Home Blog Page 75

மரக்கறி விலைப்பட்டியல் (10.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பழிவாங்கல் அரசியலை முன்னெடுக்கின்றது அரசு!

“தேசிய மக்கள் சக்தி அரசு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பழிவாங்குகின்றது. குறிப்பாக மகா சங்கத்தினரை இலக்கு வைத்து திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

விசேட அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“அரசமைப்பின் படி பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளித்து அதைப் பாதுகாத்து போஷிப்பது அரசின் கடமையாகும்.

அதேபோல் ஏனைய மதங்களையும் கலாசாரங்களையும் மதிக்க வேண்டும். ஆனால், அரசு நாட்டை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்ற முயற்சிக்கின்றது.

மதகுருமார்களைப் பழிவாங்குவதை உடனடியாக நிறுத்தி, அனைத்து மதத் தலைவர்களுக்கும் உரிய கௌரவத்தை வழங்க வேண்டும்.

விவசாயிகள் அறுவடை செய்துள்ள போதிலும், அவற்றுக்கு நியாயமான விலையை வழங்கவோ அல்லது அவற்றை முறையாகக் கொள்வனவு செய்யவோ அரசு தவறிவிட்டது.

நெல் களஞ்சியசாலைகள் பூட்டப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. மேலும், விவசாயம் முடிவடைந்தும் இன்னும் உர மானியம் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.

காலி – பூஸா இராணுவ முகாமிலுள்ள 180 மாற்றுத்திறனாளி இராணுவத்தினரை எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் பனாகொட பகுதிக்கு மாற்றுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இது அவர்களை அவமதிக்கும் செயல்.

சீனா இலவசமாக வழங்கிய பாடசாலை சீருடைகளைக் கூட மாணவர்களுக்கு முறையாக விநியோகிக்க இந்த அரசுக்கு இயலவில்லை.” – என்றுள்ளது.

முடிவை மாற்றியது பாகிஸ்தான்: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பு!

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி திட்டமிட்டபடி பெப்ரவரி 15 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கி, போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பைத் தொடரில், ‘குரூப் ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும் கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் மோதவுள்ளன.

கடந்த வாரம், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களை முன்வைத்து இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கப்போவதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து ஐசிசி, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுக்கு; பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெஃபாஸ் ஷரீஃப் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் உறவுகளை வலுப்படுத்த இந்த முடிவை எடுத்துள்ளதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

ஐசிசி-யின் விதிகளுக்கு உட்பட்டு, அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் விளையாடும் என்று உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, பெப்ரவரி 15ஆம் தேதி போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

செம்மணி புதைகுழிக்குள் இருந்து 90 ஆயிரம் லீற்றர் நீர் வெளியேற்றம்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளை முன்னெடுக்க இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தடவைகள் கடும் மழை பெய்தமையால் , புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்கின்றது.

இந்நிலையில் புதைகுழிக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று நல்லூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது சுமார் 90 ஆயிரம் லீற்றருக்கும் மேலான நீர் புதைகுழியில் இருந்து பவுசர் ஊடாக வெளியேற்றப்பட்டது.

மழை நீரை வெளியேற்றிய பின்னர் புதைகுழி சேற்றுத் தன்மையாக காணப்படுவதால், அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என முடிவெடுக்கப்படு அன்றைய தினத்துக்கு வழக்கு திகதியிடப்பட்டது.

புதைகுழிக்குள் இருந்து வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கையை யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதேவேளை, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக கடந்த ஆண்டு நீதி அமைச்சால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியுள்ளமையால், இவ்வாண்டுக்குப் புதிய பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு, நிதியை மீளப் பெற வேண்டியுள்ளமையால், புதிய பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இளைஞனின் உயிரை பறித்த விபத்து: யாழில் சோகம்!

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேவேளை, மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கி இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய இளைஞர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி!

டி 20 உலகக்கிண்ண தொடரில் ஓமான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற 8 ஆவது லீக் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய ஓமான அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 13.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு ஈரானில் மேலும் 7 ஆண்டுகள் சிறை!

