Home Blog Page 76

அரசியலில் இருந்து ஓரங்கட்ட எனக்கு எதிராக உளவியல் போர் தொடுப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட பின்னரே எனக்கு எதிராக கட்சிக்குள் இருந்தே உளவியல் போர் முன்னெடுக்கப்படுகின்றது. அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டுவதற்கு முற்படுகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

எனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சுயாதீன விசாரணைக்குழு விசாரிக்கட்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்க தயார் எனவும் அவர் கூறினார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே சிறிதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,

“அரசியலமைப்பு பேரவையில் இராணுவத்துக்கு ஆதரவாக எட்டு தடவைகள் சிறிதரன் வாக்களித்தார் என பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

அதாவது நான் எட்டு தடவைகள் இராணுவத்தை தெரிவுசெய்துவிட்டேன் என்ற விம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு பேரவையில் நடக்கும் விடயங்களை ஊடகங்கள் முன் பகிரங்கப்படுத்த முடியாது. எனவேதான் சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கோரியுள்ளேன்.
வடக்கு, கிழக்கிலுள்ள மதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர் என்னை விசாரிக்கட்டும்.

சிறிதரன் தமிழ் இனத்துக்கு எதிராக செயல்பட்டார், இராணுவத்துக்கு சார்பாக செயல்பட்டார் என்பதை உரிய ஆவணங்கள் சகிதம் நிரூபித்தால் அரசியல் இருந்தே நான் ஒதுங்கி விடுகின்றேன்.

அரசியலில் இருந்து என்னை ஓரங்கட்டுவதற்கு உளவியல் போர் முன்னெடுக்கப்படுகின்றது. தலைமைப் பதவிக்கான தேர்தலில் தோற்றவர்கள் இதனை செய்கின்றனர்.” எனவும் சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.

 

 

ஜெனிவா கூட்டத்தொடர் 23 ஆம் திகதி ஆரம்பம்: விஜித ஹேரத் பங்கேற்பு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடரில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு பங்கேற்கவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறை போன்ற விடயங்கள் குறித்து இந்தக் குழு ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளது.

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்க பொறிமுறைகள் குறித்து முழுமையான அறிக்கை இந்தக் கூட்டத்தொடரில் சமர்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு நாமல் வலியுறுத்து!

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

கம்பஹா – திஹாரிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

“வடக்கு, கிழக்கு மக்களுக்காக மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்த வேண்டும்.

நாட்டில் அடுத்து நடத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது.

இதற்காக, கிராமிய மட்டத்தில் எமது அரசியல் குழுக்களைப் பலப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.” – என்றார்.

அடிபணிய தயாரில்லை: ஈரான் திட்டவட்டம்!

ஈரான் அதிகாரங்களுக்கு அடிபணியாது என்றும், யுரேனியம் செறிவூட்டும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்தாா்.

ஈரான் அணுசக்தி திட்டம் தொடா்பான முதல்கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை மஸ்கட் தலைநகா் ஓமனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஓமன் வெளியுறவு அமைச்சருடன் தனித்தனியாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி பங்கேற்றிருந்தாா்.

இந்நிலையில், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் பேசுகையில் அமைச்சா் அப்பாஸ் அராக்சி,

” ஈரான் அணுகுண்டு தயாரிக்கவில்லை. ஆனால், அவா்கள் நம்முடைய அணுகுண்டு குறித்து அச்சம்கொள்கின்றனா். நம்முடைய அணுகுண்டு என்பது பெரும் அதிகார சக்திகளுக்கு அடிப்பணிய மட்டோம் என்பதே. பிற நாடுகளின் ஆதிக்கம், அழுத்தங்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரம் ஈரானுக்கு உள்ளது.” என்று குறிப்பிட்டார்.

ஈரானில் மோசமடைந்துவரும் பொருளாதார நிலைக்கு எதிராக அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, அணுசக்தி ஒப்பந்தம் தொடா்பாக ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போா்க் கப்பல்கள், விமானங்களை மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.

கடந்த 2003 வரையில் அணுகுண்டு தயாரிக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டு வந்ததாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சா்வதேச அணுசக்தி முகமை குற்றஞ்சாட்டி வருகின்றன.

