Home Blog Page 73

கிவுல் ஓயா திட்டத்தை வாக்கு வேட்டைக்காக அரசியலாக்காதீர்கள்!

“கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எவ்வித இனவாத நோக்கமும் கிடையாது. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் குடிதண்ணீர் மற்றும் விவசாயத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்குடனேயே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, இதனை அரசியல் மயப்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம்.”

– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீண்டகால நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாகவே கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இது தற்போதைய அரசால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. கடந்த 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அப்போதைய அமைச்சரவையால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மகாவலி ‘எல்’ வலயத்துக்கு உட்பட்ட இந்தத் திட்டத்தை 4 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய அப்போது திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இது பாதியில் கைவிடப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தியாவசியமானது என அடையாளம் காணப்பட்ட ஒரு திட்டத்தையே நாம் தற்போது மீள ஆரம்பிக்கின்றோம்.” – என்றார்.

இந்தத் திட்டத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்து விளக்கிய அமைச்சர்,

“2011ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்காக 4 ஆயிரத்து 170 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய நிலையில் இதன் செலவு 23 ஆயிரத்து 456 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

ஆரம்ப மதிப்பீட்டை விட 6 மடங்கு செலவு அதிகரித்துள்ள போதிலும், மக்களின் நலன் கருதி தேசிய நிதியத்தின் ஊடாக 2026 முதல் 2031ஆம் ஆண்டுக்குள் இதனை நிறைவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இனத்தை அடிப்படையாகக் கொண்டு எவருக்கும் நீர் வழங்கப்படுவதில்லை. எனவே, இதனை அரசியல் மயப்படுத்தி வாக்குகளைப் பெறுவதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம். மக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தில் அரசுக்கு வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.” – என்றார்.

T-20 உலக்கிண்ணம்: இன்றைய ஆட்டங்கள்!

ICC T-20 உலகக்கிண்ண தொடரில் இன்றும் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன.

13 ஆவ லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், மற்றும் தென்னாபிரிக்காஅணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் நடைபெறும் இப்போட்டி அந்நாட்டு நேரப்படி முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகின்றது.

14 ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் களம் காண்கின்றன.

கொழும்பு ஆர். பிரமேதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

15 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Wankhede மைதானத்தில் இரவு 7 PM மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

மரக்கறி விலைப்பட்டியல் (11.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

யாழ். துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: உயர்மட்ட விசாரணைக்கு தயார்

“யாழில் உயிரிழந்த 17 வயது சாரதியின் மரணம் தொடர்பான பொலிஸ் விசாரணையில் திருப்தியில்லை என அவரின் உறவினர்கள் கருதும் பட்சத்தில் உயர்மட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தயார்.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கேள்விகள் எழுப்பட்டன. இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“பொலிஸாரின் கட்டளையை ஏற்காது, சந்தேகத்துக்கிடமான வேன் சென்றுள்ளது. முதலில் வானத்தை நோக்கியே எச்சரிக்கை சூடு நடத்தப்பட்டுள்ளது. அதற்கும் கட்டுப்படாததாலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த 17 வயது சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். வாகனத்துக்குள் இருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரும், யாழ். குற்ற விசாரணைப் பிரிவும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன.

வாகனத்துக்குள் என்ன இருந்தது என்பது உள்ளிட்ட தகவல்கள் பொலிஸ் விசாரணையின் பின்னரே தெரியவரும்.

மேற்படி இரு விசாரணைகளிலும் திருப்தி இல்லை என உறவினர்கள் கருதினால், அது தொடர்பில் தெரிவிக்கலாம். உயர்மட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தயார்.” – என்றார்.

முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்: 6 மாத கால அவகாசம் தருகிறோ

முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்:
6 மாத கால அவகாசம் தருகிறோம்

“அநுர அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது. அவர்கள் நினைத்தால் அடுத்த வாரமே நாடாளுமன்றத்தில் பிரேரணையை நிறைவேற்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும். அரசுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்குகின்றோம், முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க சவால் விடுத்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், அரசின் தற்போதைய செயற்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வெகுவாகச் சிதைவடைந்துள்ளது. அரசின் இயலாமையும் பலவீனமும் நாளுக்கு நாள் வெளிப்பட்டு வருகின்றன. ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும், சகல கூட்டுறவுத் தேர்தல்களிலும் அரசு தோல்வியைத் தழுவியுள்ளது. இதன் மூலம் மக்கள் அரசின் மீது கொண்டுள்ள வெறுப்பு தெளிவாகப் புலனாகின் றது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசுக்கு ஆறு மாத கால அவகாசத்தை வழங்குகின்றோம். அரசிடம் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருப்பதால், வரும் வாரமே ஒரு பிரேரணையை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்து சட்டச் சிக்கல்களை நீக்கித் தேர்தலை நடத்த முடியும். ஆனால், தேர்தலைச் சந்திக்க அரசுக்குத் துணிவில்லை.

இந்த அரசால் நாட்டைச் சரியான முறையில் நிர்வகிக்க முடியாது என்பது உறுதியாகிவிட்டது. எம்மிடம் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த தரப்பினர் உள்ளனர். அதிகாரத்தை எம்மிடம் ஒப்படைத்தால் நாட்டைச் சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், அதில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெறுவது உறுதி.” – என்றார்.

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

 

 

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் அவர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான போரா சமூக உறுப்பினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் அவர்கள், இலங்கையின் புதிய சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களைப் பாராட்டினார். அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராகவும், மோசடி மற்றும் ஊழல்களைத் தடுப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் விரிவான வேலைத்திட்டங்களைப் பாராட்டியதுடன், அதற்காக தனது ஆசிகளையும் வழங்கினார்.

மேலும், இலங்கையில் வாழும் போரா சமூகத்தினருக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் குறித்தும், நாட்டின் பொருளாதாரத்திற்கு போரா சமூகத்தினர் வழங்கி வரும் பங்களிப்புகள் குறித்தும் ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியிடம் விளக்கினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தமைக்காக தனது கௌரவபூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் போரா சமூகத்தின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாளை நுவரெலியா வருகிறார் ஜனாதிபதி!

 

“முழுநாடுமே ஒன்றாக” தேசியச் செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை நுவரெலியாவில்

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பிற்கான “முழு நாடுமே ஒன்றாக” செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நாளை (11) பி.ப 2.30 மணிக்கு நுவரெலியா நகரில் நடைபெறவுள்ளது.

மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரதான சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்த ஒரு விரிவான விழிப்புணர்வு பொறிமுறையின் ஊடாக, அந்த மக்களை இதிலிருந்து விடுவித்து, அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இதன்போது, போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகளில் அதிக பங்களிப்பு வழங்கிய 62 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிகள் அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

இந்த நிர்வாக சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 07 உறுப்பினர்களை உள்ளடக்கியது.

இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

மருத்துவ உதவித் தொகை அதிகரிப்பு:

சபையின் பரிந்துரைகளுக்கு அமைய, தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவித் தொகைகளை திருத்தம் செய்து அவற்றை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. மருத்துவ உதவி வழங்குவதில் தற்போதுள்ள கடுமையான நிபந்தனைகளைத் தளர்த்தி, சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெறும் நோயாளிகள் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நடைமுறைகளை எளிமைப்படுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது, இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட ஒரு வைத்தியரின் பரிந்துரையின் பேரில் மாத்திரம் மருத்துவ உதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு 100,000 ரூபா நிதியுதவி:

பல்கலைக்கழகக் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்கள், தங்களது கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஒருமுறை மட்டும் வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்க நிர்வாக சபை தீர்மானித்தது.

உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்தோரை கௌரவித்தல்:

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பாடத் திட்டத்திலும் அதிக புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை 10-லிருந்து 20-ஆக இரட்டிப்பாக அதிகரிக்க ஜனாதிபதியின் யோசனைக்கு அமைய தீர்மானிக்கப்பட்டது.

