இத்தகைய கோரிக்கையை விடுத்ததாக டிரம்ப் வெளியிட்ட செய்தி உண்மையற்றது மற்றும் ஆதாரமற்றது.” என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

போர் நிறுத்தம் கோருகிறது ஈரான்: கூறுகிறார் ட்ரம்ப்!

நேட்டோவில் இருந்து வெளியேறுவது குறித்து ட்ரம்ப் ஆராய்வு!

நேட்டோ (NATO) அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக ஆலோசித்துவருகின்றார் என தெரியவருகின்றது.

ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் போதிய ஆதரவை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டும் ட்ரம்ப், அந்த அமைப்பை ஒரு வலிமையற்ற கட்டமைப்பு என்று விமர்சித்துவருகின்றார்.

குறிப்பாக, ஈரான் மற்றும் உக்ரைன் விவகாரங்களில் அமெரிக்காவிற்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா மற்ற நாடுகளுக்குத் தானாகவே முன்வந்து உதவிய போதிலும், நேட்டோ கூட்டணி நாடுகள் அதற்குப் பிரதிபலனாகச் செயல்படவில்லை என்பது அவரது முக்கிய வாதமாகும்.

இந்த விரிசல் காரணமாக, சர்வதேச பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இருந்து அமெரிக்கா விலகக்கூடும் என்ற அச்சுறுத்தலை டிரம்ப் விடுத்துள்ளார்.

போர் நிறுத்தம் கோருகிறது ஈரான்: கூறுகிறார் ட்ரம்ப்!

ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவிடம் போர்நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று (01) தெரிவித்துள்ளார்.

ஈரானின் புதிய தலைமை முந்தைய ஆட்சியாளர்களை விட அதிக அறிவுத்திறன் கொண்டதாகவும், தீவிரப்போக்கு குறைந்ததாகவும் இருப்பதாக ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.

எனினும், ஈரானுக்கு அருகிலுள்ள ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து பாதுகாப்பாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி செய்யும் வரை இந்த கோரிக்கை ஏற்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஈரான் மீது கடுமையான ராணுவத் தாக்குதல்கள் தொடரும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானை பழைய கற்காலத்திற்கே கொண்டு செல்லும் அளவிற்கு அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். இந்துக் கல்லூரியில் 64 மாணவர்கள் 3 A சித்தி!

வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 64 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

கணிதப் பிரிவில் 42 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 16 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும், 6 மாணவர்கள் ஏ, 2 பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

உயிரியல் பிரிவில் 19 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 12 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும், 8 மாணவர்கள் ஏ, 2 பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

வர்த்தகப் பிரிவில் ஒரு மாணவன் 3 ஏ சித்திகளையும், ஒரு மாணவன் 2 ஏ, பி சித்திகளையும், 5 மாணவர்கள் ஏ, 2 பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

கலைப் பிரிவில் 2 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 2 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

கொழுந்து பறிந்த பிரதமர் மோடி!

கொழுந்து பறிந்த பிரதமர் மோடி!

இந்தியா, அசாமின் திப்ருகரில் அமைந்துள்ள தேயிலை தோட்டமொன்றுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.
அவர் அங்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

அத்துடன், மாநிலத்தின் தேயிலைத் துறைக்கு தொழிலாளர்கள் வழங்கிவரும் பங்களிப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

அசாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக எதிர்வரும் ஏப்ரல் 9-ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மே 4-ம் திகதி நடைபெற உள்ளது.

அசாமில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அசாம் கனபரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மூன்றாவது முறையாக வெற்றி பெற தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரம் காட்டி வரும் அதேநேரத்தில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரசாரத்துக்கு சென்றிருந்தவேளையே பிரதமர் தொழிலாளர்களைச் சந்தித்தார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்

0
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...