இருப்பினும், மின்சாரம் உள்ளிட்ட அமைதியான பயன்பாடுகளுக்காக அணுசக்தி திட்டத்தை மேற்கொண்டு வருவதாக ஈரான் கூறிவருகிறது.

அணு ஆயுதம் தயாரிக்க 90 சதவீதத்துக்கு யுரேனியத்தை செறிவூட்ட வேண்டிய நிலையில், 60 சதவீதம் வரை ஈரான் செறிவூட்டியுள்ளது.

அணுசக்தி திட்டம் தொடா்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஆண்டில் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. ஜூன் மாதத்தில் ஈரான்-இஸ்ரேல் இடையே நடைபெற்ற 12 நாள் போரில் ஈரானில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

அணுசக்தி திட்டம் தொடா்பான பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தை எப்போது, எங்கு நடைபெறும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

சிட்னி பயங்கரவாதத் தாக்குதல்: இஸ்ரேல் ஜனாதிபதி கண்டனம்!

ஆஸ்திரேலியா, சிட்னி போண்டி கடற்கரை பகுதியில் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், மேற்படி தாக்குதலை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

ஆஸ்திரேலிய பெடரல் அரசின் வெறுப்பு எதிர்ப்பு சட்டங்களை அவர் வரவேற்றார்.

டிசம்பர் 14 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் “ஆஸ்திரேலியர்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்” என்றும், இஸ்ரேல் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் அதே வகையான அச்சுறுத்தலே இதுவும் என்றும் இஸ்ரேல் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“உலகம் முழுவதும் தீவிரவாதம் செயல்படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக, இஸ்ரேல் பல ஆண்டுகளாக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது,” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 15 பேரில் சிலரின் பெயர்களையும் இஸ்ரேல் ஜனாதிபதி குறிப்பிட்டார். அதில் 10 வயது சிறுமி மடில்டா மற்றும் 87 வயதுடைய ஹோலோகாஸ்ட் உயிர்தப்பியவர் அலெக்ஸ் கிளைட்மன் ஆகியோரும் அடங்குவர்.

இஸ்ரேல் ஜனாதிபதி இன்று ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

இலங்கை அணி வெற்றிநடை: ஓமானுடன் 12 ஆம் திகதி மோதல்!

டி20 உலகக் கோப்பை தொடரின் 6-வது லீக் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்கள் எடுத்தது.

குசல் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். கமிந்து மெண்டிஸ் 19 பந்துகளில் 44 ஓட்டங்கள் குவித்தார்.

தொடர்ந்து ஆடிய அயர்லாந்து 19.5 ஓவரில் 143 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது .

டி20 தொடரில் இலங்கை அணி ஆடும் இரண்டாவது போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவு;ளது.

கண்டி, பல்லேகல மைதானத்தில் இலங்கை மற்றும் ஓமான அணிகள் மோதுகின்றன.

மரக்கறி விலைப்பட்டியல் (09.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார்.

சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க முடிய​வில்​லை. இந்​நிலை​யில் 7 வருடங்​களாக, தான் படுத்த படுக்​கை​யாக இருந்த​தாக​வும் 15 நாட்​கள் கோமா​வில் இருந்​த​தாக​வும் தெரிவித்துள்​ளார். ஏழு வருடங்​களுக்கு முன் வீட்​டுக்​குள் ஒரு விபத்தைச் சந்தித்​தார் முமைத் ​கான். அதில் அவர் மூளை​யில் 5 நரம்​பு​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டன. இதனால் அவர் கோமா நிலைக்​குச் சென்​றார். 15 நாட்​கள் நடந்த தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு சுய நினைவு திரும்​பியது.

பின்​னர் அவருக்கு வலிப்பு ஏற்​பட்​ட​தால் படுத்த படுக்​கை​யா​னார். மருத்​து​வர்​கள் குறைந்த பட்​சம் ஏழு வருடங்​களுக்கு எந்த வேலையும் உடற்​ப​யிற்​சி​யும் செய்​யக் கூடாது என்று அறிவுறுத்தினர். அவர் எடுத்​துக் கொண்ட மருந்​துகள் அவரின் உடல் எடையை அதிகரிக்​கச் செய்​தன. இதனால் சினி​மா​வில் இருந்து வில​கி​னார்.

