Home Blog Page 74

கூட்டு செயற்குழு அமைக்க உத்தேசம்!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான கூட்டணி குறித்த பேச்சுகள் நேர்மறையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது தேர்தல் காலம் இல்லை என்பதால், இந்தப் பேச்சுகளை நிதானமாகவும் ஆழமாகவும் முன்னெடுத்துச் செல்ல இரு தரப்பும் உடன்பட்டுள்ளன.

இந்த அரசியல் நகர்வின் முக்கிய கட்டமாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

இரு கட்சிகளின் செயற்குழு உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ‘கூட்டுச் செயற்குழு’ ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் எதிர்கால அரசியல் பயணத்துக்கான திட்டங்களை வகுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாட்டின் போது, ஐக்கிய தேசியக் கட்சியுடனான இந்த அரசியல் பயணம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்திக்குள் சில முக்கிய உட்கட்சி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனத் தலைமைத்துவத்திற்குப் பலமான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, மக்கள் செல்வாக்குள்ள இளம் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என சஜித் பிரேமதாஸவிடம் கோரப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்குச் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் கௌரவப் பதவிகளை வழங்கிவிட்டு, அந்தப் பொறுப்புகளுக்கு இளம் பிரதிநிதிகளை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தவிசாளர் பதவியை ஏற்க மறுத்துள்ள நிலையில், வெற்றிடமாக உள்ள அந்தப் பதவிக்கு உடனடியாக ஒருவரை நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலை எதிர்கொள்வதற்கு இத்தகைய மறுசீரமைப்புகள் இன்றியமையாதவை என்பதே கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடாக உள்ளது.

1750 ரூபா சம்பளம்: தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம்!

ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நோர்வூட் எல்படை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1550 ரூபா அடிப்படை சம்பளமாகவும், வரவுக்கான கொடுப்பனவாக 200 ரூபாவும் வழங்கப்படுவதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நோர்வூட் எல்படை தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பூஜைகள் செய்ததுடன், பாற்சோறு சமைத்து நன்றியை தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், கடந்த காலங்களில் சம்பள உயர்வுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், ஆனால் இந்த முறை எந்தவித போராட்டமும் இன்றி, மக்களை வீதிக்கு இறக்காமல், ஜனாதிபதி உறுதியளித்தபடி சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்காக ஜனாதிபதிக்கும் பெருந்தோட்டத் துறை அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் சிலர் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்த போதிலும், அது போதியளவில் அமையவில்லை என்றும், வரவுக்கான கொடுப்பனவு முறையாக வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். தற்போதைய ஜனாதிபதி எந்தவித போராட்டமும் இன்றி கூடுதல் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது எனவும், இதற்காக ஜனாதிபதிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்ததாகவும் கூறினர்.

‘மலையக காந்தி’ கே. இராஜலிங்கம் ஐயாவின் 63 ஆவது நினைவு தினம் நாளை அனுஷ்டிப்பு!

‘மலையக காந்தி’ என போற்றப்படும் கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின் 60 ஆவது சிரார்த்த தினம் நாளை 11 ஆம் திகதி (11.02.2023) நினைவுகூரப்படுகின்றது.

இதனை முன்னிட்டு புஸல்லாவ, சங்குவாரி தோட்டத்தில் – அன்னாரின் சமாதி அமைந்துள்ள வளாகத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

பாடசாலை சமூகத்தின் பங்களிப்புடன் நிகழ்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நினைவு தின நிகழ்வில் பங்கேற்குமாறு அனைவருக்கும் இராஜலிங்கம் ஐயாவின் குடும்பம் சார்பில் சி. இராஜலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

யார் இந்த இராஜலிங்கம்?

மலையக மக்களுக்கு கல்விகண் திறப்பதற்காகவும், தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சொத்துகளையெல்லாம் விற்று, கிடைத்த அரச சேவையையும் துறந்து – திருமணம்கூட முடிக்காமல் செத்து மடியும்வரையும் மக்களுக்காகவே வாழந்தவர்தான் மலையக காந்தியென போற்றப்படும் கே. இராஜலிங்கம்.

இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாகவும் அன்று இலங்கை, இந்திய காங்கிரஸாகவும் இருந்த அமைப்பின் ஸதாபகத் தலைவர்களில் ஒருவர் இவர். அவ்வமைப்பின் தலைமைப்பதவியையும் அலங்கரித்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டவர். புஸல்லாவை – சரஸ்வதி மத்தியக் கல்லூரியின் ஸ்தாபகர்.

தோட்டத்தொழிலாளர்களுக்காக இவர் செய்த சேவைகளையும், தியாகங்களையும் வெறும் வார்த்தைகளால் மட்டும் விபரித்துவிடமுடியாது.

பிறப்பும் கல்வியும்

18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தலைவிரித்தாடிய பெரும் பஞ்சத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தொழிலாளர்களை கைக்கூலிகளாக இலங்கை அழைத்து வந்தது முதலாளி வர்க்கம்.

இவ்வாறு இடம்பெயர்ந்து வந்தவர்களில் ராமன் என்பவரும் ஒருவர். ( 1930 – ராஜலிங்கத்தின் தாத்தா) கம்பளையிலிருந்து புஸல்லாவை நோக்கி செல்லும் வழியிலுள்ள சங்குவாரி தோட்டத்தில் குடியேறினார். கடின உழைப்பால் காலப்போக்கில் பெரிய கங்காணியாகவும் நியமிக்கப்பட்டார். இவரின் மூத்த மகன்தான் காளிமுத்து. இவரும் சங்குவாரி தோட்டத்தில் பெரிய கங்காணியாக பதவிவகித்தார்.

காளிமுத்து கங்காணிக்கும், காளியம்மாலுக்கும் பிறந்த ஆறுக்குழந்தைகளில் மூத்தவர்தான் நாயகன் கே. ராஜலிங்கம். 1909 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி பிறந்த அவர், சிறுவயது முதலே கல்விமீதும், சமூகம்மீதும் அதிக பற்று வைத்திருந்தார். தனது தந்தை பெரிய கங்காணியென்பதால் ஆரம்பக் கல்வியை கம்பளை, அன்றூஸ் கல்லூரியில் பயின்றார்.

உயர்கல்வியை கண்டி, புனித அந்தனீஸ் கல்லூரியில் கற்றார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர், தமிழ், ஆங்கிலமென இரண்டு மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார். சர்வதேச பரீட்சைகளிலும் சித்தியடைந்தார். இதனால், தமது பாடசாலைக்கே இவரை ஆசிரியராக நியமித்தது பாடசாலை நிர்வாகம்.

தொழிலுக்கு இவர் பாடசாலை செல்லும்போது, தோட்டப்பகுதியிலுள்ள பிள்ளைகள், தேயிலை மலைகளுக்கோரம் காலை முதல் மாலைவரை இருப்பதை கண்டுள்ளார். ஏன் எமது மக்கள் இவ்வாறு ஒதுக்கப்படுகின்றனர், ஓரங்கட்டப்படுகின்றனர் என சிந்தித்த அவர், தோட்டப்பகுதி பிள்ளைகளுக்கு கல்வி அமுதூட்டும் முடிவுக்கு வந்தார். இதனால், ஆசிரியர் பதவியை துறந்து – சங்குவாரி தோட்டத்தில் கூடாரம் அமைத்து பாடசாலை அமைத்தார். தோட்டங்களுக்கு சென்று கல்வி விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தினார்.

இதற்காக தனது தந்தையிடமும், சகோதரர்களிடமுமே பணம் பெற்றார். ஏனைய தோட்டப்பகுதிகளிலுமுள்ளவர்கள் பயிலவேண்டும் என்ற நோக்கில் புஸல்லாவை சரஸ்வதி வித்தியாலயத்தை 1932 இல் ஆரம்பித்தார்.

தனது தந்தைக்கு சொந்தமான தேயிலை தோட்டமொன்றை விற்பனை செய்தே பாடசாலை நிறுவினார். அதன்பின்னர் ஆசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட சேவைகளுக்காக வீட்டிலிருந்து தங்க ஆபரணங்கனை விற்பனை செய்தார்.