சத்திரசிகிச்சை காத்திருப்புப் பட்டியலைக் குறைத்தல்:

அரச வைத்தியசாலைகளில் இதய சத்திரசிகிச்சைகள் (Heart Surgeries) மற்றும் கண்புரை (Cataract) சத்திரசிகிச்சைகளுக்காக நிலவும் நீண்டகால காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்கு, ஜனாதிபதி நிதியத்தின் தலையீட்டுடன் கூடிய விரைவான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. இதன் கீழ் வைத்தியசாலைக் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

அனர்த்த நிவாரணங்கள்:

‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் 10,000 ரூபாய் விசேட கொடுப்பனவு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 54,000-க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், வெளிநாடுகளில் இருக்கும்போது விபத்துக்களுக்குள்ளான குடும்பங்கள், சிறுநீரக நோயாளிகளின் குடும்பங்கள் மற்றும் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுவோரின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான கல்வி உதவிகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டது.

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை:

ஜனாதிபதி நிதியத்தின் நிதி நிலைமை வரலாற்றில் என்றுமில்லாதவாறு உயர்மட்டத்தை எட்டியுள்ளது. நிதியத்தின் மூலம் உதவி பெறுவோரின் விபரங்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலக ரீதியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் ‘மஹபொல’ புலமைப்பரிசில் கொடுப்பனவுகளும் கடந்த வருடத்தில் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டிலும் அதிகளவானோர் பயனடையும் வகையில் திட்டங்களைச் செயற்படுத்த நிர்வாக சபை அனுமதி வழங்கியது.

இக்கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜயகொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் சந்திரசிறி மாயாதுன்ன மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி!

நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, ஏழு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

டி – 20 உலகக் கிண்ண தொடரில் 10வது போட்டியில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் நெதர்லாந்து அணி 157 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கியது.

18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று நெதர்லாந்து அணி வெற்றிபெற்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் மிகவும் கொடூரமானது புதிய சட்ட வரைவு!

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் பெயரிலான புதிய சட்ட வரைவு ஒன்றை அநுர அரசு முன்மொழிந்திருக்கின்றது.”- என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

” முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்கள் போராட்டங்கள் மூலம் பதவியிறக்கப்பட்ட போது, போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை.

ஆனால், எதிர்காலத்தில் மீண்டும் அத்தகைய மக்கள் எழுச்சிகள் உருவாகாமல் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டு, பழைய சட்டத்தை விடவும் மிக மோசமான சரத்துக்களுடன் இந்தப் புதிய சட்டம் கொண்டு வரப்படுகின்றது.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“1979 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது வெறும் 6 மாத காலத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடாகும். ஆனால், 1982 இல் அது ஒரு நிரந்தரச் சட்டமாக மாற்றப்பட்டது.

ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களைத் தடை செய்யக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், போர் முடிந்த பின்னரும் நீக்கப்படவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக உள்ளது.

இதன் காரணமாகவே அரசு பழைய சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வர முயல்கின்றது.

ஆனால், இந்தப் புதிய வரைவு பழைய சட்டத்தை விடப் பல மடங்கு கொடூரமானது.

புதிய சட்ட வரைவு மிகவும் மோசமாக இருப்பதால், மக்கள் அனைவரும் அதனை எதிர்த்துப் போராடுவார்கள். அந்த எதிர்ப்பின் விளைவாக அரசு புதிய வரைவை வாபஸ் பெற்றால், தானாகவே பழைய ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ நடைமுறையில் நீடிக்கும்.

பழைய சட்டத்தைத் தந்திரமாகத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அரசு இவ்வளவு மோசமான புதிய வரைவை முன்மொழிந்துள்ளதோ என்ற பலமான சந்தேகம் எழுகின்றது.” -என சுமந்திரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

முழு நாகரிகமே இன்றிரவு அழியப்போகிறது: ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

0
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” -என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது...

ஈரானின் கார்க்தீவுமீது அமெரிக்கா தாக்குதல்!

0
ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள்மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியுள்ளன என்பதை அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கக்கோரி அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவிற்கு ஈரான்...

“மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி”!

0
நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதியினால் மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி மே இறுதி வரை தடையற்ற வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்படும் டீசல் மற்றும் பெட்ரோல்...