ஈரானைச் சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதிக்கு மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டைச் சேர்ந்த 53 வயதான நர்கீஸ் முகமதி அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஈரானில் ஹிஜாப் அணியாததால் பொலிஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாஷா அமீனி (22) என்ற பெண் உயிரிழந்தார்.

இதையடுத்து, நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.இந்தப் போராட்டத்துக்கு நர்கீஸ் முகமதி சிறையில் இருந்தே ஆதரவு திரட்டினார். இதனால் அவரது புகழ் மேலும் அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 2023-ல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 19-வது பெண் மற்றும் ஈரானின் 2-வது பெண் என்ற பெருமையை நர்கீஸ் முகமதி பெற்றார்.

இந்நிலையில், கடந்த 2 அம் திகதியில் இருந்து அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தச் செயலுக்காக நர்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஈரான் அரசு உத்தரவிட்டது .

ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்களால் வெற்றி!

டி 20 உலக்கிண்ண தொடரில் 7ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி அணியை 73 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது ஸ்கொட்லாந்து அணி.

டி 20 போட்டியில் இன்று (09) நடைபெற்ற 7 ஆவது லீக்
ஆட்டத்தில் இத்தாலி மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இத்தாலி அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ஓட்டங்களைப் பெற்றது.

கடின இலக்கை துரத்திய இத்தாலி அணி 16.4 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் அடிப்படையில் ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

அரசியலில் இருந்து ஓரங்கட்ட எனக்கு எதிராக உளவியல் போர் தொடுப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட பின்னரே எனக்கு எதிராக கட்சிக்குள் இருந்தே உளவியல் போர் முன்னெடுக்கப்படுகின்றது. அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டுவதற்கு முற்படுகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

எனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சுயாதீன விசாரணைக்குழு விசாரிக்கட்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்க தயார் எனவும் அவர் கூறினார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே சிறிதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,

“அரசியலமைப்பு பேரவையில் இராணுவத்துக்கு ஆதரவாக எட்டு தடவைகள் சிறிதரன் வாக்களித்தார் என பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

அதாவது நான் எட்டு தடவைகள் இராணுவத்தை தெரிவுசெய்துவிட்டேன் என்ற விம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு பேரவையில் நடக்கும் விடயங்களை ஊடகங்கள் முன் பகிரங்கப்படுத்த முடியாது. எனவேதான் சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கோரியுள்ளேன்.
வடக்கு, கிழக்கிலுள்ள மதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர் என்னை விசாரிக்கட்டும்.

சிறிதரன் தமிழ் இனத்துக்கு எதிராக செயல்பட்டார், இராணுவத்துக்கு சார்பாக செயல்பட்டார் என்பதை உரிய ஆவணங்கள் சகிதம் நிரூபித்தால் அரசியல் இருந்தே நான் ஒதுங்கி விடுகின்றேன்.

அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டுவதற்கு உளவியல் போர் முன்னெடுக்கப்படுகின்றது. தலைமைப் பதவிக்கான தேர்தலில் தோற்றவர்கள் இதனை செய்கின்றனர்.” எனவும் சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.

 

 

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

அழிப்போம் என மிரட்டிய ட்ரம்ப் போர் நிறுத்தத்துக்கு இணக்கம்!

0
மீண்டெழ முடியாத வகையில் தாக்கி அழிக்கப்படும் என மிரட்டல் விடுத்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான்மீதான ராணுவ நடவடிக்கை இரு வாரங்களுக்கு நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார். பாகிஸ்தானால் முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சியின் பிரகாரமே...

முழு நாகரிகமே இன்றிரவு அழியப்போகிறது: ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

0
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” -என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது...

ஈரானின் கார்க்தீவுமீது அமெரிக்கா தாக்குதல்!

0
ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள்மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியுள்ளன என்பதை அந்நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கக்கோரி அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடுவிற்கு ஈரான்...