இப்​போது, ஹைத​ரா​பாத்​தில் ‘விலைக்’ என்ற என்ற மேக்​கப் மற்றும் சிகை அலங்​கார பயிற்சி அகாட​மியைத் தொடங்கியுள்ளார். இது அவரை வெற்​றிகர​மான தொழிலதிபராக மாற்றி இருக்​கிறது.

இது பற்றி முமைத்கான் கூறும்​போது, “நான் 13 வயதிலிருந்தே என் பெற்​றோருக்​காக உழைக்​கத் தொடங்​கி ​விட்​டேன். என் இளமைக்​ காலத்தை உழைப்​பில் செல​வழித்​த​தால், திரு​மணம் பற்றியோசிக்க நேரமில்​லை. கடவுள் எனக்கு எல்​லா​வற்​றை​யும் கொடுத்​தார், பிறகு அவரே எடுத்​துக்​கொண்​டார். இப்​போது மீண்டும் புதிய பாதையைக் காட்​டியிருக்கிறார்” என்றார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவத்துக்கான ஏற்பாடுகள் துரிதம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்துக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவம் இந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28 ஆம் திகதி விசேட திருப்பலிப் பூஜைகளுடன் நிறைவு பெறும்.

இந்த இரு நாள் திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குகொள்வர் எனத் திட்டமிடப்பட்டு அவர்களுக்கான இருப்பிடம், குடிதண்னீர் உள்ளிட்ட வசதிகளுடன் இறங்குதுறை போன்ற பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இம்முறை இடம்பெறும் உற்சவத்தில் பக்தர்களுக்கான சுகாதார வசதிகளுடன் பாதுகாப்பான தங்குமிட ஏற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கிவுல் ஓயா குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல்!

வவுனியா வடக்கை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக இன்று திங்கட்கிழமை வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும், எதிர்த் தரப்பு எம்.பிக்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின்போது கொழும்பில் இருந்து வருகை தரவுள்ள மகாவலி அதிகார சபையின் அதிகாரிகள் குழுவொன்று கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக விளக்கக் காட்சிகள் அடங்கிய தெளிவுபடுத்தல்களை முன்னெடுக்கவுள்ளது.

இதேவேளை, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக அதிகாரிகளும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளும் மிகத் தீவிரமாக கள ஆய்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை அடுத்து, கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுப்பதால் காணப்படுகின்ற பிரச்சினைகளைக் கண்டறியும் முகமாகவே குறித்த கள ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

ஆரம்பத்தில் குறித்த திட்டத்துக்கான அங்கீகாரத்தை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை வழங்கியிருந்த நிலையில் அந்தத் திட்டம் சம்பந்தமாக அதிகாரிகள் கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கவில்லை.

எனினும், தற்போது மக்கள் எதிர்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதால் அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் கள ஆய்வுப் பணிகளை அவசரமாக முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

அமெரிக்கா, ஈரானுக்கிடையில் 10 ஆம் திகதி பாகிஸ்தானில் பேச்சு!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஈரான் தரப்பில் இருந்து விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்ஸில் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஈரானால் முன்மொழியப்பட்டுள்ள 10 அம்ச திட்டங்களை...

அழிப்போம் என மிரட்டிய ட்ரம்ப் போர் நிறுத்தத்துக்கு இணக்கம்!

0
மீண்டெழ முடியாத வகையில் தாக்கி அழிக்கப்படும் என மிரட்டல் விடுத்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான்மீதான ராணுவ நடவடிக்கை இரு வாரங்களுக்கு நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார். பாகிஸ்தானால் முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சியின் பிரகாரமே...

முழு நாகரிகமே இன்றிரவு அழியப்போகிறது: ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

0
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது ஒருபோதும் மீண்டும் உயிர்பெறாது. இது நிகழ நான் விரும்பவில்லை. என்றாலும் அதுவே நடக்கும்” -என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது...