Home Blog Page 8

ஹார்முஸ் நீரிணையைக் கடக்க புதிய நடைமுறை!

ஹார்முஸ் நீரிணை தொடர்பான புதிய விதிகளை ஈரானிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் எப்ராஹிம் அசிசி அறிவித்துள்ளார்.

ஈரானின் புரட்சிக்குப் பிந்தைய நீண்டகாலப் பொறுமை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இனி அந்த கடல்வழியைப் பயன்படுத்துவோர் ஈரானின் புதிய சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடல்சார் விதிகளில் ஈரான் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ட்ரம்ப் எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் இங்குதான் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, ஹார்முஸ் நீர்ச்சந்தியைக் கடக்கும் கப்பல்களுக்கு சுங்க வரி விதிக்கும் திட்டத்திற்கு ஈரானியத் தேசிய பாதுகாப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரேலில் இதுவரை 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயம்!

இஸ்ரேல் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, அந்நாட்டில் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,286 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு நாளில் மட்டும் சுமார் 104 புதிய காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது வரை காயமடைந்தவர்களில் 100 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ள நிலையில், மத்திய இஸ்ரேலில் ஏற்பட்ட சமீபத்திய பாதிப்புகள் இதில் இன்னும் சேர்க்கப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதில் அந்நாட்டு சுகாதாரத் துறை தற்போது முழுமையாக கவனம் செலுத்தி வருகிறது.

சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்: நேரில் சென்று பாராட்டினார் ஆளுநர்!

 

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இன்று (01.04.2026) கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு நேரடியாகப் பயணம் செய்த ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோரைப் பாடசாலை அதிபர் திருமதி ஐ.நிமல்ராஜ் வரவேற்றார்.

இப்பாடசாலையைச் சேர்ந்த மாணவன் தெ.திருக்குமரன் கணிதப் பிரிவில் தேசிய நிலையில் சாதனை படைத்துள்ள அதேவேளை, உயிரியல் பிரிவில் ஆ.கிரிஷேhந்த் மற்றும் வர்த்தகப் பிரிவில் செல்வி க.மதுமினி ஆகியோர் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தச் சாதனை மாணவர்களை ஆளுநர் பாராட்டியதுடன், இவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த பெற்றோர், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தமது கடின உழைப்பாலும் சுயமுயற்சியாலும் மாபெரும் வெற்றியீட்டிய மாணவர்களைப் பாராட்டிப் பேசிய ஆளுநர், ‘கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மாணவரொருவர் தேசிய நிலையில் முதலிடம் பெற்றுள்ளமை, மாகாணத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது’ எனக் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், ‘இந்தச் சாதனை மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குவதோடு, எதிர்காலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழ வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் ஆளுநர் வெகுவாகப் பாராட்டினார்.

போர் நிறுத்த முயற்சியில் களமிறங்கியது சீனா!

ஈரானில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஐந்து அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ளன.

உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது அவசியம் என சீனா கருதுகிறது.

கடந்த காலங்களில் மத்திய கிழக்கில் சமாதான தூதுவராக செயல்பட்ட அனுபவத்தைக் கொண்டு, பெய்ஜிங் தற்போது இந்த அமைதி முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கு மாற்றாகத் தன்னை ஒரு நடுநிலையான அமைதித் தரகராக உலக அரங்கில் நிலைநிறுத்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார்.

மத்திய கிழக்கு போர் குறித்து நீண்டகாலமாக மௌனம் காத்த சீனா, தற்போது அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் தொழில்முறை பாதிப்புகளைக் குறைக்க இந்த ராஜதந்திர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

முடிவுக்கு வருகிறது போர்?: ட்ரம்ப் இன்று விசேட அறிவிப்பு!

ஈரானுடனான போர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார்.

அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை அவரது உரை இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்த மோதலில் அமெரிக்கப் படையினருக்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து அவர் கருத்து வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை முடக்கத்தால் அமெரிக்காவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ட்ரம்பின் உரை இடம்பெறுகின்றது.

சமஷ்டிக் கொள்கையிலிருந்து தமிழரசு ஒருபோதும் விலகாது! – யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் திட்டவட்டமான உறுதி

“சமஷ்டிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அன்று முதல் இன்று வரை அதே கொள்கைப் பாதையிலேயே உறுதியாகப் பயணித்து வருகின்றது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“சமஷ்டியை அடிப்படையாக வைத்தே தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். அந்தச் சமஷ்டிக் கோட்பாட்டை முன்வைத்த காரணத்தினாலேயே தமிழரசுக் கட்சி ‘சமஷ்டிக் கட்சி’ என்று அழைக்கப்படுகின்றது. அன்று முதல் இன்று வரை அந்த அடிப்படை மாறாமல் தமிழர்களின் உரிமைகளுக்காக இக்கட்சி பயணித்து வருகின்றது. அத்தகைய உன்னத கொள்கையை எமக்குத் தந்த பெருந்தகையை இன்று நாம் உணர்வுபூர்வமாக நினைவு கூருகின்றோம்.

தந்தை செல்வாவின் பிறந்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், தந்தை செல்வா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இம்மாதம் 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

நினைவு தின நிகழ்வின் ஓர் அங்கமாக, ‘இலங்கை அரசமைப்பு சீர்திருத்தம் சமஷ்டி வழியில்’ என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் விசேட சொற்பொழிவை ஆற்றவுள்ளார். சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டே தந்தை செல்வா அரசியலை முன்னெடுத்தார் என்பதால், அந்தத் தலைப்பில் உரையாற்றுவது மிகவும் பொருத்தமானதாகும்.” – என்றார்.

மரக்கறி விலைப்பட்டியல் (01.04.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

போர் வெகுவிரைவில் முடிவுக்கு வரும்: ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும் என்று கூறினார்.

இந்தப் போரை நிறுத்துவதற்கு ஈரான் எவ்வித முன்நிபந்தனைகளையும் அல்லது உடன்படிக்கைகளையும் அமெரிக்காவுடன் செய்துகொள்ளத் தேவையில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு சர்வதேச அரசியல் சூழலிலும் உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு போர் இன்று 4ஆவது வாரமாக நீடிக்கின்றது.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானிய தலைவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டால், அதற்குப் பழிவாங்க கூகுள், ஆப்பிள் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் பயங்கரவாதத் திட்டங்களுக்குத் துணைபோவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், அங்கு பணிபுரியும் ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை தங்களின் நேரடி எதிரிகளாக ஈரான் தற்போது கருதுகிறது. பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ள இந்த மிரட்டல், அமெரிக்க நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இக்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வெளியேறத் தவறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் தரப்பில் அச்சமூட்டப்பட்டுள்ளது.

ஈரானில் 11 ஆயிரம் இலக்குகள் அழிப்பு!

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய தலைமை அமெரிக்காவுடன் இணக்கமான ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் வலியுறுத்தினார்.

சிலவேளை இணக்கம் ஏற்படவில்லை எனில், அமெரிக்க ராணுவம் தனது தாக்குதலின் தீவிரத்தை பலமடங்கு அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, கடந்த முப்பது நாட்களில் ஈரானில் 150-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் 11,000 இலக்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக ராணுவத் தளபதி டான் கெய்ன் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்கா பெற்றுள்ள வான்வழி ஆதிக்கம், பி-52 ரக குண்டுவீச்சு விமானங்கள் தரைப்பகுதிகளுக்கு மேல் பறந்து தாக்குதல் நடத்த வழிவகுத்துள்ளது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்

0
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...