குடும்ப உறுப்பினர்கள் ஆரம்பத்தில் எதிர்த்துள்ளனர். எனினும், மக்களுக்காக அனைத்தையும் அவர் செய்தார். இதனால், அவரது தந்தையும், சகோதரர்களும் பொருளாதாரமட்டத்தில் கீழிறங்கினர். இவரால் ஆரம்பிக்கப்பட்ட சரஸ்வதி வித்தியாலயம், இன்று ஒரு தேசிய பாடசாலையாக சிறந்து விளங்குகின்றது.

தோட்டப்பகுதிகளிலுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர். சமூக மாற்றத்துக்கு கல்விபுரட்சியே சிறந்த வழி. அதை அன்றே உணர்ந்தவர்தான் கே. இராஜலிங்கம்.

இலங்கை, இந்திய காங்கிரஸ் 1939 ஆம் ஆண்டு உதயமானது. மகாத்மா காந்தியின் சிறப்பு பிரதிநிதியாக நேரு கொழும்பு வந்திருந்தார். அவரின் மத்தியஸ்தத்துடனேயே அவ்வமைப்பு உதயமானது. அதன் ஸ்தாபக தலைவர்களில் ஒருவராகவும், பொதுச்செயலாளராக இராஜலிங்கமே நியமிக்கப்பட்டார்.

காந்தி, நேரு ஆகியோர் இலங்கை வந்தபோதெல்லாம் அவர்களை சந்தித்து பெரும் வரவேற்றை பெற்றிருந்ததால், இவர்களின் ஆசியுடனேயே பொதுச்செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. தனது பேச்சை உரைபெயர்ப்பதற்கு இராஜலிங்கத்தையே நேரு அழைப்பார்.
1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கை, இந்திய காங்கிரஸின் முதலாவது மாநாடு கம்பளையில் நடைபெற்றது.

தொண்டமானுடன் இணைந்து இவரே மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். 47 முதல் 50 வரை இதொகாவின் தலைவராகவும் பதவிவகித்தார். அன்று சந்தாப்பணம் இருக்கவில்லை. இதனால், சொந்த பணத்தை பயன்படுத்தியே இவர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார். ஜெனிவா மாநாடு உட்பட பல இடங்களுக்கு சொந்த பணத்திலேயே தொழிலாளர்களுக்காக சென்றுள்ளார்.

சௌமியமூர்த்தியின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக திகழ்ந்தவர். ஏன், தளபதி என்றுகூட சொல்லாம். அஸீஸ், வெள்ளையன், வேலுப்பிள்ளையென முக்கிய தலைவர்கள் கட்சிலிருந்து வெளியேறும்போது தொண்டமானுக்கு பக்கபலமாக இவரே கைகொடுத்தார். 42 இல் அஸீஸ் காங்கிரஸை கைப்பற்றியபோது – தொண்டமான் பக்கம் நின்று குரல்கொடுத்தார். இப்படி இன்றுள்ள இ.தொ.காவின் வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்குண்டு.

காந்தி, நேரு ஆகியோர் இலங்கை வந்தபோதெல்லாம் அவர்களை சந்தித்து பெரும் வரவேற்றை பெற்றிருந்ததால், இவர்களின் ஆசியுடனேயே பொதுச்செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. தனது பேச்சை உரைபெயர்ப்பதற்கு இராஜலிங்கத்தையே நேரு அழைப்பார்.

1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கை, இந்திய காங்கிரஸின் முதலாவது மாநாடு கம்பளையில் நடைபெற்றது. தொண்டமானுடன் இணைந்து இவரே மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். 47 முதல் 50 வரை இதொகாவின் தலைவராகவும் பதவிவகித்தார். அன்று சந்தாப்பணம் இருக்கவில்லை. இதனால், சொந்த பணத்தை பயன்படுத்தியே இவர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார். ஜெனிவா மாநாடு உட்பட பல இடங்களுக்கு சொந்த பணத்திலேயே தொழிலாளர்களுக்காக சென்றுள்ளார்.

சௌமியமூர்த்தியின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக திகழ்ந்தவர். ஏன், தளபதி என்றுகூட சொல்லாம். அஸீஸ், வெள்ளையன், வேலுப்பிள்ளையென முக்கிய தலைவர்கள் கட்சிலிருந்து வெளியேறும்போது தொண்டமானுக்கு பக்கபலமாக இவரே கைகொடுத்தார். 1942 இல் அஸீஸ் காங்கிரஸை கைப்பற்றியபோது – தொண்டமான் பக்கம் நின்று குரல்கொடுத்தார்.
இப்படி இன்றுள்ள இ.தொ.காவின் வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்குண்டு.

தொழிலாளர்களுக்காக அவர் பல இடங்களுக்கு செல்வதால், தந்தையால் காரொன்று வாங்கிக்கொடுக்கப்பட்டுள்ளது.

நாவலப்பட்டிய, லட்சுமி தோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சென்றிருந்த அவர், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாப்பிடாமல் இருப்பதை அறிந்தார். உடனே காரை விற்பனை செய்த அவர், அந்த பணத்தை தொழிலாளர்களுக்கு வழங்கிவிட்டு, பாதி தூரம் கால்நடையாகவும், மீதி தூரம் பஸ்ஸிலூமாக வீடுவந்து சேர்ந்தார். தொழிலாளர்களின் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

1947 ஆம் ஆண்டு நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான அவர், எந்தவொரு சலுகையையும் பெற்றதில்லை. திருமண வாழ்வில் இணைந்தால் குடும்பத்தை சுமக்கவேண்டிவரும் என்பதால் அதை நிராகரித்தவர். இப்படி மக்களுக்காகவே வாழ்ந்த அவர், 1963 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி எம்மைவிட்டு பிரிந்தார்.

ஆர்.சனத்

அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று தோட்டத் தொழிலாளர் கைகளுக்கு…!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள 1750 ரூபா சம்பளம் இன்று வழங்கப்படவுள்ளது.

அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேறும் நிலையில், இன்றைய தினம் அவர்கள் பெற்றுக்கொள்ளும் சம்பளத்துடன் அதிகரித்த தொகையையும் பெறுகின்றனர்.

இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் தொடர்ந்தும் பெரும் இழுபறி நிலையிலிருந்த சம்பள அதிகரிப்பு பிரச்சினைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலையிட்டு தீர்வு பெற்றுக் கொடுத்தமை தொடர்பில், தோட்டத் தொழிலாளர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

கடந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளத்தை, தமது அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் என வாக்குறுதியளித்திருந்தார்.

இது தொடர்பில் தோட்டக் கம்பெனிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன் இறுதியில் அரசாங்கம் 200 ரூபா கொடுப்பனவையும் தோட்டக் கம்பெனிகள் மேலும் 200 ரூபாவையும் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டன.

அதற்கிணங்கவே இன்றைய தினம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் கைகளில் கிடைக்கவுள்ளது.இதன்படி கடந்த வாரம் கொழும்பில் அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தொழில் திணைக்களத்துடன் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.கொழும்பில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் படி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்துடன் மேலும் 200 ரூபாவை அதிகரித்து வழங்க பெருந்தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவித்திருந்தன.

இந்த அதிகரிப்பு கடந்த ஜனவரியிலிருந்து கணக்கிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அத்துடன் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வருகைக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 200 ரூபா வழங்கப்படுமென தெரிவித்திருந்த ஜனாதிபதி, அதற்காக 5000 மில்லியன் ரூபா நிதியையும் ஒதுக்கியிருந்தார்.

அதனையடுத்து பெருந்தோட்டக் கம்பனிகளும் 200 ரூபாவை வழங்குவதற்கு சட்டபூர்வமாக ஒப்புதலளித்தன. அதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தில் மொத்தமாக 400 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் நீண்ட காலக் கனவாக இருந்த இந்த சம்பள அதிகரிப்பு பெரும் ஆறுதலளிப்பதாகத் பெருந்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எந்தவித போராட்டங்களும் இன்றி முதல் தடவையாகக் கிடைத்த சம்பள அதிகரிப்பு இதுவென அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் அதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் அவர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் தமது நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.

நன்றி தினகரன்

கம்பிப் பொறியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு!

கம்பிப் பொறியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில், தேயிலை மரமொன்றில் வைக்கப்பட்டிருந்த கம்பிப் பொறியில் சிக்கி நன்கு வளர்ச்சியடைந்த மலைச் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (10) குறித்த சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

தேயிலைத் தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதால், தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் மற்றும் கறவை மாடுகளை அவை வேட்டையாடுவதைத் தடுக்கவே இந்தப் பொறி வைக்கப்பட்டிருக்கலாம் என வனஜீவராசிகள் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நேற்று (09) இரவு இந்தப் பொறியில் சிறுத்தை சிக்கியிருக்கலாம் என்றும், அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது அதன் கழுத்துப் பகுதி கம்பியில் இறுக்கப்பட்டதால் மூச்சுத்திணறி சிறுத்தை உயிரிழந்திருப்பதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், தோட்ட நிர்வாகம் ஊடாக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பகவந்தலாவை காவல்துறையினர், தேயிலைத் தோட்டத்தின் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மேலும் பல கம்பிப் பொறிகளைக் கண்டறிந்து அவற்றை அகற்றியுள்ளனர்.

மேலதிக பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை மருத்துவ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கும்!

“மாகாண சபைத் தேர்தலை அநுர அரசு நடத்தும் என எதிர்பார்க்கின்றோம். அதற்கான அழுத்தத்தை ரில்வின் சில்வா உள்ளிட்டவர்களுக்கு இந்தியா கொடுக்கும் என நம்புகின்றோம்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அநுர அரச தரப்பினர் பின்வாங்கி வருகின்றமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்துவதாகவே அநுர அரசு தெரிவித்திருந்தது. அத்துடன் வரவு – செலவு திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதனால் மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்தும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் இருக்கின்றோம்.

தற்போது மக்கள் விடுதல முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட சிலர் இந்தியாவுக்குச் சென்றிருக்கின்றனர். மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா ரில்வின் சில்வாவுக்கு ஓரளவு அழுத்தம் கொடுக்கும் என நினைக்கின்றோம். அதனால் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் நாட்டின் உண்மைத்தன்மையை மக்களுக்குக் காட்ட முடியுமாகும்.

மேலும் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுமாக இருந்தால், நாங்கள் கூட்டணி அமைத்தே போட்டியிடுவோம். எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பாலமாகவே இருக்கின்றது. அதனால் கூட்டணி அமைப்பது தொடர்பில் தற்போது நாங்கள் அனைவருடனும் கலந்துரையாடி வருகின்றாேம்.

அத்துடன் கூட்டணி அமைக்கும் விடயத்தில். எதிர்கால அரசியல் நடவடிக்கைகளைக் கருத்தில்கொண்டு நாங்கள் முதலாவதாக இணைந்து செயற்பட முயற்சிப்பது ஐக்கிய மக்கள் சக்தியுடனாகும். அதனைத் தொடர்ந்து ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றாேம்.” – என்றார்.

இஸ்ரேல் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: சிட்னியில் 27 பேர் கைது!

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் ஆஸ்திரேலிய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிட்னி நகர மையத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது பெரும் குழப்பமும் வன்முறை மோதல்களும் ஏற்பட்டன.

இந்தச் சம்பவத்தின் போது, போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் அடக்குமுறையை கையாண்டதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும், பொலிஸாரின் நடவடிக்கைகள் அவசியமானவை என்றும், சட்டத்திற்குட்பட்டவையே என்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் நியாயப்படுத்தியுள்ளனர்.

திங்கட்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் கணிப்பின்படி, சிட்னி டவுன் ஹால் பகுதியில் சுமார் 6,000 பேர் திரண்டிருந்தனர். போராட்டத்தை ஏற்பாடு செய்த பாலஸ்தீன நடவடிக்கைக் குழு (Palestine Action Group – PAG), இது அமைதியான பேரணியாக நடைபெறும் என முன்பே அறிவித்திருந்தது.

ஆனால் உரைகள் நிறைவடைந்ததும், ஜார்ஜ் ஸ்ட்ரீட்டில் கூடியிருந்த போராட்டக்காரர்கள், Public Assembly Restriction Declaration (PARD) மற்றும் Major Events Act சட்ட விதிகளுக்கு மாறாக, NSW நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து, சிலர் பொலிஸ் தடுப்புகளை உடைக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், “எங்களை march செய்ய விடுங்கள்” என கோஷமிட்ட போராட்டக்காரர்கள், டவுன் ஹால் சுற்றுவட்டாரத்தில் இருந்து அவர்களை கலைக்க முயன்ற பொலிஸாருடன் நேரடியாக மோதலில் ஈடுபட்டனர்.

இந்தச் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த உதவி காவல் ஆணையர் பீட்டர் மெக்கென்னா,
“பல கட்டங்களில் நடந்த மோதல்கள், உருளும் வகையிலான சண்டைகள் மற்றும் வன்முறைச் செயல்பாடுகளின் போது, எங்கள் அதிகாரிகள் மிரட்டப்பட்டனர், தள்ளப்பட்டனர் மற்றும் தாக்கப்பட்டனர்” என தெரிவித்தார்.

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் பொலிஸார் போராட்டக்காரர்களை தாக்கும் மற்றும் மோதும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் பரவிய நிலையில், அவை குறித்து விளக்கம் அளித்த மெக்கென்னா,
“பொலிஸார் காட்டிய கட்டுப்பாட்டில் நான் பெருமை கொள்கிறேன். அவர்கள் தங்களுக்குக் கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு முன் நீண்ட நேரம் பொறுமை காட்டினர்,” என்றார்.

மேலும், “சில தருணங்களில் போராட்டக்காரர்கள் எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்ததால், எங்கள் அதிகாரிகளின் பாதுகாப்பே ஆபத்தான நிலைக்கு சென்றது,” என அவர் குறிப்பிட்டார்.

ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ணம்: இன்றைய போட்டி விபரம்!

ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடரில் இன்றும் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன.

10ஆவ லீக் ஆட்டத்தில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் நடைபெறும் இப்போட்டி அந்நாட்டு நேரப்படி முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகின்றது.

11 ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து , ஐக்கிய அரசு அமீரக அணிகள் களம் காண்கின்றன.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டியை காண வரும் ரசிகர்கள் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

12 ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா USA அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இலங்கையில் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இரவு மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கை மீண்டும் முதலில் இருந்து முழுமையாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், தணிக்கை வாரியத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கலைத் தீர்க்க, திரைப்படத்தைத் தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழுவின் பார்வைக்கு அனுப்பவும் படக்குழு தீர்மானித்துள்ளது.

இந்தத் திரைப்படம் ஜனவரி 9-ஆம் திகதி வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்தின் ஆய்வுக் குழு பரிந்துரைத்த 27 மாற்றங்களைச் செய்த பிறகும் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை படக்குழு சட்டப் போராட்டம் நடத்தியது.

இருப்பினும், சட்ட ரீதியான நடவடிக்கைகளில் உடனடி தீர்வு கிடைக்காததாலும், படத்தின் ஓடிடி உரிமத்தைப் பெற்றுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனத்தின் அழுத்தம் காரணமாகவும் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தால், அரசியல் வசனங்கள் நிறைந்த இந்தப் படம் தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

தற்போது சீராய்வு குழு இந்தப் படத்துக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், வரும் பிப்ரவரி 20-ஆம் திகதி ‘ஜன நாயகன்’ படத்தை உலகம் முழுவதும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் இந்தப் படம், அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (10.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

முழு நாகரிகமே இன்றிரவு அழியப்போகிறது: ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

0
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” -என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது...

ஈரானின் கார்க்தீவுமீது அமெரிக்கா தாக்குதல்!

0
ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள்மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியுள்ளன என்பதை அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கக்கோரி அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவிற்கு ஈரான்...

“மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி”!

0
நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதியினால் மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி மே இறுதி வரை தடையற்ற வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்படும் டீசல் மற்றும் பெட்ரோல்...